24 September 2015

மாயா - MAYA - மெச்சூர்ட் அட்டெம்ப்ட் ...


வணி  போய் புரட்டாசி என மாதம் மாறினாலும் தமிழ் சினிமாவில் தற்போது மாறாமல் ஓடிக்கொண்டிருப்பது பேய் சீசன் . அந்த வரிசையில் வந்திருந்தாலும் லீட் ரோலில் நயன்தாரா , நல்ல பப்ளிசிட்டி என்று வழக்கமான பேய் படங்களை விட வித்தியாசம் காட்டி எதிர்பார்ப்பை கொடுத்திருந்தாள் மாயா ...

மாயா பேய் படம் தான் ஆனால் பேயை காட்டி பயமுறுத்தும் படம் அல்ல . மாறாக பேயானவளை நோக்கி படத்தின் முக்கிய கேரக்டரை பயணிக்க வைக்கும் படம் . கைக்குழந்தையுடன் பெரிய ஹீரோயினாகும் கனவில் போராடும் அப்சரா ( நயன்தாரா ) , பத்திரிக்கையில் ஆர்டிஸ்டாக இருக்கும் வசந்த் ( ஆரி ) இருவரையும்  தனி ட்ராக்கில் பயணிக்க வைத்து மாயவனம் எனும் அமானுஷ்ய இடத்தில் இணைக்கும் திரைக்கதையே மாயா ...
நயன்தாரா க்கு நிச்சயம் இந்த படம் மைல்கல் . படத்தின் ஒபனிங்குக்கு மட்டுமல்ல படத்தையே சிங்கிள் ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் . ஆரி எபிசோட் மாறி மாறி வந்தாலும் படத்தின் மையப்புள்ளியாக இருக்கிறார் நயன் . ஆரி தேவைக்கேற்ப நடித்திருந்தும் நயன் டாமினேஷனில் ஆரி ,, சாரி . மைம் கோபி , அம்சத்  மற்றும் சில சின்ன கேரக்டர்களை வைத்துக்கொண்டு படத்தை செம்மையாக நகர்த்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு டாப் அண்ட் வைல்ட் ஆங்கிள்களில் நம்மை மிரட்டுகிறது . சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும் , ரான் யோகனின் இசையும் படத்திற்கு பலம் ...


பீட்சா பாணியில் கதைக்குள் கதை வகையறா படம் மாயா . ஆடியன்சை அடுத்தது என்ன என்று யோசிக்க வைக்கும் திரைக்கதையே படத்துக்கு பலம் , சில இடங்களில் பலவீனம் . முதல் பாதியில் மாயா பற்றி சொல்லப்படும் செய்திகளும் , இரண்டு ட்ராக் திரைக்கதையும் நம்மை படத்தோடு ஒன்ற செய்கின்றன . இடைவேளைக்கு பிறகு நமக்கு விஷயம் பிடிபட்டவுடன் கொஞ்சம் படம் நீளும் போது  கடைசியில என்ன தாண்டா சொல்ல வரீங்க என்பது  போன்ற அயர்ச்சி வருவதை மறுப்பதற்கில்லை  ...

10 - 20 நிமிடங்கள் படத்தின் அளவை குறைத்து  வேகத்தை கூட்டியிருந்தால் முன் வரிசையில்  சிலர் தூங்குவதை தவிர்த்திருக்கலாம் . பேய்ப்பட  ஃபார்முலாவுக்குள் சிக்காமல் சீரியசாக போகும் கதையில் வரும் வைர மோதிர மேட்டர் ஆர்டினரி . நயன்தாரவுக்கு பணம் கொடுத்தவன் கதி கடைசில என்ன பாஸ் ?. படத்தை பார்த்து பயந்தேன் என்று சொல்பவர்கள் நிச்சயம் இதய நல மருத்துவரை அணுகுவது நலம் . படத்தில் ஹாரர் என்பதை விட திரைக்கதையில் இருந்த த்ரில்லே படத்துக்கு தில். திகிலால் நம்மை பெரிதாக மிரட்டாவிட்டாலும் காமெடி , மைதா மாவு பூசிய பேய் , சாமியார் என்றெல்லாம் வதைக்காமல் சொல்ல வந்ததை இயக்குனர் அஷ்வின் சரவணன் முதல் படத்திலேயே மெச்சூர்டாக சொன்ன விதத்தில் பேசப்படுவாள் இந்த மாயா ...

ஸ்கோர் கார்ட் : 43

ரேட்டிங்              : 3.25* / 5 *  




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...