கோலிசோடா ஹிட் டுக்கு பிறகு இயக்குனர் விஜய்மில்டன் - ஐ ஹிட்டடித்த கையோடு நடிகர் சீயான் விக்ரம் இருவரும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இணைந்திருக்கும் படம் 10 எண்றதுக்குள்ள . இவை தவிர படத்தின் எதிர்பார்ப்பு எகிறியதற்கு மற்றொரு காரணம் இளைஞர்களின் தற்போதைய சென்சேஸன் சமந்தா . இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பை விக்ரம் - சமந்தா காம்பினேஷனை வைத்து ஓரளவு மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று சொல்லலாம் ...
சொன்ன டயத்துக்கு எதையும் டெலிவரி செய்யக்கூடிய ஃபாஸ்ட் டிரைவர் ஹீரோ விக்ரமுக்கு ( படத்தில் அவருக்கே பெயரே இல்லை ) முசெளரி க்கு காரை கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் வருகிறது . காருக்குள் அவருக்கு தெரியாமல் இருப்பது ஹீரோயின் ஷகீலா ( நோ டென்ஷன் அது சமந்தாவோட பேரு ) . பிறகு என்ன நடந்திருக்கும் என்கிற கடைசி பெஞ்ச் ஆடியன்ஸ் வரை தெரிந்த கதையை ட்விஸ்டோடு சேர்த்து ஸ்பீட் ப்ரேக்கரும் வைத்து சொல்லியிருக்கிறார்கள் ...
ஐ படத்துக்கு நிறைய மெனக்கெட்ட விக்ரம் அதுக்கு மேல என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காமல் கேசுவலாக செய்திருக்கும் படம் . படத்தில் லேசி போல காணப்பட்டாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறார் . சமந்தாவிடம் இவர் மாட்டிக்கொண்டு படும்பாடு சுவாரசியம் . சமந்தாவுக்கு விக்ரமுக்கு ஈக்குவலாக ஏன் கொஞ்சம் தூக்கலாகவே வெயிட்டான ரோல் . டிரைவிங் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கிற லூட்டி தனியாக காமெடியன் இல்லாத குறையை தீர்க்கிறது . முதலில் கண்ணாடி போட்டுக்கொண்டு அப்பாவி போல இருப்பவரிடம் போகப்போக கண்ணாடியையும் காணோம் , அப்பாவித்தனத்தையும் காணோம் . ஒருவேளை கண்ணாடியோடு சேர்த்து அதுவும் தொலைந்து விட்டதோ என்னமோ ?! ...
படத்தின் சர்ப்ரைஸ் எளிமென்ட் சீரியஸ் டானாக வந்து சிரிப்பு காட்டும் பசுபதி. முன்டாசுப்பட்டி மூலம் நம்மை கவர்ந்த ராமதாசை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் . ஹிந்திக்கார மைதாமாவு வில்லன்கள் படத்தின் கதைக்கு பொருத்தம் . சார்மி குத்தாட்டம் போடும் அயிட்டம் சாங் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் . விக்ரமின் ஒபெனிங் ஸீன் உட்பட படத்தின் சி.ஜி கவுத்தினாலும் பாஸ்கரனின் ஒளிப்பதிவும் , மாஸ்டர் விஜயனின் சண்டைக்காட்சிகளும் படத்தை காப்பாற்றுகின்றன . டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியில்லை ...
ஒரு பெண்ணை இந்தியாவின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு கொண்டு செல்லும் பையா டைப் கதை . அதில் எதற்கு ஹீரோயின் கடத்தப்படுகிறாள் என்கிற ட்விஸ்டை கலந்து கதையெனும் காரை ஓட்டியிருக்கிறார்கள் . கடைசியில் அதற்கு சொல்லப்படும் காரணம் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டாலும் பெரிதாக ஒட்டவில்லை . முசெளரி க்கு போன பிறகு ஏதோ இங்கிருக்கும் முசிறிக்கு போவது போல டிக்கெட் எடுத்து சமந்தாவை பஸ் ஏற்றி விடுகிறார் விக்ரம் . இப்படி படத்தில் லாஜிக் எனும் வஸ்துவை தங்கள் தேவைக்கேற்ப பின்பக்கம் ஸ்டெப்னி போல மாட்டியிருக்கிறார்கள் ...
ஒரு ஸீன் வந்தாலும் விக்ரம் - தங்கை ஸீன் உருக்கம் . வழக்கமான கதைக்கு உத்ராகண்ட் வில்லன்கள் சமந்தாவை ஏன் கடத்துகிறார்கள் ? சமந்தாவுக்கு என்ன ஆகும் ? , விக்ரம் எப்படி காப்பாற்றுவார்? என்று க்யூரியாசிட்டி யை ஸ்க்ரீன் ப்ளே யில் கொடுக்கத் தவறவில்லை இயக்குனர் விஜய்மில்டன் . அதேசமயம் விக்ரம் - சமந்தா காம்பினேஷனில் ரோட் ட்ராவல் கதையை யோசித்து 10 எண்றதுக்குள்ள என்று கேட்சியாக தலைப்பிட்டவர்கள் ஒன்னு ... ஒன்னேமுக்கால் என்று நீட்டி முழக்காமல் டைட்டிலுக்கேற்ப கொஞ்சம் வேகமாக எண்ணியிருக்கலாம் ...
ஸ்கோர் கார்ட் : 40
ரேட்டிங் : 2.5 * / 5 *
From the storyline you've mentioned, it seems the film is based on TRANSPORTER !!
ReplyDeleteஉங்க பிரச்சின என்னனு தெளிவா புரியுது பிரதர்.
ReplyDeleteவிக்ரம்! விக்ரம் வெற்றி!
இந்த மாதிரி பதிவுகளத்தான் திரைமணத்துல Accept பண்றாங்க
பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க?
நான் சொல்றேன்
படம் நல்லாயிருக்கு! சூப்பர்!
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!
தமிழில் ஒரு hollywood movie