2016 தமிழ் சினிமா வுக்கு ஒரு சுமாரான ,அதே நேரம் குழப்பமான வருடம் எனலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அதே வருடம் லாஜிக் சுத்தமாக இல்லாத ரெமோ , இருமுகன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் , ரசனைக்குமான இடைவெளியை நிறையவே காட்டுகிறது . இசைஞானி யின் 1000 மாவது படம் , கபாலி வசூலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது , விஜய் சேதுபதியின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் தியேட்டரில் ஓடியது எல்லாம் வருடத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவுதம் மேனன் , விக்ரம் குமார் போன்றோரின் படங்கள் சொதப்பினாலும் இறுதிச்சுற்று , உறியடி போன்ற படங்களின் மூலம் சுதா , விஜயகுமார் போன்றோர் அதிகம் கவனிக்க வைத்திருக்கிறார்கள் . சூப்பர் ஸ்டார் தனக்கு இணை யாருமில்லை என்பதை கபாலி மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் . விஜய் , சிவகார்த்திகேயன் எல்லாம் வெற்றிகளின் மூலம் தங்களது மார்க்கெட்டை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . சென்ற வருடம் தங்கமகனில் தொங்கிய தனுஷின் புகழை கொடி உயரே பறக்க வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏழு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் , கமல் , அஜித் துக்கு ஒரு படம் கூட வராதது ஏமாற்றமே ...
முதல் ஆறு மாத சினிமா அலசல்களை பற்றி அறிய காண்க :
இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2016
கவர்ந்த படங்கள்
விசாரணை
இறுதிச்சுற்று
காதலும் கடந்து போகும்
இறைவி
உறியடி
ஜோக்கர்
குற்றமே தண்டனை / ஆண்டவன் கட்டளை
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
கொடி
தங்கல் ( தமிழ் )
ரஜினி முருகன்
இறுதிச்சுற்று
பிச்சைக்காரன்
தெறி
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
கபாலி
இருமுகன்
ரெமோ
தேவி
கொடி
ப்ளாக்பஸ்டர் :
டாப் டென் பாடல்கள்
1. பாருருவாய ( தாரை தப்பட்டை )
1. பாருருவாய ( தாரை தப்பட்டை )
2. உன்மேல ஒரு கண்ணு ( ரஜினி முருகன் )
3. ஏய் சண்டைக்காரா ( இறுதிச்சுற்று )
4. ஒன்னு ரெண்டு ( இறைவி )
5. அக்கினிக்குஞ்சொன்று ( உறியடி )
6. என்னங்க சார் ( ஜோக்கர் )
7. மாய நதி ( கபாலி )
8. மக்க கலங்குதப்பா ( தர்மதுரை )
9. ஹெலெனா ( இருமுகன் )
10.தள்ளிப் போகாதே ( அச்சம் என்பது மடமையடா )
கவர்ந்தவர்கள்
கவர்ந்த படம் - விசாரணை
கவர்ந்த நடிகர் - ரஜினிகாந்த் ( கபாலி )
கவர்ந்த நடிகை - திரிஷா ( கொடி )
கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரக்கனி ( விசாரணை )
கவர்ந்த குணச்சித்திர நடிகை - குலப்புள்ளி லீலா ( மருது )
கவர்ந்த காமெடி நடிகர் - சதீஷ் ( ரெமோ )
கவர்ந்த வில்லன் நடிகர் - சூர்யா ( 24 )
கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் ( இறைவி )
கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் - இளையராஜா ( தாரை தப்பட்டை )
கவர்ந்த ஆல்பம் - அச்சம் என்பது மடமையடா ( ஏ.ஆர்.ரஹ்மான் )
கவர்ந்த பாடல் - பாருருவாய ( தாரை தப்பட்டை )
கவர்ந்த பாடகி - தீ ( ஏய் சண்டைக்காரா )
கவர்ந்த பாடகர் - சத்யபிரகாஷ் ( பாருருவாய )
கவர்ந்த பாடலாசிரியர் - தாமரை ( தள்ளிப் போகாதே )
கவர்ந்த வசனகர்த்தா - சமுத்திரக்கனி ( அப்பா )
கவர்ந்த கதாசிரியர் - சந்திரகுமார் ( விசாரணை )
கவர்ந்த திரைக்கதையாசிரியர் - விஜயகுமார் ( உறியடி )
கவர்ந்த ஒளிப்பதிவாளர் - டான் மாச்சார்த்தூர் (அச்சம் என்பது மடமையடா )
கவர்ந்த இயக்குனர் - வெற்றிமாறன் ( விசாரணை )
வசூல் ராஜாக்கள்
ரஜினிகாந்த் ( கபாலி )
விஜய் ( தெறி )
சிவகார்த்திகேயன் ( ரஜினி முருகன் / ரெமோ )
ஏமாற்றங்கள்
தாரை தப்பட்டை

அச்சம் என்பது மடமையடா
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
No comments:
Post a Comment