சசிகுமார் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் பிரபாகரன் இயக்குனராய் அறிமுகமாகியிருக்கும் படம் சுந்தரபாண்டியன் ... சசிகுமார் - சமுத்திரக்கனி பாணியில் வரும் வழக்கமான நண்பர்களை சுற்றி பிண்ணப்பட்ட கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ... " சுப்ரமணியபுரம் " மாதிரி ஒரு படம் கொடுத்ததே ஜென்மத்திற்கும் போதுமென்று சசிகுமார் நினைத்து விட்டாரோ என்னமோ , இதில் ஒரு முழுமையான கமர்சியல் ஹீரோவாக தன்னை முன்னிறுத்த முயற்சித்திருக்கிறார் ...
ஊரே மெச்சும் பெரிய குடும்பத்தின் ஒரே வாரிசு சந்தரபாண்டியன் ( சசிகுமார் ) , கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நண்பர்களுடன் வெட்டியாக ஊரை சுற்றுவதை தவிர இவருக்கு உருப்படியாக ஒரு வேலையும் இல்லை ... ( இன்னும் எத்தன படத்துக்கு தான் சினிமால ஹீரோவ இப்படியே காட்டப் போறாங்களோ ) ... வேலை வெட்டி ஏதும் இல்லாததால் தன் நண்பன் அறிவு
( இனிகோ பிரபாகரன் ) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய் காதலித்து வரும் அர்ச்சனாவுடன் ( லக்ஷ்மி மேனன் ) அவரை சேர்த்து வைக்கும் மாபெரும் பணியை கையிலெடுக்கிறார் சுந்தபாண்டியன் ... இதன் பிறகு என்ன நடக்குமென்பதை நாம் மின்சாரகனவில் ஆரம்பித்து சமீபத்தில் வந்த ராட்டினம் வரை பல படங்களில் பார்த்துவிட்டதால் அதை பற்றி வேறெதுவும் சொல்வதற்கில்லை... இரண்டாம் பாதியை சுப்ரமணியபுரம் , நாடோடிகள் பாணியில் ட்விஸ்ட் வைத்து முடித்திருக்கிறார்கள் ...
சசிகுமார் நடிப்பில் மெருகேறியிருக்கிறார் என்று சொல்லலாம் , ஆனால் அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்காமல் ரஜினி ரசிகன் என்ற போர்வையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை எதற்கு பின்பற்றினார் என்று தெரியவில்லை ... மாஸ் ஹீரோவாக ஆக வேண்டுமென்ற ஆசை அவர் முகத்திலும் , அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளிலும் நன்றாக தெரிகிறது.
சசிக்கென்று தனியாக மார்க்கெட் இருக்கலாம் , அவர் வசனத்திற்கு ரசிகர்கள் கை தட்டலாம் , அவர் நடிப்பில் மினிமம் கியாரண்டியை படங்கள் தொடலாம் , ஆனால் சசிகுமார் சுப்ரமணியபுரம் போல ஒரு படத்தை கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கான முயற்சியை கூட எடுக்காமலிருந்தால் நாளைய வரலாறு நிச்சயம் அவரை பழிக்கும் ...
அறிமுக நாயகி லக்ஷ்மி தோற்றத்திலும் , மேக்கப் இல்லாத முகத்திலும் மதுரைப் பெண் போல இருந்தாலும் உயரம் மட்டும் இடிக்கிறது ... இவர் கேரக்டரை திமிர் பிடித்தவள் என்று காட்டுவதற்காக உம்மனாமூஞ்சியாகவே விட்டுவிட்டார் இயக்குனர் ... அமலா பாலின் தூரத்து சொந்தம் போல இருக்கிறார் லக்ஷ்மி மேனன் ... " கும்கி " யிலும் இவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல் ...
( இவுகளுக்கு மட்டும் நுழையும் போதே எப்படி தான் இம்புட்டு சான்ஸ் கிடைக்குதோ ) ...
சசிக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் இனிகோ அவரை விட இளமையாக இருக்கிறார் ... இவர் இப்படி தான் நடந்து கொள்வார் என்று முன்னமே யூகிக்க முடிந்து விடுவதால் ட்விஸ்டில் பெரிய சுவாரசியம் இல்லை ... பிஸ்ஸா படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இதில் முக்கியமான நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் , ஆனால் பட முடிவில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
சசியின் நண்பனாக வரும் சூரியும் , லக்ஷ்மி மேனனை டாவடிப்பதாய் ரவுசு கட்டும் அப்புக்குட்டியும் படத்தின் பெரிய பக்கபலங்கள் ... கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத இந்த படத்தை முதல் பாதி முழுவதும் போரடிக்காமல் பார்க்க வைப்பது இந்த இருவருமே , அதிலும் சூரி படம் நெடுக கட்டையை கொடுத்து பட்டையை கிளப்புகிறார் ... வடிவேலுவின் மேனரிசத்தை இவர் கொஞ்சம் தவிர்க்கலாம் ...
இடைவேளை வரை ராட்டினம் படத்தின் கருவை வேறு மாதிரி களத்தில் கொடுத்திருக்கிறார்கள் , இடைவேளையில் போலீஸ் வந்து சசியை கைது செய்யும் சீன் கூட அதே போல இருக்கிறது ... இடைவேளைக்கு பிறகு படம் நண்பர்களின் துரோகம் என்ற களத்திற்குள் நுழைகிறது ... சசிகுமாரின் முந்தைய படங்கள் போல சாதி குறியீடுகள் மறைமுகமாக இல்லாமல் இதில் நேரடியாகவே வருகிறது ... வெண்ணிலா கபடி குழுவில் " சாதி , சாமி இந்த ரெண்டு பாரத்தையும் இறக்கி வச்சாத்தான் வேகமா போக முடியும் " என்று பாஸ்கர் சக்தி வசனம் எழுதியிருப்பார் , ஆனால் அது சினிமாவில் இருக்கும் நிறைய பேருக்கே இன்னும் போய் சேராதது வருத்தமே ...
புதிதாய் சொல்லப்படாத கதை , சுப்ரமணியபுரத்தை நினைவு படுத்தும் க்ளைமேக்ஸ் , சசி " குத்தினது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது அதான் நட்பு " என்றெல்லாம் வசனம் பேச , கூட இருப்பவர்களோ நயவஞ்சகர்களாக மாறுவது என்னமோ ஒரு தலை காதல் போல இது ஒரு தலை நட்போ என்கிற அளவிற்கு ஏற்படுத்தும் சலிப்பு , சசிக்கும் , சாதிக்கும் கொடுக்கப்படும் பில்டப்ஸ் , பாடல்கள் இவையெல்லாம் சுந்தரபாண்டியனை சறுக்க நினைத்தாலும் ,
அருமையான பாத்திர தேர்வு , சின்ன சின்ன கேரக்டர்கள் மூலம் கூட சுவாரசியமாக படத்தை கொண்டு சென்றது , சசி - சூரி அலப்பறை , இரண்டரை மணி நேரம் மண் மனம் மாறாமல் ஏதோ நாம் உசிலம்பட்டிக்கு வந்து விட்டோமோ என்று நினைக்குமளவிற்கு நேட்டிவிட்டியோடு பார்ப்பவர்களை படத்தோடு ஒன்ற செய்த விதம் , போரடிக்காத திரைக்கதை போன்றவை கமர்சியலாக சுந்தரபாண்டியனை சறுக்க விடாமல் நிறுத்துகின்றன ...
ஸ்கோர் கார்டு : 42

Good unbiased review. Going to see the movie tomorrow.
ReplyDelete( இன்னும் எத்தன படத்துக்கு தான் சினிமால ஹீரோவ இப்படியே காட்டப் போறாங்களோ ) ...
ReplyDeleteஎன்ன செய்வது...? அப்படி இருந்து பெரிய ஆளாக ஆனால் தான் மக்கள் பார்ப்பதாக அவர்களாக ஒரு வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.
அருமையான விமர்சனம்
ரைட்டு.
ReplyDeleteஅவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்காமல் ரஜினி ரசிகன் என்ற போர்வையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை எதற்கு பின்பற்றினார் என்று தெரியவில்லை ..//
ReplyDeleteஉண்மை தான் ஏனோ
குறை நிறைகளை
ReplyDeleteஎவ்வித பாகுபாடில்லாமல் மிக மிக அழகாக
விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
சசி.. அவ்வப்போது படம் இயக்குவதிலும் கவனம் வைத்தால் நலம்..அவரது ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது இதைத்தான் என்று கருதுகிறேன்!!!
ReplyDeleteநல்ல விமர்சனம்!
சசிகுமாரின் எந்தப் படமும் இன்னும் பிடிக்காமல் போனதில்லை. விமர்சனத்தைப் பார்த்தால் இதுவும் தேறிவிடும் என்றே தெரிகிறது. பார்க்கலாம். நல்ல விமர்சனம். :)
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteரைட்டு.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
Arun said...
ReplyDeleteGood unbiased review. Going to see the movie tomorrow.
Thanks ...
Tamilraja k said...
ReplyDelete( இன்னும் எத்தன படத்துக்கு தான் சினிமால ஹீரோவ இப்படியே காட்டப் போறாங்களோ ) ...
என்ன செய்வது...? அப்படி இருந்து பெரிய ஆளாக ஆனால் தான் மக்கள் பார்ப்பதாக அவர்களாக ஒரு வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.
அருமையான விமர்சனம்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
Prem Kumar.s said...
ReplyDeleteஅவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்காமல் ரஜினி ரசிகன் என்ற போர்வையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை எதற்கு பின்பற்றினார் என்று தெரியவில்லை ..//
உண்மை தான் ஏனோ
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
Ramani said...
ReplyDeleteகுறை நிறைகளை
எவ்வித பாகுபாடில்லாமல் மிக மிக அழகாக
விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteசசி.. அவ்வப்போது படம் இயக்குவதிலும் கவனம் வைத்தால் நலம்..அவரது ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது இதைத்தான் என்று கருதுகிறேன்!!!
நல்ல விமர்சனம்!
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteசசிகுமாரின் எந்தப் படமும் இன்னும் பிடிக்காமல் போனதில்லை. விமர்சனத்தைப் பார்த்தால் இதுவும் தேறிவிடும் என்றே தெரிகிறது. பார்க்கலாம். நல்ல விமர்சனம். :)
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!