ட்ராஃபிக் என்ற மலையாள படத்தை கண்டிப்பாக பார் என்று என் சில வருடங்களுக்கு முன்பு என் நண்பன் சொல்லியிருந்தான் . தமிழில் அதை ரீ மேக் செய்யப் போகிறார்கள் என்கிற விஷயமறிந்ததுமே படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன் . ஒரிஜினல் படத்தை பார்க்காததால் கதை என்னை மிகவும் கவர்ந்த அளவிற்கு எடுத்த விதம் கவரவில்லை ...
சென்னை சாலை விபத்தில் மண்டையில் அடிபட்டு மூளை சாவில் இருக்கும் ஒரு இளைஞனின் இதயத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் வேலூரில் சாவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு சிறுமிக்கு பொருத்தி அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் . பிரபல நடிகர் கவுதம் ( பிரகாஷ்ராஜ் ) தன் மகளின் உயிரை போக்குவரத்து ஆணையர் பாண்டியன் ( சரத்குமார் ) , காவலர் சத்தியமூர்த்தி ( சேரன் ) , மருத்துவர் ராபின் ( பிரசன்னா ) இவர்கள் உதவியுடன் காப்பாற்றினாரா என்ற ஒரு நாள் சம்பவத்தை கொஞ்சம் வேகம் , கொஞ்சம் மந்தம் மற்றும் நட்சத்திர கூட்ட நெரிசலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷஹீத் காதர் ...
கதையில் ஹீரோ கிடையாது என்றாலும் படத்தில் பிரபல ஹீரோவாக வரும் பிரகாஷ்ராஜ் பிரதானமாக இருக்கிறார் . ஏற்க்கனவே டூயட் , வெள்ளித்திரை போன்ற படங்களில் பார்த்த வேடம் என்பதால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை . மகளை பற்றிய பேட்டி கொடுக்கும் இடத்திலும் , என் பேரை சொன்னியா என்று கண்களை உருட்டி கோபப்படும் இடத்திலும் மட்டும் ரசிக்க வைக்கிறார் . " நீங்க ஹீரோவா ஜெயிச்சிருக்கலாம் , ஆனா மனுஷனா தோத்துட்டீங்க " என்று மனைவியாக இவருக்கு அறிவுரை சொல்லும் போது ராதிகா நடிப்பில் மிளிர்கிறார் ...
படம் முழுவதும் சின்ன சின்ன சோகமான முகபாவம் மட்டுமே என்பதால் சேரனை ரசிக்க முடிகிறது . சரத்குமாரின் கம்பீரமான தோற்றத்துக்கு ஏற்ற வேடம் . நிறைவாக இருந்தாலும் இயல்பான நடிப்பு மட்டும் ஏனோ மிஸ்ஸிங் . நல்ல நடிகர் பிரசன்னா பெரிய வாய்ப்பு இல்லாமல் வீணடிக்கப்பட்டிருந்தாலும் வந்த வரை கச்சிதம் . இவருடைய மனைவியாக நடித்திருக்கும் இனியாவிற்கு நோ ஸ்கோப் . பார்வதி மேனன் , மிதுன் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . பையன் இறந்த பிறகு அழும் இடத்தில் லக்ஷ்மி யின் நடிப்பு அருமை ...
சமூக அக்கறையுள்ள இது போன்ற படத்திற்கு சுருக்கென்று வசனங்கள் இருக்க வேண்டாமோ ? அந்த விதத்தில் அஜயன் பாலா வாய்ப்பை வீணடித்திருக்கிறார் . பாபி சஞ்சய் யுடன் இணைந்து இவர் அமைத்திருக்கும் திரைக்கதையும் முதல் பாதியில் அநியாத்துக்கு அலைபாய்ந்து பொறுமையை சோதிக்கிறது .மெஜோ ஜோசப் இசையில் ஸ்பீட் பிரேக்கர் போல இரண்டு பாடல்கள் , இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து போடப்பட்ட டெம்ப்ளேட் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பெரிய மைனஸ் ...
உடல் உறுப்பு தானம் மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் கதையை ரீமேக் செய்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் . முதல் பாதியில் எல்லோர் கதையையும் சொல்வதால் ஸ்லோவாக இருந்தாலும் இதய மாற்று சிகிச்சைக்காக சென்னையில் இருந்து பயணப்பட ஆரம்பித்ததும் படம் சூடு பிடிக்கிறது . பிரசன்னா மனைவியை காமுக நண்பன் கரக்ட் செய்வதெல்லாம் ட்விஸ்ட் என்ற பெயரில் வைக்கப்பட்ட திணிப்பு . அதே போல படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள் மற்றும் அதீத சோக மயமான ஆஸ்பத்திரி சீன்கள் போன்றவற்றையும் தவிர்த்திருக்கலாம் ...
ஜன சந்தடியான தெருவை சேரனின் ஜீப் கடக்கும் போது நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது . ஆனால படத்தில் பிரபல நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கும் போது இன்னொரு பிரபலமாக சூர்யாவையையும் சேர்த்திருப்பது செயற்கையாக இருக்கிறது . இதே லைனில் வந்து நம்மை பிரமிக்க வைத்த எங்கேயும் எப்போதும் போல இந்த படத்தில் ப்ரெஷ்னஸ் இல்லாதது பெரிய குறை . சன் பிக்சர்ஸின் நல்லாசி இருப்பதால் படத்தை மார்கெட் டிங் செய்வதற்கு பஞ்சமிருக்காது என்றாலும் மந்தமான திரைக்கதையையும் , நடிகர் பட்டாளத்துக்கு சொல்லப்பட்ட கதை பின்னணியால் ஏற்படும் ட்ராஃபிக் ஜாமையும் தவிர்த்திருந்தால் சென்னையில் ஒரு நாள் இன்னும் விறுவிறுவென்று இருந்திருக்கும் ...
ஸ்கோர் கார்ட் : 42
6 comments:
உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களில் நான் ஒத்துப் போகிறேன்... அருமையான விமர்சனம்
த.ம: 1
நன்றி...
உங்கள் தளம் தானா...?
Template மாற்றம் நல்ல மாற்றம்...
சீனு said...
உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களில் நான் ஒத்துப் போகிறேன்... அருமையான விமர்சனம்
Saturday, March 30, 2013
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
நம்பள்கி said...
த.ம: 1
Saturday, March 30, 2013
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி...
உங்கள் தளம் தானா...?
Template மாற்றம் நல்ல மாற்றம்...
Saturday, March 30, 2013
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Post a Comment