12 February 2013

கமலுக்கு ஒரு கடிதம் ...




டியர் கமல் ,
                       உங்களின் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ , டாக்டர் என்றெல்லாம் போட்டு என்னை போன்ற சாதாரண ரசிகனுக்கும் உங்களுக்குமுள்ள இடைவெளியை மேலும் அதிகப்படுத்த விரும்பாத காரணத்தால் கமல் என்றே விளித்துள்ளேன் .  " தடைகளை வென்றே சரித்தம் படைப்பான் " என்று வைரமுத்து விஸ்வரூபம் படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் உங்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே பொருந்தும் என்று நிச்சயம் நீங்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் . நான்கு தேசிய விருதுகள்  , எண்ணிலடங்கா  பிலிம் பேர் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின்  விருதுகள் , 50 வருடங்களாக தமிழ் சினிமாவிற்காக தன்னையே  அர்ப்பணித்தவர் , ஒழுங்காக வருமான வரி செலுத்தும் நடிகர் , ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் போன்ற பெருமைகளை எல்லாம் தாண்டி ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறீர்கள் என்கிற காரணத்துக்காகவே உங்களை அதிகம் மதிக்கிறேன் ...

இன்று விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடையே பெரிய விளம்பரத்தை அள்ளிக் கொடுத்து ஓரளவு மட்டுமே வெற்றியடைந்திருக்க வேண்டிய படத்தை உலகளாவிய வெற்றிக்கு தள்ளியிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . உங்கள் படம் தடை செய்யப்பட போதும்  , நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று நீங்கள் கதறிய போதும் துடித்த கோடானு கோடி பேர்களில் ஒருவனாக இருந்தாலும் இன்று  உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி  பிரச்சனையின் சூடு தணிந்த பிறகு உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளையும்  சுட்டிக் காட்டுவது ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் சமூகத்தில்  ஒருவனாக ஒவ்வொருவரது  கடமை என்றே நினைக்கிறேன்  . அதனால் தான் முன்பே யோசித்திருந்தாலும் தமிழகத்தில் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன பிறகு இந்த கடிதத்தை எழுதுகிறேன் . " அடுத்த  நொடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சர்யம் தான் வாழ்க்கை " என்று நீங்கள் அன்பே சிவம் படத்தில் சொன்னது போல உங்களின் விஸ்வரூப பயணம் ஆரம்பத்திலிருந்தே உங்களை ஆச்சர்யத்திற்க்கும்  , அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வந்திருந்தாலும் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வாக்கினை நீங்கள்  நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் . அந்த நம்பிக்கையில் சில கேள்விகளை  உங்கள் முன் வைக்கிறேன்...

தனியார் தொலைக்காட்சிகளையும் , கேபிள் டிவி  யையும் எதிர்த்து திரையுலகமே திரண்ட போது  அது காலத்தின் கட்டாயம் என்று நீங்கள் குரல் கொடுத்தீர்கள் , அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு . இப்பொழுதும் டி.டி.எச்  சில் படத்தை வெளியுடுவதன் மூலம் தயாரிப்பளர்களுக்கு புது வருவாய்க்கான வாசலை திறந்து வைத்திருக்கிறீர்கள் . இதுவும் விஞ்ஞான வளர்ச்சி தான் என்றாலும் இத்தனை நாட்கள் உங்களை தூக்கிப் பிடித்த விநியோகஸ்தர்களையும் , திரையரங்கு உரிமையாளர்களையும் தடாலடியாக தூக்கியடித்து விட்டு உடனடி முடிவு எடுத்ததும்  , ஒரு தயாரிப்பாளராக  உங்கள பொருளை விற்கும் முழு உரிமை உங்களுக்கு இருந்தாலும் இத்தனை காலம் உங்கள் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களின் எண்ணங்களை கருத்தில் கொள்ளாமல் உங்களின் சுயலாபத்தில் மட்டுமே கவனமாய் இருந்ததும்  நியாயம் தானா ?  ...

உங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் தூரமில்லை என்றாலும் முழு படமும் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்டதற்கு  முழுக்காரணம் உங்களை தவிர யாரிருக்க முடியும் ? சென்சார் மூலம் தணிக்கை செய்யப்பட விஸ்வரூபம்  படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கு போட்டுக் காட்டியதன் மூலம்  நீங்களே வரலாறு காணாத ஒரு வழக்கத்திற்கு முன்னுதாரணம் ஆகி விட்டர்கள் . இதுவே உங்களுக்கு கிடைத்த முதல் அடி . இதே போல தசாவதாரம் படத்தை இந்து அமைப்பினருக்கும் , உன்னைப் போல் ஒருவன் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கும் நீங்கள் போட்டுக் காட்டினீர்களா ? இல்லாத பொழுது இந்த தடவை மட்டும் ஏனிந்த  மாற்றம் ? படத்தை முன்கூட்டியே போட்டு காட்டுவதற்குறிய  கட்டாயத்திற்கு  நீங்கள் உள்ளானீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் படத்தை பார்த்து விட்டு  இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பிரியாணி தருவார்கள் , நான் என்றுமே இஸ்லாமிய அனுதாபி , படத்தை பார்க்கும்  ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படுவார்கள் என்றெல்லாம்  அறிக்கைகள் விட்டு விட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு முஸ்லீமையும் தர்ம சங்கடத்திற்கு  உள்ளாகியுள்ளது தான் உங்களின் நேர்மையா ? . இந்த படத்தின்  ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றெல்லாம் சாக்கு சொல்வது ஒருவனை  பலமாக தாக்கி விட்டு உன் இனத்தவர்களை வைத்து தானே உன்னை அடித்தேன் என்று சொல்வது போல இல்லையா ? ...

நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக  இருக்கலாம் . அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் பகுத்தறிவாளன் என்ற போர்வையில் பல  தடவை இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? அன்பே சிவம் படத்தில் சிவ பக்தனை வில்லனாகாவும் , உங்களை போன்ற  நாத்திகனை நல்லவனாகவும் சித்தரித்தீர்கள் .  மதம் , கடவுள் இரண்டுமே ஒருவனை நல்வழியில் கொண்டு செல்வதற்கான விஷயங்கள் . இதை பின்பற்றுபவர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக இரண்டையும் ஒதுக்குவது மடமை . ஒரு பேச்சுக்கே எடுத்துக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அனைவரும் நல்லவர்களா ?  தசாவதாரம் படத்தில் கற்பனை என்ற பெயரில்  சைவ , வைணவ சண்டையை நேரில் பார்த்தது போல திரித்துக் காட்டினீர்கள். இன்றும் சிதம்பரம் சிவன் கோவிலில் பெருமாளுக்கு சிலை இருக்கிறது . ஆனால் அதை அதை கடலில் தூக்கிப் போட்டதாக கதை விட்டீர்கள் . பெரும்பாலானோரால் வணங்கப்படும் பெருமாளை  கழிவறைக்குள் தூக்கிப் போனீர்கள் . மன் மதன் அம்பு படத்தில் நல்ல நேரம் பிறக்கும் போது சர்ச் பெல்லை ஒலிக்க விட்டும் , தீய வழியில் செல்ல முடிவெடுக்கும் போது  காவி ஜிப்பாவை தொட்டுக் காட்டுவதும் தான் உங்களின் உண்மையான மதசார்பின்மையா ?

விஸ்வரூபம் படத்தில் பிராமணப் பெண்ணை அறிவாளியாகவும் , அதே சமயம் ஒழுக்கமில்லாதவளாகவும் காட்டுகுறீர்கள் . இவையிரண்டும் என்ன அந்த சாதிக்கு மட்டும் சொந்தமானவைகளா ? படத்திற்கு சம்பந்தமில்லாமல் பாடலுக்கு நடுவில் பாப்பாத்தியம்மாளை சிக்கன் சாப்பிட சொல்கிறீர்கள் . இதிலென்ன என் வீட்டிலேயே நாங்கள் எல்லா எழவையும் சாப்பிடுவோமே என்று நீங்கள் சாக்கு சொல்லலாம் . உங்களின் அடுத்த படத்தில் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ? பிறப்பால் பிராமணரான நீங்கள் தமிழகத்தில் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலும் , சில பகுத்தறிவுவாதிகளை குஷிப்படுத்தவும் இது போன்ற காட்சிகளை திணித்து  கமல் - "நிஜ" நடிகன் என்பதை நிரூபிக்கிறீர்கள் . ரெட் ஓன் , லைவ் எடிட்டிங் , ஆரோ சவுண்ட் என்று உங்கள்  படங்களில் தொழில் நுட்ப புதுமைகளை புகுத்தும் நீங்கள் குறிப்பிட்ட சாதியை  மேலே பிடித்தும் , குறப்பிட்ட சாதி , மதங்களை கேலி செய்தும் உண்மையான பகுத்தறிவாளியாக இல்லாமல் பழமைவா( வியா ) தியாக இருக்கிறீர்களே ஏன் ? நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் உங்களின் பகுத்தறிவாள பேச்சை பேட்டிகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் புகுத்துவது தான் வியாபாரத்தின் அழகா ? அல்லது தந்திரமா ? ...

உங்களுக்கு பிரச்சனை என்ற போது  பகுத்து ஆராய்ந்து கொண்டிருக்காமல் ஓடி  வந்தவர்கள் எல்லாம் உங்களை வியாபாரியாகவோ அலல்து பகுத்தறிவாளனாகவோ பார்க்காமல் நல்ல கலைஞனாக மட்டுமே பார்த்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . உங்களுக்காக திரையுலகில் இருந்து முதலில் குரல் கொடுத்த உங்களின் நண்பர் ரஜினிகாந்த் ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை . அவர் படங்களில் இது போல ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை சுட்டிக்காட்ட முடியுமா ? பாபா படத்தில் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று வரை அவர் திரையில் அதை தவிர்த்து வருவதே  அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று . ஆனால் நீங்களோ விஸ்வரூபம் 2 வெளிவரும் போது பிரச்சனை ஏற்பட்டால் நாட்டை விட்ட சென்று விடுவேன் என எமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறீர்கள் . நான் உங்களின் ரசிகனாக இருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியுமா ?...

நான் நிச்சயம் இந்த கேள்விகளின் மூலம்  உங்களின் கடவுள் மறுப்பு கொள்கையோ, முற்போக்கு எண்ணங்களையோ மாற்றிக்கொள்ள சொல்லவில்லை , அது என் நோக்கமுமில்லை . ஆனால் உண்மையான பகுத்தறிவு  என்பது வெறும் கடவுளை மறுப்பதும் , கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கேலி செய்வதும் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையை மட்டுமல்ல எந்த மதத்தினரின் சகிப்புத்தன்மையையும் சுரண்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் . உங்களின் சொந்த கருத்துக்களை புகுத்தாமல் உங்களால் நல்ல சினிமா எடுக்க முடியாதா ? சாதி , மதங்களை தாண்டி எங்கேயும் எப்போதும் , வழக்கு எண் 18/9 போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வரவில்லையா ?  கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென்று முழுமையாக நம்பும் அதே வேளையில் உங்களை போன்ற சிறந்த கலைஞனுக்கு சமூக அக்கறையும் வேண்டுமென்று தான் எல்லோரும் நினைக்கிறோம் ...

எனக்குஅரசியல் தெரியாது என்று சொல்லும் நீங்கள் " வால்மார்ட் அனுமார் வாலில் வாய்த்த தீ போல சிறு வணிகத்தை அழித்துவிடும் " என்று சொன்ன ஒரு மாதத்திலேயே அதற்கு காரணமான ஒருவரை மறைமுகமாக " வேட்டி கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் " என்று சொன்னதில் எந்த அரசியலும் இல்லை என்று நம்ப சொல்கிறீர்களா ? ஏற்கனவே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் போது உங்களின் பேச்சு பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது ...

இறந்து பல வருடங்கள் ஆன பிறகும் எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றோரை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் திரையிலும் அவர்கள் காட்டிய சமூக அக்கறையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது . சினிமாவில் சம்பாத்தித்ததை சினிமாவிலேயே போடும் தையிரியம் உள்ள கலைமகன் கமல் நீங்கள் நிச்சயம் வெறும் பணத்திற்காக மட்டும் படம் எடுக்க மாட்டீர்கள் என்பது உங்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே . அதே நேரம் படங்களின் வாயிலாக மற்றவரின் மனங்களை புண்படுத்தும் செயலை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உண்மையில் நீங்கள் நாட்டை விட்டு செல்கிறீர்களோ இல்லையோ மக்கள் மனதை விட்டு சென்று விடுவீர்கள் என்ற ஆதங்கத்திலும் , இணையத்தில் உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நீங்கள் நன்றி சொன்னவர்கள் பட்டியலில் நானுமிருக்கிறேன்  என்கிற உரிமையிலும்  , ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை படிக்கிறீர்களோ இல்லையோ உங்களின் அடுத்த முயற்சிகளில் " அனுபவமே  நல்ல ஆசான் " என்னும் சொல்லிற்க்கேற்ப  விஸ்வரூப அனுபவம் தந்த பாடங்களை உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் இந்த கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் ...

இப்படிக்கு ,
உங்கள் ரசிகர்களில் ஒருவன் ...

41 comments:

Seeni said...

arumai..!

Unknown said...

விஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.
புரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.
பதிவெழுதி மாட்டிக்கொள்ளக்கூடாது.

இந்த லட்சணத்தில்,
திருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்
பதிவெழுதுகிறார்.

விஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.

Anonymous said...

நன்றாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டது போல் தெரிந்தாலும் இக்கட்டுரையின் சாராம்சம் முழுவதும் என்னவென்று விளங்கவில்லை நடுநிலைமை என்கிற நிலைக்குள் ஒளிந்துகொண்டால் சொல்ல வருவதை முழுமையாக சொல்லமுடியாது .உங்கள் கருத்தில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்பது வெளியே தெரிகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

சிம்ரனுக்கு PKS சாபம் கொடுப்பது போல் உள்ளது கடிதம்...

PKS : பம்மல் கே சம்பந்தம்

Anonymous said...

arumai sagothararei.... valthukkal.

Padman said...

கடித வடிவிலான கட்டுரை அருமை. அதன் சாராம்சம், வியாபார, தொழில்நுட்பங்களோடு திரைப்படம் எடுக்கக் கூடிய கமல் என்ற சிறந்த கலைஞனிடம் சமூக அக்கறை இல்லையே என்ற அங்கலாய்ப்பு தான் என்று நான் நினைக்கிறேன். அவர் எடுப்பது வியாபாரத்திற்காக, சமூக நோக்கமும தேவைப்பட்டால், அவர் ஊறுகாய் போல தொட்டுக்கொள்வார்.அவ்வளவுதான். அவர் என்ன பீம்சிங்கா? கமல். ஆனாலும் அவர் எடுத்ததிலேயே விதிவிலக்காக, சமூக அக்கறையோடு எடுத்த நல்ல ஆன்மீகப் படம், அன்பே சிவம். அதில் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சில குசும்புகள் இருந்தபோதிலும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப, மனிதாபிமானமும அதற்கு மேற்பட்ட அனைத்து உயிரினங்களையும் மதிக்கும் அன்பூமே மிகப் பெரிய கடவுள் என்ற உண்மையான ஆன்மீகத்தை கமல் நன்கு காட்டியிருப்பார், இயக்கம் என்று அவர் பெயரைப் போட்டுக் கொள்ளாதபோதிலும். கமல் அறிவுஜீவியாக இருப்பதைவிட அவ்வாறு காட்டிக்கொள்வதற்கே அதிகப் பிரயத்தனம் செய்வார். அவருடைய பகுத்தறிவு லட்சணமும் அவ்விதமே. அதைத்தான் அவரது திரைப்படங்களிலும் பிரதிபலிக்கிறார். சரி, விஸ்வரூபம் விவகாரத்துக்கு வருவோம். கமலுக்கு சமூக நோக்கு, பகுத்தறிவு, மனிதாபிமானம் ஆகியவற்றில் உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், ஆப்கன் தீவிரவாதத்தின் காரணம் என்ன என்பதை இருபக்கமும் அலசி, இருபுறத்திலும் உள்ள நியாய, அநியாயங்களை நடுநிலையோடு கூறியிருப்பார். ஆனால் அவர் இதை ஒரு வியாபாரப் படமாகத்தான் பார்த்துள்ளார், படைத்துள்ளார். பிறகு ஏன் பாமரனுக்குப் புரியாத வகையில் வலிந்து வரித்துக்கொண்ட மேதாவித் தனத்தின் சாயலிலான கதைச் சொல்லல்? கமலின் சிறப்பம்சங்களைக் கூறி, அவரது சறுக்கல்களையும் நடுநிலையோடு நீங்கள் சாடியிருக்கிரீர்கள். ஆனால், அது புரியாததுபோல, நடுநிலை என்றாலே ஒரு எழவும் புரியாது என்ற வகையில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார். அதுதான் எனக்குப் புரியவில்லை.

கும்மாச்சி said...

நல்ல கடிதம், சரியாக சொல்லியிருக்கிறீர்கள், கமல் இந்து அவமதிப்பை அதுவும் குறிப்பாக பிராமணர்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.

விஸ்வரூபம் தேவையில்லாத இலவச விளம்பரங்களை பெற்று விட்டதனால் ஓடிக்கொண்டிருக்கிறது. இல்லையென்றால் இது மற்றுமோர் ஆளவந்தான் தான்.

outshine said...

Excellent

Unknown said...

Well Scripted ... Good & congrats....irundhaalum kamal thevar magan , virumaandi pondra padangalil ellam oru inathai kolai veri , jaathi veri kondavargalaaga kaata villaya??? en brahmin yaarum Non veg saapidradillaya??? nidarsanathathaan avar kaati irukkar...En ananthu sir....ungalukku jigaadhees pathi avar sonnathukku namma muslim nanbargal endha vidhathil kaayapatrukaanga enakku theriyala !! Madurai Prof.Paramasivem oru ABVP leader endra oru kaarnathukkaaga mattum kolai seyapattadha marandhuteengala??? Viswaroopam oru sirandha padivu than..Paapathiammal chicken taste pannadukkagavum .. Perumaal silaya kadala potta maadiri kaamichadhukaagavum..neenga avara korai solla mudiyaadhu sir....Kanchipuram pattar karuvaraikulla kaama vilaayaatu vilayadunadhulam marandhuteengala???? avarum brahmin than....Nidarsanathai sonna valikka than seyium !!!!

Unknown said...

I agree with ur views on distribution issues !!! That's business !!!

ananthu said...

Thanks Seeni ...

Anonymous said...

Excellent Comment கமலின் சுய ரூபம் இந்த விஸ்வ ரூபத்தில் நன்கு வெளி பட்டுள்ளது.

Anonymous said...

PODA LOOSU

Anonymous said...

There need not be a caste identity in many of the movies I am going to mention. In all his recent movies Brahmin lead characters wont mary a Brahmin character. In Dasavatharam, Asin, an Iyengar character finally married a Ramasamy (Naicker), an atheist. In a recent film Manmadhan Ambu, Madhavan character is a Brahmin and finally he will marry a Non-Brahmin lady and who is having two kids and this character was showed as saying that only by divorcing his previous husband she got the money and enjoys her life. In Pammal K Sambandham, the lead lady character (Simran) shown as a Brahmin and marry the hero Kamal, a Mudaliar. In the above films the characters need not have any caste identity. The worst case is Avvai Shanmughi. Meena’s character need not be shown as a Brahmin. Then Non-Brahmin hero can properly wear madisar and move in to the Meena’s (wife’s) house and not only that he will bring a Muslim character (Naser) in to the house as a Hindu cook. These are ridiculous scenes. You can take Nala Damayanthi also with this list. The above films could have been done with out caste identities. I was very much doubtful on Kamal as he always ridicules only Hindu mythology. Even when he tried to say in the film called ‘Unnai pol oruvan’ that the terrorists should be eliminated and there is no meaning in keeping them in jail for a long time, he showed one of the convicted persons as Hindu and he sold bomb materials to the Muslim terrorists. And he allowed from the voices of one Muslim terrorist that what all the atrocities are made on Muslims during Gujarat riots (as a justification). And he showed one Muslim police officer only killed the terrorist. Such a balance he made in that film! All of a sudden Kamal seen as an anti-Muslim!! ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இது தானோ?

Senthil Kumaran said...

உலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் எழுதிய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.

"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு "துலுக்கச்சி பன்னி சாப்பிடு" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா? நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.

Anonymous said...

Machi, Kamaluke letter yezudura alavavku pariya ala aita pola.... but its dos't have anything in it... Kamala evalavu kora sollitu... un letteraum anda matiridan euruku... Ne yennatan sollava puriyala... Guts eurunda opena yezudu ellati don't try something like this in future....

Anonymous said...

விஸ்வரூபதின் மறு பக்கம் என + கமலின் இந்து எதிர்ப்பு சில்மிஷம் பற்றி எலுத இருந்தேன் # எனக்கு பிளாக் & ஃபாலோயர் கிடயாது # நீங்கள் மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் # நன்றி # நானும் கமல் ரசிகன் தான் # கமல் தேவர் மகன் முன் அதற்கு பின் என பிரிபது நல்லது # ( ர.ராஜன்,செய்யார் )

Anonymous said...

Ananda Padmanaban Nagarajan உங்கள் பெயரை இவ்வளவு பெரியதாக வைத்திருக்கிறீர்கள் கொஞ்சம் சிறியதாக வைத்திருந்தால் வேறு யாராவது பெயரில்லாதவருக்கு அது கொஞ்சம் பயன்படும் என்று சொன்னால் அது முட்டாள்தனம் என்பது எவ்வளவு உண்மையோ அப்படித்தான் நீங்கள் சொல்வதும். கமல்ஹாசன் சமூக அக்கறையோடு படம் எடுக்கவில்லை என்கிறீர்கள் இங்கே சமூக அக்கறையோடு படம் எடுத்தால் அதிலிருக்கும் அக்கறையை விட்டுவிட்டு சமூகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கமலுக்கு இதே வேலைதான் குறிப்பிட்ட சமூகங்களை உயர்த்தியும் தாழ்த்தியும் படம் எடுப்பதே அவர் வேலை என்று அதிலேயும் சந்திலே சிந்து பாடுவதற்கு தயாராக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு இயல்பை அதனோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்க்க தெரியாதா? உணவை ருசியோடும் பசியோடும் மட்டும் பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் அதைவிடுத்து உணவு சாப்பிட்டால் காலைக்கடன் போகவேண்டுமே அது அருவருப்பாக இருக்குமே என்று சாப்பிடும்போது நினைத்தால்? சினிமா என்கிற பொழுதுபோக்கை தாண்டி அதனுள் என்னமோ இருக்கும் நோண்டிப் பார்த்தால் ஏதாவது சூட்சுமம் கிடைக்கும் என்று நோண்டிக்கொண்டு போனால் மூன்றாம் உலகப்போருக்கு அல்ல முப்பதாவது உலகப்போருக்கே அதனுள் காரணத்தை கண்டுபிடிக்கலாம் அதைத்தான் முக்கால்வாசி பேர் செய்துகொண்டும இருக்கிறீர்கள். ஆப்கான் தீவிரவாத்தை காட்டும் முன்பு அதன் மறுபக்கத்தையும் காட்டவேண்டும் அப்படியென்றால் மறுபக்கத்தில் இரட்டைகோபுர தாக்குதல்களை காட்டவேண்டும் அப்புறம் அதற்குமுன்பு அதனுடைய மறுபக்கத்தையும் காட்டவேண்டும் இப்படியே காட்டிக்கொண்டு போனால் விஸ்வரூபம் பாகம் 151 வரை தொடர்ந்துகொண்டே தான் போகவேண்டும். கமல்ஹாசன் இங்கே வரலாற்றையா பதிவு செய்துகொண்டு இருக்கிறார் அவர் ஒரு படைப்பாளி வியாபாரி அவ்வளவுதான் அதற்காக எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்காலாமா? என்கிற கேள்விக்கு பதில் கமல்ஹாசன் அப்படி தரம் தாழ்ந்து எக்காலத்திலும் படம் எடுத்ததில்லை. இங்கே இந்த பதிவை எழுதிய நண்பர் கூட நான் (அவர்) கமல்ஹாசன் ரசிகன் என்று நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தார் ஆனால் அன்பேசிவம் படத்தில்கூட சிவபக்தனை வில்லனாக காட்டியிருக்கிறார் என்கிறார் இப்படி ஒரு சூட்சமமான கருத்தை கமல்ஹாசனின் எதிரி கூட முன்வைக்க மாட்டார் இப்படி எல்லாமே குறை என்றால் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இப்படியே போனால் உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட குறை கண்டுபிடிக்க முடியும்.



நடுநிலை என்றாலே ஒரு எழவும் புரியாது என்ற வகையில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார். அதுதான் எனக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்

நீ கத்தினதும் தப்பு அவன் குத்தினதும் தப்பு இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு பெயர்தான் நடுநிலை என்றால் அதற்குபெயர் தான் நடுநிலையா? எல்லா எழவும் புரிந்த Ananda Padmanaban Nagarajan அவர்களே

பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் விமர்சித்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் பெயர் வெளியிடுவதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை அதிலும் ஏதாவது எழவை கண்டுபிடித்து எனக்கு அப்பவே தெரியும் இந்த பெயர் இருக்கும்போதே நினைச்சேன்னு புதுசா எதுவும் வேண்டாமென்றுதான் பெயர் வெளியிடவில்லை. அதுதான் எல்லாத்துக்கும் சேர்த்து பெரிய பெயரா நீங்க வச்சிருக்கீங்களே நண்பரே

Padman said...

பெயரை வெளியிட விரும்பாத நண்பருக்கு, நீங்கள் கமல் ரசிகர் என்பதைவிட கமல் பக்தராக இருக்கிறீர்கள் என்பது உங்கள் மறுப்புரையில் தெரிகிறது. ஸ்திரத்தன்மை உங்கள் கருத்துகளில் இருக்கிறதா? அனந்து கட்டுரையின் சாராம்சம் முழுவதும் என்னவென்று விளங்கவில்லை என்று முதலில் சுருக்கமாக எழுதிய நீங்கள், அதற்கு மாறாக எனது கருத்துக்குக் கொடுத்த மறுப்புரையில், கமலிடம் கட்டுரையாளர் எல்லாமே குறை என்று கூறி இருப்பதாகவும், அன்பே சிவம் படத்தில் சிவபக்தனை வில்லனாகக் காட்டியிருப்பதாக அனந்து கூறியிருப்பதை, கமல் ரசிகன் என்று கூறிக்கொண்டே அவரது எதிரிகள் கூட முன்வைக்காத சூட்சும புகாரை கூறியிருப்பதாகவும் நீங்கள் குற்றம் சாட்டுவது உங்களில் உள்ள முரணைக் காட்டவில்லையா? அதேபோல் கமலிடம் உள்ள முரணைக் கட்டுரை அலசுகிறது. சாப்பாட்டை உண்ணும்போது அது வயிற்றுக்குள் போனால் காலைக்கடன் போகவேண்டுமே என்று நினைத்தால் அருவருப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் நமக்கு சாப்பாடு பரிமாறுபவர், சற்றுமுன் கழித்த காலைக்கடனைத் தொட்ட கையை சரியாகக் கழுவாமல் பரிமாறினால், அதைக் கண்டும் காணாமல் சாப்பிட வேண்டுமா? அதுபோல்தான் இருக்கிறது கமல் படங்களில் உள்ள சில வக்கிரங்கள். மிக நல்ல படமான அன்பே சிவம் படத்திலும் அது உண்டு, மிக மட்டமான மன்மத அம்பு படத்திலும் அது உண்டு. கமல் தரம் தாழ்ந்து படமே எடுக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மையா என்பதை, பலரது கருத்துகளைப் பார்த்தாலே புரியும். அதுசரி, ரசிகன் என்பவன் தான் ரசிக்கும் கலைஞனை விமர்சிக்கக் கூடாதா? மிகச் சிறந்த ரசனை, நிறை குறையை நன்கு உணர்ந்து, அதனை வெளிப்படுத்துவதுதானே? ஒருவனுக்கு பாதாம் அல்வா பிடிக்கும் என்பதற்காக, பாதாம் அல்வா என்ற பெயரில் எதைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடமுடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, கமல் படத்தை யதார்த்தமாக ரசித்துவிட்டுப் போகவேண்டியதுதானே? எதற்கு இப்படி நோண்டிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள். அப்படியானால், அனந்துவின் கட்டுரையையும் அதைவிட முக்கியமாக நான் செய்த பதிலுரைப் பதிவையும் நீங்கள் யதார்த்தமாக இது அவர்கள் கருத்து என்று எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே? அதனை விடுத்து இத்தனைப் பெரிய விளக்கங்கள் எதற்கு? ஏதோ ஒருவகையில் உங்களை அவை பாதித்திருக்கிறது என்பதினால்தானே? அதேபோல் கமலின் கருத்துகளால், அவரது திரைப்படங்களால் பாதிக்கப்பட்டவன் அல்லது பாதிக்கப்பட்டதாகக் கருதுபவன் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறான். அது உங்களுக்கு ஏன் குடைகிறது? கமல் யதார்த்தப் படம் எடுப்பவர், நேர்மையானவை என்று இன்னமும் நீங்கள் கருதினால், ஹே ராம் படத்தைப் போல, பெரியாரை மையமாக வைத்து, அதிலும் மணியம்மை திருமண விவகாரத்தால் பகுத்தறிவு பார்ட்டிகள் பிரின்தொகொண்டு புழுதிவாரித் தூற்றிகொண்டதை மையமாக வைத்து ஒரு யதார்த்தப் படம் எடுக்கட்டுமே? கமலின் பகுத்தறிவுப் பருப்பு, இந்தப் பகுத்தறிவுவாதிகளிடம் பலிக்காது. கடைசியாக ஒரு விஷயம். தங்கள் பெயர் தெரியாததால்தான் பெயர் விளியிட விரும்பாத நண்பர் என்று கூறினேனே தவிர அது ஒரு கேலியல்ல. மற்றபடி நீங்கள் உங்கள் விருப்பப்படி அனாமதேயமாக (ஆங்கில அனானிமஸ்-க்கு இது சரியான தமிழ்ப் பதமா?) இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. கருத்துப் பரிமாற்றத்துக்கு நன்றி நண்பரே.

Anonymous said...

Ananda Padmanaban Nagarajan

கருத்துக்கு மாற்றுக்கருத்து மாற்றுக்கருத்துக்கு இன்னொரு மாற்றுக்கருத்து அவ்வளவுதான் நண்பரே மற்றபடி உங்களை கருத்து சொல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை எனக்கு அதில் உரிமையும் உடன்பாடும் இல்லை. நண்பர் ஆனந்துவின் விஸ்வரூப கேள்வி - பதில் என்கிற முந்தைய கட்டுரையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முழுவதுமாக அதை நீங்கள் மீண்டும் படிக்க வேண்டுகிறேன் (இப்படி ஒவ்வொரு அமைப்பினரும் மனு கொடுக்க ஆரம்பித்தால் யாரும் படம் எடுக்க முடியாது . எனவே தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள் .. என்று விஸ்வரூப கேள்வி - பதில் ... பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார் ஆனால் அதற்கும் இந்த கட்டுரைக்கும் கொஞ்சம் முரண தெரிகிறது அதனால் எழுந்த ஐயப்பாடு தான் என்னுடைய ஆதங்கம் .தங்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி நண்பரே.

Unknown said...

கமல் ஒரு இந்து மத எதிப்பாளர் அல்ல அது போல் நடிப்பவர் ,எனக்கு தெரிந்த பிராமண நண்பர்கள் தீவிர இந்து ஆதரவாளர்கள் அதே சமயம் கமலை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் . இவ்வளவு ஏன் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லும் ரஜினியைகூட ஏற்று கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தெரியும் கமல் யாரென்று?

Anonymous said...

Just like you have the right to comment on a movie, Kamal has the right to create a movie in his own way. Just don't watch the movie if you dont like it. Movie is his business and see it like that and leave it at that. Why you want to learn lessons from it? Kamal Thevar Magan'la sollara mathiri "Poi pasangala padikkavaingayya..", atha vittuttu, ennamo kutram kandupiduthu per vaanga vanthutteenga. Vera velaiye illaya ungalukku?

thiyagarajan namasivayam said...

அருமையான நேர்மையான பதிவு.கமலின் உத்தி உயர்த்தி தூக்கிய பின் கீழே விடுவது.
எல்லோருக்கும் தெரிந்து விட்டது அல்லது தெரிந்து விடும்.
Thiyagarajan

Anonymous said...

You have written just one page article and you see people agreeing and diagreeing with it. And you expect Kamal to create a movie that everyone agrees with (including you). How is it possible?

vinodh said...

smalltime bloggers like you use the name of kamal or rajini or other stars to gain viewers

ananthu said...

oh . you feel its like how kamal use religious sentiment to gain more crowd to his films .

ananthu said...

Thanks for your comments Thyagarajan .

ananthu said...

Vathanatheesan thivash said...
விஸ்வரூபம், பல முறை பார்த்து...புரியாததை புரிந்து கொள்ள வேண்டும்.
புரிந்தவர்களிடம் விவாதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லது புரிந்தது போல் நடித்து ‘மூடிக்கொண்டு’ இருக்க வேண்டும்.
பதிவெழுதி மாட்டிக்கொள்ளக்கூடாது.
இந்த லட்சணத்தில்,
திருட்டு வீடீயோவில் மட்டும் படம் பார்த்து ஒரு பதிவர்
பதிவெழுதுகிறார்.விஸ்வரூபப்பதிவுகள் பின்னால் இருக்கும் அரசியல் விளங்கவில்லை.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
சிம்ரனுக்கு PKS சாபம் கொடுப்பது போல் உள்ளது கடிதம்...
PKS : பம்மல் கே சம்பந்தம்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ramesh kumar D said...
Well Scripted ... Good & congrats....irundhaalum kamal thevar magan , virumaandi pondra padangalil ellam oru inathai kolai veri , jaathi veri kondavargalaaga kaata villaya??? en brahmin yaarum Non veg saapidradillaya??? nidarsanathathaan avar kaati irukkar...En ananthu sir....ungalukku jigaadhees pathi avar
sonnathukku namma muslim nanbargal endha vidhathil kaayapatrukaanga enakku theriyala !! Madurai Prof.Paramasivem oru ABVP leader endra oru kaarnathukkaaga mattum kolai seyapattadha marandhuteengala??? Viswaroopam oru sirandha padivu than..Paapathiammal chicken taste
pannadukkagavum .. Perumaal silaya kadala potta maadiri kaamichadhukaagavum..neenga avara korai solla mudiyaadhu sir....Kanchipuram pattar karuvaraikulla kaama vilaayaatu vilayadunadhulam marandhuteengala???? avarum brahmin than....Nidarsanathai sonna valikka than seyium !!!!

இந்த பதிவு பிராமணர்களை கமல் கேலி செய்வதற்காக மட்டுமல்ல , மொத்த மத நம்பிக்கையையே அவர் கிண்டல் செய்வதை எதிர்த்தும் தான் . நிதர்சனத்தை தான் எடுக்கிறார் என்கிறீர்கள் . எங்கோ தந்தை - மகள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருக்கிறது என்று செய்திகள் வருவதற்காக கமல் - ஸ்ருதி இருவரையும் இணைத்து ஒருவன் நாலாந்தரமாக பேசியதை நியாயப்படுத்த முடியுமா ? அல்லது அது போல படம் எடுக்க முடியுமா ? நான் எதையும் மறக்கவில்லை , அதே சமயம் எல்லோரையும் மஞ்சள் கண் கொண்டு பார்க்கவும் விரும்பவில்லை . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Anonymous said...
Excellent Comment கமலின் சுய ரூபம் இந்த விஸ்வ ரூபத்தில் நன்கு வெளி பட்டுள்ளது.

Thanks ...

ananthu said...

Anonymous said...
There need not be a caste identity in many of the movies I am going to mention. In all his recent movies Brahmin lead characters wont mary a Brahmin character. In Dasavatharam, Asin, an Iyengar character finally married a Ramasamy (Naicker), an atheist. In a recent film Manmadhan Ambu, Madhavan character is a Brahmin and finally he will marry a Non-Brahmin lady and who is having two kids and this character was showed as saying that only by divorcing his previous husband she got the money and enjoys her life. In Pammal K Sambandham, the lead lady character (Simran) shown as a Brahmin and marry the hero Kamal, a Mudaliar. In the above films the characters need not have any caste identity. The worst case is Avvai Shanmughi. Meena’s character need not be shown as a Brahmin. Then Non-Brahmin hero can properly wear madisar and move in to the Meena’s (wife’s) house and not only that he will bring a Muslim character (Naser) in to the house as a Hindu cook. These are ridiculous scenes. You can take Nala Damayanthi also with this list. The above films could have been done with out caste identities. I was very much doubtful on Kamal as he always ridicules only Hindu mythology. Even when he tried to say in the film called ‘Unnai pol oruvan’ that the terrorists should be eliminated and there is no meaning in keeping them in jail for a long time, he showed one of the convicted persons as Hindu and he sold bomb materials to the Muslim terrorists. And he allowed from the voices of one Muslim terrorist that what all the atrocities are made on Muslims during Gujarat riots (as a justification). And he showed one Muslim police officer only killed the terrorist. Such a balance he made in that film! All of a sudden Kamal seen as an anti-Muslim!! ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இது தானோ?
Wednesday, February 13, 2013


உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Senthil Kumaran said...
உலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் எழுதிய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.
"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு "துலுக்கச்சி பன்னி சாப்பிடு" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா? நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Easy (EZ) Editorial Calendar said...
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Anonymous said...
Machi, Kamaluke letter yezudura alavavku pariya ala aita pola.... but its dos't have anything in it... Kamala evalavu kora sollitu... un letteraum anda matiridan euruku... Ne yennatan sollava puriyala... Guts eurunda opena yezudu ellati don't try something like this in future....
Wednesday, February 13, 2013

Dont talk about guts to me . I have been writing for two years on various issues . its surprise to see some one who did not even have a guts to mention his name criticizes my guts . Thanks for your comments ...

ananthu said...

Anonymous said...
விஸ்வரூபதின் மறு பக்கம் என + கமலின் இந்து எதிர்ப்பு சில்மிஷம் பற்றி எலுத இருந்தேன் # எனக்கு பிளாக் & ஃபாலோயர் கிடயாது # நீங்கள் மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் # நன்றி # நானும் கமல் ரசிகன் தான் # கமல் தேவர் மகன் முன் அதற்கு பின் என பிரிபது நல்லது # ( ர.ராஜன்,செய்யார் )

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

உங்களின் பின்னூட்டத்துக்கும் , மற்ற பின்னூட்டத்துக்கு உங்களின் தெளிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி பத்மன்...

ananthu said...

அனாமதேயமாக வந்தாலும் உங்களின் பின்னூட்டத்திற்கான எனது பதிலுரை இதோ :

இரண்டு பதிவுகளுக்கும் முரண் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள் . உண்மை என்னவெனில் விஸ்வரூபம் படம் வரவே கூடாது என்று தடை செய்யப்பட்ட போது நான் முழுமையாக எதிர்த்தேன் , இன்றும் அந்த தடையை எதிர்க்கிறேன் . அதே சமயம் கமல் தன் படங்களின் மூலம் தொடர்ச்சியாக மத உணர்வுகளையும் , கடவுளையும் கேலி செய்வதையும் கண்டிக்கிறேன் , தன் கருத்துக்களை தேவையில்லாமல் திணிக்காமல் அவரால் படம் எடுக்க முடியாதா என்கிற கேள்வியையும் முன் வைக்கிறேன் . நான் அவர் ரசிகன் என்பதற்காக அவர் எதை சொன்னாலும் கண்மூடித்தனமாக கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எந்த கட்டாயமுமில்லை . சுருக்கமாக சொன்னால் நான் பதிவெழுதுகிறேன் , அதை சிலர் ஆதரிக்கிறார்கள் , சிலர் எதிர்க்கிறார்கள்.ஆனால் நான் பதிவே எழுத கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை . அதே போல என் பதிவை யாருமே விமர்சிக்க கூடாது என்று சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை . இது விஸ்வரூபம் படத்திற்கும் பொருந்தும் . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

kongango ivanda said...
கமல் ஒரு இந்து மத எதிப்பாளர் அல்ல அது போல் நடிப்பவர் ,எனக்கு தெரிந்த பிராமண நண்பர்கள் தீவிர இந்து ஆதரவாளர்கள் அதே சமயம் கமலை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் . இவ்வளவு ஏன் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லும் ரஜினியைகூட ஏற்று கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தெரியும் கமல் யாரென்று?

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Anonymous said...
Just like you have the right to comment on a movie, Kamal has the right to create a movie in his own way. Just don't watch the movie if you dont like it. Movie is his business and see it like that and leave it at that. Why you want to learn lessons from it? Kamal Thevar Magan'la sollara mathiri "Poi pasangala padikkavaingayya..", atha vittuttu, ennamo kutram kandupiduthu per vaanga vanthutteenga. Vera velaiye illaya ungalukku?

Intha pathivai paditthu vittu pinnoottam podum ungalukkum veru velai illaiyo ? Thanks ...

ananthu said...

Anonymous said...
You have written just one page article and you see people agreeing and diagreeing with it. And you expect Kamal to create a movie that everyone agrees with (including you). How is it possible?

Thanks ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...