நாயகனுக்கு பிறகு கமல் நடிப்பில் வந்த அருமையான படம் சத்யா . அந்த பெயரை சிபி படத்துக்கு போய் வைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம் இருந்தாலும் , தெலுங்கில் ஏற்கனவே ஹிட் அடித்த படத்தையே தமிழில் ரீ மேக்கியிருக்கிறார்கள் என்பதும் , படத்தை பற்றிய பாசிட்டிவ் டாக்கும் ஆறுதல் ...
கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப் செய்யப்பட குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா ( சிபி ) . குழந்தையை காப்பாற்ற போலீசும் , புருசனும் எந்தவிதத்திலும் உதவாத நிலையில் காதலி ஸ்வேதா ( ரம்யா ) வுக்காக சிபி சந்திக்கும் திடுக் திடுக் திருப்பங்களே சத்யா ...
சிபி சத்யராஜின் சின்ன வயசு ஜெராக்ஸ் போலவே இருக்கிறார் . படம் நெடுக ஸ்டிஃபாகவே இருப்பவர் காதல் காட்சிகளிலாவது கொஞ்சம் கேசுவலாக இருந்திருக்கலாம் . டைட்டிலை போலவே படம் நெடுக இவர் ஷோல்டரிலேயே பயணம் செய்கிறது . சிபி யும் சிம்பிலாக நடித்திருந்தாலும் நம்மை ஏமாற்றவில்லை . ரம்யா க்யூட்டான ஹெச்.ஆர் ஆக வந்து நிறைய நிறைய ஐடி காரர்களை பெருமூச்சு விட வைக்கிறார் . மகளை கண்டுபிடிக்க சொல்லி சிபி இடம் அழும் இடத்தில் நடிப்பு மிளிர்கிறது ...
ஐ.டி எம்ப்ளாயியாக யோகி பாபுவை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது . சதீஷ் ஜாலியாக பேசும் போது வராத சிரிப்பு கன் னை எடுத்து தலையில் வைக்கும் போது வந்து தொலைக்கிறது . ஆக்சுவலி காப் ஆனந்தராஜ் சீரியஸான படத்தில் சின்ன சின்ன தாக ரிலாக்ஸ் செய்கிறார் . ஏ.சி.பி யாக வரும் வரலக்ஷ்மி டைட்டான ட்ரெஸ்ஸில் ரிலாக்ஸாக நடித்திருக்கிறார் . சைமனின் பின்னணி இசை படத்துக்கு பலம் ...
சைத்தானில் சறுக்கிய இயக்குனர் பிரதீப் சத்யா வில் ஸ்டடியாகியிருக்கிறார் . படம் இடைவேளை வரை அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை நமக்கு கொடுத்துக்கொண்டே போகிறது . இண்டெர்வெல் ப்ளாக் சரியான இடத்தில் வந்து நம்மை நிமிர வைக்கிறது . இண்டெர்வெலில் ஒரு சாண்ட்விட்ச்சை முடித்து விட்டு வந்து உட்காரும் போது " என்ன இது நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு " என்று வடிவேலு போல புலம்ப வைத்தது துரதிருஷ்டம் ...
குழந்தை ஏன் காணவில்லை என்பதற்கான முடிச்சுகளை பல இடங்களில் இருந்து போட்டு யோசிக்க வைத்தவர்கள் அதை அவிழ்க்கும் போது இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் . பாலாஜி , சதீஸ் என்று நிறைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் . ரியாலிட்டியோடு நகரும் படம் சிபி போலீஸ் ஆனந்தராஜி டம் வா , போ என்று சவடாலாக பேசும் போது சறுக்கிறது . தன்னை கொல்ல வந்தவனை பிடித்து விசாரிக்காமல் சிபி சுட்டு கொல்வது , கடத்தப்பட்ட குழந்தை அம்மாவை தேடி அழாமல் கேசுவலாக இருப்பது , குழந்தைக்காக செய்யப்படும் கொலைகள் என்று லாஜிக் லூப்ஹோல்ஸ் இருந்தாலும் க்ரிப்பான திரைக்கதையால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வந்திருக்கும் சத்யா சைலண்ட் கில்லர் ...
ஸ்கோர் கார்ட் : 42
ரேட்டிங்க் : 3 * / 5 *
No comments:
Post a Comment