25 September 2015

கிருமி - KIRUMI - SLIP BETWEEN A CUP AND LIP ...


புதுமுக இயக்குனர் அனுசரண் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனோடு இணைந்து கதையை உருவாக்கியிருப்பதும் , எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை வெளியிட்டிருப்பதும் சின்ன பட்ஜெட் படம் கிருமி க்கு ஓரளவு எதிர்பார்ப்பை கொடுத்திருந்தன . படம் அதை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம் ...

கல்யாணமாகி குழந்தை இருந்தும் வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கதிர்
( கதிர் ) குடும்ப நண்பரான போலீஸ் இன்பார்மர்  பிரபாகர் ( சார்லி ) மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியனிடம் ( டேவிட் ) எடுபுடியாக சேருகிறார் . சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல கதிர் செய்யும் ஒரு செயல் அவனை புரட்டிப்போடுவதே கதை  . சுருக்கமாக சொன்னால் வெட்டிப்பயல் கதிர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவமே கிருமி ...

மதயானைக்கூட்டம் மூலம் அறிமுகமான கதிர் தான் ஹீரோ . அடுத்தடுத்து அவமானப்பட்டு துனுக்கிடும் இடங்களில் கவனிக்க வைக்கிறார் . இவரது கேரக்டர் ரொம்ப கேசுவலாக இருப்பது ஒ.கே . ஆனால் அதை சுற்றி நண்பர்களுடன் அரட்டை , பாட்டு என நேரத்தை வீணடிக்காமல் கொஞ்சம் சீக்கிரமே கதைக்குள் வந்திருக்கலாமோ என தோன்றுகிறது . இந்த கேசுவல் அப்ரோச் கதிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தை நமக்கு கொடுக்கவில்லை . அதனால் தானோ என்னமோ க்ளைமேக்ஸ் இயல்பாக இருந்தாலும் முழு ஈடுப்பாட்டுடன் ஓட்ட முடியவில்லை ...


சார்லி இயல்பான நடிப்பால் பிரபாகர் கேரக்டரை மேலும் மெருகேற்றியிருக்கிறார் . இவரை வைத்து இடைவேளையில் கொடுக்கும் ட்விஸ்ட் சூப்பர் . மனைவியாக ரேஷ்மி மேனன் நல்ல தேர்வு . ஆனால் இயல்பான படத்துக்கு இவர் மேக்கப் கொஞ்சம் உறுத்தல் . சீரியல் ஆர்டிஸ்டாக இருந்த  டேவிட் டுக்கு இந்த படம் நல்ல வாய்ப்பு . சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . வாழ்த்துக்கள் . மாரிமுத்து , யோகிபாபு எல்லோருமே படம் என்பதை மறக்கடித்தது இயல்பாகவே வந்து போகிறார்கள்.  கே இசையில் பி.ஜி மிரட்டுகிறது . ஆனால் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு தேவையா ? அதுவும் அஞ்சு ? நிச்சயம்  இயக்குனர் யோசித்திருக்க வேண்டும் . அருள் வின்சென்ட் ஒளிபதிவு இருட்டிலேயே நடக்கும் நிறைய சீன்களுக்கு வெளிச்சம் ...

புதுசான கதைக்களன் , அதற்கேற்ற டீட்டைளிங் , ரியலிஸ்டிக் அப்ரோச் , இயல்பான நடிப்பு என்று படத்திற்கு நிறைய ப்ளஸ் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் பாடல்கள் , கதிரை சுற்றியே நடக்கும் கதையில் அவனை போலவே நம்மையும் கேசுவலாக்கும் திரைக்கதை போன்ற குறைகளை   " வாளை சுழட்டும் வாழ்க்கை தலை குனிந்தால் தப்பில்லை " என்று கானா பாலாவின் குரலில் வரும் ஒபனிங் சாங்குக்கு ஏற்ப  நாமும் மன்னித்து விடலாம் . சினிமாத்தனம் இல்லாத நல்ல கதை இருந்தும் அதை எக்சிக்யுட் செய்த விதத்தில் கொஞ்சம் இடிப்பதால் கிருமி - ஸ்லிப் பெட்வீன் எ கப் அண்ட் லிப் ...

ஸ்கோர் கார்ட்  : 42

ரேட்டிங்               : 3* / 5* 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...