ஹீரோ சித்தார்த்துக்கும் , தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ட்விட்டரில் லடாய் , Dark Carnival என்கிற கொரியன் படத்தின் தழுவல் தான் படம் என்று செய்தி பரவ அதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் காட்டமான மறுப்பு இப்படி வருவதற்கு முன்பே ஜிகர்தண்டா கொஞ்சம் சூட்டை கிளப்பியிருந்தது. கொரியன் படத்தை பார்க்காததால் இது அப்பட்டமான தழுவலா என்பதற்கு கருத்து சொல்ல முடியாவிட்டாலும் படத்தின் லைட்டிங் , ஷாட்ஸ் , பி.ஜி எல்லாமே உலக சினிமாக்களை நியாபகப்படுத்தியதை மறுப்பதற்கில்லை ...
காட் ஃபாதர் , ஸ்கேரி ஃபேஸ் மாதிரி ஒரு டான் படத்தை எடுக்க நினைக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ( சித்தார்த் ) . மதுரைக்கென்று எவ்வளவோ பெருமைகள் இருக்க தற்போதைய தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஒரு ரியல் டான் சேது ( சிம்ஹா ) வின் கதையை தேடி மதுரை வருகிறார் சித்தார்த் . அவருடைய ஆசை நிறைவேறியதா என்பதை வழக்கமாக சொல்லாமல் முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் வித்தியாசமாக தந்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .
படத்தின் உண்மையான ஹீரோ சிம்ஹா தான் . நெரைத்த முடி , பாக்கு கரை பல் என்று நிஜமான ரவிடியாகவே திரையில் ராவுடி செய்கிறார் . தன் படத்தை கார்ட்டூனாக போட்டதற்காக ரிப்போர்டரை கொளுத்தும் அறிமுக சீனில் டெர்ரர் குறைவாக இருந்தாலும் , கூடவே இருக்கும் கறுப்பாடை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது , " தோள்ள கை போட்டுட்டா பயம் போயிருச்சுள்ள " என்று சித்தார்த்தை மிரட்டுவது , நடிப்பு பயிற்சிக்காக மாஸ்டரிடம் அடி வாங்கி விட்டு முறைப்பது , கடைசியில் திருந்தும் போது பாடி லேங்குவேஜில் நடித்துக் காட்டுவது என படம் முழுவதும் சிம்ம கர்ஜனை செய்கிறார் சிம்ஹா ...
அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அடி வாங்குவதை தவிர சித்தார்த்திற்கு பெரிய வேலையில்லை . ஒரு வேளை க்ளைமேக்சை நெகட்டிவாக முடித்திருந்தால் இவர் கேரக்டருக்கு வெயிட் ஏறியிருக்கும் . சித்தார்த்தை சிம்ஹாவிடம் கோர்த்து விடுவதை தவிர லக்ஸ்மி மேனுக்கு சொல்லிக்கொள்ளும் படி எதுவும் படத்தில் இல்லாவிட்டாலும் அவருடைய நல்ல ராசி இதிலும் தொடர்கிறது . கோலிவுட்டின் லேட்டஸ்ட் நண்பென்டா கருணாகரன் சின்ன சின்ன கவுன்டர்களில் நிறையவே ஸ்கோர் செய்கிறார் ...
நடிப்பு வாத்தியார் , அறுத்தே கொள்ளும் சங்கிலி முருகன் , சீன் படத்தை தேடி தேடி பார்க்கும் அடியாள் , உளவு சொல்லிவிட்டு உயிரை விடும் அடியாள் என சின்ன சின்னகேரக்டர்க்ளில் வருபவர்கள் கூட கவனிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் கண்ணம்மா பாடல் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது . கேம்விக் யு அரியின் ஒளிப்பவதிவு சான்ஷே இல்ல ...
படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சூடு பிடித்து , அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து , அங்கே இங்கே நகரவிடாமல் நம்மை இடைவேளை வரை கட்டிப் போடுகிறது . அதிலும் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு முன்னால் வரும் ட்விஸ்டுகள் அபாரம் . ஆனால் இடைவேளை முடிந்து பெரிதாக ஏதோ நடக்கும் என்று எதிர்பாத்து அமரும் நமக்கு ஏமாற்றம் தான் . அதன் பிறகு படம் முற்றிலும் வேறு ஜெநெருக்கு சென்று விடுகிறது . டெரர் ரவுடிகள் நடிப்புப் பயிற்சிக்காக செய்யும் காமெடிக் கூத்துக்கள் ரசிக்க வைத்தாலும் அ.குமார் படமெல்லாம் காதில் பூ சுத்தல் ...
இரண்டாம் பாதியில் கொஞ்சம் அப்படியிப்படி படம் அலைந்தாலும் திரும்பவும் க்ளைமேக்சுக்கு முன் இறுகப் பிடிக்கிறது திரைக்கதை . சித்தர்த்திர்க்கு வைக்கப்பட்ட முடிவு திணிக்கப்பட்ட ஹீரோயிசம் . பீட்சா இயக்குனரின் இரண்டாம் படைப்பு இரண்டாம் பாதியின் தடம் மாற்றத்தால் தர்ஸ்டி யை முழுதாக தணிக்கா விட்டாலும் நிச்சயம் டேஸ்டியாக இருக்கிறது ...
ஸ்கோர் கார்ட் : 43
No comments:
Post a Comment