ட்ரைலரும் , ஏ சான்றிதழும் படம் எப்படிப்பட்டது என்கிற அனுமானத்தை கொடுத்து விட்டதால் எதிர்பார்ப்பில்லாமல் சென்றேன் என்றே சொல்லலாம் . சில மொக்கைகள் உட்பட படம் முழுவதும் அடல்ஸ் ஒன்லி ஜோக்குகள் , மூன்று ஐட்டம் சாங்குகள் இந்த இரண்டின் கலவையில் கொஞ்சூண்டு கதையை சேர்த்தால் வருகிறான் மகேஷ் ...
படமே சதையை நம்பியிருப்பதால் கதை என்று பெரிதாய் ஒன்றுமில்லை . கல்லூரியில் அரியர்ஸ் வைத்து கோட்டடிக்கும் மாணவன் சிவா ( சுன்தீப் ) வுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி சிந்தியா ( டிம்பிள் ) வுக்கும் இடையே கசமுசா ( இதையெல்லாம் லவ்வுன்னு வேற சொல்லனுமா ! ) ஆகி அதில் சிந்தியா கர்ப்பமாக அது கல்யாணத்தில் முடிகிறது . அதன் பின் மனைவியின் சம்பாத்தியத்தில் வெட்டியாக இருக்கும் சிவாவுக்கு அவளின் கர்ப்பத்துக்கு காரணம் தானில்லை மகேஷ் தான் என்று தெரிய வர யாருடா மகேஷ் என்று தேடி அலைகிறார் . கடைசியில் கண்டுபிடித்தாரா என்பதே க்ளைமாக்ஸ் ...
ஹீரோ வேடத்துக்கு சுன்தீப் சரியான தேர்வு . நண்பனின் காதலை கட் செய்வது , காதலிக்காக அலைவது , குழந்தைக்கு அப்பனில்லை என்று தெரிந்தவுடன் எரிந்து விழுவது என்று படம் முழுவதும் கேசுவலாக நடித்திருக்கிறார் . ஹீரோயினுக்கு தமனாவின் சாயல் இருக்கிறது . தூரத்து சொந்தமோ !? . முதல் சாங்குக்கு ஆடும் அயிட்டத்தை விட , சாரி அயிட்டம் சாங்குக்கு ஆடும் பெண்ணை விட தனக்கு இருக்கும் திறமையை அடுத்தடுத்த சாங்குகளில் நன்றாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறார் . ( படம் பார்த்த பாதிப்பு இன்னும் போகலியோ ) வாழ்க அவர் தொண்டு ...
ஒன்றுமே இல்லாத படத்தில் உட்கார வைப்பது ஹீரோவின் நண்பன் வசந்தாக வரும் நண்டு ஜெகனின் காமெடியே . ஜாடை மாடையாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசிக்கொண்டிருந்தவர் இதில் வெளிப்படையாகவே புகுந்து விளையாடியிருக்கிறார் . பெண்மை கலந்த பேச்சும் , படம் நெடுக இவர் அடிக்கும் கமெண்ட்சும் மட்டுமே படத்திற்கு உயிர்நாடி . டிவிடி பையா
( வேகமாக சொல்லிப் பார்க்கவும் ) என்று கத்தி கூப்பிட்டு அடி வாங்குவதும் , பலான இடத்தில அடிபட்டவுடன் புலம்புவதும் , " என் மனைவி கர்ப்பமாயிட்டா , அதையும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன் நான் தான் அப்பா " என்று சொல்லி நண்பனை வெறுப்பேற்றுவதுமாக ஜெகன் சில இடங்களில் முகம் சுழிக்க வைத்தாலும் ஜமாய்த்திருக்கிறார் ...
ஜெகன் இல்லாத சீன்கள் தொய்வு , அதிலும் ரோபோ சங்கரை வைத்து செய்திருக்கும் காமெடியில் ஓவர் காம நெடி . இந்த இடைச்செறுகலை தவிர்த்திருக்கலாம் . லிவிங்ஸ்டன் , சுவாமிநாதன் மற்றும் சின்ன சின்ன ரோல்களில் வருபவர்களும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறார்கள் . கோபி சுந்தர் இசையில் :" ஓடுற உனக்கு " , " புது " போன்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன ...
மகனிடமே பலான சீடி கேட்கும் அப்பா , காதலி பி.எப்ஃ ( ப்ரேக்ஃபாஸ்ட் ) காக வா என்றவுடன் தவறாக புரிந்து கொண்டு காண்டமுடன் போகும் ஹீரோ , கல்லூரி படிப்புக்காக டூர் செல்லும் போது ரயிலிலேயே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் ஜெகன் இப்படி படம் நெடுக இயக்குனர் மதன்குமார் பலான மேட்டர்களை மட்டுமே கட்டவிழ்த்து விட்டு கொஞ்சம் கடுப்பேற்றினாலும் ஆபாசத்தை வசனங்களோடு மட்டும் நிறுத்திக் கொண்டதற்கு பாராட்டலாம் . டைரக்ட் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் சிரிக்க வைத்தாலும் " ரங்கவேலு வை சுருக்கி ராண்டி னு கூப்புடுவீங்க , அப்போ குழந்தைவேலு வை சுருக்கி ..ண்டி னு கூப்புடுவீங்களா " போன்ற சக கலைஞனை இழிவுபடுத்தும் வசனங்கள் கண்டிக்கத்தக்கவை ...
கடைசியில் யாருடா மகேஷ் என்பதற்கான விடை எதிர்பார்த்ததை போலவே படு மொக்கையாக இருந்தாலும் போருடா மகேஷ் என்று நம்மை சொல்ல வைக்காமல் படத்தை வேகமாக முடித்து விடுகிறார்கள் . ஜாலியாக நண்பர்களுடன் பொழுதை கழிப்பவர்களுக்கும் , அடல்ஸ் ஒன்லி ஜோக்குகளை ரசிப்பவர்களும் படம் நல்ல விருந்து . அரங்கில் வந்திருந்த இளம்பெண்கள் கூட ரசித்து சிரிப்பதை பார்த்தால் இயக்குனர் குறி வைத்த டார்கெட்டட் ஆடியன்சுக்கு படம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கலாம் . மற்றபடி குடும்பத்துடன் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கோ , கலாச்சார காவலர்களுக்கோ இந்த படம் உகந்ததல்ல ஏனெனில் யாருடா மகேஷ் - ஆ(ஏ)ய் பையன் ...
ஸ்கோர் கார்ட் - 40
8 comments:
தலைப்பிலேயே படம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது!
நல்ல விமர்சனம்.
சூப்பர் நல்ல இருந்துச்சு
யாருடா மகேஷ்.குஜால் பார்ட்டிகளுக்கு படம் ரொம்ப பிடிக்கும்போல.
வெங்கட் நாகராஜ் said...
தலைப்பிலேயே படம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது!
நல்ல விமர்சனம்.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
சக்கர கட்டி said...
சூப்பர் நல்ல இருந்துச்சு
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
kadhar ali said...
யாருடா மகேஷ்.குஜால் பார்ட்டிகளுக்கு படம் ரொம்ப பிடிக்கும்போல.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
சூப்பர் நல்ல இருந்துச்சு. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://tamilbm.com/ வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
Live LK said...
சூப்பர் நல்ல இருந்துச்சு. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://tamilbm.com/ வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Post a Comment