என் மாமா பையன் பல வருடங்களுக்கு முன்னாள் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . மில் மூடப்படவே ஒரு நாள் சொந்த ஊருக்கே வந்து விட்டான் . அந்த காலத்தில் நமக்கு தெரிந்த யாரவது ஒருவராவது மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் , மில் மூடப்பட்டது என்றெல்லாம் செய்தித்தாள்களில் நிறைய படித்திருப்போம் . இப்படி செய்தியாக எங்கோ கேட்கும் விஷயத்தை முழு நீள படமாக்கி நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் தனபாலன் பத்மநாபன் .
நாவல் போன்ற கதை , ஆனால் சினிமாவிற்கு தேவையான க்ரிப்பான திரைக்கதை இல்லையென்றே சொல்லலாம் . 1957 இல் நிர்வாகத் தகராறால் தன் பார்ட்னரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெரியவரிடமிருந்து தொடங்கும் கதை , மில்லில் வேலை பார்க்கும் கதிர்
( ஹேமச்சந்திரன் ) , பூங்கோதை ( நந்தனா ) இருவரின் காதல் , நந்தனாவின் தாய் ரேணுகாவின் ஜாதி வெறி , போனஸ் தொடர்பாக முதலாளிக்கும் , தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் பிரச்சனை , மில் மூடப்படுவதால் இரண்டு தரப்பிற்கும் ஏற்படும் இழப்பு இவைகளையெல்லாம் படம் நெடுக 2007 வரை பதிவு செய்கிறது .
ஹேமச்சந்திரன் மில் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் . நந்தனாவின் கண்கள் நன்றாகவே பேசுகின்றன . படத்தின் தலைப்பிற்கேற்ப பஞ்சாலையை பிராதனப்படுத்தி இவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் உலவ விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மனதில் பதியவில்லை . படம் நெடுக ரேணுகாவை பக்கத்து சீட்காரர் திட்டிக் கொண்டேயிருந்தார் , அவர் இறந்தவுடன் சந்தோசப்பட்டார் . அலட்டிக் கொள்ளாமல் தன் நெகடிவ் தனத்தை அழுத்தமாக பதிவு செய்ததே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி .
மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா , கேன்டீன் வைத்திருப்பவராக எம்.எஸ். பாஸ்கர் , கதிரின் அப்பாவாக பாலா சிங் என நிறைய பேர் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தாலும் ஜொள் விட்டுக்கொண்டே பெண்களுக்கு சாக்லேட் கொடுத்து கவர் செய்யும் மில் சூப்பர்வைசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகராஜன் நம்மை கவர்கிறார் . இந்த படத்தின் மூலம் காஸ்டிங் டைரக்டாராக ( தமிழ் சினிமாவுக்கு இது புதுசு ) புது அவதாரம் எடுத்திருக்கும் சண்முகராஜனுக்கு வாழ்த்துக்கள் . படம் நெடுக உலா வரும் நிறைய புது முகங்களில் சிலரை தவிர்த்து மற்றவர்களை தேர்வு செய்வதிலும் , பயிற்சி கொடுப்பதிலும் இவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது .
ரகுநந்தன் இசையில் ஆலைக்காரி உட்பட பாடல்கள் பஞ்சு போல் மென்மையாக இருக்கின்றன . காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் , சுரேஷ் பாகவின் ஒளிப்பதிவு இரண்டுமே தரமாக இருக்கின்றன . மனதை தொடும் டைட்டில் , படத்தின் ஸ்டில்கள் , விளம்பர யுக்தி , கதை , மிக எளிதாக அதே சமயம் அழுத்தமாக முதலாளி - தொழிலாளி பிரச்சனைகளை பதிவு செய்த விதம் , முதல் படத்திலேயே இயக்குனரின் மாறுபட்ட சிந்தனை இவைகளையெல்லாம் நிச்சயம் பாராட்டலாம் .
படம் இரண்டு மணி நேரமே ஓடினாலும் இழுவையாக இருக்கும் திரைக்கதை , அவ்வப்போது வந்து படத்தை நாடகத்தனமாக்கும் அழுகைக்காட்சிகள் , தொடர்ந்து வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் ( ரேணுகா மகளை கொல்வதற்கு முன் காட்டப்படும் மின் விளக்கு அவர் தற்கொலை செய்து கொள்ளும் சீனிற்கு முன்னரும் காட்டப்படுவதால் நடக்கப் போவது முன்னமே தெரிந்து சுவாரசியம் குறைகிறது ) இவைகளெல்லாம் படத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய குறைகள் .
எந்தெந்த தரப்பினர் எந்த மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்றெல்லாம் ப்ராஜெக்ட் செய்த படக்குழுவினர் இந்த படத்தை எந்த மாதிரியான தரப்பினருக்கு எடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருந்து திரைக்கதையையும் நேர்த்தியாக நெய்திருந்தால் கிருஷ்ணவேணி நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பாள் .
ஸ்கோர் கார்ட் : 41
இந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்... கடைசியில் பதிவர்கள் கொடுத்த ஓவர் பில்டப்பால் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்...
ReplyDeleteபடம்...பஞ்சா பறந்து போச்சுன்னு நினைக்கிறேன்
ReplyDeleteஸ்கோர் கார்ட் படத்தை பார்க்கத் தூண்டுகிறது
ReplyDeleteஒவ்வொருகலைஞரையும் குறிப்பிட்டு
விமர்சனம் செய்திருந்தது அருமை
தொடர வாழ்த்துக்கள்
Philosophy Prabhakaran said...
ReplyDeleteஇந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்... கடைசியில் பதிவர்கள் கொடுத்த ஓவர் பில்டப்பால் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்...
இப்பொழுதெல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுப்பதும் விளம்பர உக்தி போல ! உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...
கோவை நேரம் said...
ReplyDeleteபடம்...பஞ்சா பறந்து போச்சுன்னு நினைக்கிறேன்
உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...
Ramani said...
ReplyDeleteஸ்கோர் கார்ட் படத்தை பார்க்கத் தூண்டுகிறது
ஒவ்வொருகலைஞரையும் குறிப்பிட்டு
விமர்சனம் செய்திருந்தது அருமை
தொடர வாழ்த்துக்கள்
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் உற்சாகங்களுக்கு நன்றி சார் ...
SPECIAL NOTICE...
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/06/blog-post_15.html
u r invited :)
மயிலன் said...
ReplyDeleteSPECIAL NOTICE...
http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_15.html
u r invited :
Thanks Mayilan ... I will come ...