திட்டமிட்டு ரிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணி பார்க்கும் படங்கள் சொதப்பும் வேளையில் , சும்மா பாக்கலாமே என்று போகும் சின்ன பட்ஜெட் படங்கள் செம்மையாக இருக்கும் . மாநகரம் அதில் ரெண்டாம் வகை . நடிகர்களை தவிர்த்து இயக்குனர் உட்பட அனைவரும் புதுவரவுகள் என்பதை நம்ப முடியவில்லை ...
வேலைக்காக சென்னை வரும் ஸ்ரீ , அவரை இண்டெர்வியூ செய்யும் எச்.ஆர் பெண்ணை ( ரெஜினா ) பல வருடங்களாக காதலிக்கும் சுதீப் , கார் ஓட்டுநர் சார்லீ , ஒரு கடத்தல் கும்பல் இவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களின் சுவாரசிய தொகுப்பே மாநகரம் ...
வழக்கு , ஓ.ஆ வை தொடர்ந்து ஸ்ரீ க்கு சரியான படம் . வேலை தேடும் இளைஞனாக வெகு இயல்பாக பொருந்துகிறார் . கிளைமேக்ஸ் சண்டையில் இவரது ஆக்ரோஷம் அதிர வைக்கிறது . நல்ல உயரம் , உடல் மொழியுடன் வரும் சுந்தீப் கிஷன் கேரக்டர் ஸ்கெட்சில் ஹீரோயிசம் இருந்தாலும் காட்சிகள் இயல்பாகவே இருக்கின்றன . ரெஜினா ரெஃ ப்ரிஜிரே ட்டரில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் . படத்தின் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் இவர் மட்டுமே . சார்லீ , மது போன்றோர் சரியான தேர்வு . சீரியசான படத்தில் காமெடி என்ற பெயரில் கொலை செய்யாமல் ராமதாஸ் ப்ளாக் காமெடியால் ராவடி செய்கிறார் . இவரை சரியாக பயன்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...
படத்திற்கு இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே பக்க பலமாக இருந்து ஸ்மால் பட்ஜெட் படத்துக்கு ரிச் லுக்கை கொடுக்கின்றன . வேகமான திரைக்கதை என்பது வெறும் கேமராவை அங்குமிங்கும் ஆட்டுவதோ , டாட்டா சுமோவை வேக வேகமாக ஓட்டுவதோ இல்லை என்பதை சீனியர் இயக்குனர்கள் லோகேஷிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் .அதிலும் குறிப்பாக வேறு வேறு சம்பவங்களை சரியாக கோர்ப்பதென்பது தனி கலை. அதை எடிட்டர் பிலோமின் ராஜ் உதவியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கச்சிதமாக செய்திருக்கிறார் . நீண்ட நாட்கள் கழித்து முற்றிலுமாக நம்மை ஒன்றை வைத்த படம் ...
மாநகரம் என்ற தலைப்பை பார்த்தவுடன் சிட்டி யில் நடக்கும் அட்ராஸிட்டிகளை படம் பிடித்து கடைசியில் பாடம் எடுப்பார்களோ என்று பயந்தால் ஏமாற்றமே , சார்லி , ஸ்ரீ இருவரும் காருக்குள் பேசிக்கொள்ளும் வசனங்களிலேயே சிட்டி பற்றிய ஒரு ஒரு அவுட்லுக்கை ஸ்வீட் அண்ட் சார்ட்டாக கொடுத்திருப்பது க்யூட் . சஸ்பென்சாக போகும் படத்தில் சில நிமிடமே இருந்தாலும் வரும் லவ் பாட்டு , பி.கே.பி பற்றி கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்ட் அப் இவை தவிர படத்தில் பெரிய குறைகள் இல்லை. மிரட்டும் கதையெல்லாம் ஒண்ணுமில்லை , நெஞ்சை நக்கும் கிளைமேக்ஸ் இல்லை , உருக விடும் நடிப்பும் இல்லை ஆனால் திரைக்கதை என்கிற வஸ்து
ஒரு படத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர நினைப்பவர்களுக்கு மஸ்ட் வாட்ச் இந்த மாநகரம் ...
ஸ்கோர் கார்ட் : 46
ரேட்டிங் : 3.75* / 5 *
No comments:
Post a Comment