Vanga blogalam in Facebook

13 October 2012

மாற்றான் - மயக்கியிருப்பான் ...


சமீபத்தில் தான் சாருலதா வந்திருந்தாலும் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருப்பதும் , ஏற்கனவே இவரை வைத்து ஹிட் கொடுத்த கே.வி.ஆனந்த் படத்தை இயக்கியிருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன ... இடைவேளை வரை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால்  " மாற்றான் - ஏமாற்றான் " என்று சொல்லியிருக்க வேண்டிய படம் அதன் பிறகு ஜவ்வாக இழுத்ததால் " மாற்றான் - மயக்கியிருப்பான்  " என்று  சொல்ல வைத்துவிட்டது ...

மரபணு விஞ்ஞானி ராமச்சந்திரனின் ( சச்சின் கண்டேல்கர் ) சோதனை முயற்சியால் விமலன் - அகிலன்  ( சூர்யா ) இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களாக பிறக்கிறார்கள் , வளர்கிறார்கள் ... வெற்றிகரமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் அப்பாவின் எனர்ஜி ஆன் பால் பவுடரில் ஏதோ தவறிருப்பதாக விமலனுக்கு தெரிய வர , அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அவர் உயிர் துறக்கிறார் ... விமலன் விட்டதை அகிலன் தொடர்ந்து வெற்றி கண்டாரா என்பதை நீட்டி முழக்கி சில சீன்களில் ஆவ் என்று கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார்கள் ... 


இது போன்ற கதைகளை சூர்யாவை மனதில் வைத்தே செய்ய முடியும் என்பதே சூர்யாவின்  சக்சஸ் ... வேறு வேறு சீன்களில் டபுள் ஆக்டிங் செய்து விடலாம் , ஆனால் இடைவேளை வரை ஒன்றாக இருந்து கொண்டு இருவருக்குமிடையே வித்தியாசம் காண்பிப்பது என்பது மிகவும் கடினம் , அதை சிறப்பாக செய்திருக்கிறார் சூர்யா ... ஷாப்டான விமலனை அகிலன் கலாய்க்கும் இடங்கள் கல கல ... தியேட்டரில் காஜலுக்கு சூர்யா கிஸ் அடிக்கும் சீன்  உட்பட சில இடங்களில் சி.ஜி பல்லை இளிக்கிறது ... ரெட்டையர்களாக இருந்த போது ரசிக்க  வைத்த சூர்யா ஓன் மேன் ஆர்மியாக மாறிய பிறகு நம்மை கவராமல் போனது திரைக்கதையின் ஓட்டை ... 

" மோதி விளையாடு " , " பொம்மலாட்டம் " படங்களின் தோல்வியால் காணாமல் போயிருக்க வேண்டிய காஜல் அகர்வால் " மஹதீரா  " வெற்றியால் மீண்டு வந்திருக்கிறார்... வெறும் பாடல்களுக்காக  மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு ... உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும்  ஏற்றுவது கூடுதல் சிறப்பு ... 


கோடீஸ்வர விஞ்ஞானி தோற்றத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சச்சின் ... அதை விட கச்சிதமாக பின்னணி குரல் அவருக்கு பொருந்தியிருக்கிறது ... இது போன்ற ஹிந்தி நடிகர்களை தமிழில் வாழ வைத்துக்கொண்டிருப்பதே இந்த குரல்கள் தானே ... இவர் மேல் உண்டான சஸ்பென்சை இடைவேளை வரை தக்க வைத்திருந்தாலும் , அது உடைந்த பிறகு ஓவர் ரியாக்ட் செய்ய விட்டு கெடுத்து விட்டார்கள் ... இவருக்கும் , சூர்யாவிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சீன்கள் எல்லாம் 80 களின் உச்சம் ...  


படத்தில் பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் , எடிட்டர் அந்தோணி , சி.ஜி சூப்பர்வைசர் ஸ்ரீநிவாஸ் மோகன் , ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் ஆகியோரது உழைப்பு அபாரமானது , அதிலும் தீம் பார்க் ராட்டினங்களுக்கு இடையே நடக்கும் சண்டைக்காட்சியை பாராட்ட வார்த்தைகளில்லை ... இவர்கள் இல்லாமல் இது போன்ற படம் சாத்தியமாகியிருக்காது , ஹான்ட்ஸ் ஆப் ... 

" கால் முளைத்த " , " தீயே தீயே " பாடல்களால் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசைக்கு ஹாரிஸ் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை ... முதல் பாதியில் வசனங்களிலும் , இயக்குனருடன் இணைந்து அமைத்த திரைக்கதையிலும் எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் - பாலகிருஷ்ணன் ) நன்றாக தெரிகிறார்கள் ... இரண்டாம் பாதி தான் சொல்லிக்கொள்ளும்படியில்லை ... 

மார்கெட் ஆகக் கூடிய கதை , சூர்யாவின் நடிப்பு , சஸ்பென்சுடன் நகரும் முதல் பாதி , டெக்னிக்கல் ஆஸ்பெக்ட்ஸ் இவற்றால் மாற்றான் மனதில் பதிகிறான் ... அதிலும் சூர்யாக்களுக்குள் நடக்கும் சண்டை , ராட்டின சண்டைக்காட்சியின்  முடிவில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு சூர்யாவை காப்பாற்ற மற்றொரு சூர்யா போராடும் காட்சி , இரண்டு சூர்யாக்களின்  குணாதிசயங்களையும் ஒரு பாடலிலேயே காட்டிய விதம் இவைகளெல்லாம் சிலிர்க்க வைக்கின்றன ... 


ஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் , என்ன தான் விஞ்ஞானியின் முயற்சி என்றாலும் ஒரே இதயத்தை வைத்துக்கொண்டு இருவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியுமா என்று நமக்கு தோன்றுகிற கேள்வி , எனர்ஜி ஆன் பால் பவுடரை ரஷ்யாவில் தொடர்ந்து ஏழு வருடங்கள் உபயோகித்தால் ஏற்படும் அவலங்களை பட்டியலிட்டு விட்டு இந்தியாவில் பத்து வருடங்களுக்கும் மேலாக அதை உபயோகப்படுத்துபவர்களுக்கு என்ன ஆனது என்பதை கூட திரைக்கதையில் காட்டாத அலட்சியம் , வில்லன் இங்கிருக்க துப்பறிகிறேன் பேர்வழி என்று சூர்யாவை வெளிநாட்டில் அலையவிட்ட திரைக்கதை , 

தன் ரகசியங்களை அம்பலப்படுத்தும் பென் டிரைவிர்க்காக எத்தனையோ கொலைகள் செய்யும்  ஒருவன் அதை ஏதோ லாண்டரி பில் வைப்பது போல சர்வ சாதாரணமாக ஆபீசில் வைப்பது , அதை எடுத்துக்கொண்டு உக்ரைன்  செல்லும் சூர்யா அந்த நாட்டு ராணுவ அதிகாரி தலையிலேயே துப்பாக்கியை வைத்துக் கொண்டு சென்டிமென்ட் டயலாக் பேசுவது உட்பட படத்தில் வரும் எக்கச்சக்க லாஜிக் சொதப்பல் சீன்கள் , நீண்டு கொண்டே போகும் க்ளைமேக்ஸ் இவைகளெல்லாம் மாற்றானை பார்த்து நம்மை ஏமாற வைக்கின்றன ... இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் ... 

ஸ்கோர் கார்ட் - 42 


12 comments:

  1. இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் ...
    சரியாக சொன்னீர்கள் நண்பரே...

    ReplyDelete
  2. // ஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் // இதை மட்டும் ஏற்க முடியவில்லை சுபா மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள் படத்தின் நீளம் எல்லாவற்றையும் மறைத்து விட்டது.

    ReplyDelete
  3. நான் இன்னும பார்க்கவில்லை. பார்த்துட்டு சொல்றேன்.

    //வெறும் பாடல்களுக்காக மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு ... உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும் ஏற்றுவது கூடுதல் சிறப்பு ...//

    நல்லா வார்த்தை ஜாலம் காட்டுறீங்கப்பா....

    ReplyDelete
  4. ஸ்கோர் 42 என்றால் ஸ்கோர் கார்ட் படி குட்... But i dont think so... it deserves 35 - 39...

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம்
    மார்க்குதான் கொஞ்சம் அதிகமோ ?

    ReplyDelete
  6. Tamilraja k said...
    இரண்டாம் பாதியின் நீளத்தை கம்மி செய்து சஸ்பென்சை நீட்டியிருந்தால் நிச்சயம் மாற்றான் மயக்கியிருப்பான் ...
    சரியாக சொன்னீர்கள் நண்பரே...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  7. சுகர்மன் said...
    // ஒரு நாவலாக படிப்பதற்கு சூப்பரான கதையை சினிமாவுக்கேற்ற படி திரைக்கதையாக்குவதில் ஏற்பட்ட சறுக்கல் // இதை மட்டும் ஏற்க முடியவில்லை சுபா மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள் படத்தின் நீளம் எல்லாவற்றையும் மறைத்து விட்டது.

    மற்றவற்றை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி ... படத்தின் நீளத்தை நிர்ணயிப்பதும் ஒரு திரைக்கதையாசிரியரின் கடமை ...

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன் said...
    பரவாயில்லை ரகம்...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  9. கடம்பவன குயில் said...
    நான் இன்னும பார்க்கவில்லை. பார்த்துட்டு சொல்றேன்.
    //வெறும் பாடல்களுக்காக மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக இவர் வருவது சிறப்பு ... உடலுடன் ஒட்டிய உடைகளுடன் வந்து உஷ்ணமும் ஏற்றுவது கூடுதல் சிறப்பு ...//
    நல்லா வார்த்தை ஜாலம் காட்டுறீங்கப்பா....

    அப்படியா ?! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  10. Philosophy Prabhakaran said...
    ஸ்கோர் 42 என்றால் ஸ்கோர் கார்ட் படி குட்... But i dont think so... it deserves 35 - 39...

    நீங்கள் சொல்வது போல நான் முதலில் யோசித்தது 39 அல்லது 40 மார்க் தான் , ஆனால் சூர்யாவின் நடிப்பும் , படத்தின் டெக்னிக்கல் விஷயங்களும் கூடுதல் மார்க்குகளை கொடுக்கவைத்துவிட்டன ...

    ReplyDelete
  11. Ramani said...
    அருமையான விமர்சனம்
    மார்க்குதான் கொஞ்சம் அதிகமோ ?

    இருக்கலாம் ... உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete