7 April 2011

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?

               
         இப்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிகமாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருப்பது விஜயகாந்தின் பிரச்சாரம்...
          குடித்து விட்டு உளறுகிறார் ...தன் கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்...கூட்டணிக் கட்சிக்காரர்களையே மிரட்டுகிறார் ..கோயம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று தினமும் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது ..
           போதாக்குறைக்கு இவரை விமர்சித்து வடிவேலு செய்யும் பிரச்சாரம் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது....வடிவேலுவின் பிரச்சாரம் சிரிக்க வைத்தாலும் உண்மை என்ன என்பதை சிந்திக்க வேண்டியதும் நமது கடமை ..
            "கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் " என்னும் கூற்றுக்கேற்ப விஜயகாந்தின்  பிரச்சாரங்களை கூர்ந்து கவனித்தால் தான் ஏன் தி.மு.க அவரை குறி வைத்து தாக்குகிறது என்று புரியும் ...இந்த முறையும் விஜயகாந்த் தனியாக நின்றிருந்தால் யாருக்கு லாபம் என்று எல்லோருக்கும்  தெரியும் ..
       
                                      
    பிரசாரங்களில் விஜயகாந்த் பேசும் பேச்சுக்களில் முக்கியமான சிலவற்றை கீழே காணலாம்....
     "நான் கருணாநிதி மாதிரி அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கலை ,,சம்பாதிச்சுட்டு தான் அரசியலுக்கு வந்தேன்" - -   "நான் என் வேட்பாளரை அடிக்கலை .."அய்யோ கொலை பண்றாங்கன்னு" பொய்யா டி.வியில் போட்டாங்களே அது மாதிரி தான் இதுவும் --
       " அப்படியே பார்த்தாலும் நான் கழுத்துல தான் அடிச்சேன் , ஆனா அவங்க சொந்த கட்சி காரர் தா.கிருஷ்ணன் கழுத்தையே எடுத்துட்டாங்களே " - 
                               "நான் ஏன் அ.தி.மு.க வோட கூட்டணி வைச்சேன் ..அர்ஜுனனுக்கு எப்படி கிளியோட கழுத்து தான் 
குறியா இருந்தததோ அதே போல என்னோட முக்கிய நோக்கமே அராஜக தி.மு.க ஆட்சியை கீழே
இறக்குவது தான் ..அதனால தான் எனக்கு 500 கோடி கொடுக்க முன் வந்த போதும் நான் அவங்க 
கூட சேரலை , புரிஞ்சுக்குங்க மக்களே"
   "மதுரை தினகரன் ஆபீசில் மூணு பேர் அநியாயமா செத்தாங்களே அதுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?..
   "தன குடும்பத்துக்கு பதவி வேணும்னா டெல்லி போறாரே கருணாநிதி ..இலங்கையிலே இத்தனை தமிழன் செத்தானே அதுக்கு என்ன செஞ்சாரு ? ...
     " நான் ஒன்னும் பதவிக்காக இந்த கூட்டணியோட சேரலை ..எனக்கு பதவி ஆசையே இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஆறாவது முறையா என்னை முதல்வர்  
ஆக்குங்கன்னு ஏன் கெஞ்சனும் ? சிந்தியுங்க மக்களே ...
   "உங்களுக்கு (தி.மு.க ) ஆப்பு அடிச்சா தான் சரிப்படுவிங்க"- இதை ஹாப் என்று மாற்றியது
வேறு விஷயம்....
          "உண்மையிலே அவர் மக்களுக்கு நல்லது செஞ்சிருந்தா ஏன் தேர்தல் கமிசன் நடவடிக்கைகளை 
 பார்த்து பயப்படனும் ?  ...
       இப்படி எல்லா இடங்களிலும் சூடு பிடிக்க பிரச்சாரம் செய்து வருகிறார் ..அதனால் தான் சரியான   
நேரத்தில் வடிவேலுவை தன பக்கம் இழுத்து இருக்கிறது தி.மு.க ...விஜயகாந்துடன் தனக்கு
இருக்கும் சொந்த பிரச்சனைக்கு பழி தீர்க்க அவரும்    ஒத்து கொண்டிருக்கிறார் ..அதே முறையை தான் சிங்கமுத்துவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் அ.தி.மு.கவும் செய்து இருக்கிறது...
            இப்படி தன் சொந்த பகைமைக்காக அரசியலை கையில் எடுப்பவர்கள் மத்தியில் நேரடியாக அரசியலில் அடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்..தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதை கூட அவர் பெரிய அரசியலாக்கவில்லை...தன் குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் இருந்தாலும் இந்த முறை யாருக்கும் அவர் சீட் வழங்கவில்லை ...அதே போல
பணப்பெட்டியுடன் நிறைய பேர் அவரை முற்றுகை இட்டாலும் தன் ஆரம்ப காலத்தில் இருந்து தன் கூட இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே அவர் சீட் வழங்கியிருக்கிறார் என்று ஒரு செய்தி ...

                        
           தி.மு.க , அ.தி.மு.க இரண்டிற்கும் மாற்று சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட   தே .மு.தி.க இந்த முறை கூட்டணி சேர்வதை தவிர வேறு வழியில்லை ..சென்ற முறை தனித்து நின்று பெற்ற கணிசமான வாக்குகளை இந்த முறையும் தனித்து நின்றால் பெற முடியும் என முழுமையாக சொல்ல முடியாது ...
      கிராமப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்றிருக்கும் தே.மு.தி.க நகரங்களில் குறிப்பாக                                                                                              படித்தவர்களிடத்தில் வளர்ச்சி அடைவது ரொம்ப முக்கியம் .."கருப்பு எம்.ஜி.ஆர்." என்று சொல்லிக்கொள்ளும்                                               விஜயகாந்த்  படித்தவர்களிடத்தில் எம்.ஜி.ஆர்க்கு இருந்த செல்வாக்கை
மறந்து விடக்கூடாது ..
       அ.தி.மு.க தலைமையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாவிட்டாலும் அதே நேரத்தில்   அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்....      
    அவர் நிதானம் இல்லாமல் நடந்து கொள்வதும் , அதிகமாக கோபப்படுவதும் பெரிய குறை.. 
ஊடகங்களை தன் கையில் வைத்து இருக்கும் தி.மு.க விஜயகாந்திற்கு எதிராக பிரச்சாரம்
செய்து வருவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை .ஆனால் இந்த அளவிற்கு விஜயகாந்திற்கு
முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தே அவர்கள் பயந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.....

        தன் மீது வைக்கப்படும் " குடிகாரன்" என்ற விமர்சனத்திற்கு அதே பாணியில்  பதில் சொல்லாமல் கௌரவமாக நடந்து கொண்டாலும் இதனால் ஏற்பட்ட சந்தேகத்தை
முழுமையாக நிவர்த்தி செய்வது விஜயகாந்தின் கடமை ....
          ஒரு வேலை அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி சோனியா காந்தியிடம் சரணாகதி அடைந்தது போல விஜயகாந்தும் ஜெயலலிதாவிடம்  சரணாகதி அடைவாரா ? அல்லது தனித்துவத்தை காப்பாற்றுவாரா என்பது பொதுமக்களின் கேள்வி ...
          விஜயகாந்தின் பிரச்சாரம் தள்ளாட்டமா ? ஆட்சியை பிடிப்பதற்கான வெள்ளோட்டமா ?  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ......
         

12 comments:

Anonymous said...

எது என்னவோ? அவரு எல்லாம் நாட்டுக்கு பெரிய தலைவர் என படித்த எவனும் ஏற்க மாட்டான் என்பது நிதர்சனம்

Unknown said...

நல்ல பதிவு
சினிமாவை பார்த்து உண்மை கதை என்று ஏமாறும் மக்கள், டிவியை பார்த்து ஏன் ஏமாறமாட்டார்கள் ?
சினிமா அவருக்கு முகவரி...
என்ன இருந்தாலும் 8 சதவிகித ஓட்டு வாங்கும் அளவுக்கு மக்களிடம் ஒரு பெயர் இருக்கிறது அது மாற்று MGR மாதிரித் தான் ஆனால் அது அனைத்துக்கும் பொருந்தாது !
இந்தத் தேர்தலில் விஜயகாந்த் என்ற கருப்பு MGR தமிழக அரசியலுக்கு ஒரு திருப்புமுனையை தருவது 'உறுதி'

Jayadev Das said...

\\..தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதை கூட அவர் பெரிய அரசியலாக்கவில்லை\\ மண்டபம் இடிக்கப் பட வேண்டுமென்ற முடிவை நடுவண் அரசுத் துறை ஒன்றால் அவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே எடுக்கப் பட்டது. ஆனாலும் அதையும் அரசியலாக்கி என்னைப் பழி வாங்குகிறார்கள் என்று இவர் விளம்பரம் தேடிக் கொண்டார்.

Jayadev Das said...

\\ அ.தி.மு.க தலைமையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாவிட்டாலும் அதே நேரத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்....\\ அ.தி.மு.க கொடியை வைத்திருந்த தொண்டரை பார்த்து அதை கீழே போடச் சொல்லி இவர் மிரட்டியதை எல்லா தொலைக் காட்சியிலும் பார்த்தோமே. எதற்கு இந்த பசப்பு வேலை உங்களுக்கு??

Jayadev Das said...

பெயரைத் தவறைச் சொன்னார் என்று சுட்டிக் காட்டியதற்காக எவனாவது போட்டு அடிப்பானா? அப்படிச் செய்து விட்டு, நான் என் வேட்பாலர்த் தானே அடித்தேன், என்னிடம் அடி வாங்கியவன் மகாராஜாவாக ஆகிவிடுவான் என்று முதல் நாளும், நான் அடிக்கவே இல்லை அதை டி.வி. காரர்கள் தரித்துக் கட்டுகிறார்கள் என்று இவரே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். அ.தி.மு.க. கொள்கை சிறையில் இருப்பதாகவும், அ.தி.மு.க. அமைச்சர் ராசா சிறையில் இருப்பதாகவும் சொல்கிறார். இவையெல்லாம் \\விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ?\\ என்ற கேள்விக்கு ஆம் என்றே நினைக்க வைக்கிறது.

ananthu said...

நிச்சயமாக இந்த பதிவு விஜயகாந்தை பெரிய தலைவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக போடப்பட்டதல்ல..அதே சமயத்தில் ஒரு கட்சி சார்பு தொலைகாட்சிகளில் சித்தரிக்கப்படும் அளவிற்கு அவர் மோசமானவரும் அல்ல...எந்த ஒரு விசயத்தையும் ஒரு சார்பாகவே அனுகாமல் அதன் மறு பக்கத்தையும் ஆராயவே இந்த பதிவு...

மேலும் தி.மு.க தலைவர்கள் அன்று முதல் இன்று வரை தனி மனித தாக்குதல்களில் தங்களை வளர்த்துக்கொண்டவர்கள் என்பதை வரலாறு அறியும்...உதாரணத்திற்கு பெருந்தலைவர் என்று எல்லோராலும் மதிக்கப்படும்
"காமராஜ்" அவர்கள் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த போது "ஏழைக்குடிமகனின் பங்களா பாரீர்" என்று பொய் பிரச்சாரம் செய்ததும், தொண்டையில் குண்டடி பட்டு சரியாக பேச முடியாமல் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களை கேலி செய்தது யார் ? என்பதை உலகம் அறியும்....

சென்ற முறை விஜயகாந்த் தனியாக நின்ற போது இதே விமர்சனங்கள் ஏன் எழவில்லை ? விஜயகாந்த் கேட்கும் அரசியல் ரீதியான கேள்விகளுக்கு நியாயமாக பதில் கூறாமல் , அவரை தனிப்பட்ட்ட முறையில் மட்டும் விமர்சனம் செய்வது ஏன் ? இது போன்ற கேள்விகள்

வாக்காளர்களை குடையாமலும் இல்லை ...

அமர பாரதி said...

என்ன பேசறீங்க? //அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கலை ,,சம்பாதிச்சுட்டு தான் அரசியலுக்கு வந்தேன்// அவர் நடிகரா சம்பாதிச்சுட்டு தானே எஞ்சினியரிங் காலேஜ் ஆரம்பித்தார். அதில் அவர் என்ன கட்டனம் வாங்காமல் கல்வி சேவையா செய்கிறார்? புதுசு புதுசா சொற்றொடர்களை கண்டு பிடிப்பதற்கு முன்னால் என்ன செய்யப் போகிறார் என்று சொல்ல வேண்டாமா? சொன்னால் காப்பியடித்து விடுவார்கள் என்பது உளறல். அதாவது சட்டியில் இருந்தால்தானே ஆப்பையில் வரும்.

குடும்ப அரசியல் எதிர்ப்பு பற்றி இவர் பேசினால் எட்தால் சிரிப்பது? குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் என்ன, அவர்கள் ஆதிக்க இல்லாமல் இருக்குமா?

//தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதை கூட அவர் பெரிய அரசியலாக்கவில்லை// இதில் என்ன அரசியல்? இது ஏதாவது தீன்டாமைச் சுவர் விவகாரமா? நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கத்தூக்காக செய்ததை அவரும் முடிந்த வரை அரசியலாக்கினார் என்பதே உண்மை.

tmk said...

சிறந்த விமர்சனம் நண்பா
உங்ககிட்ட நான் உன்னும் எதிர்பகேறேன்

Jayadev Das said...

\\குடும்ப அரசியல் எதிர்ப்பு பற்றி இவர் பேசினால் எட்தால் சிரிப்பது? குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் என்ன, அவர்கள் ஆதிக்க இல்லாமல் இருக்குமா?\\ சரியாச் சொன்னீங்க, சசிகலவுக்குக் கூடத்தான் கட்சியிலோ, ஆதியிலோ இது வரைக்கும் எந்த பதவியையும் கொடுக்கலை, ஆனா அதுக்காக, ஜெ.வை அவர் கண்ட்ரோல் பண்ணுவதே இல்லை என்று சொல்ல முடியுமா?

Jayadev Das said...

\\ஆதியிலோ\\ ஆட்சியிலோ ....[தவறு..ஹி..ஹி..ஹி..]

arunkumar said...

Nice one!!!

ஸனு செல்லம் said...

//விஜயகாந்தின் பிரச்சாரம் தள்ளாட்டமா ? ஆட்சியை பிடிப்பதற்கான வெள்ளோட்டமா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ......// மே 13 ஆம் தேதி காலை தெரிந்துவிடும்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...