ஒரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...
மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...
விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல் விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...
சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...
டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன் போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய் . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...
ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன் படத்தை விஜயை வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...
ஸ்கோர் கார்ட் : 40
நிச்சயம்..டைம் டூ லேர்ன் தான்...அது மாதிரி உங்க விமர்சனமும் டைம் டூ லேட் தான்...
ReplyDeleteநல்ல அலசல்
ReplyDeleteஇறுதியில் சொல்லிப்போன வாக்கியம்
மிக மிக அருமை
அவர்கள் புரிந்து கொண்டால் சரி
சென்னையில் சந்திப்போம்
//அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . //
ReplyDeleteஅப்படியா ஒரு சில காட்சிகளை தவிர மத காட்சிகளில் makeup போடாதது போலவா இருக்கிறார் .
கோவை நேரம் said...
ReplyDeleteநிச்சயம்..டைம் டூ லேர்ன் தான்...அது மாதிரி உங்க விமர்சனமும் டைம் டூ லேட் தான்...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Ramani S said...
ReplyDeleteநல்ல அலசல்
இறுதியில் சொல்லிப்போன வாக்கியம்
மிக மிக அருமை
அவர்கள் புரிந்து கொண்டால் சரி
சென்னையில் சந்திப்போம்
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Prem s said...
ReplyDelete//அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . //
அப்படியா ஒரு சில காட்சிகளை தவிர மத காட்சிகளில் makeup போடாதது போலவா இருக்கிறார் .
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...