Vanga blogalam in Facebook

7 November 2011

கலைமகன் கமல் ...


   ஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

   வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...

                

   கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ... 

   இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் ... 

   கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன ... அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...

                     

   டான்ஸ் , பைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை ... 

   அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...

        
   இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
   தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

    இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும் ... நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது ... முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் ... தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


    வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள்... தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

   சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

    ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...

           

   ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது ... ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
    முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பார் என்று சினிமா ஆர்வலர்களை வழி மேல் விழி வைத்துக் காக்க வைப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் ... இன்று ஐம்பத்தேழாவது பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

36 comments:

  1. தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை /

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...
    தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை /
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    நன்றி

    ReplyDelete
  3. நல்ல நடிகர்...திறமைசாலி...எத்தனையோ ஆஸ்கார் க்கு தகுதி உள்ளவர்...

    சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க கிடைத்த அற்புத வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டார் என்பது என் வருத்தம்...

    ReplyDelete
  4. அபிமான நடிகரைப்பற்றிய அசத்தல் பதிவு.

    ReplyDelete
  5. அருமை நண்பரே! கமலைப்பற்றிய கலக்கலான பதிவு...

    ReplyDelete
  6. புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...//

    பேசும்படம் என்ற படத்தில் மலத்தை எடுத்து சென்று போடுவார்... இதையெல்லாம் எந்த நாயகனும் செய்ய யோசித்த காலகட்டம்.. ஆனால் கமல்... கமல் தான்.

    ReplyDelete
  7. டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... //

    இன்றுள்ள சிறந்த நடிகர்கள் கமலை பின்பற்றினாலே தமிழ் திரையுலகம் உலக அளவில் எப்பொழுதும் பேசபடும் நிலைக்கு செல்லும்... செய்வார்களா...

    ReplyDelete
  8. இன்று பல நடிகர்கள் வித்தியாசமான முயற்சி எடுக்க முன்னோடியே கமல் தானே....

    கலைஞனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ஒரு ரசிகனின்
    பார்வை ...
    ரசித்து
    படித்து
    மகிழத்தான்
    இந்த பதிவு .
    கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
    கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
    ரசிப்புடன் .
    யானைக்குட்டி

    ReplyDelete
  10. ஒரு ரசிகனின்
    பார்வை ...
    ரசித்து
    படித்து
    மகிழத்தான்
    இந்த பதிவு .
    கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
    கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
    ரசிப்புடன் .
    யானைக்குட்டி

    ReplyDelete
  11. ரெவெரி said...
    நல்ல நடிகர்...திறமைசாலி...எத்தனையோ ஆஸ்கார் க்கு தகுதி உள்ளவர்...

    சமுதாயத்துக்கு முன்மாதிரியாக இருக்க கிடைத்த அற்புத வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டார் என்பது என் வருத்தம்..

    .நன்றி ... அந்த வருத்தம் எனக்கும் இருந்ததன் விளைவே சென்ற வருடம் இதே நாளில் நான் எழுதிய கமல் - "நிஜ" நடிகன் பதிவு ...

    ReplyDelete
  12. ஷைலஜா said...
    அபிமான நடிகரைப்பற்றிய அசத்தல் பதிவு.

    நன்றி ... எனக்கும் அபிமான நடிகர் அவரே

    ReplyDelete
  13. புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...//

    பேசும்படம் என்ற படத்தில் மலத்தை எடுத்து சென்று போடுவார்... இதையெல்லாம் எந்த நாயகனும் செய்ய யோசித்த காலகட்டம்.. ஆனால் கமல்... கமல் தான்.

    நன்றி ... உங்கள் பின்னூட்டத்திற்கும் , நினைவூட்டலுக்கும் ...

    ReplyDelete
  14. மாய உலகம் said...
    அருமை நண்பரே! கமலைப்பற்றிய கலக்கலான பதிவு...

    நன்றி நண்பா ...

    ReplyDelete
  15. மாய உலகம் said...
    டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... //

    இன்றுள்ள சிறந்த நடிகர்கள் கமலை பின்பற்றினாலே தமிழ் திரையுலகம் உலக அளவில் எப்பொழுதும் பேசபடும் நிலைக்கு செல்லும்... செய்வார்களா...

    நன்றி ... நிச்சயம் செய்வார்கள் .. அதற்கான அறிகுறிகள் நிறையவே இருக்கின்றன ...

    ReplyDelete
  16. மாய உலகம் said...
    இன்று பல நடிகர்கள் வித்தியாசமான முயற்சி எடுக்க முன்னோடியே கமல் தானே....

    கலைஞனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    நன்றி ... கமல் கலைஞன் மட்டுமல்ல கலைமகன் , கலைஞர்களுக்கு பிதாமகன் .

    ReplyDelete
  17. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    ஒரு ரசிகனின்
    பார்வை ...
    ரசித்து
    படித்து
    மகிழத்தான்
    இந்த பதிவு .
    கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
    கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
    ரசிப்புடன் .
    யானைக்குட்டி

    நன்றி ... பஞ்ச் அருமை ...

    ReplyDelete
  18. நல்ல பதிவு நண்பா..

    புதிய இடுகையை வாசித்து கருத்து சொல்லவும்..

    ReplyDelete
  19. மன் மதன் அம்பு வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பார் என்று சினிமா ஆர்வலர்களை வழி மேல் விழி வைத்துக் காக்க வைப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் ..//

    மனவுறுதியும் விடாமுயற்சியுமே அவரது முன்னேற்றத்துக்கு காரணம் .
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. Enakum kamal pidikum. Ennudaiya vazhthukalaiyum serthukonga sago

    ReplyDelete
  21. கமல் குறித்த அழகான விரிவான
    பதிவினை பிறந்த நாள் சமர்ப்பணமாக
    சமர்ப்பித்து ஜமாய்த்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. எனக்கெல்லாம் இரசனை என்றால் என்ன? என்று சொல்லித்தந்தவர்...
    ஆரோக்கியமான பதிவு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. பொதினியிலிருந்து... கிருபாகரன் said...
    நல்ல பதிவு நண்பா..
    புதிய இடுகையை வாசித்து கருத்து சொல்லவும்..

    நன்றி நண்பா ... நிச்சயம் கருத்து சொல்கிறேன் ...

    ReplyDelete
  24. angelin said...
    மன் மதன் அம்பு வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பார் என்று சினிமா ஆர்வலர்களை வழி மேல் விழி வைத்துக் காக்க வைப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் ..//
    மனவுறுதியும் விடாமுயற்சியுமே அவரது முன்னேற்றத்துக்கு காரணம் .
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி ...

    ReplyDelete
  25. Ramani said...
    த.ம 4

    நன்றி

    ReplyDelete
  26. Ramani said...
    கமல் குறித்த அழகான விரிவான
    பதிவினை பிறந்த நாள் சமர்ப்பணமாக
    சமர்ப்பித்து ஜமாய்த்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி ...

    ReplyDelete
  27. மயிலன் said...
    எனக்கெல்லாம் இரசனை என்றால் என்ன? என்று சொல்லித்தந்தவர்...
    ஆரோக்கியமான பதிவு..வாழ்த்துக்கள்..

    நன்றி...

    ReplyDelete
  28. கமல் நல்லதொரு நடிகர் மட்டுமே !

    ReplyDelete
  29. ஹேமா said...
    கமல் நல்லதொரு நடிகர் மட்டுமே !

    நன்றி ..நல்லதொரு நடிகர் மட்டும் அல்ல , அதையும் தாண்டி சகலகலாவல்லவர் ...

    ReplyDelete
  30. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. மாய உலகம் said...
    11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    வாழ்த்துக்கள்..! நன்றி ...

    ReplyDelete
  32. நன்றி ஆனந்த் நானும் கமலின் தீவிர ரசிகன். மேலும் அவருக்கு பெரியாரின் கொள்கைமேல் உள்ள பற்று அவரை மேலும் உயர்த்திப் பிடிக்கிறது.

    ReplyDelete
  33. பாலா said...
    நன்றி ஆனந்த் நானும் கமலின் தீவிர ரசிகன். மேலும் அவருக்கு பெரியாரின் கொள்கைமேல் உள்ள பற்று அவரை மேலும் உயர்த்திப் பிடிக்கிறது.

    நன்றி பாலா ...

    ReplyDelete
  34. அருமையான பதிவு நண்பா . கமலின் ரசிகனாக தங்களின் பதிவு மிகவும் அருமை .

    ReplyDelete
  35. Anonymous said...
    அருமையான பதிவு நண்பா . கமலின் ரசிகனாக தங்களின் பதிவு மிகவும் அருமை .

    மிக்க நன்றி நண்பா ...

    ReplyDelete