ஒரு வயதில் உனக்கு
காது குத்திய போது
உன்னை விட
அதிகமாய் நான்
அலறிய ஞாபகம் ...
ஐந்து வயது ஆனபோதும்
தனியாய் நடக்காமல்
என் கைகள் கோர்த்தே
நீ நடந்த ஞாபகம் ...
பத்து வயதில் உன்
அழுகையை நிறுத்த
மரத்திலிருந்து குதித்து
என் கால்களை
உடைத்துக்கொண்ட ஞாபகம் ...
பனிரெண்டு வயதில்
தூக்கத்திலே என்
கால்கள் மேல் படர்ந்திருந்த
உன் கால்களை
அகற்றும் போது
நீ ஒரு முறை
உற்றுப்பார்த்து விட்டு
மீண்டும் கண்களை
மூடிக்கொண்ட ஞாபகம் ...
பதினைந்து வயதில்
உன்னை கடைசியாய்
பாவாடை சட்டையில்
பார்த்த ஞாபகம் ...
பதினெட்டு வயதில்
என்னுடன் தனியாக
பேசிக்கொண்டிருந்த உன்னை
உன் அம்மா
போட்ட சத்தத்தால்
பலர்
திரும்பிப் பார்த்த ஞாபகம் ...
இருபத்தியொரு வயதில்
நீ படிப்பை
முடித்த பிறகும்
நான் நண்பர்களுடன்
ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஞாபகம் ...
இருபத்தி மூன்றாம் வயதில்
உனக்கு மாப்பிள்ளை
பார்க்க ஆரம்பித்த
போது
என்னை வேலை
தேடச் சொல்லி
நீ வற்புறுத்திய ஞாபகம் ...
இருபத்தைந்தாம் வயதில்
உன் கழுத்தில் தாலி
ஏறிய பிறகு தான்
அயல்நாடு செல்வதில்
உனக்கும் ஆசை
இருந்தது என்பதை
நான் தெரிந்து கொண்ட ஞாபகம் ...
இருபத்தியேழாம் வயதில்
உனக்கு பிறந்த
முதல் பையனுக்கு
என் பெயரை
வைத்ததாய் ஞாபகம் ...
சிலையாக நிலையாக
ReplyDeleteமனத்தினுள் கொலுகொண்ட
நிகழ்வுகளைச் சொல்லிப்போனது அருமை
நட்புக்கும் காதலுக்கும் இடையில்
ஒருதிரிசங்கு சொர்க்கமாய் அனைவருக்குள்ளும்
இருக்கும் ஞாபகங்களை கிளறிப்போகுது
தங்கள் கவிதை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நீங்காத ஞாபகங்கள்.... காதலின் வலிகள்.....
ReplyDeleteநல்ல உணர்வுள்ள படைப்பு தோழரே!
arumaiyaana valikonda vari!
ReplyDeleteம் ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமறக்க முடியாத நினைவுகளை... வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது...
ReplyDeleteRamani said...
ReplyDeleteசிலையாக நிலையாக
மனத்தினுள் கொலுகொண்ட
நிகழ்வுகளைச் சொல்லிப்போனது அருமை
நட்புக்கும் காதலுக்கும் இடையில்
ஒருதிரிசங்கு சொர்க்கமாய் அனைவருக்குள்ளும்
இருக்கும் ஞாபகங்களை கிளறிப்போகுது
தங்கள் கவிதை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
Ayesha Farook said...
ReplyDeleteநீங்காத ஞாபகங்கள்.... காதலின் வலிகள்.....
நல்ல உணர்வுள்ள படைப்பு தோழரே!
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
Seeni said...
ReplyDeletearumaiyaana valikonda vari!
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமறக்க முடியாத நினைவுகளை... வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது...
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
படிக்க படிக்க மர்மம் கூடிக் கொண்டே போனது, 2,3 பத்திகள் படித்தவுடன்தான் ஊகிக்க முடிந்தது இது ஒரு “ஹைக்கூ” வகை கவிதையாகத் தான் இருக்கும் என்று, பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு ...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com
ramkaran said...
ReplyDeleteபடிக்க படிக்க மர்மம் கூடிக் கொண்டே போனது, 2,3 பத்திகள் படித்தவுடன்தான் ஊகிக்க முடிந்தது இது ஒரு “ஹைக்கூ” வகை கவிதையாகத் தான் இருக்கும் என்று, பாராட்டுக்கள்.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
நல்ல பதிவு ...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!
மறக்கமுடியாத ஆட்டோகிராஃப் ஞாபகங்கள் !
ReplyDeleteஹேமா said...
ReplyDeleteமறக்கமுடியாத ஆட்டோகிராஃப் ஞாபகங்கள் !
உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!