17 April 2016

தெறி - THERI - அபோவ் ஆர்டினரி ...


புலியின் தோல்விக்கு பிறகு  இளைய தளபதியை வைத்து பழைய படங்களை தூசு தட்டி புதுசாக எடுக்கும் அட்லி சத்ரியன் கதை  மாவில் கொஞ்சம் பாட்ஷா, என்னை அறிந்தால் உட்பட பல படங்களின் சீன்களை தெறித்து கொடுத்திருக்கும் சூடான மசாலா தோசை தெறி ...

வழக்கம் போல ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக மகளுடன் வாழ , வழக்கம் போல ஒரு அழகான பெண் அவரை டாவடிக்க , வழக்கம் போல ஒரு லோக்கல் ரவுடி ஹீரோவை வம்பிழுக்க , வழக்கம் போல முதலில் அடி வாங்கும் ஹீரோ பிறகு அவனை பொலெந்துடுக்க , வழக்கம் போல அதை பார்க்கும் அந்த பெண் ஹீரோவின் பழைய வாழ்க்கையை தோண்டியெடுக்க , வழக்கம் போல ஹீரோ வின் குடும்பத்தை வில்லன் பிளாஷ்பேக்கில் குதறியிருக்க , வழக்கம் போல மீண்டும் அந்த வில்லனை மீண்டு வரும் ஹீரோ பழி தீர்க்க ( ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே ) இப்படி பல வழக்கம் போல இருந்தாலும் அது பார்க்கும் போது போரடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விஜய் ...


மூன்று கெட்டப்புகள் என்றெல்லாம் பில்டப்புகள் கொடுத்தாலும் வ....ல விஜய் விஜயாகவே வருகிறார் . இந்த முறை பவர் கண்ணாடியும் , பரட்டை குடுமியும் ப்ளஸ் . தெறி யில் அவர் ஆட்டத்தை விட ஆக்சன் பொறி பறக்கிறது . மகள் நைனிக்கா , அம்மா ராதிகா , மனைவி சமந்தா மூவருடனும் விஜயின் கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது . வ ... ல சினிமா குழந்தை நைனிக்கா கொஞ்சம் ஓவராக பேசினாலும் ரசிக்க வைக்கிறார் இந்த மீனாவின் பேபி . முகத்தில் உணர்ச்சிகளை குறைவாக காட்டினாலும் கம்பீரமான குரல் , ஷார்ப்பான் கண்கள் இவற்றால் வில்லனாக மிரட்டுகிறார்  மகேந்திரன் ...

மொட்டை ராஜேந்திரனை நன்றாகவே யூஸ் செய்திருக்கிறார்கள் . பிரபுவின் சைசுக்கேற்ற வெயிட்டான ரோல்  படத்தில் இல்லை . படமே பழைய படங்களின் கலவை தானே என்பதாலோ என்னவோ ஜி.வி யின் பாடல்களில் எல்லாமே பழைய நெடி . ஜித்து ஜில்லாடி யில் தேவா வின் குரலும் , விஜயின் ஆட்டமும் கெத்து . படத்தின் வேகத்துக்கு எடிட்டிங் கை கொடுக்கிறது ...

விஜயை வைத்து ஆக்சன் படம் என்று முடிவான பிறகு கதைக்காக பெருசாக மெனெக்கெடாமல் இன்றைய இளம் தலைமுறை அதிகம் கேள்விப்பட்டிராத சத்ரியன் படத்தை மையமாக எடுத்திருந்தாலும் சீன்களுக்காகவாவது நிறைய யோசித்திருக்கலாம் . கஜினி , சலீம் , வேதாளம் என்று எந்த படத்தையும் விட்டுவைக்கவில்லை அட்லி . மாஸ் ஹீரோக்கள் படங்களில் லாஜிக் பார்ப்பது அரசியல்வாதிகள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்று  ஆராய்வதற்கு சமம் . எனவே அதை விட்டுவிடலாம் . மற்றபடி படம் தொய்வில்லாமல் செல்வதும் , ஆக்சன் சீன்களும் பலம் . விஜயின் ஆகச்சிறந்த  படங்களில் !ஒன்றாக தெறி இல்லாவிட்டாலும் அவர் ரசிகர்களையும் , கமர்சியல் விரும்பிகளையும்  திருப்திப் படுத்தும் வகையிலும் வந்திருக்கும் தெறி -  ஜஸ்ட் அபோவ் ஆர்டினரி ...

ரேட்டிங்   :    2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 


3 comments:

Anonymous said...

correct review..movie scenes copied from various tamil cinemas.
director took his time all for hw to remake the same scene with VJ.
Other than this nothing in theri.
Ithukku Karthik Suppuraj maathiri Aviyal nu Short film name maathiri ethavathu vachirukalam

vivek kayamozhi said...

விஜய்க்கு இது புதுசாக இருக்கலாம், நன்றாக கூட இருக்கலாம், ஆனால் அட்லீயின் அநியாயத்தை சகிக்கவில்லை.
மவுனராகத்தை அதன் ஜீவன் எல்லாம் சிதைத்து ராஜாரானியாக எடுத்து, விஜய் டிவி,'கவர்'பத்திரிகையாளர்கள் உதவியுடன் அதை வெற்றி என்று சொல்லவைத்தது போல், இப்பவும் அதனை தொடர்கிறார் ...
நூறு கோடி வசூல்,பாகுபலியை முந்தியது போன்ற வடைகள் வர ஆரம்பித்துவிட்டன.
இதுபோன்ற நபர்களால் தான் தமிழ் திரையுலகில் ராஜூமுருகன்,வெற்றிமாறன், சுப்புராஜ் போன்ற இன்னும் பல திறமையாளர்கள் அடையாளம் பெற சிரமப்படும் நிலை உள்ளது.
தயவுசெய்து ரசிகர்கள், நடிகர்கள் இத்தகைய சரக்கு இல்லாதோரை ஆதரிக்க வேண்டாம்.

vivek kayamozhi said...

விஜய்க்கு இது புதுசாக இருக்கலாம், நன்றாக கூட இருக்கலாம், ஆனால் அட்லீயின் அநியாயத்தை சகிக்கவில்லை.
மவுனராகத்தை அதன் ஜீவன் எல்லாம் சிதைத்து ராஜாரானியாக எடுத்து, விஜய் டிவி,'கவர்'பத்திரிகையாளர்கள் உதவியுடன் அதை வெற்றி என்று சொல்லவைத்தது போல், இப்பவும் அதனை தொடர்கிறார் ...
நூறு கோடி வசூல்,பாகுபலியை முந்தியது போன்ற வடைகள் வர ஆரம்பித்துவிட்டன.
இதுபோன்ற நபர்களால் தான் தமிழ் திரையுலகில் ராஜூமுருகன்,வெற்றிமாறன், சுப்புராஜ் போன்ற இன்னும் பல திறமையாளர்கள் அடையாளம் பெற சிரமப்படும் நிலை உள்ளது.
தயவுசெய்து ரசிகர்கள், நடிகர்கள் இத்தகைய சரக்கு இல்லாதோரை ஆதரிக்க வேண்டாம்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...