சென்னையில் கடந்த ஞாயிறன்று ( 26.08.2012 ) தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடைபெற்றது ... காலையில் சி.பி , கேபிள் , பட்டிக்காட்டான் ஜெய் முன்னிலையில் பதிவர்கள் அறிமுகம் , பிறகு மதியம் 1.30க்கு லஞ்ச் , அதை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் மூத்த பதிவர்களை கெளரவப்படுத்துதல் , கவியரங்கம் , கடைசியில் பி.கே.பி யின் உரை மற்றும் மதுமதியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் சில முக்கியமான துளிகள் இதோ :
- காலை முழுவதும் பதிவர்களின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்றது ... தமிழ்நாடு தவிர மும்பை , மலேசியா போன்ற இடங்களில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது ... பதிவர்கள் அறிமுகத்தின் போது அதிக கைதட்டல் வாங்கியவர் " நாய் நக்ஸ் நக்கீரன் " ... (எல்லாருக்கும் பேமென்ட் கரக்டா போய் சேந்திருச்சா பாஸ் )
- சுரேகா அவர்களின் அறிமுகத்தின் போது கேபிள் " நீங்கள் பாடலாசிரியர் தானே , ஒரு பாட்டு பாடுங்கள் " என்று கேட்க , அதற்கு அவர் " பாட்டு எழுதறது தான் என் வேல , பாடுறது இல்ல " என்று பதிலடி கொடுத்தார் ... ( அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா )
- ஒரு பதிவர் தன் குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் தன் பதிவுக்கு ஒட்டு போட்டு அதை முன்னணிக்கு வர வைத்து விடுவார்கள் என்ற தகவலை சொன்னார் ... ( நல்ல விவரமான புள்ளையா தாம்பா இருக்கு ! )
- என் பதிவின் பெயரை " வாங்க ப்ளாகலாம் " என்பதற்கு பதில் " வாங்க பழகலாம் " என்றே நிறைய பேர் குறிப்பிட்டார்கள் ... ( எதுக்கு இந்த விளம்பரம் )
- எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் ஒவ்வொரு பதிவரின் அறிமுகத்தின் போதும் அவர்களின் பெயர்களை தவறாமல் எழுதிக்கொண்டிருந்தார் ... நான் முதலில் அவரை பத்திரிக்கைக்காரர் என்று தான் நினைத்தேன் , பிறகு தான் தெரிந்தது அவர் பதிவர் ஈகைவேந்தன் என்பது ... அவர் குருநானக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் , பி.ஹெச்.டி படிப்பிற்காக பதிவுலகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தன் அறிமுகத்தின் போது குறிப்பிட்டார்... (சொல்லவேயில்ல )
- ஜாக்கி சேகர் சிங்கிளாக தான் வந்தார் , ஆனால் அவரை சுற்றி ஒரு கூட்டமே சேர்ந்துவிட்டது ... ( இது அன்பால தானா சேர்ந்த கூட்டமோ ! )
- பதிவர் கோவை நேரம் வெள்ளை வெட்டி சட்டையில பளபளவென்று வந்திருந்தார் , கேட்டதற்கு இது தமிழ் பதிவர்கள் சந்திப்பல்லவா என்று தமிழ்ப்பற்று காட்டினார் ... ( அய்யோ நான் தமிழன் ! )
- சுரேகா நகைச்சுவை ததும்ப நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினார் ... இவரும் , இவரின் பதிவுலக நண்பர் கேபிள் சேகரும் ( இருவரும் வைத்திருப்பது ஒரே கலர் நானோ கார் ) இணைந்து " கேட்டால் கிடைக்கும் " என்ற அமைப்பின் மூலம் இதுவரை இருபதுக்கும் மேற்ப்பட்ட நுகர்வோர் சிக்கல்களை தீர்த்து வைத்திருப்பதாக சொன்னார்.... யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் இவர்களை அணுகலாம் ... ( பிரபா ஒய்ன்ஷாப்ப எப்போ சார் தெறப்பாங்க ! )
- ரமணி , சென்னைப்பித்தன் , வலைச்சரம் சீனா , லக்ஷ்மி உட்பட மூத்த பதிவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டார்கள் ... ( ஓல்ட் இஸ் கோல்ட் )
- நிகழ்ச்சி முடியும்வரை பம்பரம் போல சுற்றிக் கொண்டிருந்தார் பிலாசபி பிரபாகரன் ... ( ஹே ! நான் ரொம்ப பிஸி , ரொம்ப பிஸி ! )
- ஆரூர் மூனா செந்தில் அரையடி கிருதாவுடன் அமர்க்களமாய் இருந்தார் . ( நாங்கல்லாம் அப்பவே அந்த மாதிரி இப்போ கேட்கவா வேணும் ! )
- ஈரோடு வழக்கறிஞர் ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) மக்கள் தொலைகாட்சி பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை அழைத்துச் சென்று பேச வைத்தார் ... ( உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு )
- தமிழ்வாசி பிரகாஷ் , ராஜ் , ரமணி , தமிழ் ராஜா ஆகியோருடன் நான் அளவளாவிக் கொண்டிருந்தேன் .. ( இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது )
- மதியம் உணவருந்தும் போது கேபிள் சிறு முதலீட்டுப் படங்களின் தற்போதைய நிலை , சினிமா செய்திகள் , அவர் இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் படங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் என்னுடன் மனம் திறந்து பேசினார் ... அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுலக நண்பர் கேபிள் எழுதிய புத்தகத்தில் அவரிடமே ஆட்டோகிராப் வாங்கினார் ... ( இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் )
- உணவு இடைவெளி முடிந்த பிறகு யாரையும் தூங்க விடாமல் செய்வதற்காக கவியரங்கம் தொடங்கும் என்று சுரேகா அறிவுத்தவுடனே சிலர் எஸ்கேப் ஆகி விட்டார்கள் ... ( அப்பா ! இப்பவே கண்ண கட்டுதே !)
- மயிலன் தன் சிறு வயதில் ஆரம்பித்து நடைபெறப்போகும் கல்யாணம் வரை தன் காதல் அனுபவங்களை கவிதை மழையாய் பொழிந்தார் ... அக்டோபரில் திருமணம் செய்து கொள்ளும் அவருக்கு எல்லோர் சார்பாகவும் வாழ்த்துக்கள் ... ( நண்பா உங்க காதல் மேட்டர்லாம் உட்பிக்கு தெரியுமா ?! )
- நான் கவிதை வாசிக்க செல்லும் போதே அருகிலிருக்கும் யாரையாவது கைதட்டி விட்டு வரச் சொல்லுங்கள் என்று சுரேகா அறிவுரை செய்தார் ... நல்ல வேலை அருகிலிருப்பவர்கள் மட்டுமல்லாமல் அரங்கத்தில் நிறைய பேர் கவிதைக்காக ! கை தட்டியது என் கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது ... ( இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல !? )
- சி.பியுடன் பேசும் போது அவர் காபி , டீ . சிகரட் , தண்ணி , பாக்கு என்று எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் என்று சொன்ன போது எனக்கு லேசாக நெஞ்சை அடைத்தது ... ( ஒர்த்தர் நல்லா இருந்தா உனக்கு பொறுக்காதே )
- ராஜி , கோவை சரளா போன்ற பெண் பதிவர்கள் என்னனயும் , என் ப்ளாகையும் அடையாளம் கண்டு கொண்டு பேசினார்கள் ( ஐ லேடீஸ் !)
- பி.கே.பி பேச ஆரம்பிக்கும் போது சிலர் போண்டாவை நோக்கி படையெடுப்பதை பார்த்த சுரேகா இது போல நடந்து கொள்ளக் கூடாது என்று கடிந்து கொண்டார் ... பி.கே.பி பேசி முடித்ததும் பதிவர் கிராமத்துக் காக்கையுடன் வந்திருந்த ஒரு நண்பர் சீரியசாக " இப்போ போண்டா கிடைக்குமா பாஸ் " என்று அப்பாவியாக கேட்டார் ... ( அய்யோ வடை போச்சே ! )
- பி.கே.பி அவர்கள் பதிவுலகில் இன்று வரை நடந்து வரும் சமாசாரங்களை அப்படியே சொன்ன போதே அவர் நிகழ்ச்சிக்கு வெறும் ஒப்புக்காக வரவில்லை , முழு ஆர்வத்துடன் வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது ... பதிவர்கள் தனி மனித தாக்குதல்களையும் , ஆபாசமான , அருவருக்கத்தக்க பதிவுகளையும் தவிற்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார் ... ( சரியா சொன்னீங்க )
- நிகழ்ச்சி வலையகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது ...அதே போல மக்கள் தொலைக்காட்சியில் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8 மணிக்கும் ஒளிபரப்பாக போகிறது ... ( நமக்கும் பப்ளிசிட்டி வேணுமில்ல )
- இது போன்ற சந்திப்புகள் பதிவுலகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ... தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நல்ல படியாக நடப்பதற்கு காரணமாய் இருந்த அனைவருக்கும் , உறுதுணையாய் இருந்த மக்கள்சந்தை .காம் நிறுவனத்திற்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் . கருத்துக்களால் நாம் வேறுபட்டிருந்தாலும் , அனைவரும் பதிவர்களாக ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு காட்டுகிறது . இந்த பதிவிற்கு எல்லா தளங்களிலும் ஓட்டுக்களை போட்டு அந்த ஒற்றுமையை நாம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்வோமாக ... ( ஹி ...ஹி )
நறுக்கென்று பாய்ண்ட் பாய்ண்ட்டா போட்டிருக்கீங்க,, உங்களை பார்த்து பேசினேனா என தெரியலை...
ReplyDeleteஎங்கே நாம பேசிட்டு இருந்ததை போடாம விட்ருவிங்களேன்னு நெனச்சேன்...
ReplyDeleteநல்ல ஞாபகம் உமக்கு....
இந்த பாணியும் நல்லாயிருக்கு.
ReplyDeleteசெம தொகுப்புக்கள் ... அதிலும் குறிப்பாக முடிக்கும் இடத்தில குறிப்பிட்டிருக்கும் கமென்ட் மனசை அள்ளுதுங்கோ
ReplyDeleteஅடடா...உங்கள யாருன்னு பார்க்க முடியாமல் போய் விட்டதே...பார்த்திருக்கலாம்...யாருன்னு தெரியலயே...இப்படி என்னை குழம்ப வைத்து விடீரே
ReplyDeleteஅட..நீங்க தானா...அது..?மொபைல் போன்ல கவிதை வாசிச்ச நவீன கவிஞர்....
ReplyDeleteஉங்க கூட போட்டோ எடுத்துக்க முடியல என்கிற வருத்தம் இன்னமும் இருக்கு பாஸ்
அருமை நண்பா
ReplyDeleteபாயிண்டு பாயிண்டா போட்டு கொன்னுடீங்க!
ReplyDeleteஅடுத்த சந்திப்புல மேடைபக்கம் போகாம பதிவர்கள் பக்கம் கவனம் செலுத்தனும், கொல்லப்பேரோட பழக முடியாமப் போச்சி...
ReplyDeleteசூப்பரா எழுதுறீங்கண்ணோவ்வ்வ்வ்வ்வ்
நன்றி இந்தப் பதிவிற்கு. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அருமை... மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவரையும் நேரில் சந்தித்தது போல இருந்தது. வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல தொகுப்பு நண்பரே....
ReplyDeleteபல விஷயங்களைச் சுவையாகச் சொல்லி இருப்பது நன்று. வாழ்த்துகள்.
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தோழரே!!
ReplyDeleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
எல்லாம் சிறப்பா சொல்லிட்டு என்னைய மறந்துட்டிங்களே நியாயமா?
ReplyDeleteஎங்களை மாதிரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு (லைவ் வாக பார்த்துக்கொண்டேதான் இருந்தோம் என்பது வேறு விஷயம்) தங்களின் தொகுப்பு கலந்துகொண்ட திருப்தியைத் தந்தது. நன்றி.
ReplyDeleteஆனாலும் எல்லாத்தளத்திலும் சென்று ஓட்டுப்போடச் சொல்லி சந்தடிசாக்கில் கோரிக்கையை வீரமுழக்கமாக ஒலிக்கச்செய்த உங்க டீலிங்க் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.......
உங்க கவிதையை ரொம்ப அட்வான்ஸ்ட் டெக்னாலஜியா உங்க செல்போன்ல எழுதிவச்சு வாசிச்சு புது டிரண்ட் செட் பண்ணிட்டீங்க.....
ReplyDeleteசகோதரி சசிகலா அவர்களின் கவிதைவெளியீட்டை விட்டுட்டீங்க....
அப்புறம்......லன்ச் ....அது பற்றி 2 வரி எழுதியிருக்கலாம்.
:))
ReplyDeleteGood narration
லைவாக 20/20 மேட்ச் பார்த்தது போல இருந்தது. கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக, தாங்கள் வழங்கிய இந்த கமெண்டரி மிகவும் அருமை. இது போன்ற சந்திப்புகள் பதிவுலகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ... மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தமிழ் என்ற மொழியால் நாம் அனைவரும், இணைக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி தரும், பெருமை தரும் விஷயமே.
ReplyDeleteநறுக்குன்னு இருக்கு
ReplyDeleteஎல் கே said...
ReplyDeleteநறுக்கென்று பாய்ண்ட் பாய்ண்ட்டா போட்டிருக்கீங்க,, உங்களை பார்த்து பேசினேனா என தெரியலை...
Tuesday, August 28, 2012
எனக்கும் தெரியல ! ஒரு க்ளூ , நான் மொபைல் போனில் கவிதை படித்தேன் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஎங்கே நாம பேசிட்டு இருந்ததை போடாம விட்ருவிங்களேன்னு நெனச்சேன்...
நல்ல ஞாபகம் உமக்கு....
உங்களெல்லாம் மறக்க முடியுமா ?! உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDeleteஇந்த பாணியும் நல்லாயிருக்கு.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
அரசன் சே said...
ReplyDeleteசெம தொகுப்புக்கள் ... அதிலும் குறிப்பாக முடிக்கும் இடத்தில குறிப்பிட்டிருக்கும் கமென்ட் மனசை அள்ளுதுங்கோ
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
கோவை நேரம் said...
ReplyDeleteஅடடா...உங்கள யாருன்னு பார்க்க முடியாமல் போய் விட்டதே...பார்த்திருக்கலாம்...யாருன்னு தெரியலயே...இப்படி என்னை குழம்ப வைத்து விடீரே
யோசியும் யோசித்துப் பாரும் !
கோவை நேரம் said...
ReplyDeleteஅட..நீங்க தானா...அது..?மொபைல் போன்ல கவிதை வாசிச்ச நவீன கவிஞர்....
உங்க கூட போட்டோ எடுத்துக்க முடியல என்கிற வருத்தம் இன்னமும் இருக்கு பாஸ்
அட கண்டுபிடிச்சுட்டீங்க ! அந்த அடியேன் நானே தான் ... அடுத்த முறை போட்டோ எடுத்துக் கொண்டால் போச்சு ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteபாயிண்டு பாயிண்டா போட்டு கொன்னுடீங்க!
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
பட்டிகாட்டான் Jey said...
ReplyDeleteஅடுத்த சந்திப்புல மேடைபக்கம் போகாம பதிவர்கள் பக்கம் கவனம் செலுத்தனும், கொல்லப்பேரோட பழக முடியாமப் போச்சி...
சூப்பரா எழுதுறீங்கண்ணோவ்வ்வ்வ்வ்வ்
பாலுமகேந்திராவுக்கு பொரவு கேப் செமையா செட்டானது உங்களுக்கும் மட்டும் தான்னோவ்வ்வ்வ் !
kovaikkavi said...
ReplyDeleteநன்றி இந்தப் பதிவிற்கு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅருமை... மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!நாம் சந்தித்தோமா ?
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல தொகுப்பு நண்பரே....
பல விஷயங்களைச் சுவையாகச் சொல்லி இருப்பது நன்று. வாழ்த்துகள்.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Anbarasu Annamalai said...
ReplyDeleteஅனைவரையும் நேரில் சந்தித்தது போல இருந்தது. வாழ்த்துகள்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
தொழிற்களம் குழு said...
ReplyDeleteதங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தோழரே!!
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
எனக்கும் தான் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Sasi Kala said...
ReplyDeleteஎல்லாம் சிறப்பா சொல்லிட்டு என்னைய மறந்துட்டிங்களே நியாயமா?
நியாமமில்ல தான் , எப்படியோ மறந்துட்டேன் , ஆனால் உங்கள் கவிதைகள் சிலவற்றைப் படித்தேன் , அருமை ! உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
கடம்பவன குயில் said...
ReplyDeleteஎங்களை மாதிரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு (லைவ் வாக பார்த்துக்கொண்டேதான் இருந்தோம் என்பது வேறு விஷயம்) தங்களின் தொகுப்பு கலந்துகொண்ட திருப்தியைத் தந்தது. நன்றி.
ஆனாலும் எல்லாத்தளத்திலும் சென்று ஓட்டுப்போடச் சொல்லி சந்தடிசாக்கில் கோரிக்கையை வீரமுழக்கமாக ஒலிக்கச்செய்த உங்க டீலிங்க் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
நீங்க வேற அது சும்மா ஒரு ஜாலிக்கு சொன்னது . இவ்வளவு சொல்லியும் தமிழ்மணத்துல ஓட்டே விழல ! நேரே வர முடியாவிட்டாலும் லைவாக பாத்து அப்டு டேட்டாக இருக்கீங்க ! நன்றி ...
கடம்பவன குயில் said...
ReplyDeleteஉங்க கவிதையை ரொம்ப அட்வான்ஸ்ட் டெக்னாலஜியா உங்க செல்போன்ல எழுதிவச்சு வாசிச்சு புது டிரண்ட் செட் பண்ணிட்டீங்க.....
சகோதரி சசிகலா அவர்களின் கவிதைவெளியீட்டை விட்டுட்டீங்க....
அப்புறம்......லன்ச் ....அது பற்றி 2 வரி எழுதியிருக்கலாம்.
என் மொபைளிலேயே நான் எனது ப்ளாகை டவுன்லோட் செய்து விட்டதால் அது சாத்தியமானது ... எதுக்கு காகிதத்தை வீணடிக்க வேண்டும் ? ஆம் சசிகலாவை மறந்தது உண்மை தான் ... லன்ச் சப்பாத்தி , வெரைட்டி ரைசுடன் நன்றாகவே இருந்தது , ஆனால் பதிவர்கள் சந்திப்பில் முனைப்பாக இருந்ததால் அதில் பெரிய ஆர்வமில்லை ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
மோகன் குமார் said...
ReplyDelete:))
Good narration
நன்றி ...
ramkaran said...
ReplyDeleteலைவாக 20/20 மேட்ச் பார்த்தது போல இருந்தது. கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக, தாங்கள் வழங்கிய இந்த கமெண்டரி மிகவும் அருமை. இது போன்ற சந்திப்புகள் பதிவுலகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ... மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தமிழ் என்ற மொழியால் நாம் அனைவரும், இணைக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி தரும், பெருமை தரும் விஷயமே.
ஆம் எல்லோரும் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் பதிவுலகம் ஒரு ஆரோக்கியமான சூழலுக்குள் செல்ல வேண்டுமென்பதே என் எண்ணம்..உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅருமை.
அங்க பேசினது தான் சுருக்கமா இருந்துச்சுன்னு பாத்தா , இங்க பின்னூட்டமுமா ? லாயரே கோர்ட்ல எப்படி !? ... நண்பரே உங்களை சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ... ! .உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
முரளிகண்ணன் said...
ReplyDeleteநறுக்குன்னு இருக்கு
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
கிராமத்து காக்கை said...
ReplyDeleteஅருமை நண்பா
நன்றி நண்பா ! உங்க நண்பரையும் கேட்டதா சொல்லுங்க ..
என்னால் வர முடியலனு வருத்தம் தான் பரவாஇல்ல, அடுத்த தடவை முயற்சிக்கிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, என் தளத்திற்கும் வாங்களேன் நன்றி
ReplyDeleteசெழியன் said...
ReplyDeleteஎன்னால் வர முடியலனு வருத்தம் தான் பரவாஇல்ல, அடுத்த தடவை முயற்சிக்கிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, என் தளத்திற்கும் வாங்களேன் நன்றி
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...