Vanga blogalam in Facebook

17 June 2012

வழிப்போக்கன் ...



மயிலிறகால் வருடிவிட்டு
முள்ளால் தைப்பது
போலிருந்தது
ஒரே நாளில்
நடந்து முடிந்த
நம் சந்திப்பு ...

உயிருக்கும் வரை
உறையப் போகும்
நினைவுகளுக்கு முன்னாள்
உன் பெயரொன்றும்
பெரிதில்லை ...

பார்வையிலேயே
புரிந்து போன பிறகு
பெயரெதற்கு ?

வெறுமையுடன் வந்து
அடி மனதில்
பத்திரப்படுத்திய
உன் புன்னகையுடன்
திரும்புகிறேன் ...

வாழ்க்கையை பொறுத்தவரை
நாம் அனைவருமே
வழிப்போக்கர்கள் தான் ...

வழிப்போக்கனின் வாழ்க்கையையும்
அர்த்தமாக்கிக் கொண்டிருக்கும்
இது போன்ற
கரையாத
கடந்த கால நிமிடங்கள் ...

அந்த நிமிடங்களின்
அனுபவ சுவைக்காக
நீடித்துக் கொண்டிருக்கும்
வழிப்போக்கனின் வாழ்க்கை ...


21 comments:

  1. வழிப்போக்கனி வாழ்க்கையிலும் எங்காவது ஒருமுனையில் ஒரு முடிச்சு விழுந்து விடுகிறதுண்டு.

    ReplyDelete
  2. விமலன் said...
    வழிப்போக்கனி வாழ்க்கையிலும் எங்காவது ஒருமுனையில் ஒரு முடிச்சு விழுந்து விடுகிறதுண்டு.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  3. வழிப்போக்கனின் கால்களுக்கும்
    மனதிற்கும் எப்போதுமே ஒரு முரண் இருக்கும்
    உடல் முன்சென்றாலும் அவன் எப்போதும்
    பின் தங்கித்தான் வந்து கொண்டிருப்பான்
    (அந்த அந்த நிமிடங்கள் என இருக்கலாமோ
    எனத் தோன்றியது )
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகான உள் உணர்வுகளை அற்புதமாக விளக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. //மயிலிறகால் வருடிவிட்டு
    முள்ளால் தைப்பது
    போலிருந்தது
    ஒரே நாளில்
    நடந்து முடிந்த
    நம் சந்திப்பு ...//

    ஜோர் ஜோர் ! ;)

    ReplyDelete
  6. Ramani said...
    வழிப்போக்கனின் கால்களுக்கும்
    மனதிற்கும் எப்போதுமே ஒரு முரண் இருக்கும்
    உடல் முன்சென்றாலும் அவன் எப்போதும்
    பின் தங்கித்தான் வந்து கொண்டிருப்பான்
    (அந்த அந்த நிமிடங்கள் என இருக்கலாமோ
    எனத் தோன்றியது )
    மனம் கவர்ந்த அருமையான பதிவு

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகான உள் உணர்வுகளை அற்புதமாக விளக்கும் கவிதை. பாராட்டுக்கள்.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மயிலிறகால் வருடிவிட்டு
    முள்ளால் தைப்பது
    போலிருந்தது
    ஒரே நாளில்
    நடந்து முடிந்த
    நம் சந்திப்பு ...//

    ஜோர் ஜோர் ! ;)


    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  9. Seeni said...
    azhakaana unarvukal!

    Thanks ...

    ReplyDelete
  10. ////பார்வையிலேயே
    புரிந்து போன பிறகு
    பெயரெதற்கு ?////

    ரசிக்க வைத்த வரிகள்.!

    ReplyDelete
  11. அழகான வரிகள் சார் ! நன்றி !

    ReplyDelete
  12. வழிப்போக்கன் மனதைக் கொள்ளை கொண்டான்.

    ReplyDelete
  13. வலைச்சரத்தில் மயிலிறகால் வருடப்பட்டு...இங்கே தொடர்கிறதோ...
    ரசித்தேன்...

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் said...
    ////பார்வையிலேயே
    புரிந்து போன பிறகு
    பெயரெதற்கு ?////
    ரசிக்க வைத்த வரிகள்.!

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  15. திண்டுக்கல் தனபாலன் said...
    அழகான வரிகள் சார் ! நன்றி !

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  16. Tamil Pathivu said...
    தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  17. விச்சு said...
    வழிப்போக்கன் மனதைக் கொள்ளை கொண்டான்.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  18. ரெவெரி said...
    வலைச்சரத்தில் மயிலிறகால் வருடப்பட்டு...இங்கே தொடர்கிறதோ...
    ரசித்தேன்...


    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  19. வழிப் போக்கனின் கவிதைகளை, என் விழி நோக்கும் வாய்ப்பு இன்றுதான் அமைந்தது! இனி தொடர்வேன் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. புலவர் சா இராமாநுசம் said...
    வழிப் போக்கனின் கவிதைகளை, என் விழி நோக்கும் வாய்ப்பு இன்றுதான் அமைந்தது! இனி தொடர்வேன் அருமை!

    சா இராமாநுசம்


    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete