எதிரியால் தன் மனைவி , குழந்தையை கண் முன்னாலேயே இழந்ததால் ஆல்கஹாலுக்கு அடிமையான அரவிந்த் ( அருள்நிதி ) ஒரு சீரியல் கொலைகளின் இன்வெஸ்டிகேஷன் மூலம் இழந்த தன்னை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே படம் . பக்கா ஹாட் க்ரைம் த்ரில்லரை ஃபேமிலி எமோஷன்களால் நனைய விட்டிருந்தாலும் முடிந்தவரை நன்றாகவே பேலன்ஸ் செய்திருக்கிறார் அறிவழகன் ...
ஸ்க்ரீன் இமேஜ் பற்றி கவலைப்படாத அருள்நிதி சோலோ ஹீரோவாக தன்னை மேலும் பலப்படுத்த கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . படம் முழுவதும் குடும்பத்தை இழந்த சோகத்துடன் அலைபவர் கோபத்தையும் காட்டத் தவறவில்லை . மனைவி , குழந்தை சுடப்பட்டவுடன் கதறி அழுவது இவரது நடிப்பிற்கு சான்று . எப்பொழுதுமே ஒரே சட்டையுடன் இவர் குடித்துக் கொண்டே வருவது போல காட்டுவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் . அதே போல மனைவி , குழந்தை யுடன் சேர்த்து இவருக்கு வலுவான சீன்கள் இல்லாததால் அவருடன் சேர்ந்து நம்மால் உருகமுடியாமல் வெறும் பாசிங் சீன்களாகவே அது கடந்து போவது சறுக்கல் ...
படத்தின் மையப்புள்ளியாக அருள்நிதி இருப்பதால் மற்றவர்கள் வந்து போகிறார்கள் . அம்மாவாக வரும் துளசியை பயன்படுத்திய அளவிற்கு ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐ பயன்படுத்தாதது துரதிருஷ்டம் . மூஞ்சியே காட்டாமல் பில்ட் அப்புடன் வரும் சீரியல் கில்லர் கவுரவ் நாராயன் அந்த முக்கியமான ரோலுக்கு பெரிய கவுரவத்தை கொடுக்கவில்லை அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு , தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஆனந்த யாழை பாடலை நினைவுபடுத்தினாலும் " தனிமையே " பாடல் முணுமுணுக்க வைக்கிறது ...
படத்தின் முதல் என்கவுண்டர் சீன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது . தொடர்ந்து நடக்கும் கொலைகளும் நமக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன . இறந்து கிடக்கும் பாடிகளை வைத்து கொலைக்கான தொடர்பினை அருள்நிதி கண்டுபிடிப்பது ஆஸம் . ஆனால் இவ்வளவு ப்ளஷ்கள் இருந்தும் நம்மை A டு Z கட்டிப் போட்டிருக்க வேண்டிய படம் இடைச்செறுகல் போல் வரும் ரோபோ ஷங்கரின் காமெடி , சில ரிப்பீட்டட் சீன்கள் போன்றவற்றால் தடுமாறியிருக்கிறது . மாற்றுத்திரனாளியாக காட்டப்படுபவர் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ரன்னிங் ரேஸ் போல வேகமாக ஓடுவதும் , ஒருவரின் பெயரை வைத்தே அவரின் முழு ஜாதகத்தையும் எடுக்கக்கூடிய அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகியிருந்தும் தோழிகள் விஷயத்தில் போலீஸ் அதை பெரிதாக பயன்படுத்தாமல் விடுவதும் லாஜிக் ஓட்டை ...
இன்னும் க்ரிப்பாக இருந்திருக்கலாம் என்பது போல பட்டாலும் அடுத்தடுத்து என்ன என்று போலீஸ் இன்வெஸ்டிகேஷனோடு சேர்த்து நம்மையும் பயணப்பட வைக்க தவறவில்லை படம் . சில குறைகளை தவிர்த்து பார்த்தால் அருள்நிதி + ஈரம் எனும் முதல் த்ரில்லர் படத்திலேயே நம்மை மிரட்டிய இயக்குனர் + அருமையான க்ரைம் திரில்லர் கதை என்கிற இந்த காம்போ வில் வந்திருக்கும் ஆறாது சினம் ஆக்கம் ...
ரேட்டிங் : 3 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 42
No comments:
Post a Comment