பாஸ் ஐந்து வருடமாக ஆங்கில பரிட்சையில் அரியர் வைத்து கொண்டிருக்கும் ஹீரோ , அவருடைய ஒரே நண்பர் நல்லதம்பியாக சந்தானம்..இவர்கள் இருவரின் காமெடி கூட்டணியின் மத்தியில் கொஞ்சம் கதை....
வெட்டியாக ஊரை சுற்றி கொண்டிருக்கும் ஆர்யா நயனை சந்தித்தவுடன் காதலிக்கிறார் ...பின்னர் நயனின் அக்காவே அவருக்கு அன்னியானவுடன் நயனை பெண் கேட்கிறார்.....வேலை வெட்டி இல்லாத ஒருவருக்கு எப்படி பெண் கொடுப்பது என்று கேட்டவுடன் ஆறு மாதத்தில் தன் தங்கையை பெரிய இடத்தில மணம் முடித்து வைப்பேன் என்று சவால் விட்டு கிளம்புகிறார் ..இடைவேளைக்கு பிறகு நண்பன் சந்தானத்தின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து வெற்றி பெறுகிறார்.......நயனை கை பிடிக்கிறார் ...
டிக்கெட் சைஸ் கதை ...ஆனால் காமெடி எக்ஸ்ப்ரஸில் பயணம்....
பரிட்சைக்காக பிட் ரெடி பண்ணும் காட்சியிலேயே ஆர்யாவின் அமர்க்களம் ஆரம்பமாகி விடுகிறது....நயனிடம் முதல் சந்திப்பிலேயே தன் பிட்டின் பெருமை பேசும் ஆர்யா பின்னர் அவரே எக்ஸாம் சூபெர்வைசெர் ஆக வரும் இடத்தில கல கல.......சிறிது நேரமே வந்தாலும் சுவாமிநாதன் சிரிக்க வைக்கிறார்......
படம் முழுவதையும் தன் கவுன்டரில் தூக்கி நிறுத்துகிறார் சந்தானம்....ஆர்யாவை கலாய்க்கும் போதும் , அவருக்கு காதல் அறிவுரை கொடுக்கும் போதும் , அவருக்காக கடன் வாங்கி கொடுத்து விட்டு கண்ணீர் விடும் இடத்திலும், கடைசியில் நயனின் அப்பா "சித்ரா லக்ஷ்மணனை "" ஓட்டும் போதும் என அவர் செய்யும் எல்லா சேட்டைகளுக்கும் அரங்கமே அதிர்கிறது......
நயன் அழகாக இருக்கிறார்....ஆனால் மிகவும் மெலிந்திருப்பது கவலை அளிக்கிறது....ஆர்யாவின் அண்ணன், அண்ணி , தங்கை , அம்மா என அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்......
கடன் கொடுக்கும் ராஜேந்திரன் , அவர் பையன், பாடம் எடுக்கும் பார்வை இழந்த பெண் என்று எல்லோரும் படத்தின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்..
ஒன்றிரண்டு பாடல்கள் தவிர மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ்..........
காமெடி , டுடோரியலை முன்னுக்கு கொண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சி , இயல்பான காட்சிகள் என நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும் சிரிக்க மட்டும் தான் முடிந்ததே ஒழிய படம் முடிந்து வெளியே வரும் போது எதுவும் மனதில் நிற்கவில்லை ...
பாஸ் வணிக ரீதியாக பாஸ் செய்து விட்டார் ..........
شركة تنظيف بالقصيم
ReplyDeleteشركة تنظيف بالقطيف
شركة مكافحة حشرات بالقطيف
شركة مكافحة حشرات بالقصيم
شركه نقل عفش بالقطيف
شركة نقل عفش بالقصيم
شركة تسليك مجاري بالقطيف
شركة تسليك مجاري بالقصيم