பிரம்மாண்டமான படங்களை கையாள்வதில் சங்கருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் திறமையானவர் கே.வி.ஆனந்த் . இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் சுபா வுடன் இணைந்து திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார் . அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் கவண் . இதுவரை வேறு இயக்குனர்கள் படங்களில் நடிக்காத டி.ஆர் பல வருட இடைவெளிக்கு பிறகு திரையில் வருவது படத்தின் டிஆர்.பி ஏறுவதற்கு உதவியிருக்கும் ...
ஜென்1 டி.வி யில் வேலைக்கு சேரும் திலக் ( விஜய் சேதுபதி ) சேனலை No.1 ஆக்குவதற்காக அடாவடி அரசியல்வாதியுடன் ( போஸ் வெங்கட் ) கை கோர்த்துக் கொண்டு எம்.டி ( ஆகாஸ்தீப் ) செய்யும் தில்லு முல்லுகளை பொறுக்க முடியாமால் பொங்கியெழுவதே கவண் . சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வியாபார நோக்கை மட்டும் மனதில் கொண்டு செயல்படும் பல நான்காவது தூண்களின் கள்ளாட்டத்தை கமர்சியலாய் காட்சிப்படுத்துகிறான் இந்த கவண் ...
சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு கவண் நிச்சயம் நல்ல கமர்சியல் பிரேக் . அலட்டிக்கொள்ளாமல் தனக்கே உரித்தான பாணியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் . சில சமயங்களில் வசனங்களை தின்று விட்டால் கூட உடல் மொழியால் சமன் செய்கிறார் . சபலப்பட்டு விட்டு மடோனா வை சமாளிக்கும் இடம் சூப்பர் . மடோனா க்ளோஸ் அப் காட்சிகளில் மயங்க வைக்கிறார் . கேரளத்துக்கே உரிய பெரிய மனசால் கிறங்க வைக்கிறார் . மத்தபடி நடிப்பு , சாரி அத நான் கவனிக்கல . அயன் அளவுக்கு இல்லாமல் இதில் ஜெகனை அண்டர் யுடிளைஸ் செய்திருக்கிறார்கள் . மீடியா பெர்சனாலிட்டியாக பூர்ணிமா பக்கா மேட்ச் ...
டி.ஆர் படத்துக்கு பலம் , அதே சமயம் சில இடங்களில் பலவீனமும் கூட . முதல் பாதியில் இவர் வந்து பழைய படங்களை பற்றி ஜென் டி.வி எம்.டி யிடம் பாடம் எடுப்பது படுத்தல் . இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதிக்கு இணையாக வரும் டி.ஆர் நடிப்பை விட மிமிக்ரி செய்து அப்லாஸ் வாங்குகிறார் . விக்ராந்த் நடிப்பில் அப்துல் கேரக்டர் முஸ்லீம் இளைஞனுக்கு மீடியாவால் நேரும் துன்பத்தை கொஞ்சம் மிகை கலந்து வெளிச்சம் காட்டுகிறது . வருசத்துக்கு அதிகபட்சம் நாலு படம் படத்துக்கு நாலு பாட்டு இதுக்கே போட்டதையே போடும் ஆதியை என்னத்த சொல்ல . கே.வி - ஹாரிஸ் கூட்டணியின் இழப்பு நன்றாக தெரிகிறது ...
கோ , மீடியா டைகூனாக பிரகாஸ்ராஜ் நடித்த பூலோகம் , முதல்வன் என்று மற்ற படங்களை ஆங்காங்கே கட் செய்து கவணில் பேஸ்ட் செய்திருக்கிறார்கள் . டி.ஆர்.பி எகுறனும்னா எதுவும் தப்பில்ல என்று ஊடகங்கள் செய்யும் உல்டா வேலைகளை ஜாலியாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறான் கவண் . ஆனால் அழுகைக்காக ஒரு சிறுவனை பூர்ணிமா அடிப்பதெல்லாம் ஓவர் . இண்டெர்வெல் ப்ளாக் கை முடித்த விதம் ஹைக்கூ ...
முதல் பாதி முழுவதும் மீடியா மேட்டரை வைத்து நன்றாகவே ஒப்பேற்றியவர்கள் அதன் பிறகு கெமிக்கல் ஃபேக்டரி , போராட்டம் என்று அரைத்த மாவையே அரைத்து போரடிக்கிறார்கள் . ஜென் 1 டி.வி ல எத லைவா போட்டாலும் மக்கள் பாக்குறாங்க சரி லேகிய விளம்பரம் பண்ற முத்தமிழ் டி.வி ல எதையோ போட்டாலும் எல்லாரும் பாப்பாங்களா ? அது என்ன லைவ் கிரிக்கெட் மேட்சா ?. சில சமயம் நாம்ம படத்துக்கு வந்தோமா இல்ல வீட்ல நியூஸ் சேனல் பாக்குறோமாங்குற டவுட்டு நமக்கு வரத்தான் செய்யுது . இப்படி கமர்சியல் பிரேக்குகளின் டூ மச் குறுக்கீடுகளால் கவண் கொஞ்சமாய் கவர்கிறான் ...
ரேட்டிங்க் : 3 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 42
No comments:
Post a Comment