நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி ...
பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் , அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும் நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி ). கெஞ்சி தனது கடமைகளை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வாங்கி மீண்டும் பூமிக்கு வருகிறார் . அவர் நினைத்து நடந்ததா என்பதை ஒன்றரை மணி நேரத்திற்கு சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்வதே வினோதய சித்தம் ...
வழக்கம் போல அறிவுரைகளை அள்ளி வழங்காமல் படத்திற்கு தேவையானதை மட்டும் தந்திருக்கும் சமுத்திரக்கனி பெரிய ஆறுதல் . நாடகத்தை ரீமேக் செய்தாலும் முடிந்தவரை நாடக பாணியியை தவிர்த்தது நலம் . தம்பி ராமையா கேரக்டரை நமக்கு தெரிந்து இறந்த யாருடனாவது தொடர்பு படுத்தி பார்க்க வைப்பது படத்தின் பலம் ...
ஆங்காங்கே தம்பி ராமையா வின் ஓவர் ஆக்டிங் , எதிர்பார்த்தது போலவே நடக்கும் சில சீன்கள் , இந்து மத தத்துவங்களை பேசினாலும் கருப்பு சட்டையுடன் வரும் சமுத்திரக்கனி யின் முரண் இவற்றை தவிர்த்து பார்த்தால் வினோதய சித்தம் உணர வேண்டிய விசித்திர அனுபவம் ..
ரேட்டிங்க். : 3.25 *
No comments:
Post a Comment