Vanga blogalam in Facebook

30 September 2012

டி 20 - யுத்தம் ஆரம்பம் ...



ன்னும் சிறிது  நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் யுத்தம் ஆரம்பிக்க போகிறது ... இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம் , அந்த அளவிற்கு இரு நாடுகளில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாகவே இரு நாடுகளுக்கிடையேயான போட்டி எப்பொழுதும் இருக்கும் ...

இது வரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் ( 2 டி 20 , 5 50 ஓவர் )  பாகிஸ்தானுடன் ஆடியுள்ள இந்தியா ஒன்றில் கூட தோற்றதில்லை என்று வரலாறு சொன்னாலும் தற்போது பாகிஸ்தான் அணியினரின் தொடர் வெற்றியும் , சேவாக் - தோனி இடையேயான பனிப்போரும்  இந்தியா வெற்றி பெறுவது அவ்வளவு  எளிதல்ல  என்பதை தெளிவாக காட்டுகின்றன ... 

இன்று இந்திய அணி ஹர்பஜன் , சாவ்லாவை விடுத்து சேவாக் , பாலாஜி யுடன் களமிறங்குவதாக தோனி அறிவித்துள்ளார் ... பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமுமில்லை ... டாஸ்  ஜெயித்திருக்கும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்யப் போகிறது ... ஜெயிக்கப் போவது யார் ? மூன்றரை மணி நேரம் எல்லோரும் காத்திருப்போம் ... 

6 comments:

  1. //இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம்//

    THAT'S TRUE :))
    இங்கே நிறையபேருக்கு குளிர் ஜுரமே வந்திருக்கு அனந்து:))
    இன்று காலை மில்க் வென்டர்.பஞ்சாபி .மேட்சை நினைத்து தனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை என்று சொல்லிட்டு போனார் ..
    பார்ப்போம் என்ன நடக்குதென்று :))

    ReplyDelete
  2. போற போக்கைப் பார்த்தா பாகிஸ்தான் நிலம ரொம்ப மோசமா இருக்கு....செம்ம பௌலிங், செம்ம ஃபீல்டிங்

    ReplyDelete
  3. //இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம்//

    THAT'S TRUE :))
    இங்கே நிறையபேருக்கு குளிர் ஜுரமே வந்திருக்கு அனந்து:))
    இன்று காலை மில்க் வென்டர்.பஞ்சாபி .மேட்சை நினைத்து தனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை என்று சொல்லிட்டு போனார் ..
    பார்ப்போம் என்ன நடக்குதென்று :))

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!

    ReplyDelete
  4. ஹாலிவுட்ரசிகன் said...
    போற போக்கைப் பார்த்தா பாகிஸ்தான் நிலம ரொம்ப மோசமா இருக்கு....செம்ம பௌலிங், செம்ம ஃபீல்டிங்


    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் said...
    ஜெயிச்சிட்டோம்...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ...!

    ReplyDelete