தற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...
எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...
இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம் காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...
எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...
4 comments:
podaa punda nakki...poi aayaa pundaiya nakku...
உங்களது கேள்வியில் நியாயத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஊழல் யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அது ஆறு ரூபாயாக இருந்தாலும் சரி அறுபது கோடியாக இருந்தாலும் சரி.
the issue isthat mega corrupt man karuna was not punished so far. everybody feels about that...hence the outburst. of all...
அன்புள்ள அய்யா திரு.ஆனந்த் நாரயணன் அவர்களுக்கு,
வணக்கம். ஒரு கைதும் சில கேள்விகளும் ... கேட்டிருக்கிறீர்கள்...
என் கேள்விக்கென்ன பதில்... வருங்காலங்களில் கிடைக்கும்...
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment