Vanga blogalam in Facebook

30 June 2013

அன்னக்கொடி - அவலக்கொடி ...




வயதானாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இளைஞர்களுடன் சரிக்கு சமமாக விளையாடும் பெரியவர்களை பார்த்திருப்போம் . நாமும் அவர்கள சந்தோஷத்துக்காக அவர்களிடம் தோற்பது போல நடிப்போம் . ஆனால் அவர்களில் சிலர் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் தங்களிடம் நிறைய பலம் இருப்பவதாகவே இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்கள் . அந்த வரிசையில் தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர் பாரதிராஜா சேர்ந்திருப்பது துரதிருஷ்டம் ...

அன்னக்கொடி ( கார்த்திகா ) யும் , கொடிவீரனும் ( லக்ஷ்மன் ) காதலிக்கிறார்கள் . சாதி அவர்களை பிரித்து அன்னக்கொடியை கொடுமைக்கார கணவன் சடையனிடம் ( மனோஜ் கே.பாரதி ) சேர்க்கிறது . கடைசியில் அன்னக்கொடி என்ன ஆனால்  என்பதை கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய காதல் காட்சிகளை வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் இமயம் ...

கிராமத்து இளைஞனாக நன்றாகவே பொருந்துகிறார் லக்ஷ்மன் . அவருக்கு குரல் கொடுத்தவர் யாரென்று தெரியவில்லை , நன்றாக கணீரென்று இருக்கிறது . மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை . கோ வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் கார்த்திகா விற்கு தனிப்பட்ட முறையில் அன்னக்கொடி முக்கியமான படம் . அவருடைய நடிப்பும் , இளமைத்துடிப்பும் ரசிக்க வைக்கின்றன ...


தாஜ்மஹால் படத்தில் மனோஜை கதாநாயனாக நடிக்க வைத்த பாவத்திற்கு பாரதிராஜா இந்த படத்தில் ஓரளவு பிராயச்சித்தம் செய்து கொண்டார் என்றே சொல்லலாம் . மனோஜின் நடிப்பு சில இடங்களில் ஓவர் டோசாக தெரிந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்பலாம் ...

ஜி.வி.பிரகாஷ் குமாரரின் இசையில் பாடல்கள் , சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு பலம் . கிராமத்தில் இருக்கும் சாதிக்கொடுமை , ஆண்மை குன்றிய கணவனிடம் மாட்டிக்கொண்டு கார்த்திகா படும் அவஸ்தை  , தன் குறையை சீண்டுபவர்களிடம் வெறித்தனமாக நடந்து கொள்ளும் மனோஜின் கதாபாத்திரம் போன்றவற்றை சித்தரித்த விதத்தில் பழைய பாரதிராஜா கொஞ்சம் தெரிகிறார் ...


காலையில் பேஸ்புக்கில் பிக்கப் செய்து விட்டு மாலையில் பிரிந்து விட்டோம்  என்று ட்வீட் செய்யும் இந்த காலத்தில் காதலன் காதலியின்  விரலை சப்புவது, இருவரும் பாறையை சுற்றி கண்ணாமூச்சி ஆடுவது , காதலியின் செருப்பை பூஜை செய்வது என்று இன்னும் பாரதிராஜா பழைய ராஜாவாகவே இருப்பது கொடுமை . வெள்ளையுடை அணிந்த தேவதைகள் வராதது மட்டுமே ஆறுதல். கொடுமைக்காரனாக இருந்தாலும் கணவன் செய்த உதவியை கார்த்திகா நினைத்துப் பார்ப்பது  , காதலியை பிரிந்தவுடன் லக்ஷ்மன் வேறு திருமணம் செய்து கொள்வது போன்றவற்றால்  ஏற்கனவே பலவீனமாக இருக்கும் காதல் படு பாதாளத்துக்கு  போய் விடுகிறது . படம் முடிந்து வரும் போது ஒருவர் கார்ததிகாவோட முதுகுக்காக கொடுத்த காசுல காவாசி ஒ.கே என்று சொன்ன போது பாரதிராஜா வை நினைத்து மனம் லேசாக கனத்தது ...

ஸ்கோர் கார்ட் : 37


8 comments:

  1. பாரதி ராஜா.... இப்போ பாவராஜாவாயிட்டாரா?

    ReplyDelete
  2. கிழட்டு சிங்கங்கள் இன்னும் பழைய நினைப்பில்
    வேட்டையாட வெறியோடு கிளம்புவது.....
    கஷ்டம் அவர்களுக்கு மட்டுமல்ல.என்பதை
    பாலச்சந்தர் போல பரதிராஜாவும் என்று
    உணரப் போகிறாரோ....

    ReplyDelete
  3. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல விமர்சனம்....

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  4. உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

    திண்டுக்கல் தனபாலன் said...
    பாவம் பா.ராஜா...!

    ReplyDelete
  5. Ramani S said...
    கிழட்டு சிங்கங்கள் இன்னும் பழைய நினைப்பில்
    வேட்டையாட வெறியோடு கிளம்புவது.....
    கஷ்டம் அவர்களுக்கு மட்டுமல்ல.என்பதை
    பாலச்சந்தர் போல பரதிராஜாவும் என்று
    உணரப் போகிறாரோ....

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  6. சே. குமார் said...
    பாரதி ராஜா.... இப்போ பாவராஜாவாயிட்டாரா?

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete