நயன்தாரா நடிப்பில் அவரது காதலர் விக்னேஸ் சிவன் தயாரிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் நெற்றிக்கணஂ . இது பத்து ஆண்டுகளுக்கு முன் வந்த ப்ளைண்ட் கொரியன் படத்தின் ரீ மேக் . நெற்றிக்கண் திறந்ததா பார்க்கலாம் ...
சிபிஐ ஆபீசர் துர்கா ( நயன்தாரா ) கார் ஆக்சிடெண்டில் தன் தம்பி , வேலை , பார்வை எல்லாவற்றையும் இழந்து தடுமாரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் . அவர் வாழ்க்கையில் பெண்கள் கடத்தி செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஒரு டாக்டர் சைக்கோ ( அஜ்மல் ) குறுக்கே வருகிறான் . அவன் செய்கையில் சந்தேகம் கொள்ளும் துர்கா போலீசை நாடுகிறார் . போலீஸ் உதவியுடன் அவர் அந்த சைக்கோவை பிடித்தாரா என்பதே படம் ...
மாயா , அறம் வெற்றிக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கும் நயனுக்கு இது ஏற்ற படம் . நயன் போலீசிடம் தகவல் சொல்லும் காட்சி , அஜ்மலை விசரரிக்கும் காட்சிகளில் தியெட்டரில் ரிலீஷ் அகியிருந்தால் விசில் பறந்திருக்கும் . அஜ்மலுக்கு வழக்கமான சைக்கோ கேரக்டர் அதனால் பெரிதாக எடுபடவில்லை . சப் இன்ஸ்பெக்டராக வந்து நயனுக்கு உதவி செய்யும் மனிகண்டன் ஜொலிக்கிரார் . இதுவும் கடந்து போகும் பாடல் , பின்னணி இசை இரண்டிலும் கிரிஸ் கோபாலகிருஷ்னன் ஸ்கோர் செய்கிறார் .
படத்தின் ஆரம்ப காட்சிகளில் , இன்டர்வெல் வரை அடுத்தடுத்த நகர்வுகள் படத்துக்கு பலம் . மெட்ரோ வில் நயன் நாயுடன் போவது , எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் மெட்ரோ , மால் எல்லாம் இருப்பது, விடியோ காலில் ஸ்கிரீன் ஷாட் எடுக்காமல் நம்பியார் காலத்து பாணியில் ஸ்கெட்ச் வரைந்து குற்றவாளியை கண்டுபிடிப்பது எல்லாம் லாஜிக் சொதப்பல். சுருக்கமா சொன்னால் சின்னதம்பி கவுன்டமணிக்கு ஆறு மணி வரை ஆறு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அண்டாவின் கரையை பார்க்கும் அளவுக்கு கண் பார்வை இருந்தும் ஆறு மணிக்குப் பின் எதுவுமே தெரியாதது போல இண்டர்வெல் வரை நன்றாக போய் அதன் பிறகு தடுமாறும் நெற்றிக்கண் - மாலைக்கண் ...
ரேட்டிங்க் : 2.75 *
இதன் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam யூ டியூப் சேனலில் காணவும் ...
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKYY7GG6GI4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment