உலககோப்பை ட்வென்டி 20 கிரிக்கெட் இன்று இலங்கையில் தொடங்குகிறது. மொத்தம் உள்ள நான்கு பிரிவுகளில் இந்தியா ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் களம் இறங்குகிறது ... முதல் டி 20 உலககோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் சோபிக்கவில்லை ...
இது வரை நடந்துள்ள மூன்று டி20 உலககோப்பைகளையும் இந்தியா , பாகிஸ்தான் , இங்கிலாந்து உட்பட மூன்று வெவ்வேறு நாடுகள் வென்றிருப்பதும் , இந்த முறை யார் வெல்வார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியாததுமே ட்வென்டி 20 யின் சிறப்பம்சங்கள்... இலங்கைக்கு எதிராக இந்தியா சமீபத்தில் ஒரு நாள் தொடர் மற்றும் ஒரு ட்வென்டி 20 ஐ அந்த நாட்டிலேயே வென்றிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...
இந்திய அணியில் கோலி , பதான் , ரெய்னா ஆகியோர் பார்மில் இருப்பதும் , யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் நம்பிக்கை கொடுக்கின்றன , அதே சமயம் சென்னையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டத்தை தோனியின் மெத்தனமான போக்கால் தோற்றது டீமின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது. பயறிசி ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வென்ற இந்தியா 185 ரன்கள் அடித்தும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்றுப் போனதும் இந்திய அணியை நம்ப முடியாதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ...
மற்ற அணிகளை பொறுத்தவரை பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மேற்சொன்ன அணிகள் எல்லாம் டி 20 தர வரிசை பட்டியலில் பின் தங்கியிருந்தாலும் அப்ரிடி , ஹஸ்சி , கிரீஸ் கெய்ல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அந்த அணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது ...
நடப்பு சேம்பியன் இங்கிலாந்து , போட்டியை நடத்தும் இலங்கை , இந்தியாவை வென்று நம்பிக்கையில் இருக்கும் நியூசிலாந்து போன்ற அணிகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது ... எந்த அணி ஜெயித்தாலும் நடப்பது உலககோப்பை டி 20 என்பதால் அடுத்த இருபது நாட்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று மட்டும் அடித்து சொல்லலாம் ...
Good! wait and watch who will win..
ReplyDeleteIndia,Pakistan,Srilanka
போட்டியையையும் அது குறித்த
ReplyDeleteதங்கள் தொடர் பதிவுகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்
இந்த முறை கப் நமக்குத்தான் பாஸ்!
ReplyDeleteஇனி சர வெடி தான்...
ReplyDeleteRiyas said...
ReplyDeleteGood! wait and watch who will win..
India,Pakistan,Srilanka
Sure , Eagerly awaiting ...
Ramani said...
ReplyDeleteபோட்டியையையும் அது குறித்த
தங்கள் தொடர் பதிவுகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்
எல்லா போட்டிக்களை பற்றியும் எழுத முடியுமா என்று தெரியவில்லை , முக்கியமான போட்டிகளை வேண்டுமானால் எழுத முயற்சிக்கிறேன் . உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ...
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஇந்த முறை கப் நமக்குத்தான் பாஸ்!
உங்களின் வாய் முஹூர்த்தம் பலித்தால் நன்றாக தான் இருக்கும் , ஆனால் நடைமுறையில் கஷ்டம் ...உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ...
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஇனி சர வெடி தான்...
உங்களின் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ...