இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே அதை பற்றிய டீசரையோ , ட்ரைலரையோ இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் பப்ளிசிட்டி தேடுவதென்பது தவிர்க்க முடியாததாகி விட்டது . சமீபத்தில் யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட " யாருடா மகேஸ் " படத்தின் ட்ரைலர் அதன் டபுள் மீனிங் வசனங்களுக்காக இளைஞர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது ...
பொதுவாக இங்கே இது போன்ற டீசர் பப்ளிசிட்டிகள் புதியவர்கள் பங்கு பெறும் படங்களுக்கு தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . ஆனால் அந்த வரிசையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பரதேசி படத்தின் உருவாக்கம் பற்றிய டீசர் வரவேற்பை பெறுவதற்கு பதில் அதிகம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது . பாலா படப்பிடிப்பில் ஆதர்வ் உட்பட சில நடிகர்களை கம்பால் அடிப்பது போல வரும் காட்சிகளே இந்த அதிர்வலைகளுக்கு காரணம் ...
பாலா நார்மலானவர் கிடையாது கொஞ்சம் சைக்கோத்தனம் உள்ளவர் என்ற அபிப்பிராயம் திரையுலகத்தில் பொதுவாகவே உண்டு . அதிலும் இது போன்ற தன்னை பற்றிய தகவல்களை பத்திரிக்கைகளின் மூலம் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார் . அவர் படங்களில் வரும் ஹீரோக்கள் என்றுமே நார்மலாக இருந்ததில்லை . அழகாக இருக்கும் ஹீரோக்களை கூட ஏதாவது செய்து கர்ண கொடூரமாக்குவது அவரது வாடிக்கை . விக்ரம் , ஆர்யா , விஷால் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கும் அப்பாவி ஆதர்வ் . பாலா இது போன்றே தொடர்ந்து எல்லா படங்களிலும் செய்து வருவது சலிப்பை தருவதையும் மறுப்பதற்கில்லை ...
பாலா படங்களில் நடிப்பது கூட அவ்வளவு எளிதான விஷயமில்லை . எந்த நடிகராக இருந்தாலும் தனக்கு வேண்டிய நடிப்பு வரும் வரை அவர்களை கசக்கிப் பிழிந்து விடுவாரென்பது விவரமறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் . இப்படி எவ்வளவோ இருந்தும்அவரது படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்கள் குறிப்பாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் பாலாவின் படங்களில் நடித்ததற்கு பிறகு அவர்களுக்கு கிடைக்கும் இமேஜ் சேஞ்ச் ஓவர் ...
விக்ரம் , சூர்யா இருவரும் இதற்கு சிறந்த உதாரணங்கள் . சேதுவிற்கு முன் பல வருடங்கள் சினிமாவில் இருந்தும்தனக்கென்று ஒரு இடம் கிடைக்காமல் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தார் விக்ரம். பெரிய நடிகரின் பையனாக இருந்தும் நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு இருந்த சூர்யா நந்தா விற்கு பிறகே அனைவராலும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கப்பட்டார் . மற்ற எல்லா துறைகளையும் விட சினிமாவில் அதிகமான சங்கடங்களும் , அவமானங்களும் இருந்தும் அதில் நிறைய பேர் விரும்பி வேலை செய்வதற்கு காரணம் அதில் எல்லா துறைகளையும் விட அதிகமாக கிடைக்கும் பணமும் ,புகழும் ...
பரதேசி டீசரை பார்த்து விட்டு பொது மக்கள் அதிர்ச்சிடையலாம் ;, ஆனால் சினிமாவில் இருப்பவர்களே பாலா வை கண்டபடி திட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது . ஏனெனில் இந்த டீசரை பாலா வெளியிடாமல் இருந்திருந்தால் மட்டும் சினிமாவில் எல்லாம் ஒழுங்காக நடக்கின்றன என்றோ அங்கே எந்த விதத்திலும் மனித உரிமை மீறலோ , பாலியில் ரீதியான இம்சைகளோ நடக்கவேயில்லை என்றோ இவர்கள் உறுதியாக கூற முடியுமா ? அதிலும் இந்த டீஸரை உன்னிப்பாக பார்த்தாலே அவர் நடிக்க சொல்லித் தருகிறார் என்பதும் , அந்த தடி சினிமாவிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போலி தடி என்பதும் நன்றாகவே விளங்கும் ...
இது போன்ற ஒரு டீஸரை வெளியிட்டு அதன் மூலம் படத்திற்கு எதிர்மறையாக இருந்தாலும் ஒரு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வதே ஒரு தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் பாலாவின் நோக்கமென்பது சினிமா ஆர்வலர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் . எனவே இளம் தலைமுறை சினிமாக்காரர்கள் இதை விமர்சிப்பதை விட்டு விட்டு இந்த துறையை ப்ரொஃபஸனலாக முன்னேற்றுவதற்கு தங்களால் முடிந்த முயற்சிகளை செய்தால் அதை பாராட்ட அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம் . ஹாலிவுட் படங்களுக்கு இதை விட மோசமான முறையில் ரியாலிட்டி பப்ளிசிட்டி செய்யப்படுவது மிகவும் வாடிக்கையான ஒன்று . எனவே பாலாவின் பரதேசி டீசர் ரியாலிட்டி அல்ல வெறும் பப்ளிசிட்டி ...
பரதேசி ரியாலிட்டி டீசர் - இங்கே பார்க்கவும் ...
நல்ல விளம்பர யுக்தி... !
ReplyDeleteஉண்மை தான் நண்பரே.
ReplyDeleteஇன்னும் அந்த படத்தின் பாதிப்பு போகவில்லை.
தமிழ் சினிமாவின் மைல்கல் இந்தப்படம்.
அப்படியே படத்தையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள் நண்பா.
எனது விமர்சனம் கீழே
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநல்ல விளம்பர யுக்தி... !
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Doha Talkies said...
ReplyDeleteஉண்மை தான் நண்பரே.
இன்னும் அந்த படத்தின் பாதிப்பு போகவில்லை.
தமிழ் சினிமாவின் மைல்கல் இந்தப்படம்.
அப்படியே படத்தையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள் நண்பா.
எனது விமர்சனம் கீழே
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...