2 September 2012

தமிழ் வலைப்பதிவர்கள் கவியரங்கம் - நட்பிற்கினியவளே ...!

ன்முறை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா ... என்னைப் பொறுத்த வரை கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதும் அது போலத்தான் ... கவிதை நன்றாக இருந்தால் பாராட்டு பெறலாம் இல்லையேல் கல்லடி தான் ... அதிலும் நமக்கு முன்பாக வாசித்தவர்களின் கவிதை சரியில்லை என்றால் நாம் வரும் போதே அரங்கத்தில் உள்ளவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடும் , அதே சமயம் அவர்கள் அருமையாக கவிதை வாசித்திருந்தால் நம் கவிதையும் அதற்கு ஈடு கொடுக்கும் படி இருக்க வேண்டும் , இல்லையேல் நாம் அம்பேல் ... ஏதோ ஒரு தைரியத்தில் நானும் எனது கவிதையை கவிதையை கவியரங்கத்தில் வாசிக்க முடிவு செய்தேன். ( எவ்வளவோ செஞ்சாச்சு இத செய்ய மாட்டோமா).
கேபிள் சங்கர் அவர்கள் வானமே வீழ்ந்தாலும் அவரது என்டர் கவிதையை படித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றதை பார்த்த போது எனக்கு மேலும் தைரியம் கூடியது ... மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து நானும் சில கவிதைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன் , பிறகு நானே கவிதை வாசிக்க போகிறேன் என்று தெரிந்த போது சுற்றியிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்தார்கள் ... கவிதை சரியில்லை என்றால் குவாட்டர் வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தி வைத்தேன் ... கவிதை என்ற பெயரில் நான் கிறுக்க ஆரம்பித்தது பத்தாவது படிக்கும் போது தான் ... மதுரை கல்லூரியல் படிக்கும் போது திருச்சி ஆர்.ஈ.சி கல்லூரியில் கணையாழி ஆசிரியர் திரு.ஞானக்கூத்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் " நட்பு " என்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது ... அதன் பிறகு எந்த ஒரு மேடையிலும் கவிதை வாசிப்பதற்க்காக நான் ஏறியதில்லை ...

இது வரை எனது வலையில் பத்துக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை பதிவிட்டிருக்கிறேன் ...அவற்றுள்  " நட்பிற்கினியவளே  " , " உண்மையை சொல்கிறேன் " ,  அல்லது " தனிமை " இந்த மூன்றில் எதையாவது ஒன்றை வாசிக்கலாம் என முடிவு செய்து அருகிலிருந்த நண்பர் நண்டு @ நொரண்டுவிடம் ( அவர் தான் பாக்க எதையும் தாங்கும் இதயம் போல தெரிஞ்சாரு )எனது மொபைல் போனில் டவுன்லோட் செய்திருந்த கவிதைகளை காண்பித்தேன்... அவர் படித்து விட்டு முதல் கவிதையை தேர்ந்தேடுத்ததோடு மூன்றுமே நன்றாக இருக்கின்றன என்று பாராட்டினார் ( என்ன பெருந்தன்மை ! ) ...ஒருவழியாக எனது கவிதையை பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் ( யாருக்கு , யாருக்கோ ) வாசித்து முடித்தேன் ... கவியரங்கத்தின் போது சக பதிவர் சசிகலா அவர்களின் " தென்றலின் கனவு " என்கிற கவிதை தொகுப்பும்  பிரபல எழுத்தாளர் பி.கே.பி அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது ... மொபைல் போன் மூலம் கவிதை வாசித்ததை திரு.பி.கே.பி அவர்கள் தன் உரையின் போது நினைவு கூர்ந்தார்... இந்த கவிதையை தேர்ந்தெடுத்த ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) , படிக்க சொல்லி ஊக்கமளித்த கடம்பவன் ,  நான் கவிதை வாசிக்கும் போது  அதை படம் பிடித்து ட்விட்டருக்கும் அனுப்பி வைத்த சி.பி.செந்தில்குமார்  ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . இதோ உங்களுக்காக ( எதுக்கு இந்த பில்ட் அப் ! ) ...

                                                                        நட்பிற்கினியவளே ...!

வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...

எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...

என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார்...

உங்கள் சந்தித்து பேச முடிவில்லை என்று வருத்தம்...

வரிகளை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

/// சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை... /// Classic...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல வரிகள் சார்...

உங்கள் சந்தித்து பேச முடிவில்லை என்று வருத்தம்...
வரிகளை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
/// சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை... /// Classic...

எனக்கும் அந்த வருத்தம் இருக்கிறது ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...

இதற்கும் ம் தானா ? ம்ம்ம்

Yaathoramani.blogspot.com said...

அந்த அரங்கத்தில் கவிதை வாசித்து முடித்ததும்
மேடையில் இருந்தவர் கைதட்டி ஊக்கிவியுங்க்கள் என
கோரிக்கை வைக்காமல் பதிவர்கள்
விரும்பிக் கைதட்டிப் பாராட்டிய
கவிதைகளில் தங்கள் கவிதையும் ஒன்று
அனைவரும் ரசித்து மகிழ பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

கவியரங்கத்தில் கை தட்டல் வாங்கிய 6 பேரில் நீங்களும ஒருவர்.வாழ்த்துகள்.மகிழ்ச்சி.தங்களை சந்தித்ததில்

ananthu said...

Ramani said...
அந்த அரங்கத்தில் கவிதை வாசித்து முடித்ததும்
மேடையில் இருந்தவர் கைதட்டி ஊக்கிவியுங்க்கள் என கோரிக்கை வைக்காமல் பதிவர்கள்
விரும்பிக் கைதட்டிப் பாராட்டிய
கவிதைகளில் தங்கள் கவிதையும் ஒன்று
அனைவரும் ரசித்து மகிழ பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

கவிதையையும் நான் மிகவும் ரசித்தேன்..உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

சி.பி.செந்தில்குமார் said...
கவியரங்கத்தில் கை தட்டல் வாங்கிய 6 பேரில் நீங்களும ஒருவர்.வாழ்த்துகள்.மகிழ்ச்சி.தங்களை சந்தித்ததில்...

உங்களை சந்தித்ததில் எனக்கும் .மகிழ்ச்சி .. ஞாயபக சக்திக்கு ஏதாவது மாத்திரை சாபிடுகிறீர்களா ? என்ன ஞாயபக சக்தி ! உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

CS. Mohan Kumar said...

//சி.பி.செந்தில்குமார் said...
கவியரங்கத்தில் கை தட்டல் வாங்கிய 6 பேரில் நீங்களும ஒருவர்//

எப்புடி கணக்க்கெடுக்கிறார் பாருங்க சிபி,. சினிமா போனாதான் இந்த வேலை செய்வார்னு பார்த்தா இங்கேயுமா ?

MARI The Great said...

கவிதையின் துவக்கமும் முடிவும் அருமை!

அன்பு உள்ளம் said...

அருமையான கவிதை இதை நீங்கள் வாசிக்கும்போது
நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனாலும்
இதற்க்கு உங்களை தயார் செய்த விதம் ஒத்துழைப்புக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் இங்கு கொடுத்துள்ள நன்றி உரை பார்த்தபோது மகிழ்ச்சியாக உள்ளது .மேலும் மேலும் உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பெருக வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் கவிதை வாசிக்ம்போதே கைதட்டி ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை நண்பரே....

பதிவர் சந்திப்பு பற்றி ஒவ்வொரு பதிவு படிக்கும்போதும் நான் தவறவிட்டவை நினைவில் வந்து படுத்துகிறது!

தொடரட்டும் பகிர்வுகள்.

Thozhirkalam Channel said...

நல்ல பகிர்வு,,

அனுஷ்யா said...

//மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...//

ஹி ஹி... கவிதை எழுதறது எவ்வளோ ஈசின்னு ஒலகத்துக்கு புரிய வைக்க நம்மளாலதான் முடியும்...

Prem S said...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...//

அட இப்படி கூட பண்ணலாமா நட்பை நிரூபிக்கக் நன்றி

ananthu said...

வலைஞன் said...
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyagam.com/vote-button/
நன்றி
வலையகம்http://www.valaiyakam.com/

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

மோகன் குமார் said...
//சி.பி.செந்தில்குமார் said...
கவியரங்கத்தில் கை தட்டல் வாங்கிய 6 பேரில் நீங்களும ஒருவர்//
எப்புடி கணக்க்கெடுக்கிறார் பாருங்க சிபி,. சினிமா போனாதான் இந்த வேலை செய்வார்னு பார்த்தா இங்கேயுமா ?

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

வரலாற்று சுவடுகள் said...
கவிதையின் துவக்கமும் முடிவும் அருமை!

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

cheena (சீனா) said...

அன்பின் அன்ந்து - அன்றைய தினம் கவியரங்கக் கவிதை அருமை - வாசித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது அறிமுகம் செய்து கொண்டேன். நினைவிருக்குமென நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் அனந்து - நட்புடன் சீனா

ananthu said...

அன்பு உள்ளம் said...
அருமையான கவிதை இதை நீங்கள் வாசிக்கும்போது
நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனாலும்
இதற்க்கு உங்களை தயார் செய்த விதம் ஒத்துழைப்புக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் இங்கு கொடுத்துள்ள நன்றி உரை பார்த்தபோது மகிழ்ச்சியாக உள்ளது .மேலும் மேலும் உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பெருக வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

T.N.MURALIDHARAN said...
நீங்கள் கவிதை வாசிக்ம்போதே கைதட்டி ரசித்தேன்.

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

வெங்கட் நாகராஜ் said...
அருமையான கவிதை நண்பரே....
பதிவர் சந்திப்பு பற்றி ஒவ்வொரு பதிவு படிக்கும்போதும் நான் தவறவிட்டவை நினைவில் வந்து படுத்துகிறது!
தொடரட்டும் பகிர்வுகள்.

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

தொழிற்களம் குழு said...
நல்ல பகிர்வு,,

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

மயிலன் said...
//மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...//
ஹி ஹி... கவிதை எழுதறது எவ்வளோ ஈசின்னு ஒலகத்துக்கு புரிய வைக்க நம்மளாலதான் முடியும்...

தொழில் ரகசியத்த வெளியில சொல்லாதீங்க மயிலன் ...உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

Prem Kumar.s said...
வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...
அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...//
அட இப்படி கூட பண்ணலாமா நட்பை நிரூபிக்கக் நன்றி

.உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

ananthu said...

cheena (சீனா) said...
அன்பின் அன்ந்து - அன்றைய தினம் கவியரங்கக் கவிதை அருமை - வாசித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது அறிமுகம் செய்து கொண்டேன். நினைவிருக்குமென நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் அனந்து - நட்புடன் சீனா

மறக்க முடியுமா ஐயா ?
.உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...