Vanga blogalam in Facebook

10 December 2011

ஒஸ்தி - வொர்ஸ்ட்தி ரீ மேக் ...

   தபங் படத்தை பார்த்த போதே அதை தமிழில் ரீமேக் செய்தால் சல்மான் நடித்த ரோலில் சூர்யா அல்லது விக்ரம் யாராவது நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் எதிர்பாரா விதமாக எஸ்.டி.ஆர் ( எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் ரசிகர்கள் தப்பா எடுத்துக்காதீங்க , இப்படி சொல்லலேன்னா சிம்பு கோவுச்சுப்பார் ) உடன் தரணி கை கோர்க்கவே கில்லி போல பெரிய வெற்றியை கொடுக்காமல் போனாலும் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பினேன் ...

  கடைசியில், படத்தை தரணி இயக்கினாரா அல்லது லொள்ளு சபா டீமிடம் கொடுத்து தபங் படத்தை கிண்டல் செய்து எடுக்க சொன்னாரா என்று சந்தேகப்படும் அளவுக்கு அவ்வளவு சொதப்பல்ஸ்... ரேவதியின் முதல் கணவருக்கு பிறந்தவர் சிம்பு , இரண்டாவது கணவர் நாசருக்கு பிறந்தவர் ஜித்தன் ரமேஷ் ...தன் வளர்ப்பு தந்தை,தம்பி இருவரையும் சிறு வயதிலிருந்தே ஏற்க மறுக்கிறார் சிம்பு ...

   பெரியவனானவுடன் அடாவடி இன்ஸ்பெக்டராகும் சிம்பு அரசியல்வாதி பாக்ஸர் டேனியலின் ( சோனு சூத் ) அடியாட்களிடம் இருந்து தொகுதி மக்களிடம் ஓட்டுக்கு விநியோகிப்பதற்க்காக கொண்டு செல்லும் ரூபாய் 75 லட்சத்தை அடித்து புடுங்கி கொள்கிறார் ... பணத்தை கேட்கும் வில்லனுடன் மோதல் , பானை செய்யும் ரிச்சாவுடன் காதல் , அம்மா இறந்து விடவே அப்பா - தம்பியுடன் ஊடல் , நடுநடுவே பாடல் என போகிறது படம் ...

    இது போன்ற மசாலா படங்களின் பலமே ஹீரோ தான் ... மாஸ் அப்பீல் சிம்புவிற்கு இருந்தாலும் அவருடைய பொருந்தாத திருநெல்வேலி பேச்சு ( இதுல பஞ்ச் வேற ),  இருட்டில் கூட கூலிங் க்ளாஸ் போடும் அவருடைய ஸ்டைல் , ஆறடி இருக்கும் வில்லனை எக்கி எக்கி பார்த்து எகத்தாளம் செய்து விட்டு ஒவ்வொரு தடவையும் சுட்டி டி.வி குழந்தை போல அவர் போடும் ஆட்டம் , இதற்க்கெல்லாம் மேலே பேன்சி டிரஸ் காம்படீஷனில் வரும் சிறுவன் போல செயற்கை விறைப்புடன் அவர் போட்டுக் கொண்டு திரியும் போலீஸ் யுனிபார்ம் இவையெல்லாம்  ஹீரோயிஷமாக இருந்திருக்க வேண்டிய எல்லாவற்றையுமே ஜீரோயிஷமாக மாற்றியது தான் கொடுமை ... சிம்பு சல்மான் கானை காப்பியடித்ததற்கு பதில் தன் சொந்த ஸ்டைலான விரல் வித்ததையையே செய்திருக்கலாம் ...

   சிம்பு  ரிச்சாவுடன் பேசும் போதெல்லாம் காவல்துறை என்று சொல்லி கலங்கப்படுத்தினாலும் "உன்ன பாத்து நான் வியக்கேன்" என்று சொல்லும் வசனங்கள் மட்டும் ஒரே ஆறுதல் ... வில்லன் தன்னை கொல்ல ஏற்பாடு செய்தவனை வில்லன் கண் முன்னாலேயே கொல்வது , மந்திரி விஜயகுமாரை வில்லனுக்கு எதிராக திருப்பி விடுவது என சில இடங்களில் அட போட வைக்கிறார் ...
                         
   பானை செய்யும் பெண்ணாக வரும் ரிச்சாவுக்கு பேஷன் ஷோவில் வருவது போல இடுப்பை காட்டிக்கொண்டே நடப்பது , சிம்புவுடன் டூயட் பாடுவது தவிர வேறெந்த வேலையுமில்லை ... படத்தில் இவரின் பெயர் நெடுவாளியாம் ... நட்டுவாக்கிளி கேள்விப்பட்டிருக்கேன்  , அதென்ன நெடுவாளி ?... தபங்கில் உற்சாகமாக நடித்திருந்த சோனு சூத்தின் முகத்தில் ஏனோ ஒரு கலையே இல்லை ... ஒரு வேலை முடிவு முன்னாடியே தெரிஞ்சிருச்சோ ...?

   ஜித்தன் ரமேஷுக்கு யாராவது நடிக்க சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் ... எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் எப்படி தான் அவரால் நடிக்க முடிகிறதோ ...? நாசர் , விஜயகுமார் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் ... படத்தின் உருப்படியான விஷயம் சந்தானத்தின் காமெடியும் , தமனின் இசையில் பாடல்களும் ...

   சந்தானம் தம்பி ராமையாவிடம் " அதான் அவார்ட் வாங்கிட்டேள்ள , அப்புறம் என்ன ஓவர் ஆக்டிங் " , மயில்சாமியிடம் " கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன் " , குட்லக் லட்சுமணனிடம் " கோவா பிரேம்ஜி மாதிரியே இருக்க " என சகட்டுமேனிக்கு கலாய்த்து தன் டைமிங் காமெடியால் படத்திற்கு உயிர்  கொடுக்கிறார் ...

   "கலசலா " பாட்டுக்கு டி.ஆரையும் , எல்.ஆர். ஈஸ்வரியையும் பாட வைத்த காம்பினேஷன் சூப்பர் ... தமனின் இசையில் ரொம்ப நாள் கழிச்சு நல்ல குத்து ... இந்த பாட்டுக்கு நல்ல சதைப்பிடிப்பான யாரையாவது ஆட விட்டிருக்கலாம் ... நோயாளி போல இருக்கும் ஒல்லியான மல்லிகா ஒட்டவேயில்லை ...

   வில்லனின் அடியாளாக வருபவர் செய்யும் காமெடி, தம்பியின் மணவறையில் அமர்ந்து சிம்பு ரிச்சாவிற்கு தாலி கட்டுவது,அண்ணன் தம்பி சண்டையை வில்லன் பயன்படுத்தி கொள்வது இப்படி சிலவற்றை ப்ளஸ்ஸாக சொல்லலாம் ... ஹீரோ - வில்லன் மோதலை வைத்து சுவாரசியமாக பின்னப்படும் காட்சிகளே இது மாதிரியான படங்களுக்கு முதுகெலும்பு....

   தில் , தூள் இரண்டிலும் இதை தரணி நன்றாக கையாண்டிருப்பார் ... இதில் வில்லனின் பணத்தை அடித்து விடும் சிம்பு அதை அம்மாவிடம் கொடுத்து பீரோவில் பூட்டி வைத்ததை தவிர வேறெதையும் உருப்படியாக செய்யவில்லை ... சின்ன வயசு சிம்புவாக வரும் சிறுவன் , ஜித்தன் ரமேஸ் , ஹீரோயின் அப்பாவாக வரும் கணேஷ் இப்படி பொருந்தாத காஸ்டிங் என்றும்  நிறைய ஓட்டைகள் ...

    இதே கதை தான் தபங் என்றாலும் சல்மான் அதை தன் தோளில் சுமந்திருப்பார் , அதோடு சோனாக்ஷி , சோனு இப்படி நிறைய ப்ளஸ் அதனால் தான் முப்பது கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்தது ...இந்த படம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகி விட்டது ...

    ஒரு வேலை " தபங் " படத்தோடு இதை கம்பேர் செய்வதால் தான் எனக்கு படம் பிடிக்கவில்லையோ என்ற எனது சின்ன சந்தேகத்தை இல்லவேயில்லை என்று சொல்லாமல் சொல்வது போல் படம் முடிவதற்கு முன்னாலேயே எழுந்து ஓடிய ரசிகர்கள் தீர்த்து வைத்தார்கள் ... வேறெந்த பெரிய பட ரிலீசும்  இல்லாததால் பி ,சி சென்டர்களில் படம் ஓடலாம் , மற்றபடி  " கில்லி " மூலம் பெஸ்ட் ரீமேக் கொடுத்த தரணியின் வொர்ஸ்ட் ரீமேக் தான் " ஒஸ்தி " ...

ஸ்கோர் கார்ட் : 36 

36 comments:

  1. இரசித்தவை: ஒரே ஒரு வசனம்,"நா கண்ணாடி மாதிரில்லே...", தரையில் படுத்து அலேக்காய் உடம்பை விசிறி ஆடும் சிம்புவின் நடனம், வரிவரியாய் சந்தானம் , "வாடி வாடி" பாடல் மற்றும் அனைத்திற்கும் மேலாக ரிச்சாவின் ஒட்டியாணம்..(ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா....முடியல்ல்ல)

    வெறுத்தவை: மற்றவை அனைத்தும் ஒட்டு மொத்தமாய்...

    மொத்தத்தில் ஒஸ்தி: தமிழ்நாட்டு cop-u இல்லை...தமிழ்நாட்டுக்கு ஆப்பு..

    ReplyDelete
  2. பேன்சி டிரஸ் காம்படீஷனில் வரும் சிறுவன் போல செயற்கை விறைப்புடன் அவர் போட்டுக் கொண்டு திரியும் போலீஸ் யுனிபார்ம் இவையெல்லாம் ஹீரோயிஷமாக இருந்திருக்க வேண்டிய எல்லாவற்றையுமே ஜீரோயிஷமாக மாற்றியது தான் கொடுமை

    விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மயிலன் said...
    இரசித்தவை: ஒரே ஒரு வசனம்,"நா கண்ணாடி மாதிரில்லே...", தரையில் படுத்து அலேக்காய் உடம்பை விசிறி ஆடும் சிம்புவின் நடனம், வரிவரியாய் சந்தானம் , "வாடி வாடி" பாடல் மற்றும் அனைத்திற்கும் மேலாக ரிச்சாவின் ஒட்டியாணம்..(ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா....முடியல்ல்ல)
    வெறுத்தவை: மற்றவை அனைத்தும் ஒட்டு மொத்தமாய்...
    மொத்தத்தில் ஒஸ்தி: தமிழ்நாட்டு cop-u இல்லை...தமிழ்நாட்டுக்கு ஆப்பு..

    உங்கள் கருத்துக்கு நன்றி ...!

    ReplyDelete
  4. இராஜராஜேஸ்வரி said...
    பேன்சி டிரஸ் காம்படீஷனில் வரும் சிறுவன் போல செயற்கை விறைப்புடன் அவர் போட்டுக் கொண்டு திரியும் போலீஸ் யுனிபார்ம் இவையெல்லாம் ஹீரோயிஷமாக இருந்திருக்க வேண்டிய எல்லாவற்றையுமே ஜீரோயிஷமாக மாற்றியது தான் கொடுமை
    விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    நன்றி ...!

    ReplyDelete
  5. எப்படியா இப்படி யோசிக்கிற...

    நீ இங்க பொறந்து இருக்க வேண்டிய ஆளே இல்லை...

    என்ன ஒரு அழகான விமர்சனம்...

    உங்க மூஞ்சியை தினசரி கண்ணாடியில் பார்த்த நியாபகம் இருக்கா? ஹி ஹி... உங்க முகரக்கட்டை மாதிரி இருக்கு அண்ணன் உங்க விமர்சனம். சூப்பர் என்று சொன்னேன்.

    ஹி ஹி

    ReplyDelete
  6. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  7. நண்பர்கள் கொஞ்சம் இதையும் படிக்க வாங்க..குறும்(பு)படம்

    ReplyDelete
  8. நல்லது தம்பி ... என் மூஞ்சிய தான் தைரியமா ப்லாக்லையே போட்டிருக்கேனே ...! ஆனா உன் மூஞ்சிய தான் பாக்க முடியல , பரவாயில்ல ஒஸ்தி போன்ற படங்களை ரசிக்கும் உன் ஒஸ்தியான சினிமா ரசனையை மெச்சினேன் ...! வருகைக்கு நன்றி ...!

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    நன்றி ...!

    ReplyDelete
  10. மயிலன் said...
    நண்பர்கள் கொஞ்சம் இதையும் படிக்க வாங்க..குறும்(பு)படம்...

    படிச்சுடறேன் . நன்றி ...!

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்...

    நன்றி ...!

    ReplyDelete
  13. நெடுவாளி... நட்டுவாக்கிளி ரைமிங் நல்லாயிருக்கு அனந்து.எனக்கு சிம்பு பிடிக்காது.அதனால படம் பாக்கமாட்டேனே !

    ReplyDelete
  14. ஹேமா said...
    நெடுவாளி... நட்டுவாக்கிளி ரைமிங் நல்லாயிருக்கு அனந்து.எனக்கு சிம்பு பிடிக்காது.அதனால படம் பாக்கமாட்டேனே !

    ரொம்ப நல்லதா போச்சு ... கருத்துக்கு நன்றி ...!

    ReplyDelete
  15. ஆமா இவரு பெரிய அஜித் குமார், இவர் மூஞ்சியை பார்த்து விட்டாலும்???

    இந்த நெளிஞ்ச மூஞ்சியை காமிக்குறதுக்கு ஹய்யோ ஹய்யோ

    தென் நான் பையன் இல்லை பொண்ணு தான்.. உடனே வழியாத

    ஒஸ்தி உனக்கு பிடிக்கல என்றால் உலகத்துல எல்லோருக்கும் பிடிக்காது என்று ஆகி விடுமா?

    கருமம் பிடிச்சவனே சரி உன்னோட மூஞ்சியை பார்த்து தான் இப்படி திட்ட தோணுது

    தயவு செஞ்சு அந்த நெளிஞ்ச தகர மூஞ்சியை எடுத்து விடு

    ReplyDelete
  16. அடக்கடவுளே.சுவீட்டா பேர் வச்சிருக்கீங்க.இப்பிடிக் கோவப்படலாமோ.என் பதிவில வந்தும் திட்டியிருக்கீங்க.சுவீட்டி கூல் கூல்.

    இலங்கைப் பெண்கள் நல்லவங்களாம்.நீங்க சேட்டிபிக்கேட் தராவிட்டாலும் அவங்க அவங்களுக்கு அவங்க அவங்களே முதல்ல சேட்பிக்கேட் குடுக்கவேணும்.அதுதான் ரைட்.உங்களை நீங்க முதல சோதிச்சுப் பாருங்கோ.அனந்துவைப் பாக்காம உங்க வீட்டுக் கண்ணாடியையும் பாருங்கோ.பொய் சொல்லாது !

    சூவீட்டி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.எனக்குப் பிடிச்சது உங்களுக்குப் பிடிக்கவில்லை.அதுபோல உங்களுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது.நான் பீ,புண்ணாக்கு எல்லாம் விரும்பிச் சாப்பிடுவேன்.நீங்க எப்பிடி.இதில கோவம் பெரிசில்ல.சரி தப்பு பாருங்க.நீங்க சிம்பு ரசிகை.சந்தோஷம் !

    ReplyDelete
  17. //
    sweet said...
    ஆமா இவரு பெரிய ...........

    //

    யக்கா, இதெல்லாம் ரொம்ப ஓவர்.

    பாவம் அந்த மனுஷன் (ananthu), அவர் கஷ்டத்த அவர் ப்ளாக்'ல பொலம்புறாரு.
    புடிச்சா ரசிங்க... புடிக்கலைனா விடுங்க.

    உங்க பெயர்'ல இருக்க ஸ்வீட்டை உங்க வார்த்தைகள்ளையும் கட்டுங்கோ....

    ReplyDelete
  18. sweet,,WHY HOT
    எம்மா மின்னலு ?? ப்ளாக் எழுதி பேர் வாங்குபவர்கள் பலர் ஆனால் உங்கள் மாதிரி ப்ளோகில் கேவலமாக எழுதி பேர் வாங்குபவர்கள் சிலர் ,
    வி திஸ் வி திஸ் கொலைவெறி டி ? நான் படித்ததில் பலர் படத்தை பற்றி மெகா கேவலமாக எழுதி உள்ளார்கள் .என் சிம்பு வின் முதல் ரசிகையோ ? ஐயோ ஐயோ !!!
    உங்களுக்கு சிம்புவை பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் பிடித்திருந்தல் எழதுங்கள் அதை விடுத்தது தனிப்பட்ட விமர்சனம் தேவை இல்லை .
    கடைசியாக ...
    தலைவர் பிறந்த நாள் பஞ்ச் ?
    அதிகமா ஆசை படும் ஆண்களும் அதிகமா கோவ படும் பெண்களும் ,, இதுக்குமேல் நான் சொளுவதற்க ஒன்றும் இல்லை...okva ammataker .....
    by TMK...

    ReplyDelete
  19. //sweet said...

    ஆமா இவரு பெரிய அஜித் குமார், இவர் மூஞ்சியை பார்த்து விட்டாலும்???//

    உங்களுக்கு அஜித் குமார் மூஞ்சியைதான் பார்க்கணும்னா அவரு போட்டோவ பாக்க வேண்டியதுதானே.

    \\இந்த நெளிஞ்ச மூஞ்சியை காமிக்குறதுக்கு ஹய்யோ ஹய்யோ \\

    தமிழ்ல ஒரு வார்த்தை சொல்லுவாங்க, "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்று. Sweet என்ற பெயரை வைத்துக் கொண்டு, சுய விவரக் குறிப்புகளோ அல்லது வேறு பதிவுகளோ எதுவுமே கொடுக்காமல் நீங்கள் கூறுவதைக் கேட்பது வேடிக்கையாகவே இருக்கிறது.

    \\தென் நான் பையன் இல்லை பொண்ணு தான்.. உடனே வழியாத\\

    நீங்கள் பெண்தான் என்பதை சொன்னால்தான் தெரிகிறது தோழி. ஒரு பெண்ணால் இவ்வளவு மென்மையாக கனிவாக கருத்துக்கூற முடியுமென்பதை தங்கள் பின்னூட்டத்தில் இருந்துதான் அறிய முடிகிறது.

    \\ஒஸ்தி உனக்கு பிடிக்கல என்றால் உலகத்துல எல்லோருக்கும் பிடிக்காது என்று ஆகி விடுமா? \\
    விமர்சனம் எழுதுவது விமர்சகர்களின் கடமை தோழி. ஒரு படத்தை ரசிகன் விமர்சித்தால், அது புகழ் பாடுவது. விமர்சகனின் கடமை ஒரு படத்தின் நிறை குறைகளை சீர்தூக்கிப் பார்ப்பது. அதனையே அனந்துவும் செய்திருக்கிறார். இதே ஒஸ்தியை "நாஸ்தி"யாக விமர்சித்திருந்த ஒரு பதிவில் நாகரீகமாக பின்னூட்டமிட்டிருந்த தங்களுக்கு இங்கு என்ன கோபமோ..?

    \\கருமம் பிடிச்சவனே சரி உன்னோட மூஞ்சியை பார்த்து தான் இப்படி திட்ட தோணுது

    தயவு செஞ்சு அந்த நெளிஞ்ச தகர மூஞ்சியை எடுத்து விடு\\ உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரது எழுத்துக்களை நீங்கள் விமர்சிக்கலாம்.அவரது தனிப்பட்ட விடயங்களைப் பற்றி கருத்துக் கூற தங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லையென்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். மேலும் ஒரு சினிமா விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத தங்களின் மனநிலை ஒருபுறம் பரிதாபத்திற்குரியதாகவும் மறுபுறம் வேதனைக்குரியதாகவும் உள்ளது. உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த நாகரீகமான முறையைக் கையாண்டால் நல்லது தோழி. ஒரு படைப்பை உருவாக்க அந்தப் படைப்பாளி படும் பாட்டினை உங்களைப் போன்ற " நவ நாகரீகமாக பின்னூட்டமிடுபவர்கள்" அறிந்திருக்க நியாயமில்லை.

    @ அனந்து: பழுத்த மரம்தான் கல்லடி படும் அனந்து. Sweety சொல்லியிருப்பது போல், ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் உலகிலுள்ள எல்லாருக்கும் பிடிக்காமல் போய்விடாது. உங்களது எழுத்துக்களுக்கான மதிப்பு கூடியிருக்கிறது. தொடந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறோம்.

    -நுண்மதி.

    ReplyDelete
  20. என் மீது வீசப்பட்ட தனிப்பட்ட கேவலமான விமர்சனங்களுக்கு சக பதிவர்களே விளக்கமளித்து விட்டதால் அதற்கு மேல் எதுவும் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன் ... "தென் நான் பையன் இல்லை பொண்ணு தான்.. உடனே வழியாத " நான் மிகவும் ரசித்த நகைச்சுவை இது. ஆனால் என் எழுத்துக்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் கூற நான் கடமைப்பட்டுள்ளேன் ... நான் எந்த ஒரு சினிமா விமர்சனத்திலும் அதில் சம்பந்தப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை ... படம் சம்பந்தமாகவே எனது விமர்சனம் இருக்கும் என்பதும் , அதில் தரக்குறைவாக எதுவும் இடம் பெறாது என்பதும் என் விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்...நான் ஒரு நடிகரின் சார்பாக படத்தை பார்ப்பதில்லை , ஒரு நல்ல சினிமா ரசிகனாகவே பார்க்கிறேன் ...அவர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் ...அதே போல என் நிறை குறைகளை நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டுபவர்களுக்கு விளக்கமும் அளித்து வருகிறேன் ...சினிமாவுடன் சிறிது சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் ஒரு படத்தை எடுத்து முடிக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் நன்கறிவேன் ... அதே சமயம் காசு கொடுத்து படம் பார்க்கிற எவனுக்கும் அதை விமர்சனம் செய்யும் அருகதை இருக்கிறது என்பதையும் நான் ஆணித்தரமாக நம்புகிறேன் ...என் எழுத்தை விமர்சியுங்கள் , அதையும் மீறி என்னை பற்றி தரக்குறைவாக திட்ட நினைப்பவர்கள் அவர்களின் வீட்டு கண்ணாடியின் முன் நின்று திட்டிக்கொள்ளுங்கள் ... ஏனெனில் அவை எதையும் நான் சட்டை செய்ததுமில்லை , செய்ய போவதுமில்லை ...தயவு செய்து எங்கேயோ சரக்கு அடித்து விட்டு இங்கே வந்து வாந்தி எடுக்காதீர்கள் ... இந்த விடயத்தில் கொதித்து எழுந்த எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றி...

    ReplyDelete
  21. ஹேமா said...
    அடக்கடவுளே.சுவீட்டா பேர் வச்சிருக்கீங்க.இப்பிடிக் கோவப்படலாமோ.என் பதிவில வந்தும் திட்டியிருக்கீங்க.சுவீட்டி கூல் கூல்.
    இலங்கைப் பெண்கள் நல்லவங்களாம்.நீங்க சேட்டிபிக்கேட் தராவிட்டாலும் அவங்க அவங்களுக்கு அவங்க அவங்களே முதல்ல சேட்பிக்கேட் குடுக்கவேணும்.அதுதான் ரைட்.உங்களை நீங்க முதல சோதிச்சுப் பாருங்கோ.அனந்துவைப் பாக்காம உங்க வீட்டுக் கண்ணாடியையும் பாருங்கோ.பொய் சொல்லாது !
    சூவீட்டி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.எனக்குப் பிடிச்சது உங்களுக்குப் பிடிக்கவில்லை.அதுபோல உங்களுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது.நான் பீ,புண்ணாக்கு எல்லாம் விரும்பிச் சாப்பிடுவேன்.நீங்க எப்பிடி.இதில கோவம் பெரிசில்ல.சரி தப்பு பாருங்க.நீங்க சிம்பு ரசிகை.சந்தோஷம் !

    ஹேமா உங்கள் பின்னூட்டம் இல்லாமல் நான் முதலில் ஸ்வீட்டான பின்னூட்டத்தை பார்த்திருந்தால் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டிருப்பேன் ... நான் அந்த பின்னூட்டத்தை பார்ப்பதற்கு முன்பாகவே என் சார்பாக பதில் சொன்ன உங்களின் அக்கறைக்கும் , அன்பிற்கும் மிக்க நன்றி ... அன்புடன் அனந்து ...

    ReplyDelete
  22. இப்படி ஒரு பெண்மையான பெயரை வைத்துக்கொண்டு இந்த மாதிரி எப்படி பேசுகிறார்கள் ? நீங்க காமெண்ட் மாடெரேஷன் எனேபிள் பண்ணுங்க அன்ந்த். ஒரு விமர்சனத்த படிச்சு ஜீரணிச்சுக்க முடியாதவங்க எப்டி எழுதவெல்லாம் முடியும்னு புரியவேயில்லை எனக்கு ! அடிப்படை நாகரிகம் இல்லாம இது என்ன மாதிரியான ஒரு பிஹேவியர்ன்னு ஆச்சர்யமா இருக்கு . உங்க சினிமா விமர்சனங்கள் பெரிசா பேசப்படற நாள் வரும் அன்ந்த் ..டோண்ட் யூ வரி ...

    ReplyDelete
  23. AaNaVaRaS said...
    //
    sweet said...
    ஆமா இவரு பெரிய ...........
    /
    யக்கா, இதெல்லாம் ரொம்ப ஓவர்.
    பாவம் அந்த மனுஷன் (ananthu), அவர் கஷ்டத்த அவர் ப்ளாக்'ல பொலம்புறாரு.
    புடிச்சா ரசிங்க... புடிக்கலைனா விடுங்க.
    உங்க பெயர்'ல இருக்க ஸ்வீட்டை உங்க வார்த்தைகள்ளையும் கட்டுங்கோ....

    முதல் பின்னூட்டமே மனதில் பதியும் படி செய்து விட்டீர்கள் ... ஆதரவுக்கு நன்றி...!

    ReplyDelete
  24. tmk said...
    sweet,,WHY HOT
    எம்மா மின்னலு ?? ப்ளாக் எழுதி பேர் வாங்குபவர்கள் பலர் ஆனால் உங்கள் மாதிரி ப்ளோகில் கேவலமாக எழுதி பேர் வாங்குபவர்கள் சிலர் ,
    வி திஸ் வி திஸ் கொலைவெறி டி ? நான் படித்ததில் பலர் படத்தை பற்றி மெகா கேவலமாக எழுதி உள்ளார்கள் .என் சிம்பு வின் முதல் ரசிகையோ ? ஐயோ ஐயோ !!!
    உங்களுக்கு சிம்புவை பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் பிடித்திருந்தல் எழதுங்கள் அதை விடுத்தது தனிப்பட்ட விமர்சனம் தேவை இல்லை .
    கடைசியாக ...
    தலைவர் பிறந்த நாள் பஞ்ச் ?
    அதிகமா ஆசை படும் ஆண்களும் அதிகமா கோவ படும் பெண்களும் ,, இதுக்குமேல் நான் சொளுவதற்க ஒன்றும் இல்லை...okva ammataker by TMK...

    மாமாவோட பன்சையும் மருமகனோட பாட்டையும் சேத்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க ... பாத்து நீங்க தனுஷோட ரசிகரான்னு கேட்டு யாராவது கெளம்பிற போறாங்க ... ஊர்ல இருக்குற எல்லா கொசுவையும் நம்ம அடிக்க முடியுமா ...? ஆதரவுக்கு நன்றி டி.எம்.கே ...!

    ReplyDelete
  25. nunmadhi said...
    //sweet said...

    ஆமா இவரு பெரிய அஜித் குமார், இவர் மூஞ்சியை பார்த்து விட்டாலும்???//

    உங்களுக்கு அஜித் குமார் மூஞ்சியைதான் பார்க்கணும்னா அவரு போட்டோவ பாக்க வேண்டியதுதானே.

    \\இந்த நெளிஞ்ச மூஞ்சியை காமிக்குறதுக்கு ஹய்யோ ஹய்யோ \\

    தமிழ்ல ஒரு வார்த்தை சொல்லுவாங்க, "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்று. Sweet என்ற பெயரை வைத்துக் கொண்டு, சுய விவரக் குறிப்புகளோ அல்லது வேறு பதிவுகளோ எதுவுமே கொடுக்காமல் நீங்கள் கூறுவதைக் கேட்பது வேடிக்கையாகவே இருக்கிறது.

    \\தென் நான் பையன் இல்லை பொண்ணு தான்.. உடனே வழியாத\\

    நீங்கள் பெண்தான் என்பதை சொன்னால்தான் தெரிகிறது தோழி. ஒரு பெண்ணால் இவ்வளவு மென்மையாக கனிவாக கருத்துக்கூற முடியுமென்பதை தங்கள் பின்னூட்டத்தில் இருந்துதான் அறிய முடிகிறது.

    \\ஒஸ்தி உனக்கு பிடிக்கல என்றால் உலகத்துல எல்லோருக்கும் பிடிக்காது என்று ஆகி விடுமா? \\
    விமர்சனம் எழுதுவது விமர்சகர்களின் கடமை தோழி. ஒரு படத்தை ரசிகன் விமர்சித்தால், அது புகழ் பாடுவது. விமர்சகனின் கடமை ஒரு படத்தின் நிறை குறைகளை சீர்தூக்கிப் பார்ப்பது. அதனையே அனந்துவும் செய்திருக்கிறார். இதே ஒஸ்தியை "நாஸ்தி"யாக விமர்சித்திருந்த ஒரு பதிவில் நாகரீகமாக பின்னூட்டமிட்டிருந்த தங்களுக்கு இங்கு என்ன கோபமோ..?

    \\கருமம் பிடிச்சவனே சரி உன்னோட மூஞ்சியை பார்த்து தான் இப்படி திட்ட தோணுது

    தயவு செஞ்சு அந்த நெளிஞ்ச தகர மூஞ்சியை எடுத்து விடு\\ உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரது எழுத்துக்களை நீங்கள் விமர்சிக்கலாம்.அவரது தனிப்பட்ட விடயங்களைப் பற்றி கருத்துக் கூற தங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லையென்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். மேலும் ஒரு சினிமா விமர்சனத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத தங்களின் மனநிலை ஒருபுறம் பரிதாபத்திற்குரியதாகவும் மறுபுறம் வேதனைக்குரியதாகவும் உள்ளது. உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த நாகரீகமான முறையைக் கையாண்டால் நல்லது தோழி. ஒரு படைப்பை உருவாக்க அந்தப் படைப்பாளி படும் பாட்டினை உங்களைப் போன்ற " நவ நாகரீகமாக பின்னூட்டமிடுபவர்கள்" அறிந்திருக்க நியாயமில்லை.

    @ அனந்து: பழுத்த மரம்தான் கல்லடி படும் அனந்து. Sweety சொல்லியிருப்பது போல், ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் உலகிலுள்ள எல்லாருக்கும் பிடிக்காமல் போய்விடாது. உங்களது எழுத்துக்களுக்கான மதிப்பு கூடியிருக்கிறது. தொடந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறோம்.
    -நுண்மதி.

    நுண்மதி நிச்சயம் என்னால் கூட இந்த விடயத்தில் இவ்வளவு தெளிவாகவும் , அழுத்தமாகவும் பின்னூட்டம் அளித்திருக்க முடியாது ... இதை படிப்பவர்கள் நிச்சயம் கோபப்பட மாட்டார்கள் , ஆனால் சிந்திப்பார்கள் ... நுண்மதியுடன் எழுதியிருக்கும் உங்களின் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் ... உங்கள் ஆதரவை என்றும் விரும்பும் நண்பன் அனந்து ...

    ReplyDelete
  26. #ஷஹி said...
    இப்படி ஒரு பெண்மையான பெயரை வைத்துக்கொண்டு இந்த மாதிரி எப்படி பேசுகிறார்கள் ? நீங்க காமெண்ட் மாடெரேஷன் எனேபிள் பண்ணுங்க அன்ந்த். ஒரு விமர்சனத்த படிச்சு ஜீரணிச்சுக்க முடியாதவங்க எப்டி எழுதவெல்லாம் முடியும்னு புரியவேயில்லை எனக்கு ! அடிப்படை நாகரிகம் இல்லாம இது என்ன மாதிரியான ஒரு பிஹேவியர்ன்னு ஆச்சர்யமா இருக்கு . உங்க சினிமா விமர்சனங்கள் பெரிசா பேசப்படற நாள் வரும் அன்ந்த் ..டோண்ட் யூ வரி ...#

    என்ன பண்றது ஷஹி , கண்ணுக்கு தெரியிற மிருகங்களை விட கண்ணுக்கு தெரியாமல் மனித உருவில் நடமாடும் மிருகங்கள் எத்தனையோ என்று போராளி படத்துல வரும் வசனத்தை போல அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் அலைபவர்கள் இங்கு ஏராளம் ... நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ... இது வரை எனக்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாம் கண்ணியமாகவே இருந்ததால் நான் மாடரேஷன் வைக்கவில்லை ... உங்கள் ஆலோசனைப்படி இனிமேல் செய்து விடுகிறேன் ... உங்களின் ஆதரவிற்கு நன்றி... அன்புடன் அனந்து ...

    ReplyDelete
  27. Yamma 'Sweeeeety' Un Moonjai alla... Un rasanaiai varum 'pogi' andru koluthi podu... avvalavu mattamaga irukkirathu un rasanai..."WORSTHI" sorry "osthe" padathai rasikkum un rasanaikku Oscar awardtuthan tharanum.

    Appuram, thani nabar vimarsanam, commenting on moonji thevai illatha matteru. Nee enna "ULAKKA AZHUKKIYA?" sorry "ulaga azhagiyaa?" aduthavanga moonjai kindal panrathukku yaarukkum rights kidayathu. Varum 2012 aandil nalla nagarigam, panpaadu, olukkam ivaikalai, kadavul unannku KATRU koduparaka - Eswaran Kandaswamy

    ReplyDelete
  28. Sattila irunthaa thane agappaila varum ... Ainthil valaiyaathathu aimpathil valaiyumaa ? intha maathiri alungalukkaga than antha kalatthileye solli vachurukkaanga pola... #"WORSTHI" sorry "osthe" padathai rasikkum un rasanaikku Oscar awardtuthan tharanum # Nice.. Thanks for your support...

    ReplyDelete
  29. விமர்சனம் அருமை

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  31. ராஜி said...
    விமர்சனம் அருமை

    நன்றி...!

    ReplyDelete
  32. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள் நண்பரே

    நன்றி...!

    ReplyDelete
  33. சோனு சூத்தின் முகத்தில் ஏனோ ஒரு கலையே இல்லை

    movie la sonu oda soothellam gavanichirukeenga?!

    ReplyDelete
  34. Anonymous said...
    சோனு சூத்தின் முகத்தில் ஏனோ ஒரு கலையே இல்லை
    movie la sonu oda soothellam gavanichirukeenga?!

    Eppadippaa intha maathriyellam yosikkireenga !! aiyyo aiyyo !! Varugaikku Nandri...

    ReplyDelete
  35. இங்க ஒருத்தரு பின்னி எடுக்கறாரு

    visit

    dooritwilldo.blogspot.com

    ReplyDelete
  36. Anonymous said...
    இங்க ஒருத்தரு பின்னி எடுக்கறாரு
    visit
    dooritwilldo.blogspot.com

    நன்றி...!

    ReplyDelete