Vanga blogalam in Facebook

4 July 2011

அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல்


         இந்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட்,சட்டசபை தேர்தல்,ஐ.பி.எல் என்று வரிசையான பரபரப்புகளுக்கிடையில் கடந்த ஆறு மாத கால சினிமா கொஞ்சம் அசமந்தமாகவே  போனது என்று தான் சொல்ல வேண்டும்...

                                
     கடந்த ஆண்டின் முதல் ஆறு  மாத காலத்தில்  வெளி வந்த ஆயிரத்தில்   ஒருவன்,தமிழ்படம்,விண்ணைத்தாண்டி வருவாயா,
அங்காடித்தெரு,களவானி போன்று  வெரைட்டியாகவும்,வணிக ரீதியாக 
வெற்றியும் பெற்ற   படங்கள் இதுவரை வராவிட்டாலும் அதை ஓரளவு
சமன் செய்வது போல ஆடுகளம்,அழகர்சாமியின் குதிரை,ஆரண்ய காண்டம் போன்ற அழுத்தமான படங்களும் கோ ,சிறுத்தை போன்ற
வணிக ரீதியான வெற்றிப் படங்களும் வந்திருக்கின்றன....
      இதில் ஆடுகளம் இந்த வருடம் வெளியாகி இருந்தாலும் சென்ற ஆண்டு சென்சார் செய்யப்பட்டதால் கடந்த ஆண்டின் ஆறு தேசிய விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது..ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்...
       நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு   ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்...
 அந்த அளவிற்கு  நேர்த்தியான திரைக்கதை , இயல்பான நடிப்பு , 
தரமான பின்னணி இசை...அதே சமயம் காமினி என்ற ஹிந்தி படத்தின் பாதிப்பு 
இதில்  இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...
நல்ல வேலை இந்தப் படத்தில் கமல் இல்லை..இருந்திருந்தால் இதை 
உலகப்படம் என்று புகழும் சிலர் அதே வாயால் உல்டா படம் என்று
தேளாய்க் கொட்டியிருப்பார்கள்....
      இலக்கியம் படமாக்கப்படும் போது வணிக ரீதியான சமாதானங்களால் வழி மாறி போய் விடுவதுண்டு ...ஆனால் பாஸ்கர் சக்தியின் கதையை அதன் மண் மனம் மாறாமல் இயக்கி இருப்பது இயக்குனர் சுசீந்தரனின் சாமர்த்தியம்....அழகர்சாமியின் குதிரை  - அனைவருக்கும் ஏற்ற சவாரி....

      தெலுங்கு டப்பிங் படம் போல இருந்தாலும் கார்த்திக்-சந்தானம்
கூட்டணியால் வணிக ரீதியாக வெற்றி பெற்று விட்டது சிறுத்தை....
                                        
      பத்திரிக்கை நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
என்று சொல்லும் படம் கோ..தேர்தலுக்கு முன் வந்திருந்தால் நல்ல பொருத்தமாக இருந்திருக்கும் ...அதற்காகவே படத்தை வாங்கி தேர்தலுக்கு பின் வெளியிட்டது போல தெரிகிறது ....காண்க கோ - விமர்சனம்...
இதன் வணிக ரீதியான வெற்றி "ஸ்டேட் ஆப் ப்ளே" என்ற ஆங்கிலப்படத்தின்  தழுவல் என்ற உண்மையை அமுக்கி விட்டது...
                                           
      வேட்டைக்காரன்,சுறா என்று வரிசையான தோல்விப் படங்களால்
துவண்டு போயிருந்த விஜய்க்கு காவலன் ஒரு நல்ல திருப்பம்..ஏய்..ஓய் என்று பஞ்ச் வசனங்கள் இல்லாத காமெடி கலந்த காதல் படம் காவலன்,,,

                   
      
     சில ஆங்கில படங்களை நினைவு படுத்தினாலும் மிஷ்கினின்   "யுத்தம் செய்" ஒரு நல்ல கிரைம் த்ரில்லர்....இதே பாணியில் மென்மையான காதல்
படமான "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு சைக்கோ த்ரில்லர் படம் எடுத்த கௌதமின் முயற்சியை மட்டும் பாராட்டலாம்....
ஆனால்  நடுநிசி நாய்கள்-குறைக்கவும் இல்லை,கடிக்கவும் இல்லை...
                                                       
                             
      எதிர்பார்த்து ஏமாந்த படம் அவன் இவன்..அவன்-இவன் அழுத்தமில்லாதவன்.....அரசியல் மாற்றத்தால் நிறைய படங்கள்
வெளிவரக் காத்திருந்தாலும் இந்த வருட முடிவுக்குள் ரசிகர்கள்
அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது "அசல்" நாயகன் அஜித் ..
நடிக்கும்  மங்காத்தா...இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம்...
இந்த இரண்டு படங்கள் மட்டும் அல்ல வரப்போகின்ற எல்லா படங்களும்
ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே
என் விருப்பம்...

          
  

7 comments:

  1. அலசல் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாத்தான் அலசி இருக்கீங்க.. தென் மேற்கு பருவக்காற்று அத விட்டு விட்டீர்களே,

    ReplyDelete
  3. கவலைபடாதீங்க!
    உங்க விருப்பம் நிறைவேறாது.
    வேலாயுதத்தின் கதை வெளியாகி இருக்கு.இன்னொரு திருப்பாச்சி.ஆத்தாவ கொஞ்சம் நம்பலாம்.

    ReplyDelete
  4. இராஜராஜேஸ்வரி said...
    "அலசல் அருமை. பாராட்டுக்கள்."

    நன்றி...

    கோவை நேரம் said...
    "ரொம்ப நல்லாத்தான் அலசி இருக்கீங்க.. தென் மேற்கு பருவக்காற்று அத விட்டு விட்டீர்களே,"

    நன்றி...இது இந்த வருடம் வெளியான படங்களின் அலசல்...தென்மேற்கு பருவக்காற்று கடந்த வருடம் (2010 ) டிசம்பர் மாதத்தில் வெளிவந்தது...உண்மையில் விட்டுப்போன படங்கள் குள்ளநரிக்கூட்டமும்,வானமும்...

    குறுக்காலபோவான் said...
    கவலைபடாதீங்க!
    உங்க விருப்பம் நிறைவேறாது.
    வேலாயுதத்தின் கதை வெளியாகி இருக்கு.இன்னொரு திருப்பாச்சி.ஆத்தாவ கொஞ்சம் நம்பலாம்.

    காவலனுக்கப்புரம் சும்மா ஒரு எதிர்பார்ப்புத் தான்..

    ReplyDelete
  5. Eswaran KandaswamyTuesday, July 12, 2011

    Kullanari Kootal vittu ponadhu is a concern... very very decent movie. Vaanan oru veena pona(van) padam, athai miss panniyathu patri varuthan vaendaam

    ReplyDelete
  6. சார் அது காமினி இல்ல சார் கமீனே (scoundrel) . எதிர்பார்ப்பு என்னமோ எழாம் அறிவு பத்திதான் அதிகம் இருக்குறதா படுது. மங்காத்தா நம்பலாம், வேலாயுதம் தலைவர் சந்தனம் இருப்பதால் நம்பலாம். வரவிருக்கும் படங்கள் பற்றிய ஒரு அலசல் நாங்க பதிவு பண்ணியிருக்கம், பாத்துட்டு சொல்லுங்க
    http://realsanthanamfanz.blogspot.com/2011/07/blog-post_29.html

    ReplyDelete
  7. நல்லதம்பி(தல-தளபதி சலூன்) said...
    சார் அது காமினி இல்ல சார் கமீனே (scoundrel) . எதிர்பார்ப்பு என்னமோ எழாம் அறிவு பத்திதான் அதிகம் இருக்குறதா படுது. மங்காத்தா நம்பலாம், வேலாயுதம் தலைவர் சந்தனம் இருப்பதால் நம்பலாம். வரவிருக்கும் படங்கள் பற்றிய ஒரு அலசல் நாங்க பதிவு பண்ணியிருக்கம், பாத்துட்டு சொல்லுங்க
    http://realsanthanamfanz.blogspot.com/2011/07/blog-post_29.html

    நன்றி...!

    ReplyDelete