கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி விட்டது விமர்சனம் எழுதி . புதுப்படங்களை உடனே பார்க்கும் ஆர்வம் குறைந்தே போனது . விக்ரம் வேதா வை விடாததற்கு காரணம் விஜய் சேதுபதி யும் , மாதவனு ம் . கவண் போன்ற கமெர்சியல்களை விட இது போன்ற நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் ரோல்களிலேயே விஜய் சேதுபதி அதிகம் ஜொலிக்கிறார் . இந்த இருவரையும் சரியான புள்ளியில் இணைத்த புஷ்கர் - காயத்ரி க்கு பாராட்டுக்கள் ...
விக்ரமாதித்யன் தோள்களில் அமர்ந்து கொண்டு வேதாளம் கேள்வியாய் கேட்டு அவனை சுத்த விடும் . அது போல போலீஸ் விக்ரம் - தாதா வேதா இருவருக்கிடையேயான மோதலை சுவாரசியமான கேள்வி பதிலாய் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் . க்ளைமேக்ஸுக்கான பதிலை நம்மிடமே விட்டு சென்றது தையிரியம் ...
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமாக மாதவன் முழு தாடி , அரை தாடி என ஸ்டைலில் மாறினாலும் நடிப்பில் சீராக ( புரியும்ல ) இருந்து சிறப்பிக்கிறார் . இவருக்கு பெரிய ஃப்ளாஷ்பேக் எல்லாம் வைக்காமல் சில வசனங்களிலேயே சிம்பிளாக கேரக்டருக்குள் போய் விடுவது சிறப்பு . உர்ரென்றே இருப்பவருக்கு வக்கீல் மனைவி ஸ்ரதா ஸ்ரீநாத் நல்ல ரிலாக்ஸ் . நமக்கும் தான் . ஒற்றை மூக்குத்தியில் ஜொலிக்கும் ஸ்ரதா ஸ்ஸ்ஸ்ரதா ...
இந்த அளவு ஓல்ட் கெட்டப் தேவையா என யோசிக்க வைத்தாலும் அந்த ரோலுக்கு தனது உடல் மொழியால் வெய்ட் ஏத்துகிறார் விஜய் சேதுபதி . ஸ்லோவாக இவர் கொடுக்கும் என்ட்ரி செம்ம மாஸ் . கையிலிருக்கும் ரொட்டியை போலீஸ் நாய்க்கு தூக்கி போட்டு விட்டு அசால்ட்டாக நடக்கும் இடம் க்ளாஸ் . ரெண்டு செய்கையிலேயே வேதாவாக நம் மனதில் நங்கூரம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார் . ஜிகர்தண்டா வில் சின்ன ரவுடி ரோலில் வந்து நம்மை சில் செய்த விஜய் சேதுபதியின் ஹாட் வெர்சன் இந்த வேதா ...
வேதாவின் தம்பி புள்ளி யாக வரும் கதிர் , விஜய் சேதுபதியின் ஜோடியோ என புதிர் போட்டு பிறகு கதிருக்கு ஜோடியாக வரும் வரலக்ஷ்மி , ட்ரக் டீலர் ரவி , மாதவனின் போலீஸ் டீம் , சேட்டன் என படத்தில் நிறைய கேரக்டர்கள் வலம் வந்தாலும் தொய்வில்லாத திரைக்கதைக்கு உதவுகிறார்கள் . பி,எஸ்.வினோத் தின் ஒளிப்பதிவு க்ரே பக்கங்களை ஜோராக காட்டுகிறது . சாம் பி.ஜி.எம் மில் பின்னியெடுக்கிறார் ...
போலீஸ் மாதவன் , அவருடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் சைமன் , கால் ஊனமுற்றவராக வரும் மேலதிகாரி இவர்களெல்லாம் குருதிப்புனல் படத்தை நம் கண்முன் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை . வழக்கமான காப் - டான் ஸ்டோரியை வெறும் மேக்கிங்கால் மட்டும் வித்தியாசப்படுத்தாமல் கதை சொல்லும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்கள் இயக்குனர்கள் . படம் முழுவதும் அடுத்து நடப்பதற்கான சின்ன சின்ன க்ளூவை தெறிக்க விட்டிருப்பது இண்டெலெக்சுவல் ஸ்க்ரீன்ப்ளே . கேட் அண்ட் மவுஸ் ஸ்டோரியில் நம்மையும் சேர்த்தே ஓட வைத்திருப்பது இன்டெரெஸ்ட்டிங் ...
சர்ரென்று போகும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல்லடிப்பது போல படுகிறது . குருதிபுனலின் தாக்கம் , விக்ரம் , வேதா இருவருமே சுற்றியிருப்பவர்கள் மேல் கொஞ்சம் கூட கவனம் வைக்காமல் இருப்பது , புள்ளி என்கவுண்டரில் வரும் குட்டி குழப்பம் இவையெல்லாம் சில சறுக்கல்கள் . " Well planned is Half done " என்பார்கள் அந்த விதத்தில் சரியான மாதவன் - விஜய் சேதுபதி காம்பினேஷன் அண்ட் டெச்னீசியன்ஸ் தேர்வு செய்த விதத்திலும் , நம்மை அதிகம் என்கேஜ் செய்த விதத்திலும் விக்ரம் வேதா வை வெல்டன் என்றே சொல்லலாம் ...
ரேட்டிங்க் : 3.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 44
No comments:
Post a Comment