Vanga blogalam in Facebook

7 November 2010

கமல் - "நிஜ" நடிகன்

                                                               
         இன்று 56   வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்...கடந்த 50 வருடங்களாக  இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றி வரும் அளப்பெரும் பணியை யாரும் தமிழ் சினிமா இருக்கும் வரை மறக்கவோ , மறைக்கவோ முடியாது ..

        நடிப்பையும் தாண்டி தொழில்நுட்பம் , இயக்கம் , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு ,இலக்கியம்  என அவரின் பல்துறை திறன் அவரை உண்மையான "தசாவதாரி" என்று நிரூபிக்கிறது ..இத்தனை வருடம் ஆகியும் ஒவ்வொரு படத்திற்கும் முதல் படத்தை போல அவர் காட்டும் அர்பணிப்பு , தேடல் , உழைப்பு அனைவரையும்  வியக்க வைக்கிறது ...

        தன் ரசிகர்களை வெறும் ஆரத்தி காட்டுவதிற்கும் ,   பாலாபிஷேகம் செய்வதிற்கும் , வியாபார ரீதியாக மட்டும் பயன்படுத்தி  வரும் பல நடிகர்களுக்கு மத்தியில் தன்  ரசிகர் மன்றங்களை "நற்பணி" மன்றங்களாக மாற்றி  இன்று வரை  அதன் மூலம் பல இயலாதவர்களுக்கு நல்லுதவிகளை செய்து வருகிறார்...சினிமாவில் சம்பாதித்ததை எல்லாம் தெளிவாக பல இடங்களில் முதலீடு செய்து வருபவர்களுக்கு மத்தியில் தன் பணத்தை எல்லாம் நஷ்டம் ஏற்பட்டாலும் புது முயற்சிகளுக்காக சினிமாவிலேயே முதலீடு செய்யும் இவர் நிச்சயம் ஒரு கலை "ஞானி" .....

       நடிப்பில் இவர் "உலக நாயகன் " என எல்லோரும் அறிவோம் ...எனினும் "அபூர்வ சகோதரர்கள் " , " தேவர் மகன்" , " தசாவதாரம்" போன்ற படங்களில் இவரின் திரைகதை பலரால் பாராட்டபட்டதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது கூடுதல் செய்தி ....
    " உனக்குள்ள முழிச்சிட்டு  இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு " - தேவர்மகன் ... " நல்லவங்களுக்கு  கிடைக்கிற அதே மாலையும் மரியாதையும் கெட்டவங்களுக்கும் கெடைக்குதே " - மகாநதி ... " வீரம்ன்றது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது " - குருதிபுனல் ..."கடவுள் இல்லேன்னு யார் சொன்னா இருந்தா நல்ல இருக்குக்ம்னு தானே சொன்னேன் " - தசாவதாரம் ..... கமலின் வசனங்கள் இன்றும் , என்றும் மனதில் நிற்பவை .....

             இப்படி கமல்ஹாசனிடம் எவ்வளவோ நிறைகள் இருந்தாலும் அவரின் குறைகளையும் சுட்டி காட்ட வேண்டியது நம் கடமை ...பொதுவாக அவரின் மேதாவி தனமான பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தும் , அதிலும் தீபாவளி அன்று விஜய் டிவி " காபி வித் அனு "  வில் அவர் பேசிய பேச்சு எரிச்சலையே ஏற்படுத்தியது ...அதன் விளைவே இந்த பதிவு....
                                            
           வழக்கம் போல தன்னை பகுத்தறிவு வாதி என்று காட்ட   கடவுள் எதிர்ப்பு கொள்கையை  கையில் எடுக்கும் கமல் இந்த பேட்டியுலும் அதையே செய்தார் ..அதிலும் ஒரு படி மேலே போய் கடவுள் பக்தியை செக்ஸ் போல வீட்டுக்குள் வைத்து  கொள்ளுங்கள் ஏன் வெளியே தெரியும் படி நடந்து கொள்கிறீர்கள்  என்று ஏதோ கள்ள காதலை பற்றி பேசுவது போல பேசினார்...

            செக்ஸ் இதை  எல்லோரும் தெரியாமல் வைத்து கொண்டாலும் இதன் மூலம் உருவாகிற மனைவி . மகன் , மகள் என எல்லா பந்தத்தையும் யாரும் தெரியாமல் வைப்பது இல்லை .திருமணத்திற்கு பின் கணவன் மனைவி உறவில் செக்ஸ் பிரதானமாக இருந்தாலும் யாரும் அதை கொச்சையாக பார்ப்பது இல்லை ...அடுத்த சந்ததியை உருவாக்கும் தளமாகவே பார்கிறார்கள் ....அதை போல தான் கடவுள் பக்தி அனைவருக்கும் தெரியும் படி நடத்து கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. ..அது அவரவர் விருப்பம் ...என் குளியலறையை  யாரும் எட்டி பார்க்காதீர்கள் என்று அறைகூவல் விடுக்கும் கமல் அடுத்தவரின் தனி மனித உரிமையில் தலையிடுவது எந்த  விதத்தில் நியாயம் ?...
   
            ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை கமல் பிராமணர்  அல்லாதவராகவும் , அக்குலத்தை வெறுப்பவராகவும் , அசைவ உணவை விரும்பி உண்பவராகவும் முனைந்து காட்டி கொள்வதில் ஒரு காரணம் இருப்பதாக படுகிறது .. எல்லா திறமைகள் இருத்தும் தன்னையும் "ஜெமினி கணேசன்  " போல " சாம்பார்" என்று ஒதுக்கி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...எனவே தான்  தன்னை ஆர்யன் அல்ல எல்லோரையும் போல திராவிடன் என்று பிரகனப்படுத்துவதில் முனைப்பாக  இருக்கிறார்... கமல் கூட போலி ஆர்ய - திராவிட மாயையில் விழுந்தது ஆச்சர்யமாக இருக்கிறது ...

         தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்து அண்ணன் மனைவியை மன்னி என்று கூறி விட்டு பிறகு அண்ணி என்று திருத்தி கொண்டார் ...மன்னி என்று சொல்வதில் ஒரு தவறும் இருப்பது போல பட வில்லை ..அவர் குல வழக்கப்படி அப்படி கூறுவது வழக்கமாக இருந்தால் அதை ஏன் மழுப்ப வேண்டும் ?...

           கமல் அவர்களே சினிமாவில் மட்டும் உங்கள் நடிப்பை காட்டினால் மிகவும் நல்லது ...அதுவே அனைவரின் விருப்பமும் கூட. ...கடவுள் எதிர்ப்பு என்பது ஏதோ நேற்று இன்று ஏற்பட்டது அல்ல ... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தில் இரு விதமான வாதம் இருந்திருக்கிறது ...கண்ணதாசனின் " அர்த்தமுள்ள இந்து மதம் " பத்மனின் "ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே" போன்ற புத்தகங்களை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கலாம் .

         "பார்ப்பானை  ஐயன் என்ற  காலமும் போச்சே " என்று பாடிய பாரதியையே பார்ப்பான்  என ஒதுக்கிய கூட்டத்திற்கு மத்தியில்
யாரிடம் தமிழன் என சான்றிதழ் தேடுகிறீர்கள் ?...கடவுளே இல்லை என்றாலும் உங்களின் சில படங்களில் வைணவ தாக்கம் அதிகமாக இருப்பது ஏன் ?..."அன்பே சிவம் ' படத்திலேயே கடவுள்  பற்றிய கேள்விக்கு பதில் இருப்பது தெரியவில்லையா ?....

       உங்கள் பேட்டியில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் தன்னுடைய இயற்பெயரான " யூசுப் கானை  "     வெளியில் சொல்ல முடியாத கால கட்டத்தில் இருந்ததை எண்ணி நீங்கள் பரிதாபபடுவதாகவும் , அவரின் இயற்பெயரை சொல்லியே அழைப்பேன் என்றும் கூறியிருந்தீர்கள் .

       இன்றோ ஷாருக் கான் , சல்மான் கான் , அமீர் கான் என எல்லா கான்களும் உண்மைனையான பேருடன் முன்னணியில்   இருக்கிறார்கள் ...நீங்களும் உங்களின் முகமூடியை  கழட்டி விட்டு    முன்னே வாருங்கள் .....

9 comments:

  1. அருமை. ஆதி முதல் அந்தம் வரை நேர்த்தியான விமர்சனக் கட்டுரை. சொல்லம்புகள் இலக்கை நிச்சயம் தைக்கும். கமல்ஹாசன் தனது நிஜ வாழ்க்கையில் இயல்பாக இருப்பதைப்போல் காட்டிக்கொள்வதிலேயே மிகை நடிப்பை அதிகம் வெளிப்படுத்துகிறார் என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். இயல்பு, பாசாங்கு அல்ல. உள்ளதை உள்ளபடி உணர்வது, இருப்பது என்பதை அவர் இனியாவது உணர்ந்து கொள்ளட்டும். அதேநேரத்தில் சிவாஜிக்கு அடுத்தபடியாக மாபெரும் நடிப்பு மேதையாகத் திகழும், எம்ஜியார, ஹிந்தி ராஜ்கபூரைப்போல் மிகச் சிறந்ந்த தொழில்நுட்பக் கலைஞராக விளங்கும், அவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பாக சிறந்தி வசனகர்த்தாவாக மிளிரும் கமல்ஹாசனின் பெருமையை நேர்மையாகப் பாரட்டியிருந்தீர்கள். அதில் சிறிது நேர்மை இதைப்படித்தால் கமலிடமும் ஒட்டிக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. சாரிங்க எல்லாமே சினிமா விமர்சனமாவே இருக்கா அதனால் திரும்ப வந்து படிச்சிருக்கமாட்டேனா இருக்கலாம்.. படம் பார்க்கும் முன்ன கதை தெரிஞ்சுபோகுதேன்னு விமர்சனம் படிக்கறதில்ல..பாத்தபிறகு விமர்சனம் படிக்க மறந்து போயிடும்.. :)

    ReplyDelete
  3. ஆனா இன்னும் நீங்க பிழைகளை சரி செய்துகொள்ளலை போலயே..

    குளியலறை.. , முனைந்து காட்டிக்கொள்வதில் , பிரகடனம்.. மாத்திக்கிறீங்களா..?

    word verification எடுத்துடுங்க.. பின்னூட்டம் குறைவா இருக்கிறதுக்கு அதும் ஒரு காரணம் .

    ReplyDelete
  4. Eswaran KandaswamyWednesday, July 13, 2011

    Yappa... muthulachumigal... tamizhai kaaptramal vida mattargal bol ulltathey... But am very happy the errors she has pointed... unmaiyana tamil arivum gnanmum illa vittal ithai kandu pidikka mudiyathu...
    ( Hope my taminglish is not harassing anyone here)

    ReplyDelete
  5. pragnan said...
    அருமை. ஆதி முதல் அந்தம் வரை நேர்த்தியான விமர்சனக் கட்டுரை. சொல்லம்புகள் இலக்கை நிச்சயம் தைக்கும். கமல்ஹாசன் தனது நிஜ வாழ்க்கையில் இயல்பாக இருப்பதைப்போல் காட்டிக்கொள்வதிலேயே மிகை நடிப்பை அதிகம் வெளிப்படுத்துகிறார் என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். இயல்பு, பாசாங்கு அல்ல. உள்ளதை உள்ளபடி உணர்வது, இருப்பது என்பதை அவர் இனியாவது உணர்ந்து கொள்ளட்டும். அதேநேரத்தில் சிவாஜிக்கு அடுத்தபடியாக மாபெரும் நடிப்பு மேதையாகத் திகழும், எம்ஜியார, ஹிந்தி ராஜ்கபூரைப்போல் மிகச் சிறந்ந்த தொழில்நுட்பக் கலைஞராக விளங்கும், அவர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பாக சிறந்தி வசனகர்த்தாவாக மிளிரும் கமல்ஹாசனின் பெருமையை நேர்மையாகப் பாரட்டியிருந்தீர்கள். அதில் சிறிது நேர்மை இதைப்படித்தால் கமலிடமும் ஒட்டிக்கொள்ளட்டும்.

    நன்றி... உங்கள் பின்னூட்டமே நல்ல பதிவு...

    ReplyDelete
  6. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    சாரிங்க எல்லாமே சினிமா விமர்சனமாவே இருக்கா அதனால் திரும்ப வந்து படிச்சிருக்கமாட்டேனா இருக்கலாம்.. படம் பார்க்கும் முன்ன கதை தெரிஞ்சுபோகுதேன்னு விமர்சனம் படிக்கறதில்ல..பாத்தபிறகு விமர்சனம் படிக்க மறந்து போயிடும்.. :)

    நன்றி..

    ReplyDelete
  7. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ஆனா இன்னும் நீங்க பிழைகளை சரி செய்துகொள்ளலை போலயே..
    குளியலறை.. , முனைந்து காட்டிக்கொள்வதில் , பிரகடனம்.. மாத்திக்கிறீங்களா..?
    word verification எடுத்துடுங்க.. பின்னூட்டம் குறைவா இருக்கிறதுக்கு அதும் ஒரு காரணம் .

    உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  8. Eswaran Kandaswamy said...
    Yappa... muthulachumigal... tamizhai kaaptramal vida mattargal bol ulltathey... But am very happy the errors she has pointed... unmaiyana tamil arivum gnanmum illa vittal ithai kandu pidikka mudiyathu...
    ( Hope my taminglish is not harassing anyone here)

    Thanks...

    ReplyDelete