2015 தமிழ் சினிமா வுக்கு நல்ல காலம் எனலாம் . வழக்கத்தை விட அதிகமான படங்கள் வெற்றி பெற்றிருப்பதோடு காக்கா முட்டை , குற்றம் கடிதல் , உத்தம வில்லன் போன்ற வை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன . மணிகண்டன் , அஸ்வின் போன்ற புதுமுக இயக்குனர்கள் ஜொலித்தாலும் மணிரத்னம் , ஜெயம் ராஜா , கவுதம் மேனன் போன்ற பழைய இயக்குனர்கள் தங்கள் முத்திரையையை அழுத்தமாக பதித்திருக்கும் வருடமிது . இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் பண்ணும் உலக நாயகன் மூன்று படங்கள் நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து . ஒரு பக்கம் ஐ , பாகுபலி போன்ற பிரம்மாண்டங்கள் உலகத்தரத்திற்கு நம்மை கொண்டு சென்றாலும் காக்காமுட்டை , டிமாண்டி காலனி போன்ற சிறு பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெறவும் தவறவில்லை . 2015 இல் இயக்குனர்களாக நல்ல அறிமுகத்தை கொடுத்த விஜய் மில்டன் , வேல்ராஜ் , இருவரும் இந்த வருடம் சோபிக்க தவறியது கற்பனை வறட்சியை காட்டுகிறது. ரீ மேக் படங்களையே எடுத்துக்கொண்டிருந்த ஜெயம் ராஜா வின் படம் தனி ஒருவன் இன்று பல மொழிகளில் ரீ மேக் செய்யப்படவிருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சி . மனோரமா , எம்.எஸ்.வி போன்ற சிறந்த கலைஞர்களின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . ஐந்து படங்களில் நடித்த நயன்தாரா இன்றைய ஹீரோயின்களில் அல்டிமேட் . மூன்று வருடங்களுக்கு பிறகு ரிலீசான வாலு கொஞ்சம் ஓடினாலும் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி , பீப் பாடல் சர்ச்சைக்கு பிறகு சிம்பு தனது வாலை சுருட்டிக்கொண்டிருப்பார் என்று நம்பலாம் . என்னை அறிந்தால் , வேதாளம் படங்களின் வசூல் மூலம் அஜித் கோலிவுட்டின் வசூல் கிங் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் .
முதல் ஆறு மாத சினிமா அலசல்களை பற்றி அறிய காண்க :
இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2015
கவர்ந்த படங்கள்
டிமாண்டி காலனி
ஓ.கே.கண்மணி
36 வயதினிலே
குற்றம் கடிதல்
டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ்
காக்கிசட்டை
ப்ளாக்பஸ்டர் : தனிஒருவன்
டாப் டென் பாடல்கள்
1. என்னோடு நீ ( ஐ )
2. மழை வர போகுதே ( என்னை அறிந்தால் )
3. டங்கா மாரி ( அனேகன் )
4. மெண்டல் மனதில் ( ஒ.கே.கண்மணி )
5. ஐம் சோ கூல் ( காக்கிசட்டை )
6. காதல் கிரிக்கெட் ( தனிஒருவன் )
7. கொஞ்சலாய் ( யட்சன் )
8. ஏண்டி ஏண்டி ( புலி )
9. உயிர் நதி ( வேதாளம் )
10.யார் அந்த முயல்குட்டி ( பாயும் புலி )
கவர்ந்தவர்கள்
கவர்ந்த படம் - காகாமுட்டை
கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன் ( உத்தமவில்லன் )
கவர்ந்த நடிகை - நயன்தாரா ( மாயா / நானும் ரவுடி தான் )
கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சார்லி ( கிருமி )
கவர்ந்த குணச்சித்திர நடிகை - ஆஷா சரத் ( பாபநாசம் )
கவர்ந்த காமெடி நடிகர் - ரோபோ சங்கர் ( மாரி )
கவர்ந்த வில்லன் நடிகர் - அரவிந்த்சாமி ( தனிஒருவன் )
கவர்ந்த இசையமைப்பாளர் - ஆதி ( தனிஒருவன் )
கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் - ஜிப்ரான் ( பாபநாசம் )
கவர்ந்த ஆல்பம் - என்னை அறிந்தால் ( ஹாரிஸ் ஜெயராஜ் )
கவர்ந்த பாடல் - கொஞ்சலாய் ( யட்சன் )
கவர்ந்த பாடகி - ரேஷ்மா ( காதல் கிரிக்கெட் )
கவர்ந்த பாடகர் - ஹரிஹரன் ( தொடுவானம் )
கவர்ந்த பாடலாசிரியர் - தாமரை ( உனக்கென்ன )
கவர்ந்த வசனகர்த்தா - சுபா ( தனிஒருவன் )
கவர்ந்த கதாசிரியர் - மணிகண்டன் ( காக்காமுட்டை )
கவர்ந்த திரைக்கதையாசிரியர் - அஸ்வின் சரவணன் ( மாயா )
கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சத்யன் சூரியன் ( மாயா )
கவர்ந்த இயக்குனர் - ஜெயம் ராஜா ( தனிஒருவன் )
வசூல் ராஜாக்கள்
அஜித் ( வேதாளம் )
கமல் ( பாபநாசம் )
ராகவேந்திரா லாரன்ஸ் ( காஞ்சனா 2 )
ஜெயம் ரவி ( தனி ஒருவன் )
ஏமாற்றங்கள்
மாசு
புலி
10 என்றதுக்குள்ள
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
தமிழ் சினிமா 2015
No comments:
Post a Comment