Vanga blogalam in Facebook

9 November 2012

ஓர் புன்னகை ...!





ஆணாய் பிறந்து
அழகாய் வளர்ந்து 
அன்பில் திளைத்து
அறிவை பெற்று 
சேட்டைகள் செய்து 
முதல் காதல் பெற்று 
பொருள் தேடி 
தினம் உழன்று
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி
விருப்பமான மனைவியுடன்
அதில் குடி புகுந்து
மனைவியின் முறைப்பையும்
பொருட்படுத்தாமல்
கிறுக்கல்களை வலைத்தளத்தில்
பதிவாய் பதித்து
அதற்கும் வரும்
பின்னூட்டங்களால்
பரவசம் அடைந்து
சுலப தவணைகளில்
வேண்டியதை பெற்று
சினிமாவை சிலாகித்து
சண்டைகள் போட்டு
சறுக்கி விழுந்து
மீண்டும் எழுந்து
பரிசுகள் குவித்து
பாராட்டில் நனைந்து
நித்தம் வாழ்க்கையில்
கிடைக்கும்
நிம்மதிகள் எல்லாம்
மகளே
கன்னக்குழி விழ 
நீ பூக்கும்
ஓர் புன்னகைக்கு
ஈடாகுமா ?!













17 comments:

  1. அந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை பெற்றதையும் பகிர்ந்துக் கொள்ள இந்த வலைத்தளமும், அதன் மூல கிடைத்த சகோதர உறவுகளிடம்தானே வர்றீங்க?! அப்போ அந்த கன்னக்குழியழகியோடு நாங்களும் தானே முக்கியமானவர்கள்?!

    ReplyDelete
  2. அருமை அருமை
    வள்ளுவனின் சிறு கை அளாவிய கூழ்
    என்கிற வரிகள் நினைவுக்கு வந்தது
    மிகச் சிறந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா... ரசித்தேன்...

    எதுவுமே ஈடாகாது...!

    ReplyDelete
  4. அழகான கவிதை அனந்து ..மழலை சிரிப்பை ரசிச்சு எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  5. மழலையின் சிரிப்பில் மனதை தொலைக்காதோர் உண்டா?

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  8. ராஜி said...
    அந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை பெற்றதையும் பகிர்ந்துக் கொள்ள இந்த வலைத்தளமும், அதன் மூல கிடைத்த சகோதர உறவுகளிடம்தானே வர்றீங்க?! அப்போ அந்த கன்னக்குழியழகியோடு நாங்களும் தானே முக்கியமானவர்கள்?!

    நான் அப்படி சொல்லவில்லை , உலகில் எல்லாவற்றையும் விட அந்த புன்னகையே மேலானது என்கிறேன் .உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  9. Ramani said...
    அருமை அருமை
    வள்ளுவனின் சிறு கை அளாவிய கூழ்
    என்கிற வரிகள் நினைவுக்கு வந்தது
    மிகச் சிறந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  10. திண்டுக்கல் தனபாலன் said...
    ஆஹா... ரசித்தேன்...
    எதுவுமே ஈடாகாது...!

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  11. angelin said...
    அழகான கவிதை அனந்து ..மழலை சிரிப்பை ரசிச்சு எழுதியிருக்கீங்க

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  12. விச்சு said...
    மழலையின் சிரிப்பில் மனதை தொலைக்காதோர் உண்டா?

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  13. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    அழகு...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  14. Tamil Kalanchiyam said...
    நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com
    - தமிழ் களஞ்சியம்

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ... !

    ReplyDelete
  15. ரெவெரி said...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. Avargal Unmaigal said...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete