கண்களில் விழுந்தாய்
காதலில் கரைந்தாய்..
சந்தோசம் கொடுத்தாய்
கவலைகள் கெடுத்தாய்...
எனக்கு வலித்தால்
நீ துடித்தாய்
துன்பம் காட்டாமல்
நடித்தாய்...
எனை பார்த்துக்கொண்டாய்
குழந்தையாய்
உனை பார்த்ததில்லை
அகந்தையாய்...
என் மீது
எனக்கே
நம்பிக்கை ஊட்டினாய்
என்னுள்
ஞானத்தீ மூட்டினாய்...
துவண்ட போது
தேற்றினாய்
திறமைகளை போற்றினாய்...
எனக்காக பிறந்தாய்
சுயநலம் மறந்தாய்...
இப்படி எல்லாமே தந்தாய்...
காமமற்ற பொழுதுகளில்
நீ
மேலும் ஒரு தாய்...

