Vanga blogalam in Facebook

24 November 2011

தனிமை ...


அதிகாலை வேளையில்
எனை எழுப்ப
அருகே வரும்
உன் கைகள்
அதை அணைத்தபடியே
போடும் குட்டி தூக்கம் ...

வாசல் வரை
வந்து வழியனுப்பி விட்டு
பின்
ஏதோ ஒரு
பொய் சாக்கு சொல்லி
நான் திரும்ப
வருவேன் என்பதை
குறிப்பால் உணர்த்தும்
உன்
கண்களின் குறும்பு ...

உரிமையில்
என் பெயரை
சொல்லி விட்டு
உடனே
நாக்கை கடிக்கும்
உன் அழகு ...

இரவில்
நான் வீடு திரும்ப
வெகு நேரம் ஆனாலும்
செல்போனில் சிணுங்காமல்
என்
புகைப்படத்துடன் பேசும்
உன் பொறுமை ...

அடுத்த பெண்ணை
நான்
ரசிக்கும் போது
அக்கா ரொம்ப அழகு
என சொல்லும்
உன் சாமர்த்தியம் ...

காக்கா கரையும்
போதெல்லாம்
என் விழிகளை
வாசல் பார்க்க வைக்கும்
உன் காதல் ...

நினைவுகளை போர்த்தியபடி
தனிமையை
விரட்ட எண்ணி
வழக்கம் போல்
தோற்றுப்போகும்
என் கண்கள் ...






12 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. கவிதை அருமை யால்த்துக்கள் சகோ .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .......

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    நன்றி ...

    ReplyDelete
  4. அம்பாளடியாள் said...
    கவிதை அருமை யால்த்துக்கள் சகோ .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .......

    நன்றி ...

    ReplyDelete
  5. அம்பாளடியாள் said...
    தமிழ்மணம் 1

    நன்றி ...

    ReplyDelete
  6. காதல் சுமந்த நினைவுகள் வாழ்க்கையை நிரப்பும் இனிமை.நல்ல கவிதை,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  7. விமலன் said...
    காதல் சுமந்த நினைவுகள் வாழ்க்கையை நிரப்பும் இனிமை.நல்ல கவிதை,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்/

    நன்றி ...

    ReplyDelete
  8. காதலின் நினைவுகளை விரட்ட நினைத்துத் தோற்றுப் போவதும் காதலின் வெற்றி தானே.

    காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறீர்கள் அனந்து.

    உங்களின் அடுத்த கவிதைக்கான எமது காத்திருப்பு தொடங்கிவிட்டது.

    ReplyDelete
  9. nunmadhi said...
    காதலின் நினைவுகளை விரட்ட நினைத்துத் தோற்றுப் போவதும் காதலின் வெற்றி தானே.
    காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறீர்கள் அனந்து.
    உங்களின் அடுத்த கவிதைக்கான எமது காத்திருப்பு தொடங்கிவிட்டது.

    நன்றி ...

    ReplyDelete
  10. தனிமை ஒருபக்கத்தில் வதை என்றாலும் ஒரு பக்கத்தில் இன்பம்.அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ஆனந்த் !

    ReplyDelete
  11. ஹேமா said...
    தனிமை ஒருபக்கத்தில் வதை என்றாலும் ஒரு பக்கத்தில் இன்பம்.அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ஆனந்த் !

    அனுபவித்து நீங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நன்றி ஹேமா ...!

    ReplyDelete