மேக்கிங் ஸ்டைலில் தனது முதல் இரண்டு படங்களையுமே கவனிக்க வைத்தவர் மகிழ்திருமேனி . அவரது பெயரைப் போலவே இந்த படத்திலும் கவித்துவமான தமிழ்தலைப்புடன் மாஸ் ஹீரோ ஆர்யாவுடன் முதன் முறையாக கை கோர்த்திருக்கிறார் . படம் வழக்கமான அண்டர் காப் ஸ்டோரி தான் என்றாலும் திரைக்கதை மூலம் ஏன் , எதற்கு , எப்படி என்று ஆடியன்சை யோசிக்க வைத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ...
அண்டர்க்ரவுண்ட் டான் ஜோதி யை பிடிப்பதற்காக நான்கு வருடங்கள் அந்த க்ரூப்பிலேயே இருக்கிறான் சிவா ( ஆர்யா ) . இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு காப் நண்பன் ( ரமணா ) கொல்லப்பட , இவனும் பிடிபட , சிவா முயற்சியை கைவிட்டானா அல்லது அதிகமாக யாரும் பார்த்திராத ஜோதியை பிடித்தானா என்பதை இடைவேளை வரை விறு விறு , பின்னர் கொஞ்சம் வழ வழ ( உபயம் ஹீரோயின் ஹன்சிகா ) என்று இழுத்து முடித்திருக்கிறார்கள் ...
ஆர்யாவுக்கு அல்டிமேட் கேரக்டர் . மனுஷன் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்கிறார் . படம் முழுக்க உம்மென்று இருந்தாலும் ஹன்சிகாவை ஓட்டும் காட்சிகளில் மட்டும் சிரித்து கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் . ஹன்சிகா படத்திற்கு தேவையில்லாதது போல பட்டாலும் அவருடைய கேரெக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும் படியாகவே இருக்கிறது . குறிப்பாக இவர் தோழியுடன் சண்டை போட்டுக் கொள்ளும் சீன்கள் க்யூட் . ஆனாலும் இடைவேளைக்கு பிறகு நடு நடுவே வந்து பொறுமையை சோதிக்கிறார் . ஹீரோவின் நண்பனாக வரும் ரமணா சில சீன்கள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் . இவர்களை தவிர்த்து படத்தில் வில்லன் உட்பட காஸ்டிங் சறுக்கல் . தமனின் பின்னணி இசை தனியாக தெரிகிறது . " ஏனிங்கு வந்தாய் " பாடல் காதல் தாலாட்டு . சதிஸ் குமாரின் ஒளிப்பதிவு துல்லியம் ...
முதலில் குழப்புவது போல இருந்தாலும் மெயின் ப்ளாட் தெரிந்தவுடன் நம்மை ஐக்கியமாக்கி விடுகிறது படம் . நிறைய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கதை ஆர்யாவை சுற்றியே வருவது ஆறுதல் . இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் சீன்கள் நிச்சயம் நீண்ட நாட்கள் பேசப்படும் . முதல் பாதியில் கிடைக்கும் விறுவிறுப்பு , வன்முறை தூக்கலாக இருந்தாலும் உறுத்தாமல் எடுத்த விதம் , வாட் நெக்ஸ்ட் என்கிற விதத்தில் நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதை , காதலுக்கு கொடுத்த ப்ராக்டிகல் டச் போன்றவற்றால் மீகாமன் மெச்சூர்டாக தெரிகிறான் ...
ஓரளவுக்கு ரியலிஷ்டிக்காக போகும் படத்தில் திருஷ்டிப் பொட்டு போல க்ளைமேக்ஸ் சண்டை , ஆடு புலி ஆட்டத்தில் நம்மை கவராத வில்லன் , ஸ்பீட் பிரேக்கர் போல வரும் காதல் சீன்கள் போன்றவற்றால் கப்பல் தள்ளாடாமல் இருந்திருந்தால் மீகாமன் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பான் . மற்றபடி மாலுமிகள் இல்லாமல் தனியாக ஆடியிருக்கும் மீகாமன் - ஒன் மேன் ஆர்மி ..
ஸ்கோர் கார்ட் : 43
விமர்சனம்.... அருமை... கடைசி வரி பஞ்ச்... சூப்பர்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.. நிறைய விசயங்களை கவனித்து எழுதியுள்ளீர்கள்.
ReplyDeletestoryline from "Departed"??
ReplyDelete