24 May 2017

சங்கிலி புங்கிலி கதவை தொற - SBKT - கஷ்டப்பட்டு ...


து ஓய்ந்தாலும் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடிக்கு ஓய்வே இல்லையென நினைக்கிறேன் . அட்லீயின் தயாரிப்பில் ஐக் இயக்கத்தில் வந்திருக்கும் வழக்கமான ஹாரர் காமெடி யான ச.பு.க.தி  யில் ஜீவா - ஸ்ரீ திவ்யா - சூரி என்று காம்பினேஷன் மட்டுமே  மாறியிருக்கின்றன ...

ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வாசு ( ஜீவா )  தன் சிறு வயது கனவான பெரிய பங்களாவை  சில திகிடுதத்தங்கள் பண்ணி வாங்குகிறார் . வாங்கிய பிறகு தான் தெரிகிறது அவர் கதை விட்ட பேய் அந்த பங்களாவுக்குள் உண்மையிலேயே இருக்கிறது . தன் வீட்டையும் , குடும்பத்தையும் எப்படி பேயிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே  படம் . அதை பயத்தை குறைத்து பாசத்தை கூட்டி  கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

ஜீவா வுக்கு குடித்து விட்டு கும்மாளம் அடிக்காமல் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பான கேரக்டர் . அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பில் ஜீவன் தெரிகிறது . சூரியே ஒரு சீனில்  குள்ளச்சி என்று கலாய்க்கும் ரேஞ்சில் தான் ஸ்ரீதிவ்யா கேரக்டர் இருக்கிறது . விஷால் , எஸ்.கே வை தொடர்ந்து ஜீவாவுடன் சூரியின் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது . ஜோடி இருந்தாலும் தனியாக அவருக்கு டூயட் வைக்காதது ஆறுதல் . ராதா ரவி தனக்கேயுரிய நடிப்பால் மிரட்டுகிறார் . தம்பி ராமையா தம் கட்டி பேசி செகண்ட் ஷோவில் தூங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் ...


ஹாரர்ராக ஆரம்பிக்கும் படம் காமெடிக்குள் பயணித்து இடைவேளை வரை அப்படியிப்படி ஓடி விடுகிறது . இந்த டெம்ப்ளேட்டில்  நிறைய படங்கள் வந்திருப்பினும் சமீபத்திய உதாரணம் தில்லுக்கு துட்டு . அதைப்போலவே இதிலும் எதிர் பார்ட்டியை பயமுறுத்த பேய் வேஷம் போடுகிறார்கள் . ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது . படத்தில் ஹாரர் என்று பெரிதாக எதுவுமில்லை . காமெடி மேம்போக்காக  இருப்பது போல பட்டாலும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது ...

வாடகை வீட்டு கஷ்டங்களை ஹைக்கூ போல அழகாக சொல்லியிருக்கிறார்கள் . அந்த திரைக்கதை அழகு படம் நெடுக இல்லாதது குறை . ஆர்.ஆர் ஓகே ஆனால் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் . குடும்ப செண்டிமெண்ட் பேசி விட்டு இலை மறை யாக இல்லாமல் வெறும் இலையை கட்டி சூரியை ஒட விட்டு காம டி பண்ணியிருப்பது நெருடல் . பயம் , காமெடி , செண்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கலவையாக கொடுக்க நினைத்திருக்கிறார்கள் . ஆனால் எதிலுமே நிறைவில்லாமல் பழைய சாவியை வைத்து கஷ்டப்பட்டே  கதவை தொறந்திருக்கிறார்கள் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *  

ஸ்கோர் கார்ட் : 40


1 May 2017

பாகுபலி 2 - BAHUBALI 2 - The Conclusion - கோடை கொண்டாட்டம் ...


" Why Kattappa Killed Bahubali " ? - இந்த கேள்வியை  தான் கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவே கேட்டுக்கொண்டிருந்திருக்கும்  . ஆனால் இந்த கேள்விக்கான பதிலை படம் பார்க்கும் போதே யூகிக்க முடிந்தாலும் அந்த பிரம்மாண்டம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது . பாகுபலி 1 வசூல் மூலம் ஷாருக் , சல்மான் , அமீர் என்று எல்லா கான்களையுமே  கலங்கடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . பாகுபலி 2 மூலம் ஹாலிவுட்டுக்கே சவால்  விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம் ...

கட்டப்பா ( சத்யராஜ் ) வின் வாக்குமூலம் வாயிலாக தொடங்கும் படம் அமரேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) யின் அட்டகாசமான அறிமுகம் , தேவசேனா
( அனுஷ்கா ) வுடனான காதல் ,   அன்னை சிவகாமியுடன் மனக்கசப்பு , அரியணைக்காக சகோதரன் பல்லதேவன்
( ராணா டக்குப்பட்டி ) செய்யும் சூழ்ச்சி என்று விரியும் படம் மகன் மஹேந்திர பாகுபலி ( பிரபாஸ் ) மகிழ்மதி யின்  ஆட்சியை கைப்பற்றுவதோடு முடிகிறது ...


தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்க்ரீனில் வந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கிறது . அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி . முதல் பாகத்தை விட இதில் அவருடைய உழைப்பு கடுமையானது . ஹீரோயிசம் இதில் படு தூக்கலாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்தாலும் அந்த பிரம்மாண்ட பாகுபலிக்கு பிரபாஸ் படு கச்சிதம் . ராணா தன்  பார்வையிலேயே வில்லத்தனத்தை காட்டுகிறார் . வில்லன் கேரக்டருக்கு உடம்பை இந்த அளவு வருத்தி ஏற்றியது இவராக தான் இருக்கும் . அரசணை வேண்டுமென்றால் அண்ணனாவது , தம்பியாவது என்கிற வன்மம் படம் நெடுக அவர் உடல்மொழியிலேயே தெரிகிறது ...

அரசிக்கேற்ற கச்சிதமான வேடத்தில்  அனுஷ்கா . என்ன படம் ரொம்ப வருடம் எடுத்ததாலோ என்னமோ அம்மணி டயட்டை மறந்துவிட்டார் . விளைவு சில சீன்களில் ஆன்டி போல தெரிகிறார் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் . " நான் இந்த பெரிய படத்தில் சின்ன நடிகன் " என்று மன்னிப்பு கடிதம் வாசித்தார் சத்யராஜ் . படம் பார்த்த பிறகு புரிகிறது . ஹீரோவுக்கு அடுத்த படியாக வரும் ரொம்ப சின்ன வேடம் என்று . முதல் பாதி வேகமாக நகர்வதற்கு இவரது காமெடி நிறையவே கை கொடுக்கிறது . படையப்பா வுக்கு பிறகு ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் . ஆஜானுபாகுவான ஆண்களுக்கு மத்தியில் உருவத்தில் சின்னவராக  இருந்தாலும் கம்பீரமான நடிப்பால் மிரட்டுகிறார் .  நாசர் நடிப்புக்கு கோபத்தில் சுவற்றை உடைக்கும் அந்த ஒரு சீனே போதும் . அனுஸ்கா வின் மாமா வாக வருபவரும் இந்த ஸ்டார் பட்டாளத்துக்கு நடுவே ஸ்கோர் பண்ணுகிறார் ...


மேலைநாடுகளுக்கு எந்தவிதத்திலும் இந்தியன் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் . காதல் , ஆக்சன் , செண்டிமெண்ட் என்று எல்லா காட்சிகளிலும் படத்தின் பிரம்மாண்டத்தை நம் கண்களிலும் தக்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு . சி.ஜி . ஆக்சன் , செட் என்று எல்லாமுமே சேர்ந்து நம்மை புது உலகுக்குள் கொண்டு செல்கின்றன .
கீரவாணி யின் பின்னணி இசை இதில் முந்தையதை விட ஒரு மாற்று குறைவு தான் . கார்க்கியின் பாடல்கள் டப்பிங்க் நெடியில் இருந்தாலும் வசனங்கள் கவர்கின்றன .  ஆனால் இந்த டெக்கனிகள் பூச்சாண்டிகளை மட்டுமே நம்பாமல் திரைக்கதையில் தனது தனி முத்திரையை பதிக்கிறார் ராஜமௌலி ...

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் ஒரு வித தொய்வை கொடுத்தாலும் முதல்  பாதி போவதே தெரியவில்லை . படத்திற்கு ஆக்சன் காட்சிகள் தான் பலம்னாலும்  ஒரு சின்ன பெஞ்சில் முட்டிக்கொண்டாலே நமக்கு முட்டி ரெண்டு நாளைக்கு விண்ணுன்னு தெறிக்குது இதுல என்னென்னா கோட்டையே இடிஞ்சு விழுந்தாலும் திரும்பவும் எந்திருச்சு ஃப்ரெஷ்ஷா சண்டை போடுறாய்ங்க . பிரபாஸ் தாவி தாவி ஓடும் போது சோட்டா பீம் கண் முன் வந்து போகிறார் . பாகுபலி 1 இல் " ஐஸ்தராப்பூ ஸ்வஞிக " என்று நமக்கு புது பாஷை சொல்லிக்கொடுத்த வில்லன் இதில் மிஸ்ஸிங் . ஹாலிவுட்டின்  ஹீ மேன் , ஸ்பைடேர் மேன் , சூப்பர் மேன் இதுக்கெல்லாம் தாத்தா நம்ம ஹனுமான் . அதை திரையில் சொல்வதற்கும் நம்மிடம் ஆள் இருக்கிறது எனும் வகையில் உலக அரங்கில்  நம்மை தலைநிமிர வைத்திருக்கும் படம் பாகுபலி . "பாகூகூ கூ கூ  பலி " , " மகிழ் மதீஈ " என்று வீட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் கூவ வைத்திருக்கும் பாகுபலி 2 நிச்சயம் கோடை கொண்டாட்டம் ...

ரேட்டிங்க்           : 3.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 48








8 April 2017

காற்று வெளியிடை - KAATRU VELIYIDAI - களிப்பில்லை ...


மிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன ? ...

ஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி  எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின்  காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம் ...

கார்த்தி க்கு பைலட்டுக்கு ஏற்ற தோற்றம் . படத்தின் களம்  ஸ்ரீநகரில் நடப்பதாலோ என்னமோ மீசையை மழித்து ஒரு நார்த் இந்தியன் லுக் கொடுத்திருக்கிறார்கள் . பாவம் நம்ம பருத்தி வீரனுக்கு அது செட்டே ஆவல . போக போக  பழகி விட்டாலும் அவர் ரொமான்டிக்காக பார்ப்பதாக நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கும் போது நமக்கு வெறுப்பு தான் வருகிறது . அதிதி ராவ் அழகாக  இருக்கிறார் . அவரை ஒளிப்பதிவு இன்னும் அழகாக காட்டுகிறது . காதலுக்கும் , தன்மானத்துக்கும் இடையே தவிக்கும் கேரக்டரில் ராவ் ரணகளம் செய்கிறார் . ஆர்,ஜே.பாலாஜி  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் . மற்றபடி பொதுவாக வளவளவென்று பேசி எல்லோரையும் கலாய்ப்பவர்  இதில் காயடிக்கப்பட்ட காளை  போல உம்மென்று இருப்பது வேதனை ...


படத்தில் ரவிவர்மனின் கேமரா தனி கேரக்டர் போலவே கூட வருகிறது . பனிமலைகளை காட்டும் விதத்திலேயே நமக்கு லேசாக குளிருகிறது .
" அழகியே " பாடலை  அதிகமாக முணுமுணுக்க வைக்கும் ஏ.ஆர்.ஆர் படம் நெடுக ஆர்.ஆர் மூலம் மென்மையாக வருடுகிறார் . ஆஸ் யூசுவல் டெக்கனிகலாக எந்த குறையும் வைக்காமல் விருந்து படைக்கிறார்  மணி ...

ஃப்லைட்டில் சாகசம் காட்டி புதுப் பெண்ணை இம்ப்ரெஸ் செய்வது , ஒரு சீனிலேயே இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எஸ்டாபிளிஷ் பண்ணுவது  , ஹாஸ்பிடலில் வைத்து நடக்கும் சண்டையில் மொத்த குடும்பத்தின் குணாதிசியங்களை சொல்வது , " நீ என்னை  செல்ல நாய்க்குட்டி மாதிரி ட்ரீட் பண்ற " என்று ஈகுவல் ரிலேஷன்ஷிப் புக்கு ஏங்கும் அதிதியின் குரல் ஆண்களே நோக்கி பாயும் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வைப்பது என மணியின் மேஜிக் படத்தில் தெளிக்க விடப்பட்டிருக்கிறது ...

ரெண்டரை  மணி நேர படத்துக்கு இது மட்டும் போதுமா ? அலைபாயுதே , ஓ.கே வில் கையாண்ட அதே காதல் , காதலில் பிரிவு , பிறகு சேர்வது வைகையறா கதை தான் என்றாலும் முதலிரண்டில் காதலர்கள் சேர்வார்களா என்று நமக்கிருந்த பதைபதைப்பு இதில் டோட்டலி மிஸ்ஸிங் . இதில் கார்த்தி கார்கில் போரில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு தப்பித்து வரும் போது அவர் குழந்தைக்கே மூன்று வயது ஆகி விடுகிறது . மணி யின் படங்களில் காதலர்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ இல்லையோ மறக்காமல் மேட்டர் செய்து விடுகிறார்கள் . காதலில் இருக்கும் ஆண் மேலாதிக்கத்தை சுட்டிக் காட்டிய விதத்தில் படம் கவர்கிறது . மற்றபடி படம் பார்ப்பவர்கள் போலவே மணியும் ரொம்ப க்ரிப்பாக இல்லாமல்  கேர்லெஸ்ஸாகவே இருந்திருப்பர் போல . பெட்டெர் லக் நெஸ்ட் டைம் மணி சார் ...

ரேட்டிங்க் : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40 

2 April 2017

கவண் - KAVAN - கொஞ்சமாய் கவர்கிறான் ...


பிரம்மாண்டமான படங்களை கையாள்வதில் சங்கருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் திறமையானவர் கே.வி.ஆனந்த் . இவர் படங்களில் லாஜிக் இல்லாவிட்டாலும் சுபா வுடன் இணைந்து திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார் . அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் கவண் . இதுவரை வேறு  இயக்குனர்கள் படங்களில் நடிக்காத டி.ஆர் பல வருட இடைவெளிக்கு பிறகு திரையில் வருவது படத்தின் டிஆர்.பி ஏறுவதற்கு உதவியிருக்கும் ...

ஜென்1 டி.வி யில் வேலைக்கு சேரும் திலக் ( விஜய் சேதுபதி ) சேனலை No.1 ஆக்குவதற்காக அடாவடி அரசியல்வாதியுடன் ( போஸ் வெங்கட் ) கை கோர்த்துக் கொண்டு  எம்.டி ( ஆகாஸ்தீப் ) செய்யும் தில்லு முல்லுகளை பொறுக்க முடியாமால் பொங்கியெழுவதே கவண் . சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வியாபார நோக்கை மட்டும் மனதில் கொண்டு செயல்படும் பல நான்காவது தூண்களின் கள்ளாட்டத்தை  கமர்சியலாய் காட்சிப்படுத்துகிறான் இந்த கவண் ...

சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு கவண் நிச்சயம் நல்ல கமர்சியல் பிரேக் . அலட்டிக்கொள்ளாமல் தனக்கே உரித்தான பாணியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் . சில சமயங்களில் வசனங்களை தின்று  விட்டால் கூட உடல் மொழியால் சமன் செய்கிறார் . சபலப்பட்டு விட்டு மடோனா வை சமாளிக்கும் இடம் சூப்பர் . மடோனா க்ளோஸ் அப் காட்சிகளில் மயங்க வைக்கிறார் . கேரளத்துக்கே உரிய பெரிய மனசால் கிறங்க வைக்கிறார் . மத்தபடி நடிப்பு , சாரி அத நான் கவனிக்கல . அயன் அளவுக்கு இல்லாமல் இதில் ஜெகனை அண்டர் யுடிளைஸ் செய்திருக்கிறார்கள் . மீடியா பெர்சனாலிட்டியாக பூர்ணிமா பக்கா மேட்ச் ...


டி.ஆர் படத்துக்கு பலம் , அதே சமயம் சில இடங்களில் பலவீனமும் கூட . முதல் பாதியில் இவர் வந்து பழைய படங்களை பற்றி ஜென் டி.வி எம்.டி யிடம்  பாடம் எடுப்பது படுத்தல் . இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதிக்கு இணையாக வரும் டி.ஆர் நடிப்பை விட மிமிக்ரி செய்து அப்லாஸ் வாங்குகிறார் . விக்ராந்த் நடிப்பில் அப்துல் கேரக்டர் முஸ்லீம் இளைஞனுக்கு மீடியாவால் நேரும் துன்பத்தை கொஞ்சம் மிகை கலந்து வெளிச்சம் காட்டுகிறது . வருசத்துக்கு அதிகபட்சம் நாலு படம் படத்துக்கு நாலு பாட்டு இதுக்கே போட்டதையே போடும் ஆதியை என்னத்த சொல்ல . கே.வி - ஹாரிஸ் கூட்டணியின் இழப்பு நன்றாக தெரிகிறது ...

கோ , மீடியா டைகூனாக பிரகாஸ்ராஜ் நடித்த பூலோகம் , முதல்வன் என்று மற்ற படங்களை  ஆங்காங்கே கட் செய்து கவணில் பேஸ்ட் செய்திருக்கிறார்கள் . டி.ஆர்.பி  எகுறனும்னா எதுவும் தப்பில்ல என்று ஊடகங்கள் செய்யும் உல்டா வேலைகளை ஜாலியாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறான் கவண் . ஆனால் அழுகைக்காக ஒரு சிறுவனை பூர்ணிமா அடிப்பதெல்லாம் ஓவர் . இண்டெர்வெல் ப்ளாக் கை முடித்த விதம் ஹைக்கூ ...

முதல் பாதி முழுவதும் மீடியா மேட்டரை வைத்து நன்றாகவே ஒப்பேற்றியவர்கள் அதன் பிறகு கெமிக்கல் ஃபேக்டரி , போராட்டம் என்று அரைத்த மாவையே அரைத்து போரடிக்கிறார்கள் . ஜென் 1 டி.வி ல எத லைவா போட்டாலும் மக்கள் பாக்குறாங்க சரி லேகிய விளம்பரம் பண்ற முத்தமிழ் டி.வி ல எதையோ போட்டாலும் எல்லாரும் பாப்பாங்களா ? அது என்ன லைவ் கிரிக்கெட் மேட்சா ?. சில சமயம் நாம்ம படத்துக்கு வந்தோமா இல்ல வீட்ல நியூஸ் சேனல் பாக்குறோமாங்குற டவுட்டு நமக்கு வரத்தான் செய்யுது . இப்படி கமர்சியல் பிரேக்குகளின் டூ மச் குறுக்கீடுகளால் கவண் கொஞ்சமாய் கவர்கிறான் ...

ரேட்டிங்க்           : 3 * / 5 * 
ஸ்கோர் கார்ட் : 42






26 March 2017

கடுகு - KADUGU - காரத்தை குறைத்திருக்கலாம் ...


ரண்டாவது  படம் கோலி சோடா மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் . முதல் படம் போலவே மூன்றாவது படத்திலும் தனது கதையை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் . பரத் - ராஜகுமாரன் என்று வித்தியாச கூட்டணியிலேயே  புருவம் உயர்த்த வைத்தவர் அதில் ஜெயித்தாரா ? பார்க்கலாம் ...

அழிந்து போன புலிவேஷக்கலையின் மிஞ்சியிருக்கும் சொற்ப கலைஞர்களுல் ஒருவன் புலி ஜே பாண்டி ( ராஜகுமாரன் ) . தரங்கம்பாடி க்கு 
மாற்றல் ஆகும் இன்ஸ்பெக்டருடன் எடுபிடியாக செல்லும் பாண்டி அங்கே 14 வயது சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக வெடித்து சிதறுவதே கடுகு ...

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதையை படித்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது . ஆனால் சினிமாவில் யாரும் தொடாத அந்த புலிவேஷத்தை கையிலெடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . குள்ளமான தோற்றத்தில் சாதுவாக இருக்கும் ராஜகுமாரன் இந்த கேரக்டருக்கு சரியான தேர்வு . முதல் சீனிலேயே அவருடைய கேரக்டரை எஸ்ட்டாப்ளிஸ் பண்ண விதம் சிறப்பு . சாது மிரண்டால் பாணியில் அவர் க்ளைமேக்க்ஷில் பொங்கி எழுவது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தாலும் யதார்த்த கதைக்களனுக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது . அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர் நிறைய அழுது கொண்டே இருப்பது தொய்வு ...


ஓவர் ஆக்டிங்க் செய்து நம்மை சில இடங்களில் நெளிய வைக்கும் ராஜகுமாரனுக்கு எதிர்ப்பதமாக தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார் பரத் . தவறிழைக்கும் மந்திரியை பலமிருந்தும் சுய லாபத்துக்காக எதிர்க்காமல் மவுனம் காத்து குற்ற உணர்ச்சியில் வாடும் நம்பி யாக வரும் பரத் பெர்ஃபெக்ட். ஆனால் இவர் நல்லவரா ? கெட்டவரா என்கிற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்கும் போல . புலி வேஷம் கட்டுபவர்  என்று என்ன தான் லாஜிக் சொன்னாலும் பக்கா பாக்சரான பரத் தை ராஜகுமாரன் பாய்ந்து பாய்ந்து அடிப்பதெல்லாம் காதில் பூ . இதற்கு பதில் பரத் எவ்வளவு அடித்தும் இவர் நியாயத்துக்கு போராடுபவராக காட்டி அதன் மூலம் பரத் மனம் திருந்துவது போல காட்டியிருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும் ...

விஜய் மில்டனின் சகோ பரத் சீனிக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை . முதல் பாதி தொய்வில்லாமல் நகர்வதற்கு இவர் முக்கிய காரணம் . அதே போல இவர்  காதலில் நடக்கும் ஆள்  மாறாட்டம் பெரிதும் கவரவில்லை . காதலுக்கு வெளி அழகு முக்கியமில்லை என்பதை தெளிவாக உணர்த்தும் கேரக்டராக டீச்சர் எபி . அதில் நடித்திருக்கும் பிரசித்தா வுக்கும் , அந்த கேரக்டரின் பின்புலத்தை சி.ஜி மூலம் நெகிழ்ச்சியாக சொன்ன விதத்துக்கும் பாராட்டுக்கள் ...


" கெட்டவங்களை விட தப்பு நடக்கும் போது தட்டிக்கேக்காம போற நல்லவங்க தான் தப்புக்கு காரணம் " , " நேத்து வரை அண்ணா , மாமா ன்னு அசையா பேசின பொண்ணு இன்னிக்கு ஆம்பளைங்கள பாத்தாலே பயந்து ஓடுறா சார் " போன்ற வசனங்கள் சூப்பர் . ஃபேஷ்புக் , வாட்ஸ் அப் என்று நடப்பு தொழில் நுட்பத்தை வைத்து காமெடி செய்திருப்பது அருமை . முதல் பாதியை தொய்வில்லாமல் நகர்த்தி இடைவேளையில் டென்ஷனோடு முடித்த திரைக்கதைக்கு  ஒரு பூங்கொத்து . ஆனால் இடைவேளைக்கு பிறகு நடக்கும் ட்ராமாக்களை பார்க்கும் போது  நல்லாத் தானேய்யா போய்கிட்டு இருந்துச்சு என்று கேட்கத்  தூண்டுகிறது ...

எளியவன் வலியவனை எதிர்க்கும் கதை . இதில் கடைசியில் எளியவன் ஜெயிப்பதைத் தான் அனைவரும் விரும்புவார்கள் என்று இயக்குனருக்கும் தெரியும் .  அதையே செய்திருக்கிறார் ஆனால் ஓவர் எமோஷனலை பிழிந்து . பரத் கேரக்டரில் உள்ள குழப்பம் , எமி டீச்சர் பிரச்சனை  தெரிந்தும் அந்த சிறுமியை நேரில் பார்க்காமலேயே இருப்பது , சிறுமி அந்த பிரச்சனையை தாயிடம் கூட சொல்லாமல் தற்கொலை அளவு போவது , பக்கா சினிமாத்தனமான கிளைமேக்ஸ் சண்டை இப்படி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் . என்ன கொஞ்சம் காரத்தை குறைத்திருக்கலாமோ என்று தோன்றினாலும் நாட்டில் சுற்றி நடக்கும் பாலியல் வன்முறைகளை பார்க்கும் போது இது போன்ற கன்டென்ட் சூழலுக்கு தேவையானது தான் ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 *  

ஸ்கோர் கார்ட் : 43



11 March 2017

மாநகரம் - MAANAGARAM - மஸ்ட் வாட்ச் ...


திட்டமிட்டு ரிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணி பார்க்கும்  படங்கள் சொதப்பும் வேளையில் , சும்மா பாக்கலாமே என்று போகும் சின்ன பட்ஜெட் படங்கள் செம்மையாக இருக்கும் . மாநகரம் அதில் ரெண்டாம் வகை . நடிகர்களை தவிர்த்து இயக்குனர் உட்பட அனைவரும் புதுவரவுகள் என்பதை நம்ப முடியவில்லை ...

வேலைக்காக சென்னை வரும் ஸ்ரீ , அவரை இண்டெர்வியூ செய்யும் எச்.ஆர் பெண்ணை ( ரெஜினா ) பல வருடங்களாக காதலிக்கும் சுதீப் , கார் ஓட்டுநர் சார்லீ , ஒரு கடத்தல் கும்பல் இவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களின் சுவாரசிய தொகுப்பே மாநகரம் ...

வழக்கு , ஓ.ஆ வை தொடர்ந்து ஸ்ரீ க்கு சரியான படம் . வேலை தேடும் இளைஞனாக வெகு இயல்பாக பொருந்துகிறார் . கிளைமேக்ஸ் சண்டையில் இவரது ஆக்ரோஷம் அதிர வைக்கிறது . நல்ல உயரம் , உடல் மொழியுடன் வரும் சுந்தீப் கிஷன் கேரக்டர் ஸ்கெட்சில் ஹீரோயிசம் இருந்தாலும் காட்சிகள் இயல்பாகவே இருக்கின்றன . ரெஜினா ரெஃ ப்ரிஜிரே ட்டரில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் . படத்தின் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் இவர் மட்டுமே . சார்லீ , மது போன்றோர் சரியான தேர்வு . சீரியசான படத்தில் காமெடி என்ற பெயரில் கொலை செய்யாமல் ராமதாஸ் ப்ளாக் காமெடியால் ராவடி செய்கிறார் . இவரை சரியாக பயன்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...


படத்திற்கு இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே பக்க பலமாக இருந்து ஸ்மால் பட்ஜெட் படத்துக்கு ரிச் லுக்கை கொடுக்கின்றன . வேகமான திரைக்கதை என்பது வெறும் கேமராவை அங்குமிங்கும் ஆட்டுவதோ , டாட்டா சுமோவை வேக வேகமாக ஓட்டுவதோ இல்லை என்பதை சீனியர் இயக்குனர்கள் லோகேஷிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் .அதிலும் குறிப்பாக வேறு வேறு சம்பவங்களை சரியாக கோர்ப்பதென்பது தனி கலை. அதை எடிட்டர் பிலோமின் ராஜ் உதவியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கச்சிதமாக செய்திருக்கிறார் .  நீண்ட நாட்கள் கழித்து முற்றிலுமாக நம்மை ஒன்றை வைத்த படம் ...

மாநகரம் என்ற தலைப்பை பார்த்தவுடன் சிட்டி யில் நடக்கும் அட்ராஸிட்டிகளை  படம் பிடித்து கடைசியில் பாடம் எடுப்பார்களோ என்று பயந்தால் ஏமாற்றமே , சார்லி , ஸ்ரீ இருவரும் காருக்குள் பேசிக்கொள்ளும் வசனங்களிலேயே சிட்டி பற்றிய ஒரு ஒரு அவுட்லுக்கை ஸ்வீட் அண்ட் சார்ட்டாக கொடுத்திருப்பது க்யூட் . சஸ்பென்சாக போகும் படத்தில் சில நிமிடமே இருந்தாலும் வரும் லவ் பாட்டு , பி.கே.பி பற்றி கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்ட் அப் இவை தவிர படத்தில் பெரிய குறைகள் இல்லை. மிரட்டும்  கதையெல்லாம் ஒண்ணுமில்லை , நெஞ்சை நக்கும் கிளைமேக்ஸ் இல்லை , உருக விடும் நடிப்பும் இல்லை ஆனால் திரைக்கதை என்கிற வஸ்து
ஒரு படத்தின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியம் என்பதை உணர நினைப்பவர்களுக்கு மஸ்ட் வாட்ச் இந்த மாநகரம் ...

ஸ்கோர் கார்ட் : 46 

ரேட்டிங்   : 3.75* / 5 * 


8 March 2017

குற்றம் 23 - KUTTRAM 23 - குடும்ப க்ரைம் நாவல் ...


வெற்றியோ தோல்வியோ நம்பிக்கை தரும் இயக்குனர்கள் சிலரில் ஒருவர் அறிவழகன் . சுபா , பி.கே.பி இவர்களுக்கெல்லாம் அண்ணன் க்ரைம் மன்னன் ராஜேஷ்குமாரோடு இணைந்திருக்கும் படம் குற்றம் 23 . நாவலை வெள்ளித்திரையில் அப்படியே கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல . அதை இந்த கூட்டணி திறம்படவே செய்திருக்கிறது எனலாம் ...

கர்ப்பிணிப் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதன் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளை ஏ.சி.பி வெற்றி ( அருண்விஜய் ) அவிழ்க்கும் மெடிக்கல் த்ரில்லரே குற்றம் 23 . க்ரிப்போடு பக்கா  த்ரில்லராக இருந்திருக்க வேண்டிய படம் குடும்ப செண்டிமெண்டால் கொஞ்சம்  அப்படியிப்படி தள்ளாடுகிறது ...

திறமையிருந்தும் பெரிய பிரேக் கிடைக்காமல் அல்லாடும் நடிகர் அருண்விஜய் . இதில் காப் வேஷத்தில் கச்சென பொருந்துகிறார் . காதல் காட்சிகளில் குறும்புன்னகையோடு கடந்து போகிறார் . இவருக்கு ஜோடியாக மஹிமா நல்ல தேர்வு . ஆறாது சினத்தில் ரோபோ ஷங்கரை திணித்தது போலல்லாமல் இதில் தம்பி ராமையா வை அளவோடு உபயோகப்படுத்தியிருக்கிறார் அறிவழகன் . அபிநயா , அர்விந்த் , வம்சி எல்லாமே கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள் . விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை , பாஸ்கரின் ஒளிப்பதிவு எல்லாமே படத்தின் தரத்தை உயர்த்துகின்றன ...


அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை வைத்து முதல் பாதியில் முற்றிலுமாக ஒன்றை வைக்கிறார் இயக்குனர் . சாட்சிக்கார பெண்ணிடம் ஹீரோ சரண்டர் ஆவது ஹைக்கூ . ஹீரோ வீட்டிலேயே ஒரு சாவை ஏற்படுத்தி இண்டெர்வெல்லில் வைக்கும் ட்விஸ்ட் இன்ட்ரெஸ்டிங் . ஆனால் அதை இரண்டாம் பாதியில் தக்க வைக்கத் தவறிவிட்டார்கள் ...

செயற்கை முறை கருத்தரிப்பை வைத்து பிண்ணப்பட்டிருக்கும் கதையின் கரு வீக்காக இருந்தாலும் லாஜிக் முடிச்சுகளை சரியாகவே போட்டு அவிழ்க்கிறார்கள் . அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடக்க ஹீரோ தனது சவுகரியத்துக்கேற்ப விசாரணை நடத்துவது   நெருடல் .  ஸ்பெர்ம் டொனேஷனை வைத்து விக்கி டோனர் மாதிரியான ஜாலி படங்கள் ஹிந்தியில் வந்து கொண்டிருக்க இங்கே அதன் சீரியஸ் பக்கத்தை தொட்டிருக்கிறார்கள் . மேக்கிங்க் வைஸ் ஸ்டைலிஷாக இருந்தாலும் ஷார்ட் ன் ஸ்வீட் க்ரைம் நாவலாக இல்லாமல் குடும்ப சென்டிமெண்டையும் சேர்த்து குடும்ப க்ரைம் நாவலாக வந்திருக்கிறது குற்றம் 23 ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 43


12 February 2017

சிங்கம் 3 - SI3 - சர்க்கஸ் ...


ரு வழியாக பதுங்கி பதுங்கி கடைசியில் வந்தே விட்டது சிங்கம் 3 . முதல் இரண்டு பாகங்களில் இருந்த கர்ஜனை குறைந்து சத்தம் அதிகமாக கேட்டாலும் ஹரி - சூர்யா காம்பினேஷனில் வேறெதையும் புதிதாக எதிர்பார்க்க முடியாதென்பதால் ஏமாற்றமில்லை . சூர்யா  வின் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு ஆந்திராவில் கதைக்களனை அமைத்திருக்கிறார்கள் ...

ஆந்திர  உள்துறை அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க  அங்கே சென்று கமிஷனர் கொலை  வழக்கை கையிலெடுக்கிறார் துரைசிங்கம் ( சூர்யா )  . அதன் பின்னணியில் இருக்கும் சதியை ஆஸ்திரேலியா வரை சென்று முறியடிக்கிறார் . என்ன நமக்கு  தான் காதுல ங்கொய்னு கேட்டுக்கிட்டே இருக்கு ...

சூர்யா ஏழு வருடமாகியும் உடலையும் குரலையும்  அப்படியே கிண்ணென்று வைத்திருக்கிறார் . இந்த உயரத்துக்கு தமிழ்நாடு போலீஷே அதிகம்  இதுல இன்டர்நேஷனலா என்று நெருடினாலும் தனது உடல்மொழியால் அதை சமன் செய்கிறார் . முதல் பாகத்தில் லவ்வராக இருந்தவர் படிப்படியாக முன்னேறி இப்போது சிங்கத்துக்கு ஆன்டியாகியிருக்கிறார்  அனுஷ்கா . ரெஸ்ட் ரூம் என்றால் என்னவென்று தெரியாதவரை  எல்லாம் எப்படி போலீசில் சேர்த்தார்கள்  ? சூரி யை வைத்து சிரிக்க வைக்கிறேன்  பேர்வழி  என்று முகம் சுழிக்க வைக்கிறார்கள் ...


ஸ்ருதி க்கு சூர்யாவை சைட் அடிப்பது தவிர பெரிய  வேலையில்லை . இவரை சாகடிக்காதது  ஆறுதல் என்றாலும் சூரியோடு சேர்ந்து காமெடி செய்ய வைத்து நம்மை சாவடிக்கிறார்கள் . நான் தமிழன்டா  என்று கூவும் ஹீரோக்கள் படத்திலேயே ஹிந்தி வில்லன்கள் தான் இருப்பார்கள் . நான் இந்தியன் என்று கர்ஜிக்கும் சூர்யா படத்தில் வேறு யார் இருக்கப்போகிறார்கள் ?! . அதிலும் சூர்யா விடம் அடி வாங்கி சாவதற்கு அவ்வளவு பெரிய எக்சர்ஸைஸ் எதற்கு ?. ராதிகா கொஞ்ச நேரம் வந்தாலும் நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார் ...

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே மாதிரி உருட்டினாலும் பாட்டில் தாளம் போடவாவது வைப்பார் . இதில் ஹேரிஸ் ஜெயராஜ் சாரி ஜெயராஜ் . ப்ரியனின் ஒளிப்பதிவு பெர்ஃ பெக்ட் . விஜயனின் எடிட்டிங்கில் கட்டிங் ஓட்டிங் சிங்கத்தின் வேகத்தை கூட்டுகின்றன . தமிழ்த்திமிரு பேசாமல் ஒரு கட்டம் மேல போய் இந்திய இறுமாப்பை காட்டும் ஹரி யின் வசனங்கள் விறுவிறு ...

ஹரியின் டெம்ப்லேட் படம் . என்ன ஏதென்று யோசிப்பதற்குள் ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து போல படம் கடகடவென ஓடி  இடைவேளை வந்து விடுகிறது . திரும்பவும் பாப்கார்ன் சாப்பிட்டு முடிப்பதற்குள் சூர்யா பக்க பக்க மாய் டயலாக் பேசி முடித்து விடுகிறார் . முடிவில் என்ன நடக்குமென்பது கண்ணை மூடிக்கொண்டாலும் தெரியுமென்பதால் நாம் சாவகாசமாக சாப்பிட முடிகிறது . காமெடி , காதல் இவை சொதப்பினாலும் அதிரடி ஆக்சன்களால் படத்தை  நிறுத்துகிறார் ஹரி . முதல் இரண்டு பாகங்களை விட படம் குறைவு தான் என்றாலும் பரபரவென்று கத்திக்கொண்டே பறந்து பறந்து ஏதாவது சாகசம் செய்து கொண்டேயிருக்கிறது இந்த சர்க்கஸ் சிங்கம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங்   : 2.75 * / 5 * 

14 January 2017

பைரவா - BAIRAVAA - பலவீனம் ...


விஜய் க்கு இயக்குனர் பரதன் மேல் சாஃப்ட் கார்னெர்  என நினைக்கிறேன் . அதனால் தான் ஏற்கனவே ஏ.டி.எம் எதிர்பார்த்த பணம் தராத போதும் பைரவா வில் வா என்று கை கோர்த்திருக்கிறார் . பைரவா வை இயக்குனர் ஆங்காங்கே கமர்ஷியலாக குரைக்க வைத்தாலும் பை அண்ட் லார்ஜ் ஒன்ஸ் மோர் ஆவெரேஜ் அட்டெம்ப்ட் பை பரதன் ...

பேங்கில் ரெக்கவரி ஏஜெண்ட் ஆக பணிபுரியும் பைரவா ( விஜய் ) மேனேஜரின் மகள் கல்யாணத்தில் மலர்விழியை ( கீர்த்தி சுரேஷ் ) பார்த்தவுடன் மையல் கொள்கிறார் . சொந்த ஊர் திருநெல்வேலியில் அவளுக்கு காலேஜ் கரெஸ்பாண்டண்ட் பி.கே ( ஜெகபதி பாபு ) வால் பிரச்சனை என்று தெரியவர அதை தனது ஹீரோயிசத்தால் எப்படி தவுடுபொடியாக்குகிறார் என்பதே பைரவா ...

கில்லி போலவே ஹீரோயினுக்கு வரும் பிரச்சனையை தனி ஆளாக நின்று துவம்சம் செய்யும் துள்ளல் கேரக்டர் விஜய்க்கு . படத்தின் பல சுமாரான சீன்களை இவரது மாஸ் இமேஜ் தூக்கி நிறுத்தினாலும்  பல்லை
ஒவராகவே கடித்து இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் நம்மை பஞ்சர் ஆக்குகின்றன . விஜய் படங்களிலேய மிக சுமாரான ஓப்பனிங்க் சாங்க்  இதுவாகத்தான் இருக்கும் . காமெடியன் சதீஷ் கொடுத்து வைத்தவர் . விஜய்க்கு ஈக்குவலாக ஆடும் அளவுக்கு ஸ்லோவாக பாட்டு அமைந்தது அவர் அதிர்ஷ்டம் ...

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நல்ல வேளை  அரை லூசாக நடிக்கவில்லை . அழகாக இருப்பதோடு அளவாகவும் நடித்து இம்சை செய்யாமல் இருக்கிறார் .
சதீஷ் சாவகாசமாக செய்யும் காமெடிகள் சிரிப்பை தரவில்லை . மாற்றாக விஜய் கொடுத்த ரெண்டு அறையில் இன்ஸ்பெக்டர் மனது மாறி குடும்பத்தோடு சேர்வது செம்ம காமெடி . தம்பி ராமையா வை வீணடித்திருக்கிறார்கள் . ஆரவாரம் இல்லாத வில்லனாக ஜெகபதி பாபு கவர்ந்தாலும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் டேனியல் பாலாஜி ஸ்கோர் செய்கிறார் ...

சுகுமாரின் ஒளிப்பதிவு , அனல் அரசு வின் ஸ்டண்ட் காட்சிகள் படத்துக்கு பலம் . வரலாம் வா பைரவா வில் மட்டும் தெரிகிறார் சந்தோஷ் நாராயணன் . மற்றபடி இதுவரை வந்த அவர் படங்களிலேயே படு சுமாராக இருக்கிறது பைரவா ...

மாஸ் ஹீரோ படம் , பொங்கல் ரிலீஸ் இதை மட்டும் மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள் போல . எப்படியிருந்தாலும் முதல் மூன்று நாட்கள் கூட்டம் வந்துவிடும் என்பது கணக்கு . கில்லி கதையை அப்படியே கிள்ளி எடுத்து படம் பண்ணதில் தப்பில்லை . ஆனால் அதில் பாதியாவது திரைக்கதையில் இருக்க வேண்டாமா ? ! . எந்த காலத்திலாவது 64 லட்ச ரூவா பணத்த எந்த பேங்க் மேனேஜராவது டாக்குமெண்டெல்லாம் கொடுத்து அப்படியே காசா வாங்கிட்டு வருவானா ? . கந்து வட்டி காரனே ஆயிரம் ஃபார்மாலிட்டி வச்சிருக்கான் . இப்படி கீர்த்திக்காக ஊருக்கு போகும் போது கோயம்பேட்டிலேயே அனாதையாக நிற்கும் விஜய் யின் பைக்கை போல கேட்பாரற்றுக் கிடக்கிறது கதை ...

விஜய் இல்லாமல் 20 நிமிடங்களுக்கு மேல் பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் தைரியம் . விஜய் - வில்லன்களுக்கிடையே நடக்கும் சீன்களில் சுவாரசியம் கூட்டினாலும் ஏற்கனவே பழக்கப்பட்ட விஷயமாகவே படுவது சறுக்கல் . விஜய்க்கு இருக்கும் ஒப்பனிங்குக்கு அவரை நம்பி படமெடுத்ததில் தப்பில்லை . நிச்சயம் அவர் படத்துக்கு பலம் . ஆனால் அவரை மட்டுமே நம்பி மற்ற அம்சங்களில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டது பலவீனம் ...

ஸ்கோர் கார்ட் : 40 

ரேட்டிங் : 2.5 * / 5 * 

2 January 2017

தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016


2016 தமிழ் சினிமா  வுக்கு ஒரு சுமாரான ,அதே நேரம் குழப்பமான வருடம் எனலாம். 
வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அதே வருடம் லாஜிக் சுத்தமாக இல்லாத ரெமோ , இருமுகன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் , ரசனைக்குமான இடைவெளியை நிறையவே காட்டுகிறது . இசைஞானி யின் 1000 மாவது படம் , கபாலி வசூலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது , விஜய் சேதுபதியின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் தியேட்டரில் ஓடியது எல்லாம் வருடத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவுதம் மேனன் , விக்ரம் குமார் போன்றோரின் படங்கள் சொதப்பினாலும் இறுதிச்சுற்று , உறியடி போன்ற படங்களின் மூலம் சுதா , விஜயகுமார் போன்றோர் அதிகம் கவனிக்க வைத்திருக்கிறார்கள் . சூப்பர் ஸ்டார் தனக்கு இணை யாருமில்லை  என்பதை கபாலி மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் . விஜய் , சிவகார்த்திகேயன் எல்லாம் வெற்றிகளின் மூலம் தங்களது மார்க்கெட்டை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . சென்ற வருடம் தங்கமகனில் தொங்கிய தனுஷின் புகழை கொடி உயரே  பறக்க வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏழு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் , கமல் , அஜித் துக்கு ஒரு படம்  கூட வராதது ஏமாற்றமே ...

முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : 

அரையாண்டு தமிழ் சினிமா 2016 - TAMIL CINEMA 2016 HALF YEARLY REVIEW 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2016

கவர்ந்த படங்கள் 

  விசாரணை 
  இறுதிச்சுற்று 
  காதலும் கடந்து போகும் 
  இறைவி 
  உறியடி
  ஜோக்கர்
  குற்றமே தண்டனை / ஆண்டவன் கட்டளை  
  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 
  கொடி 

      தங்கல் ( தமிழ் )
  
   டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் 

   ரஜினி முருகன்  
   இறுதிச்சுற்று   
   பிச்சைக்காரன் 
   தெறி 
   வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
   கபாலி 
   இருமுகன் 
   ரெமோ 
   தேவி 
   கொடி 
     

 ப்ளாக்பஸ்டர்  :  கபாலி - KABALI - 
  
 டாப் டென் பாடல்கள்

1. பாருருவாய ( தாரை தப்பட்டை )
2. உன்மேல ஒரு கண்ணு ( ரஜினி முருகன் )
3. ஏய் சண்டைக்காரா  ( இறுதிச்சுற்று  )
4. ஒன்னு ரெண்டு   ( இறைவி   )
5. அக்கினிக்குஞ்சொன்று    ( உறியடி )
6. என்னங்க சார்  ( ஜோக்கர்  )
7. மாய நதி  ( கபாலி )
8. மக்க கலங்குதப்பா ( தர்மதுரை )
9. ஹெலெனா ( இருமுகன் )
10.தள்ளிப் போகாதே  ( அச்சம் என்பது மடமையடா )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - விசாரணை
 கவர்ந்த நடிகர் -  ரஜினிகாந்த்  ( கபாலி  )
 கவர்ந்த நடிகை - திரிஷா  ( கொடி )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சமுத்திரக்கனி  ( விசாரணை   )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - குலப்புள்ளி லீலா   ( மருது )
 கவர்ந்த காமெடி நடிகர் -  சதீஷ்  ( ரெமோ   )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  சூர்யா  ( 24 )
 கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன்  ( இறைவி )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் - இளையராஜா  ( தாரை தப்பட்டை  )
 கவர்ந்த ஆல்பம் - அச்சம் என்பது மடமையடா   ( ஏ.ஆர்.ரஹ்மான்  )
 கவர்ந்த பாடல் - பாருருவாய   ( தாரை தப்பட்டை  )
 கவர்ந்த பாடகி -  தீ  ( ஏய் சண்டைக்காரா  )
 கவர்ந்த பாடகர் - சத்யபிரகாஷ்  ( பாருருவாய )
 கவர்ந்த பாடலாசிரியர் - தாமரை  ( தள்ளிப் போகாதே  )
 கவர்ந்த வசனகர்த்தா - சமுத்திரக்கனி  ( அப்பா   )
 கவர்ந்த கதாசிரியர் - சந்திரகுமார்  ( விசாரணை  )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - விஜயகுமார்  ( உறியடி  )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  டான் மாச்சார்த்தூர்   (அச்சம் என்பது மடமையடா  )
 கவர்ந்த இயக்குனர் - வெற்றிமாறன்  ( விசாரணை )


வசூல் ராஜாக்கள் 

ரஜினிகாந்த்  ( கபாலி   )
விஜய்   ( தெறி )
சிவகார்த்திகேயன்   ( ரஜினி முருகன் / ரெமோ   ) 

ஏமாற்றங்கள்

தாரை தப்பட்டை 
அச்சம் என்பது மடமையடா

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

3 December 2016

சைத்தான் - SAITHAN - Not much scary ...


விஜய் ஆண்டனி படங்களை பார்க்க வேண்டுமென்று தோன்றியதில்லை . பின்னர் நான் , சலீம் போன்ற படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்த போது சே மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றாமலுமில்லை . அதுவும் இந்த தடவை எனது எழுத்து ஹீரோ சுஜாதா வின் ஆ வை சைத்தானாக்குகிறார்கள் என கேள்விப்பட்ட போது பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் அதே சமயம் மற்ற நாவல்களை போல இதையும் சரியாக எடுக்காமல் சொதப்பி விடுவார்களோ என்கிற கவலையும் ஒரு சேரவே இருந்தது . படம் பார்த்த பிறகு பெரிதாக சொதப்பவில்லை என்றாலும் நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது ...

புது மாப்பிள்ளை தினேஷுக்கு ( விஜய் ஆண்டனி ) மண்டைக்குள் திடீரென ஏதேதோ குரல் கேட்கிறது . அவரை டோட்டலாக கண்ட்ரோல் செய்யும் குரல் ஒரு கட்டத்தில் ஜெயலட்சுமி என்பவரை கொல்ல சொல்கிறது . அது ஏன் ? எதற்கு ? எப்படி ? என்பதை அழகான சஸ்பென்ஸ் த்ரில்லராக கொண்டு சென்று இண்டெர்வெல்லுக்கு பிறகு க்ரிப்பை மெய்ன்டைன் பண்ண முடியாமல் வழக்கமான க்ளைமேக்ஸ் வைத்து கொஞ்சம் சொதப்பியிருப்பதே சைத்தான்...

விஜய் ஆண்டனி க்கு பெரிதாக நடிக்க வரவில்லை . அது அவருக்கே தெரிந்தும் நல்ல கதையை  தேர்வு செய்வதால் ஜெயித்து வருகிறார் . இதுவரை அவரை காப்பாற்றி வந்த திரைக்கதையே இதிலும் அவரை முதல் பாதியில் காப்பாற்றியிருக்கிறது . முகத்தில் அவர் காட்ட முடியாத ரியாக்சன்களை அவருடைய பி.ஜி.எம் சமன் செய்கிறது ...


அபர்ணா நாயர் அமலா பால் குண்டடித்தது போலிருக்கிறார் . ஜெயலட்சுமி எபிசோடில் இவரது நடிப்பு அருமை  . ஒய்.ஜி ஒரு சீசனல் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபிக்கிறார் . தாமஸாக வரும் சித்தார்த்தா சங்கர் கவனிக்க வைக்கிறார் . பிரதீப்பின் கேமரா அபார்ட்மெண்ட்டையே பல ஆங்கிள்களில் காட்டி பயமுறுத்துகிறது . ஏதேதோ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது.  படத்துக்கு பி.ஜி.எம் பெரிய ப்ளஸ் ...

சுஜாதா கைவண்ணத்தில் செம்ம இண்ட்ரஸ்டிங்  நாவல் . அதில் லீட் கேரக்டருட்க்கு நேரும் பிரச்சனைகள் படு சுவாரசியமாக இருக்கும் , இதில் அதை  திறம்படவே கையாண்டிருக்கிறார்கள் . ஆனால்  லீட் கேரக்டர்  விஜய் ஆண்டனிக்கு குருவி தலையில் பனங்காய் . ஃபளாஸ்பேக் சுவாரசியம் குறைவாக இருப்பதும் , க்ளைமேக்ஸ் வழக்கமான மாஸ் ஹீரோ ஃபைட்டோடும் , அவசர கதியில் முடிந்திருப்பதும் சறுக்கல் . ஆ நாவலை படித்தவர்களுக்கு எதிர்பார்ப்பின் காரணமாக படம் பிலோ ஆவெரேஜாக தான் இருக்கும் . புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கக் கூடிய ஓகே ரகம் தான் சைத்தான் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 42 

25 November 2016

கவலை வேண்டாம் - KAVALAI VENDAM - காம டி ...




எஸ்.எம்.எஸ் க்கு பிறகு சோலோ வெற்றி எதுவும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த ஜீவா வுக்கு அதே பாணியில் வெட்டியாக ஊர் சுற்றும் ஈஸி கோயிங் Guy கதையை குஜால் சாரி காஜல் அகர்வாலுடன் சேர்த்து காம டியில் குழைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் டிகே . டைட்டிலுக்கேற்ற படி சீரியஸாக காமெடி யை கையாண்டு பெரும்பாலான இடங்களில் கவலையை மறக்க செய்திருக்கிறார்கள் ...

சின்ன வயதிலிருந்தே ஃப்ரெண்ட்ஸாக இருக்கும் அரவிந்த் ( ஜீவா ) - திவ்யா
( காஜல் ) இருவரும் லவ் பண்ணி கல்யாணம் கட்டி ஒரே நாளில் பிரிகிறார்கள் . மூன்று வருடங்கள் கழித்து டைவர்ஸுக்காக ஜீவாவை தேடி வரும் காஜலுக்கு அது கிடைத்ததா இல்லை இழந்த காதலன் கிடைத்தானா என்பதை எமோஷனலாய் இல்லாமல் வெறும் என்டெர்டைன்மெண்டாக சொல்வதே கவலை வேண்டாம் ...

ஜீவா வுக்கு ரசிகர் பட்டாளம் பெரிதாக இல்லாவிட்டாலும்   அவரை பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் மிக குறைவு . ஹீ இஸ் பக்கா நோ நான்சென்ஸ் கய் . இந்த படம் அவருக்கு டெய்லர் மேட் , அவரும் எந்த குறையும் வைக்கவில்லை . பிரிந்த மனைவியை சமாதானம் செய்ய எதுவுமே செய்யாமல் ஜாலியாக இருந்துவிட்டு அவர் வந்தவுடன் ஆஸ்பிடலில் வைத்து சென்டிமெண்டாக பேசுவது செயற்கை . மற்றபடி ஆர்.ஜே.பாலாஜி யுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி செம்ம . காஜல் அகர்வால் காத்து வாங்கும் உடையை போட்டு நெறைய ஜொல்ஸ் விட வைக்கிறார் . இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் கொஞ்சம் குழப்பினாலும் ஜீவாவுக்கு ஈக்குவல் வெய்ட் . மயில்சாமி , மந்திரா  எல்லாம் ஃபிட் ஃபார் தி பில் ...

காஜலின் தோழியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் சில ஆங்கிள்களில் சுருதி போடாமலேயே போதையை ஏற்றுகிறார் . ஆர்.ஜே வின் அட்ராஸிட்டி க்கு முன்னால் பால சரவணன் பச்சா சரவணன் . சுனைனா , பாபி சிம்ஹா இருவரும் ஜீவா - காஜல் போதைக்கு ஊறுகாய் போல பயன்பட்டிருக்கிறார்கள் . தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா வுக்கு இது போன்ற ரோல் தேவையா என அவர் யோசிக்க வேண்டும் . அபிநந்தன் ராமஜுனத்தின் ஒளிப்பதிவு நம்மை குன்னூருக்கே கூட்டி சென்று குளிரேற்றுகிறது . லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்.ஆர் கச்சிதம் . பாடல்கள் சுமார் ரகம் ...

எஸ்.எம்.எஸ் வகையறா கதைக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பாணி வயகரா வை தடவி அடல்டியிருக்கிறார்கள் . அடல்ட் காமெடி ஜெனரில் நல்ல அட்டெம்ப்ட் . சும்மா சீரியஸாக யோசிக்காமல் ரெண்டேகால் மணிநேர பொழுதுபோக்கை நம்பி சில மொக்கைகளையும் பொறுத்துக்கொண்டால் கவலையை மறக்கலாம் . படம் கோர்வையாக இல்லாமல் பிட்ஸ் அண்ட் பார்சலாக வருவதை தவிர்த்திருக்கலாம் . மொத்தத்தில் ஜீவா - காஜல் நடிப்பில் வந்திருக்கும் கவலை வேண்டாம் ஃபுல் அண்ட் ஃபுல் காம டி ...

ரேட்டிங்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40


13 November 2016

அச்சம் என்பது மடமையடா - AYM - ஆயா சுட்ட வடையடா ...



ஞ்ச் டயலாக் , குத்து டேன்சால் பி,சி சென்டர்களில் பேர் பெற்ற  சிம்புவுக்கு
( இப்போ எஸ்டிஆர் ) ஏ சென்டர்களில் விடிவி மூலம் செம்ம இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தவர் கௌதம் மேனன் . அதன் பிறகு அதை சிம்பு தக்கவைத்துக் கொள்ள தவறியது போல  இப்பொழுது இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கும் இருவருமே அந்த மேஜிக்கை தர தவறிவிட்டார்கள் என்றே சொல்லலாம் ...

எம்.பி.ஏ வில் இரண்டு அரியர் வைத்திருக்கும் எஸ்.டி.ஆர் அப்பா காசில் பைக் வாங்கி அதில் சேர்ந்து ஊர் சுற்ற நல்ல ஜோடியை தேடிக்கொண்டிருக்க அவர்  தங்கையின் தோழி ( மஞ்சிமா மோகன் ) வந்து தொக்காக மாட்டிக்கொள்கிறாள் . அதுவும் பழைய 500 , 1000 த்துக்கு ஈசியாக சேஞ்ச் கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல சிம்பு வீட்டிலேயே தங்கி படிக்கிறாள் . ( எங்க  படிச்சா ?! விடிய விடிய சிம்புவோட கடலை போடுறா , ஏன்னா  அவுங்க வீட்ல அப்பா அம்மா டெய்லி செகண்ட் ஷோ போயிருவாங்க போல ! ) . இருவரும் ஒரு லாங்  ரோட் ட்ரிப் பைக்கில் கிளம்ப சனியனும் சேர்ந்து பின்னால் உட்கார்ந்து கொள்கிறது ...

நீண்ட வருடங்கள் படம் கிடப்பில் இருந்தது சிம்பு வின் வெயிட்டில் இருந்தே தெரிகிறது . முழு தாடி , தொப்பை யுடன் சில பாடல் காட்சிகளில் அப்பாவை நினைவு படுத்தினாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை . ரொமான்ஸ் , ஆக்சன் இரண்டிலும் தேவையான உடல்மொழியால் நல்ல வேறுபாடு காட்டுகிறார் . என்ன மனுஷன் நெறைய பேசுறார் , அது பரவாயில்ல . ஆனா கௌதம் மேனன் ஸ்டைலில் ஹீரோவின் மனசாட்சியும் பேசிக்கொண்டேயிருப்பது மேஜர் சுந்தர்ராஜனை மெமெரிக்கு கொண்டு வருகிறது ...

மஞ்சிமா மோகன் தமிழுக்கு நல்ல வரவு . முதல் பாதியில் சிம்புவோடு சேர்த்து நம்மையும் வசியம் செய்கிறார் . இரண்டாம் பாதியில் சோகமான முகத்தோடு இருப்பதை தவிர அம்மணிக்கு வேறு வேலையில்லை . சிம்பு வின் நண்பராக வரும் சதீஷ் காமெடி டைமிங்கால் ரசிக்க வைக்கிறார் . மொட்டைத்தலை பாபா சேகல் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டிருப்பதால் பெரிதாக கவரவில்லை . கொஞ்ச சீன்கள் வந்தாலும் டேனியல் பாலாஜி கவனிக்க வைக்கிறார் . சாதாரண படத்தை மேலே தூக்கி நிறுத்துகிறது ஏ.ஆர்.ஆரின் இசை . ராசாளி , தள்ளிப்போகாதே இரண்டும் ஏற்கனவே மெஸ்மெரிஸம் செய்திருக்க  அவளும் நானும் மேலும் அவர் இசைக்கு நம்மை அடிக்ட் ஆக்குகிறது ...


காதலியுடன் ரோட் ட்ரிப் போகும் போது எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை , போலீஸ்காரன் தொல்லை இதெல்லாம் உதயம் NH 4 கதையை ரீவைண்ட் செய்தாலும் முதல் பாதியில் கௌதம் மேனன் ஸ்டைல் மேக்கிங் , ஏஆர்.ஆர் இசை எல்லாமே சேர்ந்து நம்மை ரொமான்ஸில் நனைய வைக்கிறது . ரியலிஸ்டிக்கான டயலாக் , அதிலும் குறிப்பாக சிம்பு - தங்கை பேசிக்கொள்வது சிம்பலி சூப்பர் . வரிசையாக பாடல்களை வைத்து இண்டெர்வெல் வரை ஒப்பேற்றியிருந்தாலும் அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகிறது பாடல்களும் , அதை படமாக்கிய விதமும் ...

ஃபீல் குட் டாக போய்க்கொண்டிருக்கும் படம் சடனாக ஆக்சிடெண்டுக்கு அப்புறம் ஆக்சன் அவதாரம் எடுத்து ஜெர்க் கொடுக்கிறது . அட என்று செகண்ட் ஆஃ பில் வந்து உட்கார்ந்தால் மாறி மாறி சுட்டு தீபாவளி இன்னுமா முடியல என்று நினைக்க வைக்கிறார்கள் . ஹீரோ எஸ்கேப் ஆகுறதுக்காகவே ஒரு பைக் அதுவும் ஹீரோ ஓட்டுற ராயல் என்ஃ பீல்டே நிற்பது , மூணு மாசம் முன்னாடி போட்டாலும் டிக்கெட் கிடைக்காம அவன் அவன் தண்ணி  குடிச்சுட்டு இருக்கான் ரெண்டு பேரும் என்னடான்னா அந்த அவசரத்துலயும் ஹாயா ஏ.ஸி கோச் ல ட்ராவல் பண்றது இப்படி சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்ஸ் கூட மன்னிச்சுக்கலாம் . அதுக்காக ஹீரோ ரெண்டரை வருஷம் காணாம போயிட்டு திடீர்னு ஐ.பி.எஸ் ஆறது , அதுவும் வில்லன் போலீஸ் ஸ்டேசனுக்கே சுப்பீரியரா வந்து பழி வாங்குறது எல்லாம் கடவுளே இது கௌதம் மேனன் படம் தானா என்று கிள்ளிப்பார்க்க வைக்கிறது . நாம் பல வருடங்களாக கேட்டுக்கொண்டேயிருக்கும் ஆயா வட சுட்ட கதை போல கௌதம் மேனன் ஏற்கனவே சொன்ன ரொமான்ஸ் , ஆக்சன் கதைகளை மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கும் புது வடை அ.எ.ம . அதை காதலில் கசிந்துருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களை மட்டும் குறி வைத்து சுட்டிருக்கிறார் ஜி.வி.எம் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 


30 October 2016

காஷ்மோரா - KASHMORA - காய்ச்சிய காக்டைல் ...


கார்த்தி யை பொறுத்தவரை காஷ்மோரா  அவரது வியாபாரத்தை தாண்டிய பெரிய பட்ஜெட் படம் . ஆனால் சின்ன பட்ஜெட்டில் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் கோகுலோ  காமெடியில் கலக்கியிருந்தாலும் மெகா பட்ஜெட்டிற்கு ஏற்ற தீனி போட முடியாமல்  தடுமாறியிருக்கிறார் ...

ஆவி , அமானுஷ்யங்களை வைத்து கப்ஸா விட்டு  காசு அள்ளுவதே காஷ்மோரா ( கார்த்தி ) வின் குடும்ப தொழில் . ஒருநாள் இவர் குடும்பத்தோடு உண்மையான பேய் பங்களாவுக்குள் மாட்டிக்கொள்கிறார் . பிறகு என்ன நடந்தது என்பதை ஒன்ஸ்மோர் கேட்காமலேயே மோர் மோராக சொல்வதே காஷ்மோரா ... 


கார்த்தி க்கு பேய் பேரை சொல்லி ஆட்டய போடும் கான்மேன் ரோல் ப்ளஸ் ஃப்ளாஷ்பேக்கில் காம வெறியாட்டம் ஆடும் தளபதி ரோல் . இரண்டில் முதலாவதில் ஆவி களை வைத்து கள்ளாட்டம் செய்து  கலக்குபவர் , இரண்டாவதில் முரட்டு பார்வையில் மிரட்டினாலும் நீ...ளமான எபிசோடால் கொட்டாவியை வரவைக்கிறார் . பேயை வைத்து தீஸிஸ் செய்யும் பெண்ணாக வரும் ஸ்ரீதிவ்யா பேங்கில் வேலை செய்வதாய் சொல்கிறார் . நடுவில் காணாமல் போனவர் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு க்ளைமேக்ஸ் போது  வந்து தலை காட்டுகிறார் . கோலிவுட் க்யூன் நயன்தாரா இதிலே க்யூனாகவே வந்து கிளுகிளுப்பூட்டுகிறார் . மொட்டை கார்த்தியை சட்டை செய்யாமல் பார்க்கும் இவர் பார்வை அட அட ...

விவேக் , முருகானந்தம் , சரத் என எல்லோருமே தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள் . அதிலும் கிட்ட வாங்க ஜீ என்று கூவும் முருகானந்தம் சூப்பர் ஜீ . பாடல்களில் பெரிதும் கவராத சந்தோஷ் நாராயணன் பி.ஜி.எம் இல் ஸ்கோர்  செய்கிறார் . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் . சி.ஜி யை பொறுத்தவரை பட்ஜெட்டை கணக்கில் கொண்டு பொண்ணை வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்திருக்கிறார்கள் ...


முதல் பாதி முழுவதும் கார்த்தி & குடும்பம் அடிக்கும் லூட்டிகள் சிறுத்தை , சதுரங்க வேட்டை சாயலில் இருந்தாலும் நல்ல டைம் பாஸ் . அதிலும் கார்த்தி இண்டெர்வெல்லுக்கு முன்னாள் பேய் பங்களாவுக்குள் நுழைந்தவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை படத்துக்கு ஹைலைட் . இண்டெர்வெல்  ப்ளாக்க்கை நல்ல டெம்போவோடு முடிப்பவர்கள் திரும்ப வந்தவுடன் " படம் எப்போ சார் போடுவாங்க " என்று கேட்க வைத்தது கொடுமை . கோகுல் தனது  ஃபேவரட் பிட்சில் ஃபன் கொடுக்கிறார் . புதுசாக ட்ரை பண்ணும் ஃ பேண்டசி பிட்சில் பொறுமையை சோதிக்கிறார் .

நீண்ட வருடங்களாகவே தமிழில் ட்ரெண்டாக இருக்கும் ஹாரர் - காமெடி வகையறா படத்தில் பிரம்மாண்ட ஃபேண்டசியை புகுத்தி  காய்ச்சிய காக்டைல் கொடுத்திருக்கிறார் கோகுல் . அந்த எபிசோடில் நீளத்தை குறைத்து க்ரிப்பாக சொல்லியிருந்தால் காஷ்மோரா  செய்த செலவுக்கு மேலே காசு பார்த்திருப்பான் . காஷ்மோராவை காஸ்ட்லி மிஸ்டேக் என்று சொல்லாமல் தடுப்பது கார்த்தி செய்யும் காமெடி மட்டுமே ...

ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

29 October 2016

கொடி - KODI - பறக்கும் ...


னுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே  அந்த படைப்பில் ஒரு தரம் இருக்கும் . இந்த முறை அவர்கள் இருவரும் எஸ்.கே வை வைத்து இரண்டு வெற்றிகளை கொடுத்த இயக்குனர் துரை செந்தில்குமாருடன் சேர்ந்து தீபாவளிக்கு  பொலிட்டிகல் கொடியை  படைத்திருக்கிறார்கள்  . தனுஷ் - த்ரிஷா என்று தீபாவளிக்கு சரவெடியாக வெடித்திருக்க வேண்டியது சுமாரான  ஸ்க்ரீன்ப்ளே வால் ஜஸ்ட் பறந்திருக்கிறது  ...

இரட்டைப்பிறவிகள் கொடி  , அன்பு வாக தனுஷ் . இதில் கொடி சின்ன வயதிலிருந்தே அப்பாவின் கனவுப்படி கட்சி ஆபீசில் அரசியல் படிக்க , அன்புவோ கல்லூரியில் பாடம் எடுக்கிறார் .  அரசியல் களத்தில் கொடி யின் காதலி ருத்ரா ( த்ரிஷா ) வே அவருக்கு எதிராக வர அதன் பின் கொடி - அன்பு வாழ்க்கை என்ன ஆனது என்கிற சாலிட் பொலிட்டிக்கல் கதையை கொஞ்சம் சாவகாசமாக எடுத்திருக்கிறார்கள் ...

தனுஷ் படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறிக்கொண்டேயிருக்கிறார் . இரண்டு வேடங்களுக்கு இடையே எந்த மருவும் இல்லாமல் உடல்மொழியாலேயே மிகுந்த வித்தியாசம் காட்டுகிறார் . த்ரிஷா வோ இல்ல நயன்தாராவோ காதல் காட்சிகளில் கமலுக்கு பிறகு  தனுஷ் அளவுக்கு தத்ரூபமாக நடிக்க தமிழில் ஆளில்லை . த்ரிஷாவால் ஏமாற்றப்படும் போது முகத்தில் இவர் காட்டும் உணர்ச்சிகள் புது நடிகர்களுக்கு பாடம் . மிக அபூர்வமாக த்ரிஷா வுக்கு மட்டுமல்ல ஹீரோயின்களை லூசுகளாக மட்டும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில்  ருத்ரா கேரக்டர் செம்ம பவர்ஃபுல் . த்ரிஷா எனும் ஸ்டார் கேரக்டருக்கு வலு சேர்த்த அளவுக்கு அவரது நடிப்பு சேர்க்கவில்லை . ஒருவேளை  தனுஷ் நடிப்புக்கு முன்னாள் அது மட்டுப்பட்டிருக்கலாம் . ஆனாலும் அவர் சரியான தேர்வு ...


எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வயதுக்கேற்ற அரசியல்வாதி ரோல் . காளி வெங்கட் , சரண்யா , மாரிமுத்து என எல்லா கேஸ்டிங்குமே பொலிடிக்கலி ரைட் . ப்ரேமம் புகழ் அனுபமா  முட்டை மாலதியாக வந்து கண்களாலேயே ஆம்லெட் போடுகிறார் . சந்தோஷ் நாராயணன் இசையில் " கொடி பறக்கும் " , "ஏய் சூழலி" பாடல்கள் ஹம்மிங்க் செய்ய வைத்தாலும் ஒரே மாதிரியான இசை சலிப்பை தர ஆரம்பித்து விட்டது ...

தனுஷ் - த்ரிஷா , சின்ன சின்ன சஸ்பென்ஸுடன் படத்தை கொண்டு சென்ற விதம் , இண்டெர்வெல் ட்விஸ்ட் , ருத்ராவின் வில்லத்தனம் , மாஸ் ஹீரோவை வைத்து அரசியல் படம் என்றவுடன் ரத்தமும் , சகதியுமாக சண்டை , பக்கம் பக்கமாக டயலாக் எல்லாம் வைக்காமல் தனுஷின் நடிப்பை போலவே அண்டர்ப்ளே செய்தது என எல்லாமே கொடியை உயரத்தில் ஏற்றுகின்றன ...

தனுஷ் போல த்ரிஷா வின் அரசியல் அதிகார கனவுக்கு டீட்டைலிங் வைக்காதது மைனஸ் . " நான் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா " என்கிற டயலாக்கும் , நாற்காலியை தடவிப் பார்த்து உட்கார்வதுமே ருத்ரா கேரக்டருக்கு போதுமென  இயக்குனர் நினைத்துவிட்டது துரதிருஷ்டம் . பெரிய ஆக்டர்ஸ் , கையில் நல்ல பொலிட்டிக்கல் கதை இதையெல்லாம் வைத்துக்கொண்டு இயக்குனர் ஒரு விறுவிறு படத்தை கொடுத்திருக்க வேண்டாமோ ?! . அதுவும் ப்ராமிசிங்காக ஆரம்பிக்கும் படம் பாதரச கழிவு , சிசிடிவி கேமரா பதிவு என வழக்கமான ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது . சமீபத்தில் வந்த முத்தின கத்திரிக்கா , கத்துக்குட்டி , புகழ் மாதிரியான  அரசியல் படங்கள் போல கடந்து போயிருக்க வேண்டிய கொடி யை  தனுஷும் , த்ரிஷா வும் சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார்கள் ...

ரேட்டிங்க் : 3.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 43



11 October 2016

தேவி - DEVIL - தரிசிக்கலாம் ...



விஜய் யை வைத்து போக்கிரி ஹிட்டடித்த பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிப்பாளராக , நடிகராக இயக்குனர் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம் தேவி . மூன்று மொழிகளுக்கும் ஏற்ற பிரபுதேவா - தமனா ஜோடியின் உதவியுடன் சில தோல்விகளால் சறுக்கியிருந்த விஜய் ஃபார்முக்கு வந்திருக்கும் ஹாரர் - காமெடி படம் ...

மும்பையில் வேலை பார்த்தாலும் 34 வயதில் மாடர்ன் கேர்ளுக்காக பயோ டேட்டாவுடன் அலைந்து கொண்டிருக்கும் பிரபுதேவா பாட்டியின் சொல்லை தட்ட முடியாமல் கிராமத்தில் மாட்டுப்பொண்ணை ( அதாவது மாடு மேய்க்கிற பொண்ணை ) கல்யாணம் செய்து கொண்டு வருகிறார் . மும்பையில் இழுத்துப்போர்த்திக் கொண்டிருந்த தமனா தீடீரென ஒரு பார்ட்டியில் அவுத்துப்போட்டு ஆட  ஆட்டநாயகன் பிரபுதேவா வே ஆடிப்போகிறார் . அதற்கு காரணம் பேய் என்பதை கொஞ்சம் கூட பயமுறுத்தாமல் ( அப்பாடா ) நீட் எண்டெர்டைன்மெண்டாக சொல்லியிருக்கும் படமே தேவி ...

இன்றைக்கு தமிழில்  விஜய் அளவுக்கு நளினமாக ஆடும் ஹீரோக்கள் யாரும் இல்லாத சூழலில் பிரபுதேவாவின் வரவு வரப்பிரசாதம் . மனுஷனுக்கு வயசு மூஞ்சில லைட்டா ஏறினாலும் உடம்பு அதே ரப்பர் . முதல் பாட்டுலேயே மிரட்டிட்டார் . காமெடி சென்ஸில் இப்போதிருக்கும் தனுஷ் , சிவகார்த்திகேயன்  எல்லோருக்கும் தான் அண்ணா என்பதை மீண்டும் நிரூபிக்கிறார் . பேயிடமே அக்ரீமெண்ட் போடுவது , அப்பாவை பார்த்தவுடன் பல்டியடிப்பது என கலக்கும் பிரபுதேவா தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து ஒரு ரவுண்ட் வர வாழ்த்துக்கள் ...


இந்த வருடம் தோழா , தர்மதுரை யை தொடர்ந்து தமனா வுக்கு வெற்றிபெறப் போகும் படம் . வில்லேஜ் , மாடர்ன் என இரண்டு கெட்டப்புகளிலும் உடல்மொழியில் நல்ல வித்தியாசம் காட்டுகிறார் . ஆர்,ஜே.பாலாஜி வெறும் கவுன்டர்களில் மட்டுமல்லாமல்  முகபாவத்திலும் கிச்சுகிச்சு மூட்டி முதல்பாதி வேகமாக நகர உதவுகிறார் . சோனுசூட் , அவர் உதவியாளர் இருவரும் கச்சிதம் . நாசர் , சதீஷை  சின்ன ரோலில் வீணடித்திருக்க வேண்டாம் . முதல் பாடல் தாளம் போட வைத்தாலும் இசை இந்தி படம் பார்க்கும்  உணர்வையே கொடுக்கிறது . எடிட்டிங் க்ரிப் ...

படம் வழக்கமான ஹாரர் - காமெடி ஜெனரில் இருந்தாலும் கடைசிவரை பேயையே காட்டாமல் என்கேஜிங்காக கொண்டு சென்ற விதத்தில் வித்தியாசப்படுகிறார் விஜய் . பொறக்கப்போற குழந்தை க்ராமர் பிழையில்லாமல் இங்கிலிஷ் பேசுவதற்காக  பிரபுதேவா மாடர்ன் பொண்ணை தேடுவது , சாகக்கிடக்கும் பாட்டிக்காக தமனா வை கட்டிக்கொண்டு வருவது என ஆர்.ஜே பாலாஜி கூட்டுடன் முதல்பாதியை போரடிக்க விடாமல் கொண்டு சென்ற விதம் அருமை . பயமுறுத்துறேன் பேர்வழி ன்னு வழியாமல் படத்தை ஃபீல் குட்டாக கொண்டு போய் சின்ன சின்ன சி.ஜி மூலம் ரசிக்க வைத்த விதம் சூப்பர் ...

என்ன தான் குறைந்த வாடகை என்றாலும் ஒட்டடை கூட அடிக்காமல் பேய் வீடு போல இருக்கும் வீட்டுக்கு பிரபுதேவா குடி போவது , புதுசாக இருந்தாலும் பேயுடனேயே அக்ரீமெண்ட் போடுவது எல்லாம் கொஞ்சும் ஓவர் . யார் அந்த பேய் என்று தெரிந்தவுடன் இரண்டாம் பாதி  கொஞ்சம் சவ சவ . படம் ஹிந்தியிலும் வரலாம் , அதுக்காக பிரபுதேவா வை வச்சுக்கிட்டு நச்சுன்னு நாலு பாட்டு போடாம கஜல் வாசிச்சிருப்பது கொடுமை . மற்றபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் 2.10 மணிநேரம் பெரும்பாலும் போரடிக்காத தேவி யை நிறுத்தி நிதானமாக ஒருமுறை நிச்சயம் தரிசிக்கலாம் ...   

ரேட்டிங்  : 3 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 42


8 October 2016

ரெமோ - REMO - சைனா மேக் ...


ந்த திரையுலக பின்னணியும் இல்லாமல் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்குக்கு சொந்தக்காரராக ஆகியிருப்பவர் சிவகார்த்திகேயன் . மெரினா தவிர இவருடைய எந்த படத்தையும் இதுவரை நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை . பார்க்கத் தோன்றியதுமில்லை . அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் தான் காரணமே தவிர அவரில்லை . ரெமோ வில்  எஸ்.கே  ( அப்படித்தான் டைட்டிலில் போடுகிறார்கள் , நல்ல வேளை இன்னும் எந்த பட்டமும் கொடுக்கவில்லை ) பெண் வேடத்தில் நடித்திருப்பது
மட்டுமே படத்தை உடனே பார்க்கத்தூண்டியது . தொடர் விடுமுறைகளால் ரெமோ வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் . ஆனால் படமாக ? பார்க்கலாம் ...

வேலை வெட்டியில்லாம ( எந்த படத்துல இவர்  அதெல்லாம் பாத்துருக்காருன்றீங்களா ?! ) ஸ்டாராகணும்னு  முயற்சிக்கிறார் எஸ்.கே . ஆனா லவ்  மேட்டர் மட்டும் இவரிடமிருந்து எஸ்கேப் ஆகிக்கொண்டேயிருக்கிறது . ஒரு நாள் ரோட்டில் போகும் அழகான பெண்ணை ( கீர்த்தி சுரேஷ் ) பார்த்தவுடன் இவருக்கு லவ் பற்றிக்கொள்ள , நிச்சயமான பொண்ணுன்னு தெரிஞ்சும் பெண் வேஷம் போட்டு எப்புடி அந்த ஃபிகர அய்யா கரெக்ட் பண்றாருன்றது தான் படம் . ( அப்புறம் காவிரியை கொண்டு வர வேலையையா கொடுக்க முடியும் ?! ) ...

மிமிக்ரி , காமெடி சென்ஸால் பெண்களையும் , குழந்தைகளையும் கவர் செய்து வைத்திருக்கிறார் எஸ்.கே . இவர்கள் தான் குடும்பத்தோடு தியேட்டருக்கு  வருவதற்கு முக்கிய காரணிகள் . வழக்கம் போல அவர்களை இவர் ஏமாற்றவில்லை . நிறைய இடங்களில் கீர்த்தியை விட பெண்ணாக வரும் இவர் ரொம்ப அழகாக இருக்கிறார் . ( தேங்க்ஸ் டு மேக்கப் டீம் ) . கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசும் நேரங்களில் இன்னும் க்யூட் . பெண்ணாக உடல்மொழியும்   பெர்ஃபெக்ட் . கயித்தை பிடிச்சுக்கிட்டு இவர் தாவி தாவி சண்டை போடுறத கூட சகிச்சுல்லாம் ஆனா சீரியஸா லவ்வுக்காக அழும் போது தான்  சாரி ப்ரோ ...


படிக்காத கிராமத்துப் பொண்ணா இருந்தாலும் சரி , படிச்ச டாக்டரா இருந்தாலும் சரி ஹீரோயின் அரை லூசா தான் இருக்கணும்ன்ற கோலிவுட் விதிக்கு லேட்டஸ்ட் வரவு கீர்த்தி . அப்பாவி போல குணஷ்டைகள் செய்யும் நேரம் தவிர நார்மலாக நல்ல அழகாக இருக்கிறார் . பொண்ணா வர எஸ்கே விடம் இவர் காட்டும் நெருக்கத்தை பாத்தா இவர் லூசு மட்டும் தானா இல்ல அந்த மாதிரியா ன்னு நமக்கே டவுட் வருது . பொண்ணுங்கள புத்திசாலியாவே இந்த டைரக்டருங்க காட்ட மாட்டங்களான்னு நமக்கு கோவம் வருது , ஆனா அதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கற பொண்ணுங்கள பாக்கும் போது அடப்பாவமே னு வந்த கோவம் தானா போயிருது ...

சதீஷ் ஹீரோ ஃ ப்ரெண்டாக நல்லா பண்ணியிருக்கார் .அட்லீஸ்ட் இவரை வெச்சாவது பொண்ணா நடிச்சு ஃபோர்ஜரி பண்றது தப்புன்னு சொல்ல வச்சது ஆறுதல் . யோகி பாபு சிறிதாக வந்தாலும் நிறைவு . சூரி - எஸ்.கே காம்பினேஷன் மச் பெட்டர் என்றே தோன்றுகிறது . கல்யாணம் ஆகப்போகும் பொண்ண ஹீரோ உஷார் பண்ணலே அந்த மாப்பிளையை வில்லனாவோ , மொக்கையாவோ ஆக்கிருவாங்க . இதுலயும் அப்படித்தான் அந்த செகப்பு தம்பி பாவம் . அடுத்து ஒரு சேஞ்சுக்கு இந்த ஹீரொல்லாம் கல்யாணம் ஆன பொண்ணையே ட்ரை பண்ணலாமே ?! . அதுக்கும் ஏதாவது லாஜிக் வச்சுட்டா போச்சு ! . பி.சி ! யின் ஒளிப்பதிவு பளிச் . அனிருத் ரெண்டு பாடல்களை ஹம் செய்ய வைக்கிறார் ...

அவ்வை சண்முகி , காதல் மன்னன் , மான் கராத்தே என்று பல படங்களின் தழுவல்களாக படம் இருந்தாலும் எஸ்.கே வை அழகான பெண்ணாக காட்டி அதை சரியாக மார்க்கெட் செய்த விதத்தில் ஸ்கோர் செய்கிறார் பாக்யராஜ் கண்ணன் . பட வாய்ப்புக்காக நர்ஸ் வேஷம் போட்டு அப்படியே அத வச்சு ஹீரோயின கரெக்ட் பண்ற ஐடியா , கலகலவென போகும் முதல் பாதி எல்லாமே ஓ.கே . ஆனா அந்த டாக்டர் பொண்ணுக்கு கொஞ்சம் கூட தலையில் எதுவுமே கிடையாதா ? நர்ஸ் சொல்றதெல்லாம் அப்படியே நம்புது. அடுத்தடுத்த சீன்ல கூட அதுக்கு சந்தேகம் வராதா  ? இவ்ளோ மொக்க பொண்ணு எப்படி பாஸ் படிச்சு டாக்டர் ஆச்சு ? டக் னு பொண்ணு வேசத்துல இருந்து மாறி நார்மலாக வரும் போது ஒரிஜினல் மீச , தாடி யோட வர்றாரு நம்ம ஹீரோ ( தேவுடா ) . அவ்வை சண்முகி ல கமல் மழுங்க ஷேவ் பண்ணி ஒட்டு மீசையோட தான் வருவாரு . அந்த படத்துல இருந்து எவ்வளவோ சுட்டீங்க , அப்படியே கொஞ்சம் லாஜிக்கையும் சுட்டுருக்கலாமே  ?! ...


ஓடுற குதிரை மேல சவாரி பண்ற வாய்ப்பு டைரக்டருக்கு கெடைச்சுருக்கு . அந்த குதிரை என்ன பண்ணாலும் கெக்க , பிக்க ன்னு சிரிக்க கூட்டமிருக்கு அப்பறம் எதுக்கு புதுசா இந்த கத , திரைக்கதை எழவெல்லாம்னு நினைச்சுட்டாங்க போல . அவங்கள  மட்டும் குத்தம் சொல்லி எந்த பிரயோஜனமுமில்லை . சிவகார்த்திகேயன் படங்களுக்கு பொழுதுபோக்கு தவிர வேறெதையும் எதிர்பார்த்து போவது முட்டாள்தனம் தான் . ஆனா எஸ்.கே வ நர்ஸ் வேஷம் போட்டு அப்படி இப்படி நடக்க விட்டாலே அந்த சோ கால்ட் என்டர்டெயின்மெண்ட் வந்துரும்னு படக்குழு நெனைச்சது தான் சோதனை . ஒருதலைக் காதலால் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும்  வன்முறைகள் ஒருபுறம் ( அதிலயும் இந்த படத்துல பொண்ணு மேல லவர் ஆசிட் வீசல , ரவுடி வீசினான்னு ஒரு சப்பைக்கட்டு ஸீன்  வேற ) , காதல் திருமணங்களால் பெருகி வரும் விவாகரத்துகள் மறுபுறம் என சமுதாயம் போய்க்கொண்டிருக்க இன்னமும் ஹீரோ ஒரு பொண்ண கரெக்ட் பண்ணாலே லைஃப்ல  எல்லாம் செட்டில் ன்றது மாதிரி படங்கள் தொடர்ந்து வருவது வேதனை . பட் அகைன் இதுக்கு சினிமாக்காரங்கள மட்டும் குத்தம் சொல்ல முடியாது ...

சமுதாய கருத்துக்களை புறம்தள்ளி விட்டு ஒரு சினிமாவாக மட்டும் ரெமோ வை பார்க்கும் போது தனிப்பட்ட முறையில் நடிகனாக சிவகார்த்திகேயனுக்கு இதுவரை வந்த படங்களிலேயே இது முதன்மையான படம் . ஆனா டோட்டல் பேக்கேஜாக  பாக்கும் போது எஸ்.கே வுக்கு இது கடைசிப்படம் . மான் கராத்தே மாதிரி லவ்வுக்காக இவர் வில்லன் கால்ல விழுந்து அழாதது ஆறுதல் . பார்த்தவுடன் மயக்கும் எஸ்.கே வின் மேக் அப் போல வெளித்தோற்றத்தில் கும்மென்று இருக்கும் ரெமோ லாங்குவிட்டி இல்லாத சைனா மேக் .  பட் ஸ்டில் ப்ராஃபிட் டு தி மேனுஃபேக்சரர் ...

ஸ்கோர் கார்ட் : 2.25 * / 5 * 

ரேட்டிங்      : 39   


29 September 2016

ஆண்டவன் கட்டளை - AANDAVAN KATTALAI - ஆசுவாசமான ஆஸம் ...


காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் மூன்றாவதாக , இந்த வருடத்தில் இரண்டாவதாக வந்திருக்கும் படம் ஆண்டவன் கட்டளை . சிம்பிளான ஸ்டோரி , ஷார்ப்பான வசனங்கள் , ஸ்மார்ட்டான ஆக்டிங் , ஸ்லோவான திரைக்கதை இவற்றின் மொத்த கலவையே ஆ.க . ப்ரதர் என்று சொல்வதற்கே சோம்பேறித்தனப்பட்டு ப்ரோ என சுருக்கமாக கூப்பிடும் இந்த காலத்தில் நீட்டி முழுக்கும் திரைக்கதை தவிர ( 2.31 மணி நேர படம் ) வேறெந்த குறையுமில்லை ...

கடனை அடைக்க பாஸ்போர்ட்டில் சில குளறுபடிகள் செய்து லண்டனுக்கு சென்று சம்பாதிக்க நினைக்கிறார் காந்தி ( விஜய் சேதுபதி ) . அவரின் ஆசை நிறைவேறியதா ? என்பதை ஸ்லோவாக இருந்தாலும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் . விஜய் சேதுபதி யின் மூவீ கலக்சனில் ஆண்டவன் கட்டளைக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு ...

யதார்த்தமான நடிப்பென்றால் விஜய் சேதுபதிக்கு பதார்த்தம் சாப்பிடுவது போல . தனக்கென்று ஒரு ஸ்டார் அந்தஸ்து வந்தும் இது போன்ற படங்களை தேர்ந்தெடுப்பது அவரது தனித்துவம் போலும் . தனக்கு விசா கிடைக்காமல் பாண்டிக்கு ( யோகி பாபு ) கிடைத்தவுடன் இவர் காண்டாகுமிடம் சூப்பர் . வீட்டை காலி செய்யும் போது ஓனரை கலாய்க்கும் இடத்தில் வெளியூரிலிருந்து வந்து தங்கி வாடகை வீட்டில் லோல்படும் பல பேச்சிலர்களின் வயிற்றில் பீரை சாரி பாலை வார்க்கிறார் ...


ரித்திகா சிங் கிற்கு இறுதி சுற்று க்குப் பிறகு வித்தியாசமான கேரக்டர் . படம் ஆரம்பித்து நீண்ட நேரம் கழித்து வந்தாலும் நிறைவு . விஜய் சேதுபதி காதலை சொன்னவுடன் வெட்கப்படுவது நல்ல நடிப்பு ( இப்போல்லாம் யாருங்க உண்மையிலேயே வெட்கப்படுறா?!) . யோகி பாபு ஆவரேஜ் ஸ்பீடில் நகரும் முதல் பாதியில் அரங்கத்தை அதிர வைக்கிறார் .  ஓனரிடம் " நாங்க மூடிக்கிறோம் அங்கிள் " என்று சொல்லுமிடம் அப்லாஸ் . ரூபா , நாசர் . எஸ்.எஸ்.ஸ்டான்லி என நிறைய பேர் நிறைவாக நடித்திருந்தாலும் இலங்கை தமிழர் நேசனாக நடித்திருப்பவர் நெஞ்சை தொடுகிறார் . ப்ராட் வேலை செய்து கைது  செய்யப்படுவர் போட்டோவை போட்டு " போராளி கைதா " என செய்தித்தாளில் வரும் சின்ன ஷாட் ஈழத்தை வைத்து இங்கு நடக்கும் பெரிய அரசியல் வியாபாரத்தை கச்சிதமாக காட்டுகிறது ...

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆசையில் உள்ளவர்களிடம் ஏஜென்ட் செய்யும் திகிடுதித்தங்கள்  , இடைத்தரகர்களின் ஏமாத்து  வேலைகள் , சென்னையில் பத்துக்கு  பத்து வீட்டை வைத்துக்கொண்டு ஓனர்கள்  செய்யும் பம்மாத்துக்கள் , அதிகரித்து வரும் டைவர்ஸ் கேஸுகள் என படம் போகிற போக்கில் நிறைய விஷயங்களை தோலுரித்துக் காட்டுகிறது . ஒரு தவறை நேரடியாக திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு சுற்றி வளைப்பதில் உள்ள சிக்கல்களை சொல்கிறது படம் . என்ன கொஞ்சம் அதிகமாகவே சுற்றி வளைத்துவிட்டார்கள் . படம் யதார்த்தமாக இருப்பது நல்லது தான் . ஆனால் ஹீரோ நிற்பது , நடப்பது , போறது என எல்லாத்தையும் ஸ்லோவாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம் . விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்படும் படம் வெகுஜன ரசனைக்கு சற்று தொலைவில் இருப்பதன் முக்கிய காரணம் ஹீரோவுக்கு பிரச்சனை அதை எப்படி தீர்க்கிறான் என்கிற ஒன்லைனை பரபரப்பான திரைக்கதையாக்காமல் கொஞ்சம் ஆசுவாசமாக எடுத்திருப்பதே . நடுவுல  கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இதை நன்றாகவே கையாண்டிருப்பார்கள் ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 44


24 September 2016

தொடரி - RAIL - தடுமாறினாலும் ஓடும் ...


சில தோல்விகளுக்கு பிறகு மைனா வால் உயர பறந்த பிரபு சாலமன் அதை தக்க வைக்கும் முயற்சியில் மீண்டும் தடுமாறியிருக்கும் படம் தொடரி . ஆனாலும் கும்கி யையே காதல் காவியமாக்கிய தமிழ் ரசிகர்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று நம்பலாம் ...

டெல்லி டூ சென்னை ஓடும் ரயிலில் பேன்ட்ரி பையனுக்கும் ( தனுஷ் ) , அதில் பயணம் செய்யும் நடிகையின் டச்சப் பொண்ணுக்கும் ( கீர்த்திசுரேஷ் ) ரொமான்ஸ் , அதுவும் எப்படின்னா 160 கிமீ வேகத்துல தறி கெட்டு ஓடுற ட்ரெயின்ல டாப்ல தனுஷ் ஆடிப் பாடுற அளவுக்கு லவ் . இப்போ இந்த ட்ரெயின்ல இருக்குற 700 த்து சொச்சம் பயணிகளோட சேர்த்து நம்மளும் தப்பிச்சோமான்றது தான் கதை ...

சினிமா ல ஹீரோஸ் பொதுவா பணக்காரங்ககிட்ட கொள்ளையடிச்சு ஏழைகளுக்கு தருவாங்க . அதையே தான் தனுஷ் இந்த மாதிரி படங்கள்ல நடிச்சு சம்பாதிச்சு காக்காமுட்டை , விசாரணை மாதிரி படங்கள எடுக்குறாப்ல போல . க்ளைமேக்ஸ்ல மட்டும் கொஞ்சம் நடிக்க வுட்ருக்காங்க . மத்தபடி தம்பி ராமையாவையும் , கீர்த்தி யையும் ஓட்டறத தவிர பார்ட்டிக்கு பெருசா வேலையில்ல . ரசிகர்களுக்காக உத்தமன் கூட ஒரு சண்டை போடறாரு . கீர்த்தி சுரேஷ் நல்லா அறிமுகமாகி அப்புறம் பாடுறேன் பேர்வழி ன்னு வழிஞ்சு கடைசியா ஜெனிலியாவையே மிஞ்சுற அளவுக்கு அளவுக்கு பக்கா லூசாயிடுறாங்க . பாலச்சந்தர் ஆவி கூட பிரபு சாலமனை சும்மா விடாது ...


தம்பி ராமையா இயக்குனரை கைவிடல . நடிகை சிரிஷா வுக்காக இவர் விடும் காதல் தூதெல்லாம் அதர பழசுன்னாலும் முடிந்தவரை தனது முகபாவங்களால் சிரிக்க வைக்கிறார் . இவர் தனுஷ் & கோ வுடன் அடிக்கும் லூட்டிகள் ப்ரெண்ட்ஸ் வடிவேலுவை நினைவு படுத்துகின்றன . We Miss You Vaigaipuyal . கவிஞராக வரும் கருணாகரன் மொக்கை போட்டாலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார் . அமைச்சராக ராதாரவி வரும் ஸீன்களெல்லாம் அடடா . பிகினிங்கில் படத்தின் டெம்போ வை ஏற்றும் உத்தமன் கேரக்டர் போக போக சவசவ . அதிலும் தேவையில்லாமல் மலையாளிகளை சீண்டிப் பார்ப்பது போல வரும் சீன்கள் இயக்குனரின் வீண் குசும்பு ...

இமான் இசையில் மூன்று பாடல்களில் கடைசி பாடல் ரசிக்கவைக்கிறது . ஆனால் படம் முடியும் நேரத்தில் வந்து வெறுப்பேற்றுகிறது . சிஜி நிறைய இடங்களில் பல்லிளித்தாலும் ஒளிப்பதிவு பளிச் . வேகமா ஓடுற ரயில்ல உச்சா போறதே கஷ்டம் ஆனா இதுல பாட்டு , பைட் னு பின்னி எடுக்குறாங்க . காமெடியோட ஆரம்பிச்சு அத வச்சே ஒப்பேத்தி பேசெஞ்சர் வேகத்துல போற படம் போகப்போக எக்ஸ்பிரஸ் வேகம் பிடிப்பது பலம் . நிறைய கேரக்டர்கள் வந்தாலும் எல்லோரையும் கவனிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . சீரியசாக போகும் காட்சிகளில் கூட காமெடியை சரியாக சொருகியிருக்கும் விதம் அருமை ...


படத்தில் எத்தனையோ லாஜிக் ஓட்டைகள் இருந்தும் மீடியாவை கலாய்க்கும் சீன்கள் கைத்தட்டல் வாங்க தவறவில்லை . ஐடியா கொடுக்க ஹாலிவுட் படம்லாம் பாக்க தேவையில்லை என்று வசனம் வருகிறது . பாவம் பிரபு சாலமன் Speed , Unstoppable படங்களையெல்லாம் பார்க்கவில்லையென்றோ , ரயில்ல வச்சு Titanic மாதிரி ஒரு படம் பண்ணணும்னெல்லாம் நினைக்கவில்லையென்றோ நம்பித் தொலைப்போமாக  . ட்ரெயின் திடீர்னு படு வேகமா ஓடுறப்போ முதல்ல  அந்த ட்ரைவர் என்ன ஆனான்னு பாக்காம தீவிரவாதி , விவாத மேடை அது இதுன்னு சுத்தி வளைச்சு கடைசியில க்ளைமேக்ஸ் ல அந்த மேட்டருக்கு வராங்க . அதுவும் கம்பார்ட்மெண்ட் மேல உக்காந்துக்கிட்டு குரங்கு சேட்டை பண்ணிக்கிட்டு இருக்கற தனுஷ முதல்லயே அனுப்பிச்சு ட்ரெயின நிப்பாட்டியிருக்கலாம் . பட் என்ன செய்ய படம் முடிஞ்சிருமே ?! ...

தனது தயாரிப்பில் வந்த விசாரணை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தொடரி மாதிரி படங்கள் தனுஷுக்கு திருஷ்டிக்கழிப்பு தான் . அதே நேரம் அப்படியிப்படி தடுமாறினாலும் காமெடி , ரொமான்ஸ் , த்ரில்லிங் என ஆடியன்ஸ் பல்ஸை கணித்து சரியான கலவையில் படத்தை பிரபு சாலமன் கொடுத்திருப்பதால் தொடரி ஓடும் ...

ரேட்டிங் : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40


11 September 2016

இருமுகன் - IRUMUGAN - Technically Sound But Logically Weak ...


ஹிட் கொடுத்த இயக்குனர்  ஆனந்த் ஷங்கர் சீயான் விக்ரம் , கோலிவுட்டின் no.1 ஹீரோயின் நயன்தாராவுடன் கை கோர்த்திருப்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத படம் இருமுகன் . ஆனால் படம் அதை பூர்த்தி செய்ததா ? பார்க்கலாம் ...

சுஜாதா கதையில் கமல் நடித்த விக்ரம் படத்தை கொஞ்சம் கெமிக்கல் கலந்து வில்லனாக வும் விக்ரமை நடிக்க வைத்திருப்பதே இருமுகன் . மனைவி கொலை செய்யப்பட்ட பிறகு வேலையை விட்டுவிட்டு தனி வாழ்க்கை வாழ்கிறார் ரா ஏஜென்ட் அகிலன் ( விக்ரம் ) . தன் மனைவியை ( நயன்தாரா ) கொன்ற லவ் ( விக்ரம் ) சம்பந்தப்பட்ட   கேஸுக்கு ரா அவரது உதவியை நாட மீண்டும்  களத்தில் குதிக்கிறார் விக்ரம் . அதில் அவர் ஜெயித்தாரா என்பதை லாஜிக் என்கிற வஸ்துவை சுத்தமாக மறந்து விட்டு கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் , கொஞ்சம் நீளமாகவும்  சொல்வதே இருமுகன் ...


விக்ரம் எந்த ஒரு கேரக்டருக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் . அகிலன் , லவ் என்று இரண்டு வேடங்களிலும் உடல்மொழிகளில் வித்தியாசம் காட்டும் விக்கிரமின் நடிப்பு இதிலும் தொடர்கிறது . ஆனால் தனது மேனரிசம் மூலம் முதலில் கவரும் லவ் கேரெக்டர் போகப்போக படம் ஜவ்வாக இழுப்பதால் போரடிக்கிறது . நயன்தாரா வின் உடை குறைய குறைய சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது போல . இடைவேளையில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் ரசிக்கவைக்கிறது . அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் நம் பசிக்கு தீனி போடவில்லை . ரா ஆபீஸராக வரும் நித்யா மேனன் விபச்சாரியாக வேஷம் போடுவதும் அதற்கு தம்பி ராமையாவின் கவுண்டரும் ரணகளம் . ரித்விகா கபாலியின் கன்டினியூட்டி போல மலேசியா வில் நடக்கும் படத்தில் வந்து போகிறார் ...

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தனி மனிதனாக ஒரு கிழவன் வந்து அட்டாக் செய்வதும் , ஸ்பீட் என்கிற கெமிக்கல் வஸ்துவே அந்த கிழவரின் ஆக்ரோஷத்துக்கு காரணம் என்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன . அகிலன் இந்த கேஸை கையில் எடுப்பதும் , அதை தொடர்ந்து மலேசியாவில் நடக்கும் சம்பவங்களும் ரசிக்கவே வைக்கின்றன . இறந்துவிட்டதாக நினைத்த நயன்தாரா இண்டெர்வெளில் ஆஜராவது ட்விஸ்ட்டாக இருந்தாலும் அதற்கு சொல்லப்படும் காரணங்கள் நம்பும்படியாக  இல்லை . ஸ்பீட் கெமிக்கலை இன்ஹேள் செய்த ஐந்து நிமிடங்களுக்கு நடக்கும் ஆக்சன் காட்சிகள் அதிரடி . ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அதை எடுத்துக்கொண்டவர்கள் மயங்கி விட விக்ரம் மட்டும் கேசுவலாக இருப்பது குளறுபடி . அதே போல காவல்நிலையத்தையே காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகும் லவ் விக்ரம் மாடல் போல மெதுவாக அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருப்பது காதில் பூக்கூடை ...


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது . இரண்டு பாடல்கள் ரசிக்க வைத்தாலும் மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் . கொஞ்சம் லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் முதல் படம் அரிமா நம்பி யின் வேகமான திரைக்கதையை இதில் மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் . விக்ரமின் நடிப்பு , ஆர்டி யின் ஒளிப்பதிவு , ஹாரிஸ் ஸின் இசை , ஆக்சன் என டெக்கனிகளாக சவுண்டாக இருக்கும் இருமுகன் லாஜிக்கலாக வீக்காக இருக்கிறான் ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.5 * / 5 * 

Related Posts Plugin for WordPress, Blogger...