Vanga blogalam in Facebook

5 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...


ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம்  , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்கும் கேட்கக் கூடிய இசையைக் கொடுப்பவர் இசைஞானி ... இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன் இயக்கத்திற்காக மட்டுமின்றி படத்தின்   இசைக்காகவும் பேசப்படுபவர் கெளதம் மேனன் ... இந்த இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்கும் போதே வீசுகிறதே ஒரு சுகந்தம் , இணைந்ததன் விளைவே " நீதானே என் பொன்வசந்தம் " ...

70 களில் " அன்னக்கிளி ஒன்னத்தேடுதே " , " செந்தூரப்பூவே " மூலம் கவனிக்க வைத்தவர் , 80 களில் " இளைய நிலா " , " " பனிவிழும் மலர்வனம் " , " பூவே செம்பூவே " போன்ற பாடல்கள் மூலம் நம்மை கட்டிப்போட்டவர் , 90 களில் புதியவர்களின் வருகைக்குப் பிறகும் " இஞ்சி இடுப்பழகி " , " தென்றல் வந்து " ,
" என்னை தாலாட்ட " மூலம் இசைக்கு ராஜா நான் தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்தவர் , 2000 க்கு பிறகு " ஒளியிலே தெரிவது " ,
" உன்னவிட உலகத்தில் " , " இளங்காத்து வீசுதே " என்று சொக்க வைத்தவர் இப்படி இசைஞானி தன் இசையால் நம் உயிரோடு கலந்து உறவாடியதை சொல்லிக்கொண்டே போகலாம் ... 2010 க்கு பிறகு " அழகர்சாமியின் குதிரை " ,
" தோனி" போன்ற படங்கள் பின்னணி இசைக்காக பேசப்பட்டாலும் , பாடல்களின் இசைக்கான ஒரு வெற்றிடத்தை " நீதானே என் பொன்வசந்தம் " நிரப்பியிருக்கிறது என்று சொல்லலாம் ...

படத்தின் பாடல்களை கேட்டவுடனே எந்த ஒரு முடிவுக்கும் வராமல் பொறுமையாக இரண்டு நாட்கள் கேட்டுப் பார்ப்பவர்களை இந்த இசை நிச்சயம் கட்டிப்போடும் ... இதில் " அஞ்சலை " இல்லை ஆனால் " பெண்கள் என்றால் " இருக்கிறது . " ஹொசானா " இல்லை " சாய்ந்து சாய்ந்து இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார் ... குறை என்று பார்த்தால் எட்டு பாடல்களையும் யுவன் , கார்த்திக் உட்பட சிலரே பாடியிருப்பதை தவிர்த்திருக்கலாம் . அதே போல எல்லா பாடல்களும் மெலடியாகவே இருப்பதால் வெரைட்டி இல்லாத ஒரு தோற்றத்தை கொடுக்கிறது , மற்றபடி படம் வெளிவந்த பிறகும் பாடல்கள் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை ... எனக்குப் பிடித்த வரிசையில் பாடல்களை அடுக்கியுள்ளேன் ...

1 .சாய்ந்து சாய்ந்து...
   யுவன்ஷங்கர் ராஜா / ரம்யா.என்.எஸ்.கே 

   யுவன் , ரம்யா குரலில் இளமை ததும்புகிறது . படத்தில் ஹைலைட்டே இந்த பாடல் தான் .

2. என்னோடு வா வா ...
    கார்த்திக் 

   கார்த்திக்கின் குரலும் , முத்துக்குமாரின் வரிகளும் புகுந்து விளையாடுகின்றன ... " காதலின் இலக்கணமே தன்னால் வரும்  
சின்ன சின்ன தலைக்கனமே " போன்ற வரிகள் காதலின் ஊடலை தத்ரூபமாய் சொல்கின்றன .

3. வானம் மெல்ல ...
    இளையராஜா / பெலா செண்டே  

   என்றுமே உடையாத குரல் இசைஞானியுடையது ... அவருடைய குரலில் பாடல் வசீகரித்தாலும் ஹரிஹரன் அல்லது மது பாலகிருஷ்ணன் இந்த பாடலி பாடியிருக்கலாம் என்பது என் கருத்து ... இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காகவே இந்த பாடலை இசைஞானி பாடினார் என்பது தகவல் .

4. முதல் முறை ...
    சுனிதி சௌஹான் 

   சுனிதி புதியவர் என்று நினைக்கிறேன்  , ஆனால் கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் குரல் ... பாடலின் பி.ஜி யும் , கோரஸும்  அருமை ... வழக்கம் போல இதிலும் ஒரு முறையோடு கோரஸை முடித்துக் கொண்டு 
ஏமாற்றமளிக்கிறார் இசைஞானி . பாடல் தேவதை படத்தின் " ஒருநாள் " பாடலை நினைவுபடுத்துகிறது ... 

5. பெண்கள் என்றால் ...
    யுவன்ஷங்கர் ராஜா 

   காதல் தோல்விப் பாடல் ... யுவனின் உருக்கும்  குரல் , " பெண்ணின் காதலின் அர்த்த்தமினி , புல்லின் மேல் தூங்கும் காலைப்பனி " போன்ற நா.முத்துக்குமாரின் வரிகளும் அருமை .

6. சற்று முன்பு ...
    ரம்யா என்.எஸ்.கே 

   கௌதமின் படங்களில் வரும் பெண் ஏக்கப் பாடல் ... கேட்க கேட்க பிடித்துப் போகும் பாடல் ... வாத்தியங்களின் ஆக்ரமிப்பை குறைத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ...

7. காற்றை கொஞ்சம் ...
    கார்த்திக் 

    வரிகளின் அளவிற்கு பாடல் உடனடியாக  கவரவில்லை ... படம் வந்த பிறகு ஹிட்டாகும் .

8. படிக்கல மாமு ...)
    சுராஜ் ஜகன் / கார்த்திக் 

     காலேஜ் கலாட்டா பாடல் ...  திருஷ்டி கழிக்கும் பாடல் என்று சொல்லலாம். படம் வந்த பிறகே தெரியும் ... 

   ( பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்தவுடனே எங்கிருந்தோ 
" நினைவெல்லாம் நித்யா " படத்திலிருந்து  " நீதானே என் பொன்வசந்தம் " பாடல் ஒலிக்க என்னையறியாமல் அதில் மூழ்கிப்போனேன் ) ஏ 


11 comments:

  1. நீங்களும் இசைஞானி ரசிகரா...? சந்தோசம்...

    நீதானே என் பொன்வசந்தம் - நல்ல அலசல்... சில பாடல்களை படக்காட்சியுடன் பார்த்தால் இன்னும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்... நன்றி...

    ReplyDelete
  2. கவிதாயினி தாமரைக்கும் வாய்ப்புக் கொடுத்திருந்திருக்கலாம்.

    ReplyDelete
  3. ராஜா ராஜா தான்

    ReplyDelete
  4. மிக சிறப்பான பாடல் தேர்வுகளுடன் இசை ஞானி
    இளையராஜ ஐயாவை பெருமைப்படுத்தி உள்ளீர்கள் .
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் இவை .பழைய
    பாடல்களுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உள்ளது .
    இதை யாராலும் வெல்ல முடியாது என்பதுவே
    உண்மை !....
    மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் said...
    நீங்களும் இசைஞானி ரசிகரா...? சந்தோசம்...
    நீதானே என் பொன்வசந்தம் - நல்ல அலசல்... சில பாடல்களை படக்காட்சியுடன் பார்த்தால் இன்னும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்... நன்றி...

    உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  6. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    நல்ல அலசல்.

    உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  7. சேக்காளி said...
    கவிதாயினி தாமரைக்கும் வாய்ப்புக் கொடுத்திருந்திருக்கலாம்.

    உண்மை தான் அதே சமயம் நா.முத்துக்குமார் பாடல்களை அருமையாக எழுதியுள்ளார் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  8. அம்பாளடியாள் said...
    மிக சிறப்பான பாடல் தேர்வுகளுடன் இசை ஞானி
    இளையராஜ ஐயாவை பெருமைப்படுத்தி உள்ளீர்கள் .
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் இவை .பழைய
    பாடல்களுக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பு உள்ளது .
    இதை யாராலும் வெல்ல முடியாது என்பதுவே
    உண்மை !....
    மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  9. Arjun said...
    ராஜா ராஜா தான் ...

    உண்மை தான் ... உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...!

    ReplyDelete
  10. அருமையான அலசல்.ஆனாலும் என்னைப்பொறுத்தவரை இளையராஜா அவர்களிடம் அதிகமாக நான் எதிர்பார்த்துவிட்டேனோ என்கிறமாதிரியாய் உணர்கிறேன் அனந்த் !

    ReplyDelete