விஜய்
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பதால் சிறு வயதிலேயே அவருடைய படங்களில் தலை காட்டினார் விஜய் . 1992 இல் தந்தை இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு சரியாக ஓடா விட்டாலும் ஆக்ரோஷமான இளைஞனாக நடித்து முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் . பிறகு அப்பாவின் படத்தில் தொடர்ந்து நடித்தவருக்கு மூன்றாவது படமான ரசிகன் தனி ஹீரோவாக முதல் கமார்சியல் ஹிட் . தந்தையின் நிழலில் பயணத்தை தொடங்கியிருந்தாலும் தனக்கென்று தமிழ் சினிமாவில் தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இந்த இளைய தளபதி ...
அதன் பிறகு அஜித் உடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே உட்பட சொல்லிக்கொள்ளும் படியாக எந்த படமும் இல்லாத நேரத்தில் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக , பாசில் இயக்கத்தில் , இசைஞானி இசையில் வந்த காதலுக்கு மரியாதை என அடுத்தடுத்து ஹிட்கள் பெண்களுக்கிடையே இவரை லவ்வபிள் பாயாக மாற்றியது. அதுவும் இவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்களும் ( இதை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய் என்று மறக்காமல் போட்டுவிடுவார்கள் ) நடனமும் இளைஞர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அம்மா ஷோபா பாடகி என்பதாலோ என்னமோ இவருடைய படங்களில் பாடல்களுக்கு என்றுமே விஜய் தனிக்கவனம் செலுத்துவார் . பிறகு லவ் டுடே , ஒன்ஸ் மோர் என்று தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்தவருக்கு மீண்டும் நேருக்கு நேர் மூலம் அஜித்துடன் சேரும் வாய்ப்பு கிடைத்தும் அஜித் விலகிக் கொண்டதால் சூர்யா வின் அறிமுகம் ரசிகர்களுக்கு கிடைத்தது ...
ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெற்றிகள் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டதோடு தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக மாறிக் கொண்டிருந்த விஜய் மேல் யார் கண் பட்டதோ கே.எஸ்.ரவிகுமார் , பாசில் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களான மின்சாரகண்ணா , கண்ணுக்குள் நிலவு இரண்டுமே தோல்வியை தழுவின . எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 இல் வந்த குஷி மீண்டும் அவரை குஷிப்படுத்தியது . இப்படி அஜித் போல விஜய்க்கும் வெற்றி , தோல்விகள் மாறி மாறி வந்தாலும் 2001 - 2003 வரை ஷாஜஹான் , தமிழன் என தொடர் தோல்விகள் விஜயை வதைக்க ஆரம்பித்தன . தோல்விகளால் துவண்டிருந்தவரை மலை போல நிமிர்த்தியது புதுமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை . பக்கா மாஸ் ஹீரோவாக விஜயை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது இந்தப் படம் எனலாம் . அதன் பிறகு கில்லி , போக்கிரி என நிறைய மெகா ஹிட்கள் வசூலை அள்ளிக் குவித்தன ...
விஜய் நடித்த கில்லி , போக்கிரி என ரீமேக் படங்கள் பெரிய ஹிட் அடித்தாலும் தெலுகு நடிகர் மகேஷ்பாபு வை பார்த்து அப்படியே உல்டா அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தன . அஜித் துக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் சக்சஸ் என்றால் விஜயக்கோ அழகிய தமிழ் மகன் , வில்லு ஏன் லேட்டஸ்ட் புலி உட்பட மூன்றுமே ஃப்ளாப்புகள் . கதையை தவிர இரண்டு கேரக்டர்களுக்குமே எந்தவொரு வித்தியாசத்தையும் காட்ட விஜய் முற்படாததும் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது . பொதுவாக விஜய்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல ஈசியாக இருந்ததில்லை ...
விஜய்க்கு மிருக தோஷமோ என்னமோ குருவி , 50 வது படமான சுறா , பெரிய பில்ட் அப்புடன் வந்த புலி என எல்லாமே தோல்வி அடைந்ததோடு நெட்டிசன்களால் கழுவி , கழுவி ஊற்றப்பட்டன . இருப்பினும் ரஜினிக்கு பிறகு படத்தை எடுப்பவருக்கும் , வாங்குபவருக்கும் மினிமம் கேரண்டி யை கொடுக்கும் படியான ஸேஃப் பெட்டாகவே விஜய் படங்கள் அமைந்தன . குடும்பத்துடன் பார்க்கும் படியாக இவர் படங்கள் இருப்பதும் , எம்.ஜி.ஆர் போல தன் மேல் நெகடிவ் ஸேட் விழாமல் ஒரு கிளீன் இமேஜை இவர் ஸ்க்ரீனில் மெய்ண்டைன் பண்ணுவதும் முக்கிய காரணமாக இருக்கலாம் . அரசியல் ஆசையால் இவர் படங்கள் சர்ச்சைக்கு உள்ளானாலும் தனது ஆக்சன் , டேன்ஸ் , காமெடி என்று காசு கொடுத்து தியேட்டருக்கு வரும் பாமர ரசிகனை இவரது படங்கள் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை எனலாம் ...
அறிமுகம் : நாளைய தீர்ப்பு
முதல் ஹிட் : ரசிகன்
ப்ரேகிங் பாயிண்ட் : பூவே உனக்காக
தளபதி அவதாரம் : திருமலை
அறிமுக இயக்குனர் : எஸ்.ஏ.சந்திரசேகர்
ஃபேவரட் இயக்குனர் : அப்போது எஸ்.ஏ.சி , இப்போது ஏ.ஆர்.முருகதாஸ்
100 க்ரோர் கிளப் : துப்பாக்கி , கத்தி
அடுத்த ரிலீஸ் : அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம்
அடுத்த பதிவில் அஜித் Vs விஜய் யார் பெஸ்ட் ? ...
விஜய்-அஜித் ரெண்டு பேரில் யார் பெஸ்ட் என்பதை ஒரு பராவில் சொல்லி முடித்திருக்கலாம்!
ReplyDeleteதேவையில்லாமல் ரெண்டு பதிவுகளை வீணாக்கி விட்டீர்கள்
சரி பரவாயில்லை!
விஜய்-அஜித்தில் யார் பெஸ்ட் என கூறினால் மட்டும் போதாது
தமிழ் சினிமாவிலேயே விஜய்-அஜித்தான் பெஸ்ட்டா? அல்லது
அவர்களை விட பெஸ்ட் வேறு யாரும் இருக்கிறார்களா?
என்பதையும் சொல்லிவிடுங்கள்!
கதையை ரெண்டு நிமிஷத்துக்குள் சொல்வதை விட்டுவிட்டு எதற்கு ரெண்டு மணிநேர படம் எடுக்கிறார்கள் என்பது போல இருக்கிறது உங்களின் கருத்து . அடுத்த பதிவில் நிச்சயம் பதில் உண்டு . உங்களின் வருகைக்கு நன்றி ...
ReplyDeleteEpdiyum ajith than best nu poda poringa terinjathuthane ponga boss :O
ReplyDeleteNeengal pona pathivil kurippittavaru ithuvarai entha ajith in padamum 100crore club il join pannavillai
ReplyDeleteEswar given the choice to the public . You can also vote . Thanks for your comments ...
ReplyDeleteAlready i have given the answer in my previous post itself . Thanks ...
ReplyDelete