Vanga blogalam in Facebook

13 May 2013

மின்வெட்டு கவிதைகள் ...



மின்கட்டணம் உயர்ந்தும்
பணம் செலவாகவில்லை
மின்வெட்டுக்கு நன்றி ...!

இப்பொழுதெல்லாம்
உணவை பார்த்தவுடன்
காக்கைகள் கரைவதில்லை
காக்கைதொகை கூடிவிட்டதோ
மின்சாரம் கசியாததால் ...!

பக்கத்து வீட்டுக்காரியுடன்
இனி சண்டையில்லை
இருவரும் துணி உலர்த்த
மின்கம்பிகளையே
பயன்படுத்திக் கொள்கிறோம் ...!

பாட்டிகளை மீண்டும்
கதை சொல்ல வைத்த
மின்சார வாரியத்திற்கு நன்றி ...!

காதலியே
ஏன் அடிக்கடி
காணாமல் போய்  விடுகிறாய்
நீ
மின்வாரிய  ஊழியரின் பெண்ணோ ...?!



10 comments:

  1. முடிவில் நல்ல கேள்வி...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. haa haa !

    nalla kavithai...!

    ReplyDelete
  3. இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கீங்களா?

    ReplyDelete
  4. காதலியே
    ஏன் அடிக்கடி
    காணாமல் போய் விடுகிறாய்
    நீ
    மின்வாரிய ஊழியரின் பெண்ணோ ...?!//

    ஆஹா! கவிதை அருமை.

    ReplyDelete
  5. சங்கட உணர்வைக் கூட
    அருமையான ரசித்தும்படியான
    கவிதையாக்கித் தந்தது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. திண்டுக்கல் தனபாலன் said...
    முடிவில் நல்ல கேள்வி...!
    வாழ்த்துக்கள்...

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  7. Seeni said...
    haa haa !

    nalla kavithai...!

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  8. டினேஷ் சுந்தர் said...
    இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கீங்களா?

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  9. கோமதி அரசு said...
    காதலியே
    ஏன் அடிக்கடி
    காணாமல் போய் விடுகிறாய்
    நீ
    மின்வாரிய ஊழியரின் பெண்ணோ ...?!//
    ஆஹா! கவிதை அருமை.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  10. Ramani S said...
    சங்கட உணர்வைக் கூட
    அருமையான ரசித்தும்படியான
    கவிதையாக்கித் தந்தது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete