இந்த வருடம் இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் தந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய விருதோடு விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்ததும் , பரதேசி பெரிய வரவேற்பைப் பெற்றதும் ஆறுதல் . எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத இன்று போய் நாளை வா வை கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்து சந்தானம் விநியோகஸ்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து விட்டார் . சமர்சுமாராக இருந்த போதும் விஸ்வரூபம்
ரிலீஸ் தள்ளிப்போனதால் தியேட்டரில் சிறிது நாட்கள் கூடுதலாகவே அமர்ந்தது என்று சொல்லலாம் . முதல் படத்தில் சம்பாதித்த நல்ல பெயரை வருட்த்திற்கு ஒரு மொக்கை படம் மூலம் காலி செய்து கொண்டிருக்கும் கார்த்தியின் இந்த வருட கணக்கில் அரைத்த மாவு அலெக்ஸ் பாண்டியன்...
ஓரளவு மட்டுமே வெற்றி பெற்றிருக்கக் கூடிய விஸ்வரூபம்தடையாலும் , உலகநாயகனின் விவேகமான நடவடிக்கைகளாலும் விஸ்வரூப வெற்றியை பெற்றது . உண்மையிலேயே உலக நாயகனின் கைவண்ணத்தில் வந்த உலகத்தரமான படம் விஸ்வரூபம் . ஸ்டான்ட் அப் காமெடிகளின் கோர்வையாக இருந்தாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா வணிக ரீதியாக வெற்றிப்படம் . இந்தியாவே கூர்ந்து நோக்கும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல்கலங்கலாகிப் போனதில் வருத்தமே ...
சன் பிக்சர்ஸ் நல்லாசியுடன் வந்த சென்னையில் ஒரு நாள்நல்ல கரு இருந்தும் கஞ்சஸ்டடான திரைக்கதையால் ட்ராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டது போலாகிவிட்டது . பரதேசிபாலாவின் படங்களில் ஒரு மைல்கல். இது போன்ற படங்களை வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியடைய வைத்திருக்க வேண்டியது தரமான சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவனின் கடமை . புதுமுகத்தை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் வத்திக்குச்சி
நமுத்து விட்டது . இல்லையேல் வத்திக்குச்சி பற்றி எரிந்திருக்கும் ...
ஹிந்தியில் ஹிட்டடித்த டெல்லி பெல்லியை தமிழாக்கம் செய்யும் முயற்சியில் சேட்டைசறுக்கி விட்டது . யாருடா மகேஷ்ஆய்ப்பையனாக இருந்தாலும் நண்டு ஜெகனின் காமெடிப் பிடியால் ரசிக்க முடிந்தது . சாக்லேட் பாய் சித்தார்த்திற்கு தமிழில் உதயம் NH4ஒரு சீரியஸ் ப்ரேக் . உதயம் NH 4 இல் கொஞ்சம் தடம் மாறினாலும் சாதாரண காதல் கதையை ஸ்டைலிஷான திரைக்கதையால் ரசிக்க வைத்திருப்பார்கள் ...
மே 1 இல் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் அதில் அனைவரின் மனதையும் கவ்வி வசூலில் முன்னணி வெற்றி பெற்றதென்னமோ சூது கவ்வும்மட்டும் தான் . சிவ கார்த்திகேயனுக்கு சுக்ர திசை போல . கேடி பில்லாவை தொடர்ந்து எதிர்நீச்சலும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது . மூன்று பேர் மூன்று காதல் நிறைய திரையரங்குகளில் மூன்று நாட்கள் கூட ஓடாமல் போனது இயக்குனர் வசந்த் இளம் தலைமுறையினரின் பல்சை சரியாக பிடிக்காமல் போனதை காட்டுகிறது . ஒரு சின்ன தீமை 2 மணிநேர திரைப்படமாக கொடுத்து நம் நேரத்தை வீணாக்காமல் ரசிக்க வைத்த படம் நேரம். குட்டிப்புலிகமர்சியல் புலியாக இருந்தாலும் கதை , திரைக்கதையை நம்பாமல் சசிக்குமாரை மட்டுமே நம்பியதால் ஒன்டிப்புலியாகி விட்டது ...
தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருப்பது காமெடி சீசன் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாக்கும் வகையில் ஜூன் 14 ம் தேதி வெளியான இரண்டு படங்கள் தீயா வேலைசெய்யணும் குமாரு மற்றும் தில்லு முல்லு . இரண்டுமே போரடிக்கவில்லை என்றாலும் வெல்டன் சொல்ல வைத்தவன் குமாரு மட்டுமே . பழம் பெரும் இயக்குனர் பாரதிராஜா ராதாவின் பெண்ணை வைத்து இயக்கிய அன்னக்கொடி - அவலக்கொடியானதில் வருத்தமே . அடுத்த அரையாண்டின் ஆரம்பமே சிங்கம் 2வின் கமர்சியல் கர்ஜனையுடன் தொடங்கியிருக்கிறது . வரும் ஐந்து மாதங்களும் இது போல வெற்றிப்படங்கள் தொடர்ந்து வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ...

6 comments:
nice
நல்ல ஃப்ளேஷ் பேக்! :)
Good Review...
Arul Vino said...
nice
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
வெங்கட் நாகராஜ் said...
நல்ல ஃப்ளேஷ் பேக்! :)
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
திண்டுக்கல் தனபாலன் said...

Post a Comment