மூன்று வெற்றி படங்கள் கொடுத்த ஹீரோ , முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் , யுவனின் இசை , "இறகை போலே" பாடல் , தொடர்ந்து விளம்பரம் இவை எல்லாம் படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது ...எனினும் படத்தின் முடிவில் சின்ன ஏமாற்றம் .....
ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் செய்யும் கொலையில் இருந்து தப்பிக்க அதற்கு ஒரே சாட்சியான ஹீரோவின் அப்பாவை கொன்று விடுகிறார்கள் ...ஹீரோ அவர்களை பழி தீர்க்கிறார் ...சாதாரணமான கதை ஆனால் சற்றே மாறுபட்ட திரைக்கதை....
வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ஹீரோ , கால் டாக்ஸி டிரைவராக இருந்தாலும் தினமும் கை நிறைய காசு கொடுக்கும் அப்பா , ஹீரோவுடன் நான்கு நண்பர்கள் , ஹீரோ ஹீரோயினை கல்யாண மண்டபத்தில் சந்தித்து முதல் பார்வையிலேயே காதலிப்பது , மண்டபத்தில் ஒரு பாடல் என ஆரம்ப காட்சிகள் வழக்கமானதாகவே இருக்கின்றன....
கார்த்தி காதல் தோல்வி என்று சொல்லி காஜலை கவிழ்க்கிறார் ....மனதில் பட்டதை உடனே சொல்லும் கார்த்தியின் குணம் காஜலிற்கு பிடிக்கிறது ...அவர் தோழியுடன் கார்த்தியை சந்திக்கும் இடம் சிலிர்ப்பு ....சொல்லிவைத்தார் போல இருவரும் காதலிக்கிறார்கள் ...இடைவேளைக்கு பிறகு காஜல் காணாமல் போகிறார் ...இயக்குனர் அதிகம் மெனக்கெடவில்லை ....
நடிப்பில் கார்த்தி பருத்தி வீரன் ஹாங் ஓவரில் இருந்து மீண்டு இருக்கிறார் ....ஆனாலும் வன்முறை அவரை விடுவதாக இல்லை ... அப்பா சாகும் இடத்திலும் , கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் நல்ல நடிப்பு .... காதல் காட்சிகளிலும் , வேலைக்காக கஸ்டமர்கலை சந்திக்கும் போதும் நடிப்பு மிளிர்கிறது ....தன்னை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடியையே தன் நண்பனாக கார்த்தி மாற்றுவது சாமர்த்தியம் .....
இயக்குனரின் முதல் படத்தில் வந்த நிறைய பேர் இதில் இருக்கிறார்கள் ...ஆனால் அதில் ஏற்படுத்திய பாதிப்பு இதில் இல்லை....கஞ்சா போதையில் கொலை செய்யும் இளைஞர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் ...அவர்களின் பின்புலம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை ..முதல் காட்சியில் அவர்கள் தூக்கி செல்லும் பெண்ணிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை .....
ஜெயப்ரகாஷ் எளிமையாக நடித்து இருந்தாலும் அவர் தோற்றம் அதற்கு முரண் படுகிறது ....
படத்தின் பலம் கார்த்தியின் நடிப்பு , முன்னணியில் இருக்கும் யுவனின் பின்னணி இசை , மதியின் கேமரா , சண்டை காட்சிகள் , ஹீரோவை பெரிய அடியாட்களுடன் சண்டை போட விடாமல் விடலை பயல்களுடன் மோத விட்டிருப்பது ...படத்தின் வேகமான பின்பாதி ..புதுமுகங்களின் நடிப்பு .....மற்றும் முதல் படத்தில் கிராம சூழலில் இருந்து நகர சூழலிற்கு இயக்குனர் மாறி இருப்பது ..
பலவீனம் மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் ...வழக்கமான கதை,..இடைவேளைக்கு பிறகு காணமல் போகும் ஹீரோயின் ...என்ன தான் கஞ்சா போதை என்றாலும் எதை பற்றியும் கவலை படாமல் கொலை செய்யும் கல்லூரி மாணவர்கள் ..அப்பா அடி பட்டவுடன் பொறுப்புடன் நடக்கும் ஹீரோ அவர் இறந்த வுடன் உடனே பழி வாங்க கிளம்புவது ....சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் வன்முறை ..
இயக்குனர் " வெண்ணிலா கபடி குழு" வில் ஏற்படுத்திய பாதிப்பை இதில் ஏற்படுத்த வில்லை .....அதே நேரம் குறைகள் இருந்தாலும் இப்படத்தை முழுதாக ஒதுக்கவும் முடியவில்லை ......மிக சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கவும் முடியவில்லை ......
"நான் மகான் அல்ல" - மீடியம் cinema
yiur review is very good,particularly இயக்குனர் " வெண்ணிலா கபடி குழு" வில் ஏற்படுத்திய பாதிப்பை இதில் ஏற்படுத்த வில்லை .....அதே நேரம் குறைகள் இருந்தாலும் இப்படத்தை முழுதாக ஒதுக்கவும் முடியவில்லை ......மிக சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கவும் முடியவில்லை super
ReplyDelete