எந்த ஒரு படத்திற்கும் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை ராஜா ராணி படத்திற்கு கிடைத்த ஒப்பனிங் மூலம் நன்றாகவே உணர முடிந்தது . ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லீக்கு இது முதல் படம் என்பதை நல்ல காஸ்டிங்கும் , ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பும் மறக்கடிக்கின்றன ...
காதலியை இழந்த ஜான் ( ஆர்யா ) , காதலனை இழந்த ரெஜினா ( நயன்தாரா) இருவரும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவருக்கும் அடுத்தவரது பழைய காதல் வாழ்க்கை பற்றி தெரிய வர அதை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா என்பது படத்தின் கேப்சனை பார்த்தாலே புரியும் ...
ஆர்யா வுக்கு அதிகம் மெனக்கெடாத கேரக்டர் . கிளீன் ஷேவை விட
கொஞ்சம் தாடியில் கூடுதல் அழகாக இருக்கிறார் . சந்தானத்துடனான இவரது
காம்பினேஷன் இதில் மீண்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .
நீண்டநாட்களுக்கு பிறகு நயன்தாரா தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாகவே
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . க்ளோஸ் அப் காட்சிகளில் முகம் கொஞ்சம்
பயமுறுத்தினாலும் நடிப்பை ரசிக்க முடிகிறது . எங்கேயும் எப்போதும்
படத்தின் எக்ஸாகரேட்டட் வெர்சன் போல இருந்தாலும் நயனின் பழைய காதலனாக வந்து
கிடைத்த அரை மணி நேரத்தில் மனதை அள்ளுகிறார் ஜெய் . விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தியேட்டரில் ஜெய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் . ஆனால் இவரது கதாபாத்திரமும் , அதற்கான முடிவும் தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ் ...
நயனின் தங்கை போல இருக்கும் நஸ்ரியா நைட்டியுடன் அறிமுகம் ஆகும்
முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் . இந்த
படத்திற்கு பிறகு ஆர்யா மேல் சக நடிகர்கள் மேலும் பொறாமைப்படுவார்கள்
என்று நம்பலாம் . சந்தானம் இந்த படத்திற்கும் வழக்கம் போல கமர்சியல் நன்பெண்டா . நயனின் அப்பாவாக சத்யராஜ் நல்ல பொருத்தம் . ஜி.வி
ஹாரிஸ் போலவே அங்கங்கே சுட்டிருந்தாலும் பாடல்களை ஹிட் செய்து விட்டார்
. ஜார்ஜின் ஒளிப்பதிவும் , ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் ...
சிம்பிளான ஒன்லைன் , காதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் உள்ள நேர்த்தி , போரடிக்காத திரைக்கதை , பொருத்தமான காஸ்டிங் இவற்றின் மூலம் அட்லி குட்லி சொல்ல வைக்கிறார் . ரசிக்க வைத்தாலும் மனதில் ஒட்டாத ப்ளாஷ்பேக் காதல்கள் , சொல்லி வைத்தார்ப் போல பழைய காதலை கேட்டவுடன் இருவருக்கும் ஏற்படும் நாடகத்தனமான மனமாற்றம் , எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து விடுவதால் வரும் சலிப்பு இவையெல்லாம் ராஜா ராணி யை ஆள விடாமல் செய்கின்றன . குறிப்பாக ராஜா ராணி காதலில் உயிர்ப்பு குறைவாக இருந்தாலும் பொழுது போக்கு அலங்காரத்திற்காக ஒரு முறை ரசிக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 42
8 comments:
பார்க்க வேண்டும்... நல்ல விமர்சனம்... நன்றி...
முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் ..... மிக அருமையான வரிகள் நன்றி.
வணக்கம் நண்பரே தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தங்களின் பதிவுகள் மேலும் பல வாசகர்களிடம் சென்றடைய இந்த தளத்தில் தங்களின் பதிவுகளை இணையுங்கள்
http://maatamil.com/
நன்றி \
மாதமிழ்
நல்ல விமர்சனம். நன்றி.
பொதுவாகவே படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது...
திண்டுக்கல் தனபாலன் said...
பார்க்க வேண்டும்... நல்ல விமர்சனம்... நன்றி...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
indrayavanam.blogspot.com said...
முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் ..... மிக அருமையான வரிகள் நன்றி.
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
வணக்கம் நண்பரே தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தங்களின் பதிவுகள் மேலும் பல வாசகர்களிடம் சென்றடைய இந்த தளத்தில் தங்களின் பதிவுகளை இணையுங்கள்
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
வெங்கட் நாகராஜ் said...
நல்ல விமர்சனம். நன்றி.
பொதுவாகவே படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டது...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Post a Comment