சூப்பர் ஸ்டார் - சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த . ரஜினி - நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா ...
71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர் சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல் என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் ...
இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை ...
அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம் அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த ...
ரேட்டிங்க். : 2*
வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் ...
https://youtu.be/JtQKKxypwYw
No comments:
Post a Comment