இந்த பதிவை படிப்பதற்கு முன்னால் இது தொடர்பான முந்தைய மூன்று பதிவுகளையும் படித்து விட்டு வருவது நல்லது . அதே போல இந்த பதிவு அஜித் , விஜய் இருவரில் யார் சிறந்த நடிகர் என்பதற்கானது அல்ல . அந்த வகையில் பார்த்தால் இது விக்ரம் , சூர்யா ( இவர் நடிப்பு சமீபகாலமாக ஒரே மாதிரியாக இருந்தாலும் ) , தனுஸ் ஆகியோருக்கான பதிவாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் மூவரை விட இன்றைய தேதியில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையும் , பிசினசையும் வைத்திருப்பது இவ்விருவர் மட்டுமே . இந்த தெளிவோடு பதிவை தொடரவும் ...
இதை எழுதும் அதே நேரத்தில் தீபாவளி அன்று ரிலீசான வேதாளத்தின் முதல் நாள் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 15.5 கோடி என்பது நிறைய பேருக்கு செய்திகள் வாயிலாக தெரிந்திருக்கும் . இதன் நம்பகத்தன்மையை ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் நிச்சயமாக பெரிய வித்தியாசம் இருக்காது . ஏனெனில் படம் தமிழகத்தில் மட்டும் 530 ஸ்க்ரீன்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் நாள் அதுவும் தீபாவளி என்பதால் சின்ன தியேட்டரிலேயே 4 ஷோக்களுக்கு குறைவாக இருக்காது . அதிலும் மாயாஜால் போன்ற மல்டிப்ளெக்சுகளை கணக்கில் கொண்டால் குத்து மதிப்பாக 6 ஷோக்கள் வைத்துக்கொள்ளலாம் . இதை பெருக்கிப் பார்த்தல் மொத்தம் 3180 ஷோக்கள் வருகின்றன . தோராமயமாக ஒரு ஷோவை 500 பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . இதன் படி மொத்தம் 1590000 பேர் படத்தை முதல் நாள் பார்த்திருக்கிறார்கள் . டிக்கெட் விலை முதல் நாள் பெரிய ஹீரோ படத்துக்கு 120 க்கு குறைவாக நிறைய தியேட்டர்களில் இருக்காது . இருந்தாலும் ரூ .100 என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் 15.9 கோடிகள் வருகிறது . இந்த படத்திற்கு அரசின் வரிச்சலுகை உண்டு என்பதால் மொத்தத்தையும் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் . ( என்ன ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு போய்க்கிட்டுருக்கு ! ) ...
இதை சொல்வதற்கு காரணம் எந்த ஒரு பெரிய ஸ்டார் படம் வந்தாலும் , குறிப்பாக அஜித் , விஜய் படம் வந்தால் அவர்களின் ரசிகர்கள் நெட்டில் அடித்துக்கொள்வது இந்த வசூலை வைத்துதான் . என்னை அறிந்தால் முதல் நாள் வசூலை புலி முறியடித்தது என்று விஜய் ரசிகர்கள் சொன்னால் இப்போது வேதாளம் , விஜய் நடித்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை ( 12.5 கோடி ) முறியடித்து விட்டது என்று அஜித் ரசிகர்கள் சொல்கிறார்கள் . ஆனால் எந்த ஒரு படமும் முழுமையான் வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வசூல் மட்டும் போதாது . 20 - 20 மேட்சில் முதல் பத்து ஓவருக்கு 120 ரன்கள் எடுத்து ஆள் அவுட் போலத் தான் இதுவும் . இதற்கு தனிஒருவன் , பாபநாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . ஒப்பனிங் குறைவாக இருந்தாலும் மவுத் பப்ளிசிட்டி மூலம் இரண்டு படங்களும் 50 நாட்களை கடந்து ஓடி நல்ல வசூலை குவித்தன . ( எல்லாம் குடும்பத்தோட போய் நம்ம எழுதுற 120 ரூவா மொய் தான் ) ...
சரி மேட்டருக்கு வருவோம் . படத்துக்கு மிக்சட் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அஜித்தின் வேதாளம் 100 கோடி வசூலை தாண்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஆனால் தல படம் லிங்கா , கத்தி படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டது என்பதே நிதர்சனம் . அதிலும் உலகநாயகனின் படத்தோடு ரிலீசாகி இந்த சாதனையை படைத்திருப்பது சத்தியமாக எதிர்பார்த்திராத ஒன்று . என்ன தான் வசூலை குவித்திருந்தாலும் அஜித்துக்கு இருக்கும் மாஸுக்கு வேதாளம் படமாக சரியான தீனி அல்ல என்பதே என் கருத்து ...
மங்காத்தா படம் முடிந்து வரும் போது அஜித்துக்கு இருக்கும் ஒபெனிங்கை பார்த்து விட்டு ஒரு சினிமா நண்பரிடம் பேசினேன் . அவரோ ரொம்ப கேசுவலாக இதெல்லாம் கொஞ்ச நாள்ல காணாமல் போயிடும் என்றார் . அதோடு ஷங்கர் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படங்கள் வந்து விட்டால் அஜித்தை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் சொன்னார் . அவர் சொன்னதை ஈசியாக விட முடியாதற்கு காரணம் அவர் சினிமா வட்டாரத்தில் நல்ல தொடர்புள்ளவர் என்பதோடு கண்டிப்பாக விஜய் ரசிகர் இல்லை . ஆனால் அவர் சொன்னது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நான் ஆணித்தரமாக நம்பினேன் . அன்றிருந்த நம்பிக்கை பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அஜித் மேல் இருந்ததில்லை . எங்கள் பேச்சிலர் ரூமுக்கு வரும் நண்பன் பக்கா அஜித் ரசிகன் . அதிலும் சிட்டிசன் படத்தின் " நான் தனி ஆள் இல்ல " என்ற வசனத்தை அவன் அஜித் போலவே பேசுவான் . அஜித் மேல் எந்த ஈடுபாடும் இல்லாத நாங்களோ அவனை ஓட்டுகிற ஓட்டில் ரூம் பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டான் . நாங்களும் " மாப்புள அத்திப்பட்டி மாதிரி அவனும் காணாம போயிட்டாண்டா " என்று சொல்லி சிரித்துக் கொள்வோம் ...
என் கல்லூரி காலங்களில் அஜித்தை விட விஜய்க்கு தான் கூடுதல் மாஸ் இருந்தது . அவரை போலவே ரிம்லெஸ் க்ளாஸ் , டிசர்ட் அதே ஸ்டைலுடன் நிறைய பேரை பார்க்க முடியும் . காதல் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த விஜய் மேல் பெண்களுக்கும் நிறைய கிரேஸ் இருந்தது , நானோ ஒன்ஸ்மோர் படம் முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் பார்க்கலாமா என்று கேட்ட நண்பனை செவுட்டில் அறையலமா என்று கேட்பது போல பார்த்தேன் . ஆனால் என்னைத் தவிர அங்கிருந்த எல்லோரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தார்கள் . இதே நிலைமை தான் விஜய் நடிப்பில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த போதும் . இப்படி விஜய் , அஜித் இருவருமே தனிப்பட்ட முறையில் பெரிதாக கவர்ந்ததில்லை . அதே சமயம் வாலி படத்தை பார்த்த பிறகு இயக்குனராக வேண்டுமென்கிற வெறி அதிமாகி எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்னை வந்தது இன்றும் நினைவிருக்கிறது . அது தனிக்கதை ...
இப்படி ஈக்குவலாக போய்க்கொண்டிருந்த ட்ராக் சொல்லப்போனால் அஜித்தை விட அதிக வெற்றிகளின் காரணமாக விஜயின் க்ராஃப் மேலே இருந்த நேரத்தில் பில்லா வின் வெற்றி ரஜினியின் ரசிகர்கள் பலரை அஜித் பக்கம் ஈர்த்தது . கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும் , அதற்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டியதும் பலரை புருவம் உயர்த்த செய்தது . இந்த சம்பவம் நடுநிலையாளர்கள் பலரை அஜித் பக்கம் கொண்டு போனது . நிஜத்திலும் லார்ஜர் தென் லைஃப் ஹீரோ போல அஜித் பார்க்கப்பட்டார் . விஜய் போல பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரிதாக எதுவும் செய்யாத போதும் அஜித் மேல் உள்ள ஈர்ப்பு அடிமட்ட ரசிகர்களுக்கு குறையவில்லை ...
குடும்பத்தோடு பார்ப்பதற்கு விஜய் படங்கள் தான் மினிமம் கேரண்டி . அதில் பாட்டு , டான்ஸ் , காமெடி என்று சாமானியனை கவரும் அம்சங்கள் நிறையவே உண்டு . விஜய்யிடம் எப்போதும் ஒரு துறுதுறுப்பு இருந்து கொண்டே இருக்கும் . அஜித் தை விட மூன்று வயதே( 41 ) சின்னவராக இருந்தாலும் பார்ப்பதற்கு இன்னும் சின்னப்பையன் போல இருப்பது விஜய்க்கு ப்ளஸ் . அதனால் தான் ஏகன் படத்தில் கல்லூரிக்கு போன அஜித்தை அவர் ரசிகர்களே கிண்டல் செய்த போதும் விஜயை காவலனில் யாரும் கிண்டல் செய்ததில்லை . பலரால் கிண்டல் செய்யப்பட்ட வேலாயுதம் , புலி போன்ற படங்கள் கூட 60 , 70 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கின்றன ...
கிட்டத்தட்ட இருவருமே சம பலத்தோடு இருப்பது போல பட்டாலும் விஜய்யின் 50 வது படமான சுறா சுருட்டி வாரிக்கொள்ள அஜித்தின் 50 வது படமான மங்காத்தா சக்கை போடு போட்டது . அஜித்துக்கு இந்த வெற்றி மற்றுமொரு திருப்புமுனை . விஜய் ரசிகர்கள் அஜித்தின் மிகப்பெரிய ஹிட்டான மங்காத்தா, ஆரம்பம் இரண்டுமே அர்ஜுன் மற்றும் ஆர்யா இருந்ததால் அஜித்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது என்றும் சொல்கிறார்கள் . இது ஒரு சப்பை காரணம் போல் பட்டாலும் விஜய் சோலோ ஹீரோ வாக நடித்த துப்பாக்கி , கத்தி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதையும் மறுக்க முடியாது . கத்தி , துப்பாக்கி இரண்டுமே விஜய் எனும் ஹீரோவையும் தாண்டி படமாகவும் நல்ல படங்கள் . வேதாளத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்க முடியாது . ஆனாலும் அந்த படங்களை தாண்டி வேதாளம் வசூலைக் குவித்ததைத் தான் அஜித் தின் பலம் என்கிறார்கள் . அதாவது விஜய் ஒரு படம் ஹிட் கொடுக்க கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாமுமே கை கொடுக்க வேண்டியிருக்கிறது , அதாவது அவர் மெனெக்கெட வேண்டியிருக்கிறது . ஆனால் தல ஸ்க்ரீனில் நின்னாலே போதும் படம் ஹிட் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது . இது ஆரோக்கியமான விஷயமாக இல்லாமல் போனாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான ஸ்க்ரீன் ப்ரெசென்சில் அஜித் முன்னே நிற்கிறார் . அதனால் தான் சக ஹீரோக்களே தல தல என்று அஜித்தை கொண்டாடுகிறார்கள் ...
இரண்டு ஹீரோக்களையும் இவ்வளவு நேரம் அலசினாலும் இறுதி முடிவை மக்கள் கையிலே விட்டு விடுகிறேன் . மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு . இந்த பதிவுக்கு கீழ் யார் பெஸ்ட் என்கிற தலைப்பில் அஜித் , விஜய் இருவரின் பெயரும் இருக்கும் . நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த புள்ளியை அழுத்தவும் . வருகிற 18 ஆம் தேதியோடு வாக்கெடுப்பு முடிவடையும் . இன்னும் ஐந்து நாட்களே இருகின்றன . யார் பெஸ்ட் ?...
தேர்ந்தெடுப்பதற்கு முன் கீழே உள்ள முந்தைய பதிவுகளையும் படிக்கவும் ...
அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...
அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...
அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...
Ji thala thalapathy pathi ivlo deepah ezluthitu result public kitta vittengale ungaloda result enna we want ur result AJITH r VIJAY
ReplyDeleteLet public result comes first . Did you vote ?
ReplyDeleteAJITH is leading now . Where is VIJAY fans ?
ReplyDelete