ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு சீசன் இருக்கும் . இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு காமெடி சீசன் போலும் . ஒரு பக்கம் இது ஆரோக்கியமானது தானா என்கிற கேள்வி இருந்தாலும் வியாபரத்திற்கு அது தவிர்க்க முடியாதது என்பது ஒரே நாளில் ரிலீசாகி இருக்கும் இரண்டு காமெடி படங்களிலிருந்தே விளங்கும் . அந்த வகையில் கலகலப்பு வெற்றிக்கு பிறகு யுடிவி யுடன் இணைந்து தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர்.சி ...
பரம்பரை பரம்பரையாக காதலித்து கல்யாணம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த குமார் ( சித்தார்த் ) சிறு வயதிலிருந்தே எந்த ஒரு ஃபிகரையும் கரக்ட் செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறார் . கடைசியில் உடன் வேலை பார்க்கும் சஞ்சனாவை ( ஹன்சிகா ) காதலை சேர்த்து வைப்பதையே தொழிலாக செய்து கொண்டிருக்கும் மூக்கையா ( சந்தானம் ) வின் உதவியுடன் தன்னை காதலிக்க வைக்கிறார் . பிறகு தன் தங்கை தான் சஞ்சனா என்று தெரிய வர காதலை பிரிக்கும் முயற்சியில் மூக்கையா ஜெயித்தாரா ? என்பதை இயக்குனர் தன் வழக்கமான பாணியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு சொல்லியிருப்பதே தீவேகு ...
உதயம் பாதிப்பிலிருந்து இன்னும் சித்தார்த் வெளிவரவில்லை போல , இதிலும் உம்மனாமூஞ்சியாகவே இருக்கிறார் . ஸ்மார்டாக இருக்கும் சித்தார்த் தன் கேரக்டருக்காகவும் , சந்தானத்தின் காமெடிக்காகவும் அடக்கியே வாசித்திருப்பதை பாராட்டலாம் . அசத்தலான அறிமுகத்துடன் வரும் சந்தானம் படம் நெடுக எஸ்.எம்.எஸ் , ஒ.கே.ஒ.கே வரிசையில் குமாரையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் . தன் வழக்கமான கவுண்டர் , பஞ்ச் வசனங்களில் கலாய்க்கும் சந்தானம் டபுள் மீனிங்கை தவிர்த்திருப்பது ஆச்சர்யம் . சித்தார்த்திற்கு காதல் பாடம் எடுக்கும் போதும் சரி , அதற்காக பணத்தை கறக்கும் போதும் சரி நன்றாகவே சிரிக்க வைக்கிறார் சந்தானம் ...
ஒப்பனிங் சீனிலேயே ஒருபக்கம் ஹெட்லைட்டை காட்டிக்கொண்டே வரும் ஹன்சிகா தனக்கு விடப்பட்ட பணி என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார் . க்யூட்டாக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் க்ளைமேக்ஸில் காணாமல் போகும் ஐ.டி மாப்பிள்ளை போல படத்தின் பாதியிலேயே காணாமல் போயிருப்பது பரிதாபம் . சித்தார்த்தின் ஐ.டி நண்பர் , பாஸ்கி , ஹன்சிகாவின் தோழியாக வரும் மோகன்ராமின் மகள் என்று எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டெல்லி கணேஷ் , மனோபாலா இருவரும் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் ...
பீட்சா வை ஒளிப்பதிவிய கோபி அம்ர்நாத்தா இது என்று ஆச்சர்யப்படும் படி இருக்கிறது ஒளிப்பதிவு . சத்யாவின் இசையில் சஞ்சனா பாடல் தவிர மற்றவை புகை பிடிப்பவர்களுக்கும் , சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் மட்டும் உதவியிருக்கின்றன . எஸ்.எம்.எஸ் . ஒகே பாணி கதை என்றாலும் நலன் குமாரசாமி - வெங்கட் ராகவனின் வசனங்களும் , அவர்கள் சுந்தர்.சி யுடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதையும் படத்தை ஒருபடி மேலே எடுத்து செல்கின்றன . குறிப்பாக திருமணத்திற்காக சித்தூர் கூப்பிடும் நண்பனிடம் " அவனவன் வீட்ல பொணம் இருந்தாலே ஃபேஸ்புகல மட்டும் அப்டேட் போட்டுட்டு சும்மா இருக்கான் " என்பது போல வரும் வசனங்கள் நச்..
குமாரை அறிமுகப்படுத்தும் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை கவனிக்க வைக்கும் திரைக்கதை பின் இரண்டு மணிநேரங்கள் தொய்வில்லாமல் நம்மை கட்டிப்போடுகிறது . சந்தானத்தை தவிர்த்து ஐ.டி நண்பர்கள் வரும் காட்சிகளையும் ரசிக்க வைத்ததில் சுந்தர்.சி யின் உழைப்பு தெரிகிறது . கணேஷை காதலித்து விட்டு சித்தார்த்தின் தில்லு முல்லுகளை நம்பி அவரை காதலிப்பது போல வரும் ஹீரோயின் கேரக்ட்ரைசேஷன் , நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் போல காணாமல் போய்விடும் கணேஷ் வெங்கட்ராமன் , ஸ்பீட் ப்ரேக்கர் பாடல்கள் , நோ லாஜிக்ஸ் போன்ற குறைபாடுகள் இருந்தாலும் நம்மை போரடிக்காமல் சிரிக்க வைத்தற்காக குமாரின் வேலைக்கு வெல்டன் சொல்லலாம் ...
ஸ்கோர் கார்ட் : 41
/// மற்றவை புகை பிடிப்பவர்களுக்கும் , சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் மட்டும் உதவியிருக்கின்றன... ///
ReplyDeleteசூப்பர்... நல்ல விமர்சனம்...!
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete/// மற்றவை புகை பிடிப்பவர்களுக்கும் , சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் மட்டும் உதவியிருக்கின்றன... ///
சூப்பர்... நல்ல விமர்சனம்...!
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
கொஞ்சம் அதிக ஸ்கோரே கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteஅவசியம் பார்த்துவிடுகிறேன்
சூடாகத் தந்த சுவையான விமர்சனத்திற்கு
வாழ்த்துக்கள்
Ramani S said...
ReplyDeleteகொஞ்சம் அதிக ஸ்கோரே கொடுத்துள்ளீர்கள்
அவசியம் பார்த்துவிடுகிறேன்
சூடாகத் தந்த சுவையான விமர்சனத்திற்கு
வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/06/no-sms.html
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
ReplyDelete